search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் அக்டோபர் 2 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயிக் உத்தரவிட்டுள்ளார். #BanPlastic #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயிக் காணொளி காட்சி மூலம் மக்களிடம் நேரடியாக இன்று உரையாடினார். அந்த உரையாடலின் போது, அடுத்த 2 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக ஒடிசாவை உருவாக்குவதற்காக ஒடிசாவின் பல பகுதிகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்துள்ளார்.

    இந்த அறிவிப்பு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புவனேஸ்வர், கட்டாக், பெர்காம்பூர், சாமல்பூர், ரோர்கெலா, பூரி நகர், மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய முதல்மந்திரி பட்னாயிக், அனைவரும் வீடுகளில் மரக்கன்று நடுமாறும், அதன்மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறும் கூறியுள்ளார்.

    பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் உபயோகம் குறித்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் எனவும் முதல்மந்திரி நவீன் பட்னாயிக் மக்களுடனான காணொளி உரையாடலில் தெரிவித்துள்ளார். #BanPlastic #Odisha
    ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டியுள்ளார். #NaveenPatnaik #Hockey #DilipTirkey
    புவனேஷ்வர்:

    இந்தியாவின் தேசிய விளையாட்டாக அனைவராலும் அறியப்படுவது ஹாக்கியாகும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரையில் அரசு இதழில் வெளியிடப்படவில்லை.

    இதற்கிடையே, ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. ஹாக்கி விளையாட்டை தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.



    இந்நிலையில், ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் திலிப் திர்கே பாராட்டியுள்ளார். 

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா முதல் மந்திரியின் முயற்சிக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கியில் தான் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது, எனவே கட்டாயம் ஹாக்கியை பிரபலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். #NaveenPatnaik #Hockey #DilipTirkey
    ஒடிசா மாநில முதல்வர் நவின் பட்நாயக் தங்கள் மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். #Odisha #NaveenPatnaik #specialcategorystatus

    புவனேஷ்வர்:

    தெலங்கானா தனி மாநிலமாக பிறிக்கப்பட்ட போது ஆந்திரப்பிரதேச மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் இதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. இந்த காரணத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மோடி ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். 

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக உடனான கூட்டணியை சமீபத்தில் முறித்துக்கொண்டது. 
     
    ஆந்திரா மாநிலத்திற்கு இன்னும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத நிலையில்,  தற்போது ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
     
    அந்த கடிதத்தில், இந்தியாவில் மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று. இங்குள்ள மக்கள்தொகையில், எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரே பெரும்பான்மையாக உள்ளனர். மேலும், இயற்கை சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலமாகவும் ஒடிசா உள்ளது. மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #Odisha #NaveenPatnaik #specialcategorystatus
    ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளையர்கள் 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். #bankrobbery #odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ரூர்கேலா நகரம். இந்த நகரத்தின் பஜார் பகுதியில் பிரபல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை அமைந்துள்ளது. இன்று காலை 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 7 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

    இதையடுத்து வங்கி ஊழியர்களை தாக்கி அவர்களிடம் இருந்து வங்கியின் கஜானா சாவியை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், வங்கியில் உள்ள 
    சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்குகளையும் கைப்பற்றி பின் தப்பிசென்றுள்ளனர்.



    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக சம்பவம் தொடர்பான விசாரணையில் கொள்ளையர்கள் இந்தி மொழியில் பேசிக்கொண்டதாக சம்பவ இடத்தில் இருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து,  அண்டை மாநிலங்களை சேர்ந்த கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள வங்கியில் நடைபெற்ற இந்த துணீகர கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #bankrobbery #odisha
    ஒடிசாவில் சிறுமியை கற்பழித்த வழக்கில் 5 பேருந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கற்பழிப்பு சம்பவம் நடந்த 30 நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
    சம்பல்பூர்:

    ஒடிசாவில் சாசன் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் அவளை மிரட்டி கற்பழித்தது. இதனால் அவமானம் அடைந்த அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

    சம்பல்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்‌ஷல் ராஜா, டினு சாஹூ, ஹாடு பஞ்சாபியர், ஆசீர்வாத் பெகரா, அபிலாஷ் பஞ்சாபிசர் மற்றும் சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மீது விரைவு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து 15 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

    வழக்கு விசாரணை முடிந்த நிலையில் குற்றவாளிகள் அப்‌ஷல் ராஜா, டினு சாஹூ உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கற்பழிப்பு வழக்கில் கைதான 6-வது குற்றவாளி சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.

    கற்பழிப்பு சம்பவம் கடந்த மாதம் (மே) 2-ந்தேதி நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நியாயம் வேண்டியும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும் சம்பல்பூர் போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் அரோராஅதிதீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அதன் விளைவாக சம்பவம் நடந்த 30 நாளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. #Tamilnews
    விசாவில் குளறுபடி செய்து இந்தியாவில் தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தாய்லாந்து பெண்களை நாட்டை விட்டு வெளியேற போலீசார் இன்று உத்தரவிட்டுள்ளனர்.
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பாபுஜி நகரில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 19-ம் தேதி அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தாய்லாந்து நாட்டை சேர்ந்த  பெண்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் வைத்திருந்த விசா காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சிறப்பு படை போலீசார் கஜபதி நகர் பகுதியில் நடந்த சோதனையில் 3 பெண்களை மீட்டனர்.

    விசா விதிகளில் குளறுபடிகள் இருப்பதன் காரணமாக, உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என தாய்லாந்து பெண்களுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.

    கடந்த ஆண்டும் இதேபோல் 3 தாய்லாந்து பெண்களை இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என நோட்டீஸ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    பிரதமர் மோடி பாஜகவின் 4 ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய சிறிது நேரத்தில், ஒடிசா மாநில பாஜக அலுவலகத்தில் பட்டாசு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #4YearsOfModiGovt #NarendraModi #Firecrackers #BJPOffice
    புவனேஷ்வர்:

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நிலையில் நேற்றுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடைந்தது.

    இதை முன்னிட்டு ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் மகாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், 20 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து கொண்டிருப்பது 4 ஆண்டு கால மத்திய அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி திரும்பினார்.



    அவர் சென்ற சிறிது நேரத்தில் மாநில பாஜக அலுவலகத்தில் சிலர் பட்டாசுகளை வீசி சென்றனர். இதுதொடர்பாக, பாஜக அலுவலகத்தினர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் புரி மாவட்டத்தை சேர்ந்த பினக் மோஹந்தி மற்றும் பிஸ்வஜித் மாலிக் என்ற 2 பேரை கைது செய்தனர். இதில் மாலிக் என்பவர் மாநில பாஜக தலைவர் பசந்த குமாரை பொம்மை துப்பாக்கியால் சுட்டது தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர் என தெரிவித்தனர். #4YearsOfModiGovt #NarendraModi #Firecrackers #BJPOffice
    ஒடிசா மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #OdishaGovernor #MizoramGovernor

    புதுடெல்லி:

    பீகார் மாநில ஆளுநரான சத்ய பால் மாலிக்,  ஒடிசா மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய ஆளுநராக பேராசிரியர் கணேஷி லால் நியமிக்கப்பட்டுள்ளார். 

    மேலும் மிசோரம் மாநிலத்தின் புதிய ஆளுநராக கேரள மாநில முன்னாள் பா.ஜ.க. தலைவர் கும்மணம் ராஜசேகரனை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #OdishaGovernor #MizoramGovernor
    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்று நான்காண்டுகள் ஆகும் நிலையில் வரும் 26-ம் தேதி ஒடிசாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். #BJP #Modi #Odishavisit
    புவனேஸ்வர்:

    பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. வரும் 26-ம் தேதியுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடையும் நிலையில் ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் வரும் 26-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

    ஒடிசாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல்களில் பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க., சமீபத்தில் நடைபெற்ற பிஜப்பூர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது.

    இந்நிலையில், ஒடிசா மாநில சட்டசபை மற்றும் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொது தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்டாக் நகரில், மஹாநதி நதிக்கரையில் உள்ள பாலி ஜாத்ரா திடலில் வரும் 26-ம் தேதி பிரதமர் பேசவுள்ள பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #BJP #Modi #Odishavisit
    ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான வேட்டையை வெற்றிகரமாக நடத்திய இரு மாவட்ட போலீசாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #OdishaMaoistoperation #Cashrewards
    புவனேஸ்வர்:

    மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

    பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஒடிசாவில் மாவோயிஸ்ட்களின் அட்டகாசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் தொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தின்போது, போலாங்கிர் மற்றும் கந்தமால் மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பல மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொன்று சிறப்பாக செயலாற்றிய அம்மாவட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த நவீன் பட்நாயக் இரு மாவட்ட போலீசாருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என அறிவித்தார். #OdishaMaoistoperation #Cashrewards
    ஒடிசாவின் கந்தமால், பலாங்கிர் மாவட்டங்களில் பாதுகாப்பு படை நடத்திய நடந்த என்கவுண்டரில் 6 நக்சல்கள் சுட்டுக் கொன்றனர். #NaxalEncounter
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். 



    இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

    இதேபோல், கந்தமால் மாவட்டத்தில் உள்ள கோலங்கி கிராமத்தின் அருகே சுடுகும்பா காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் இரு பெண்கள் உள்பட 4 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #NaxalEncounter
    ஒடிசா மாநிலத்தில் தலைக்கு 9 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இரண்டு நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தலைக்கு 9 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    ஒடிசா மாநிலம், பாலங்கிர் மாவட்டத்தில் உள்ள துட்கமல் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு சிறப்பு கூட்டுப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காட்டுக்குள் பதுங்கி இருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். 

    இருதரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஒடிசா மாநில அரசின் சார்பில்  தலைக்கு 9 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த  சஞ்சிப் மற்றும் ராகேஷ் ஆகிய இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டதாக அம்மாநில நக்சல் ஒழிப்பு சிறப்புப் படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
    ×