search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் உள்ள விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து நடத்தப்பட்ட அஸ்திரா ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. #Palasore #IAF #AstraMissile #NirmalaSitharaman
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கிருந்து எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை நேற்று பிற்பகல் செலுத்தப்பட்டது. இது வானில் பறந்த பான்ஷி ரக ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    வானில் இருந்து பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை 20 முறைக்கும் மேல் சோதித்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 7 முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டு உள்ளது. இறுதியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.



    அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக விமானப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகள் ஆகியோருக்கு பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். #Palasore #IAF #AstraMissile #NirmalaSitharaman
    ஒடிசா மாநிலத்தில் கார் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளிக்கப்படும் என அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் தெரிவித்துள்ளார். #Accident #Odisha #NaveenPatnaik
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் இருந்து பட்ராபூர் பகுதிக்கு இறந்த உறவினரின் அஸ்தியை கரைப்பதற்காக காரில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தீடிரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகே இருந்த கால்வாயில் விழுந்து மூழ்கியது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படகு மூலம் நடந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டனர். 2 குழந்தைகள் உடபட 5 பேர் இந்த விபத்தில் பலியாகினர்.



    இந்த விபத்து குறித்து தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Accident #Odisha #NaveenPatnaik
    ஒடிசா மாநிலத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த நாகம் ஒன்று, அங்கு இருந்த 4 நாய்க்குட்டிகளை அவற்றின் தாயின் கண் முன்னே கொத்தி கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. #Odisha #CobraKillspuppies
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து தப்ப முயன்ற அந்த நல்ல பாம்பு நாய் ஒன்றின் இருப்பிடத்துக்குள் நுழைந்தது.

    ஏற்கனவே வனத்துறையினருக்கு தகவல் அளித்து இருந்த மக்கள், வனத்துறையினர் வருகைக்காக காத்து இருந்தனர். இதையடுத்து, தனது 5 குட்டிகளுடன் அங்கு இருந்த தாய் நாய் பாம்பை கண்டு குரைக்க துவங்கியது.



    நாய்களின் இருப்பிடத்தில் நுழைந்த அந்த பாம்போ, நாய்க்குட்டிகள் ஒவ்வொன்றாக கொத்தியது. இந்த சமயத்தில் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்து சேரவே, பாம்பு அப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.

    இருப்பினும் பாம்பு கொத்தியதில் 4 நாய்க்குட்டிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. ஒரே ஒரு குட்டி மட்டும் உயிர்தப்பிய நிலையில், தனது இறந்த குட்டிகளை தாய் நாய் துன்பத்துடன் பார்த்தது அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. #Odisha #CobraKillspuppies
    ஒடிசா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி இளைஞரை குணப்படுத்த, அவரை தலைகீழாக தொங்கவிட்டு, சாமியார் ஒருவர் நெருப்பு மூட்டும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புவனேஸ்வர்:

    உலகின் பல இடங்களிலும், கடவுள் பெயரால் உருவாக்கப்படும் மூட நம்பிக்கைகளால் விளையும் துன்பங்கள் ஏராளம். ஒருவர் உடல்நலக் குறைவுற்றால் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல், கோவிலுக்கும், சாமியார்களிடமும் அழைத்துச் செல்வதால் பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் மரணமும் அடைந்துள்ளனர்.

    அவ்வாறு மரணத்தின் விளிம்பு வரை சென்று மீட்கப்பட்ட ஒடிசா இளைஞர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒடிசா மாநிலத்தில் பாபனி சங்கர் நந்தா என்ற இளைஞர் உடல் ஊனமுற்று இருக்கிறார். இவரை குணப்படுத்தும் முயற்சியில் அவரது தாயார் கந்தமால் என்ற பகுதியில் உள்ள கோவிலை அனுகியுள்ளார்.

    அங்கு, இவரை தலைகீழாக தொங்கவிட்டு நெருப்பு மூட்டினால் உடல் ஊனம் குணமாகும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனை நம்பிய அவரது தாயார் நந்தாவை பலிகுடா எனும் கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நந்தாவின் எதிர்ப்பையும் மீறி, அவரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு நெருப்பு மூட்டியுள்ளனர்.

    இதனால் படுகாயமடைந்த நந்தாவுக்கு, வீட்டிலேயே சிகிச்சை அளிக்க அந்த சாமியார் கூறியுள்ளார். ஆனால், மிகவும் மோசமான நிலையில் இருந்த நந்தாவை அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த சாமியார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டு இருந்த நந்தா, மத நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்பட்ட இந்த மூட சடங்குகளினால் தற்போது தீக்காயங்களுடன் துன்புற்று வருகிறார்.
    பசுமையை வலியுறுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கடவுள் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். #SudarsanPattnaik #LordGanesh
    புவனேஷ்வர் :

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
     
    இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்று பசுமையை வலியுறுத்தும் வகையில் பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கடவுள் விநாயகரின் 20 அடி உருவம் பதிந்த மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 



    விநாயகரின் மணல் சிற்பத்தை வரைந்து அதன் கீழே பசுமையை காப்போம், பிளாஸ்டிக் குப்பைகளை வெல்வோம் எனவும் மண்ணில் எழுதியுள்ளார். 

    புரி கடற்கரையில் அவர் வரைந்துள்ள விநாயகரின் மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. #SudarsanPattnaik #LordGanesh
    மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் ரூ.11 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என முன்னாள் மத்திய மந்திரியும் அனைத்திந்திய காங்கிரஸ் விளம்பர கமிட்டி உறுப்பினருமான பக்தா சரண் தாஸ் தெரிவித்துள்ள்ளார். #FuelPrice #BhaktaCharanDas
    புவனேஷ்வர்:

    பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயரவில்லை. ஆனாலும், இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாயையும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாயையும் தாண்டி இருக்கின்றன. விரைவில் இவற்றின் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என இருந்து வந்த நிலையில் இப்போது 71 ரூபாயை தாண்டி இருக்கிறது. இதுவும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.



    இந்நிலையில், மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் ரூ. 11 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது  என முன்னாள் மத்திய மந்திரியும் அனைத்திந்திய காங்கிரஸ் விளம்பர கமிட்டி உறுப்பினருமான பக்தா சரண் தாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா  எண்ணெய் ஒரு ஒரு பேரல் 107.09 அமெரிக்க டாலராக இருந்தது. அப்போது நாங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலை 71.41 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 55.49 ரூபாய்க்கும் விற்பனை செய்தோம். 

    தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 77 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை 79.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 77.80 ரூபாய்க்கு விற்கிறீர்கள். இது சரியா?

    மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் 11லட்சம் கோடி சம்பாதித்துள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  #FuelPrice #BhaktaCharanDas
    ஆசிய விளையாட்டு போட்டிகளில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனை டுடீ சந்துக்கு ரூ.3 கோடிக்கான காசோலையை ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் இன்று வழங்கினார். #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik


    புவனேஸ்வர்:

     
    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

    ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து, டுடீ சந்த் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்தார். இவரது இந்த திறமையை பாராட்டும் வகையில், முதல்மந்திரி நவீன் பட்னாயக் கூடுதலாக 1.5 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.

    இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா திரும்பிய டுடீ சந்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ரூ.3 கோடிக்கான காசோலையை இன்று வழங்கினார் #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
    ஆசிய விளையாட்டு போட்டியில் மேலும் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்ற தடகள வீராங்கனை டுடீ சந்துக்கு தற்போது கூடுதலாக 1.5 கோடி ரூபாய் அளிக்கப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
    புவனேஸ்வர்:

    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.

    ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.



    இதைத்தொடர்ந்து, டுடீ சந்த் தற்போது பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்துள்ளார். இவரது இந்த திறமையை பாராட்டும் வகையில், முதல்மந்திரி நவீன் பட்னாயக் கூடுதலாக 1.5 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம், டுடீ சந்த் 3 கோடி ரூபாய் ஊக்கத்தொகை பெற உள்ளார். #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
    ஒடிசா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம் பெண் கடத்தப்பட்டு 10 நாட்களாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் சம்பால்பூர் மாவட்டத்தின் குச்சிண்டா எனும் பகுதியில் வசித்து வருபவர் சோம்யா ரஞ்சன் தருவா.  இவர் கடந்த மாதம் 21-ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம் பெண்ணை கடத்தி தனது இல்லத்தில் அடைத்து வைத்துள்ளார்.  மேலும், துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

    10 நாட்களாக அந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில், அவன் சிறிதும் எதிர்பாராத நேரத்தில் அவனிடம் இருந்து அந்த பெண் தப்பியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த சோம்யா ரஞ்சன், அந்த பெண்ணின் உறவினரை கடத்திவைத்துக் கொண்டு, போலீசிடம் போனால் அவரை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து அந்த உறவினரை அவன் விடுவித்தவுடன், குச்சிண்டா காவல்நிலையத்தில் அந்த பெண் நடந்த அனைத்தையும் கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சோம்யா ரஞ்சன் தருவா என்ற காம கொடூரனை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவன் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

    இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க சட்டங்களை கடுமையாக்குவதுடன் மட்டுமன்றி, தண்டனை உடனடியாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்தாக உள்ளது. #Odisha
    ஒடிசா மாநிலத்தில் 8 வயது பள்ளி மாணவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Odisha #POCSOact
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 8 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இந்த வழக்கு ராயகடா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிறுவனின் வாக்குமூலத்தையும் தாண்டி 21 பேரை தீவிரமாக விசாரித்த நீதிமன்றம், மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு போக்ஸோ சட்டத்தின் படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    மேலும், 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம், ஒருவேளை அபராதம் கட்ட முடியாமல் போனால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. #Odisha #POCSOact
    ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு உறவிடப்பள்ளி விடுதியில் மர்மமான முறையில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் மல்கங்கிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அரசு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. செல்வந்தர்களும், சமூகத்தில் முக்கிய அந்தஸ்து பெற்றவர்களும் பயிலும் இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் பந்தனா சர்தார் என்ற சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    நேற்று இரவு பள்ளி விடுதியில் இரவு உணவை முடித்து விட்டு அறைக்கு திரும்பிய மாணவர்கள் பந்தனாவை காணவில்லை என்பது குறித்து வார்டனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விடுதி முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணினி அறையில் கை அறுபட்ட நிலையில், சிறுமி ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார்.

    இதைக் கண்ட விடுதி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏற்கனவே பந்தனா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவரது இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மீட்கப்பட்ட அறையில் இருந்து கையை அறுக்க பயன்படுத்திய பிளேடு கண்டெடுக்கப்பட்டதால், இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஆனால், தங்களது மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை எனவும், மகளின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை தீர விசாரிக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசு உறைவிடப்பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவியின் மர்ம மரணம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Odisha
    ஒடிசா மாநிலத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் இறந்து போன பெண்ணின் உடலை அவரது உறவினர் தன்னந்தனியாக சைக்கிளில் எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஒடிசா:

    ஒடிசா மாநிலம் போவூத் மாவட்டம் கிருஷ்ணாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சத்ருபன்கா.

    இவருடன் அவரது மனைவி, மனைவியின் சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியின் சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை.

    சத்ருபன்கா வேறு சாதி பெண்ணை மணந்ததால் கிராமத்தினர் ஆத்திரம் அடைந்து அவரை கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்து இருந்தனர். மேலும் அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது.

    இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தார். இதில் மனைவியின் சகோதரி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை சத்ருபன்கா ஆம்புலன்ஸ் மூலம் தனது கிராமத்துக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் கிராமத்தினர் யாரும் இறுதி சடங்கு செய்ய எந்த உதவியும் செய்யவில்லை. இதேபோல உறவினர்களும் அவருக்கு உதவ முன்வரவில்லை.


    இதனால் சத்ருபன்கா தனது மனைவியின் சகோதரி உடலை சைக்கிளில் வைத்து கொண்டு சென்றார். தனி நபராக அவர் இறுதி சடங்கு செய்தார்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே மாவட்டத்தில் இதே மாதிரியான சம்பவம் நடந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×