search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101126"

    ஜம்மு காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். #TralEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியாக் சுட தொடங்கினர். 



    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில்
    ஜெய்ஷ் இ மொகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #TralEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுவீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantsGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சஃப்னாக்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    அப்போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்புவதற்காக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #MillitantsGunnedDown
    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ShopianEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கட்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இன்று இரவு அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் சுட்டனர். இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. #ShopianEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் அருகே தேசிய எல்லைக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. #JammuKashmir #Encounter
    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி அளித்து வருகின்றனர்.

    அதேநேரத்தில் மழைக்காலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்கின்றனர். ஐம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் அருகே சாகூ அரிசால் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.



    இந்த துப்பாக்கிச்சூடு குறித்த முழு விவரங்கள் வெளியாகாத நிலையில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதாக இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. #JammuKashmir #Encounter

    ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் மற்றும் பாராமுல்லா ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட இரு என்கவுண்டர்களில் பாதுகாப்பு படையினர் 6 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். #JammuKashmir #Encounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அர்வானி பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட்னர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 4 பயங்கரவாதிகள்  சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் நடவடிக்கையை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.



    இதேபோல், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில் உள்ள கீரி என்ற இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான இந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #Encounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JammuKashmir #TerroristsGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் உள்ள கீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட துவங்கினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் கடுமையான பதிலடி கொடுத்தனர்.

    சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலான இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #TerroristsGunnedDown
    ஜம்மு காஷ்மீரில் வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JammuKashmir #MillitantGunnedDown
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள லாரூ என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பாதுகாப்பு படையினர் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் இருப்பதை கண்டறிந்து சுற்றி வளைத்தனர்.



    பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததை அறிந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பினருக்குமான இந்த துப்பாக்கிச்சூடு பலமணி நேரங்களாக நீடித்தது.

    இந்நிலையில், வீட்டில் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த தகவலை டிஜிபி தில்பக் சிங் உறுதி செய்துள்ளார். #JammuKashmir #MillitantGunnedDown
    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று மாலை துப்பாக்கி சண்டை நடைபெற்றது. #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து, பதான் பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர்.

    பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் சேத விவரங்கள் வெளியாகவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaEncounter
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று தெஹ்ரீக் அல் முஜாகிதீன் பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த சண்டையில் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த சவுகத் அகமது பட் என்ற பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். 

    அவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவன் பாரமுல்லாவில் நேற்று போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்கிய சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவன்.

    நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் போலீசார் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி  தாக்கினர். இந்த தாக்குதலில் மூன்று போலீசார் காயமடைந்தனர். பின்னர் பயங்கரவாதிகளை போலீசார் துரத்திச் சென்றனர். இதில் பைசான் மஜீத் பட் என்பவன் சிக்கினான். தப்பி ஓடிய அவனது கூட்டாளியான சவுகத் அகமது பட் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டுள்ளான்.

    ஸ்ரீநகரின் பதே கதல் பகுதியில் நேற்று பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில்  2 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய கூட்டாளி சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார். நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. #JKAttack #JKEncounter
    காஷ்மீரின் ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #HandwaraEncounter
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் தெற்கில் அமைந்துள்ள ஹந்த்வாராவில் சத்கண்ட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர்.



    அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    விசாரணையில், அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பி ஹெச் டி பட்டம் முடித்ததும் தெரிய வந்தது.

    பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து. அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. #HandwaraEncounter
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை வழியாக அத்துமீறி ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் இன்று மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டு பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதை தடுக்க பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையின் போது நேற்று வரை 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் 3 நாட்களில் 7 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்துகொண்டு இருக்கிறது. #JKInfiltration #FnfiltrationBid #Militantskilled
    ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #Kulgam
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை ஒடுக்கும் விதமாக ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதனால் அங்கு கடந்த சில மாதங்களில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் குல்காம் அருகே உள்ள சவுகம் எனும் இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவு துறை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் அளித்தது.

    இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

    பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாகின் மற்றும் லஷ்கர்-இ- தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.

    ஆயுதங்கள் திருட்டு, 2 வங்கி கொள்ளை, ஊழியர் மற்றும் போலீசாரை சுட்டுக் கொன்றது உள்பட பல்வேறு சம்பவங்களில் இந்த தீவிரவாதிகள் தொடர்புடையவர்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரமுல்லா- காசிகுன்ட் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. #JKEncounter #Kulgam
    ×