search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக தொழிற்சாலைகள் நிறைந்த தல்செர் பகுதியில் 115.34 டிகிரி வெயில் சுட்டெரித்தது. #OdishaHeatWate
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் குறிப்பாக மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள 14 நகரங்களில் நேற்று 104 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதில் அதிகபட்சமாக தொழிற்சாலைகள் நிறைந்த தல்செர் பகுதியில் 115.34 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மாநிலத்தின் மேற்கு பகுதியில் அனல் பறப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தல்செருக்கு அடுத்த படியாக தித்லகார் பகுதியில் 112.1 டிகிரி வெயில் பதிவானது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், “மாநிலத்தில் பகல் நேர வெயில் குறைவதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த சில நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
    ஒடிசாவின் பலசோர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி நவீன் பட்நாயக், என் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வீட்டுக்கு சென்ற பின்னரே நான் ஒடிசாவுக்கு வருவேன் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஒடிசாவின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:



    ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியை பார்வையிட பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. அதை பார்வையிட அவருக்கு நேரமும் இல்லை.

    நடைபெற்று முடிந்த மூன்று கட்ட பாராளுமன்ற தேர்தலின் நிலவரத்தை வைத்துப் பார்த்தால், மே 23ம் தேதிக்கு பிறகு நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள். எனவே, நான் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
    ஒடிசாவில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகளை தாக்கிய எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். #LokSabhaElections2019

    புவனேஸ்வர்:

    ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. பிரதீப் மகராதி. இவர் 6 தடவை தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக பதவி வகித்து வருகிறார். தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் இவர் வேட்பாளர்களுக்கு வழங்க பணம் மற்றும் மது பாட்டில்களை தனது பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பூரி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீடு உள்ள ஹுன்கிபூர் கிராமத்துக்கு சென்றனர்.

    அங்கு சென்று சோதனை நடத்த முயன்றனர். உடனே பிரதீப் மகராதி எம்.எல்.ஏ. அவர்களை தடுத்ததுடன் தாக்குதல் நடத்தினார்.

    தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து பிரதீப் மகராதி எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். #LokSabhaElections2019

    ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளால் தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #Maoists
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள கந்தமால் பாராளுமன்றத் தொகுதியில் இரண்டாம் கட்டத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. 

    புல்பானி சட்டசபை தொகுதிக்கு உள்ளிட்ட பகுதியில் தேர்தல் பணிபுரிய வந்த சஞ்சுக்தா திகால் என்ற பெண் அதிகாரியை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொலை செய்தனர்.

    தேர்தல் பணிபுரிய வந்த பெண் அதிகாரியை மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்றது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019 #Maoists
    ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.



    முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர். நவீன் பட்நாயக்கிடம் இருந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    ஒடிசா மாநிலத்தில் உள்ள குர்தா நகரத்தில் இன்று காலை பாஜக தலைவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். #BJPLeaderShotDead
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் குர்தா நகரத்தைச் சேர்ந்தவர் மங்குலி ஜனா. இவர் அந்நகரத்தின் மண்டல பாஜக தலைவர் ஆவார். இவர் நேற்றிரவு குர்தா தொகுதியின் பாஜக வேட்பாளர் வீட்டின் அருகில் நின்றுக் கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பாஜக தொண்டர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த மர்ம நபர், சற்றும் எதிர்பாராத விதமாக அவரை நோக்கி துப்பாக்கியால் 4 ரவுண்ட் சுட்டார். இதில் 2 குண்டுகள் அவர் மீது பாய்ந்தன.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜனாவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்நகரத்தின் நான்கு புற எல்லைகளையும் அடைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  

    மங்குலி ஜனாவை கொன்றவரை கைது செய்ய வலியுறுத்தி குர்தா பகுதி பாஜகவினர் இன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களிடம் ஜனநாயகத்தை காப்பாற்றவும், ஆர்ப்பாட்டத்தை விடுத்து கலைந்து செல்ல வேண்டியும் வலியுறுத்தினார். மேலும் இதற்கான பதில், தேர்தலில் மக்களின் வாக்குகளில் வெளிப்படும் எனவும் கூறினார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து குர்தா தொகுதி பாஜக வேட்பாளர் கூறுகையில், ‘இந்த சம்பவத்திற்கு நான் கடுமையான கண்டனம் தெரிவிக்கிறேன். எனது 40 ஆண்டுகால அரசியலில் குர்தா பகுதியில் இது போன்ற கொடூரம் நடப்பது இதுவே முதல் முறையாகும்’ என கூறினார். #BJPLeaderShotDead

    மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதிலும் உள்ள 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. 

    20 மாநிலங்களின் 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெற்றது.

    இதற்கிடையே, ஒடிசாவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால், மாவோயிஸ்ட்கள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இந்நிலையில், மாவோயிஸ்ட் அச்சுறுத்தலால் ஒடிசா மாநிலத்தின் மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஒடிசா மாநிலத்தில் தேர்தலில் வாக்காளர்கள் பங்கேற்கக் கூடாது என மாவோயிஸ்ட்கள் மிரட்டல் விடுத்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ஆனாலும், மால்கன்கிரி மாவட்டத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரிவித்தனர். #LokSabhaElections2019
    முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் புவனேசுவரம் விமான நிலையத்தில் இருந்தபடியே, செல்போன் மூலம் புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். #YogiAdityanath
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமானம் மூலம் புவனேசுவரம் வந்தார்.

    பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அந்த ஊர்களுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால், ஹெலிகாப்டர் பறக்க விமானபோக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

    தொலை தூரத்தில் உள்ள அந்த ஊர்களுக்கு உடனடியாக செல்ல முடியாது என்பதால், யோகி ஆதித்யநாத் புவனேசுவரம் விமான நிலையத்தில் இருந்தபடியே, செல்போன் மூலம் புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். #YogiAdityanath
    பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஒடிசாவில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, நேர்மையான ஆட்சியா? அல்லது ஊழல் ஆட்சியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கூறியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    சுந்தர்கார்க்:

    ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கார்க் பகுதியில், பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    இந்த முறை ஒடிசாவில் தாமரை மலர்ந்தே தீரும். வெற்றியை பாஜக அள்ளிப்பருகும்.  ஒடிசா மாநிலத்தில் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை மலரும் என்று நான் பெருமையுடம் சொல்லுவேன். அதேப்போல் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நாட்டின் வலிமையான மற்றும் தீர்க்கமான கட்சியாகும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக செயல்படுகிறது. எனவே நேர்மையான ஆட்சி தேவையா? அல்லது  ஊழல் ஆட்சி தேவையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

    நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் நல்ல எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது.  தொண்டர்களின் கடுமையான உழைப்பிலும், வியர்வையிலும் உருவானது தான் இந்த பாஜகவே தவிர, பணத்தினாலோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. தற்போதும் தொண்டர்களின் வியர்வையினால் தான் வளர்ந்து வருகிறது.  எனவே தான் இன்று நாட்டில், மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாஜக  விளங்குகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
    ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் மற்றும் காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள் என 40 பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
    ஒடிசாவில் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்படும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabha
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 118 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார். அதேபோல 21 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

    நடைபெற உள்ள தேர்தலிலும் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #NaveenPatnaik #LokSabha 
    ஒடிசாவில் போலீசாரால் 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட், சரண் அடைந்துள்ளான். #MaoistSurrenders
    மால்கங்கிரி:

    ஒடிசாவின் மால்கங்கிரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் தனஞ்செயா கோப்(27). மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவன் மீது கொலை, சாலை பராமரிப்பு வாகனங்களுக்கு தீவைப்பு, அலுவலகங்களில் குண்டு வைப்பு, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட 27 குற்றச்செயல்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த இவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும், தனஞ்செயா கோப் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என மால்கங்கிரி போலீசார் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில் தனஞ்செயா கோப், கோராபுட் காவல் நிலையத்தில் நேற்று டிஐஜி ஹிமான்சு லால் முன்னிலையில் சரணடைந்தான்.

    இதனையடுத்து மாநில அரசின் மறு வாழ்வு திட்டத்தின்படி, கோப்பிற்கு பண உதவி மற்றும் மறு வாழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மேலும் கோப் சரணடைந்து, சமூகத்துடன் ஒன்றி வாழ விருப்பம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.   2009ம் ஆண்டு  மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்த கோப், ஆந்திரா- ஒடிசா எல்லைப்பகுதியில் உள்ள கலிமேலா பகுதியில் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. #MaoistSurrenders

    ×