search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மில்க்‌ஷேக்"

    இரத்த அணுக்களை உடல் அதிகரிக்க கூடிய திறன் செவ்வாழைக்கு உண்டு. மேலும் உடல் சூட்டையும் குறைக்கும். இன்று செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    செவ்வாழை : 1 (கனிந்தது)    
    பேரீச்சம்பழம் : 5    
    வால்நட் : 3    
    குளிர்ந்த பால் : 400 மி.லி.



    செய்முறை :

    செவ்வாழை பழத்தை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், வால்நட் பருப்பு மற்றும் பால் சேர்த்து மிக்ஸில் நுரை வரும் வரை அரைத்துக் கொள்ளவும்.

    கூடுதல் சுவைக்குத் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

    புளிக்காத தயிரில் செவ்வாழை ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.

    செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்‌ஷேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் வித்தியாசமான, சுவையான, ஆரோக்கியமான மில்க்‌ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் நாவல்பழ மில்க்‌ஷேக் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாவல்பழக்கூழ் - அரை கப்
    குளிர்ந்த பால் - தேவையான அளவு (காய்ச்சி  ஆறவைத்தது)
    தூளாக்கிய ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
    விருப்பமான ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
    சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
    கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டேபிள்ஸ்பூன்
    கோகோ சிரப் - ஒரு டேபிள்ஸ்பூன்    



    செய்முறை :

    குளிர்ந்த பாலுடன் நாவல்பழக்கூழ் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும்.

    இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.

    மேலே கோகோ சிரப் ஊற்றிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். கோடையில் கிடைக்கும் கிர்ணிப்பழத்தை வைத்து மில்க்‌ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கிர்ணி பழம் - ஒன்று,
    பால் - அரை லிட்டர்,
    சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை:

    பாலை காய்ச்சி ஆற விட்டு குளிர வைக்கவும்.

    கிர்ணி பழத்தின் தோல், விதைகளை நீக்கி துண்டுகளாக்கவும்.

    துண்டுகளாக்கிய கிர்ணி பழத்தை மிக்சியில் போட்டு அதனுடன் சர்க்கரை, குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

    கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பருகலாம்.

    குளுகுளு கிர்ணிப்பழ மில்க்‌ஷேக் ரெடி.

    பலன்கள்: சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் கிர்ணி பழம். நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×