search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வார்னே"

    உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார்.
    லண்டன்:

    உலக கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் எழுதுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முந்தைய கால ஆஸ்திரேலிய அணியை போல் எந்த இடத்திலும், எந்த அணியையும் வெல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.

    இந்த உலக கோப்பை போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணிகள் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஒரு நாள் போட்டியில் அவர்கள் சமீபகாலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறது என்பது தெரியும். ஆஸ்திரேலிய அணி கடந்த உலக கோப்பையை வென்றது. கடைசி 6 உலக கோப்பை போட்டிகளில் 4-ல் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் பட்டம் வெல்லும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு ஷேன் வார்னே கூறினார்.

    டோனியின் ஓய்வு குறித்து யாரும் விமர்சனம் செய்ய தேவையில்லை. அவரது ஓய்வு குறித்து அவரே முடிவு செய்வார் என்று வார்னே தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த முக்கியமான வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் டோனி என்றால் அது மிகையாகாது. இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பையை (2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை) பெற்று கொடுத்து உள்ளார்.

    இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக பணியாற்றிய டோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான அவர் பின்னர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த இரு அணியிலும் மட்டும் அவர் விளையாடி வருகிறார்.

    தற்போது நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் டோனி அதிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். தவிர்க்க முடியாத வீரரான அவர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஒய்வு முடிவை வெளியிடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் அவரது இடத்துக்கான வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் டோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து ஜாம்பவான் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். டோனி எப்போது விரும்புகிறாரோ அப்போது ஓய்வு பெறலாம் என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட்டின் அற்புதமான வீரர் டோனி. அவர் இந்திய அணிக்கு பெருமைகளை தேடிக்கொடுத்து உள்ளார். டோனி இல்லாத உலகக்கோப்பைக்கான இந்திய அணியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

    உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் அவர் இடம் பெற்று இருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புவதை என்னால் நம்ம முடியவில்லை. அவரது ஓய்வு குறித்து யாரும் எதுவும் நினைக்க தேவையில்லை.



    ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் எது என்று டோனிக்கு மட்டுமே தெரியும். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறாரோ அவரே முடிவு செய்வார். தற்போது டோனி மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    இவ்வாறு வார்னே கூறியுள்ளார்.

    2018-ம் ஆண்டு டோனியின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 20 ஒருநாள் போட்டியில் 275 ரன்களே எடுத்தார். இதில் சதமோ, அரைசதமோ இல்லை. அதிகபட்சமாக 42 ரன்களே எடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

    ஆனால் அதற்கு இந்த ஆண்டில் டோனி பதிலடி கொடுத்தார். அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. 9 ஆட்டத்தில் 327 ரன்கள் குவித்தார். சராசரி 81.75 ஆகும். இதில் 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 78.22 ஆகும்.

    சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியிலும் டோனி முத்திரை பதிக்கும் வகையில் ஆடினார். அவர் 12 இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தார். சராசரி 83. 20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 134.62 ஆக இருந்தது.
    சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் வார்னே, இங்கிலாந்து உலகக்கோப்பைக்கான அவரின் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார். #WorldCup2019
    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. வரும் 23-ந்தேதிக்குள் 10 அணிகளும் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். நியூசிலாந்து முதல் அணியாக வீரர்கள் பட்டியலை அறிவித்தது.

    இந்தியா 15-ந்தேதி உலகக்கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை அறிவிக்கிறது. இந்நிலையில் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் வார்னே, அவரின் ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்துள்ளார்.

    வார்னே தேர்வு செய்துள்ள அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. ஆர்கி ஷார்ட், 3. ஆரோன் பிஞ்ச், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. மேக்ஸ்வெல், 6. ஸ்டாய்னிஸ், 7. அலேக்ஸ் கேரி, 8. கம்மின்ஸ், 9. மிட்செல் ஸ்டார்க், 10. ரிச்சர்ட்சன் (பிட் இருந்தால்). 22. ஆடம் ஜம்பா

    நான்கு ரிசர்வ் வீரர்கள் விவரம்:-

    1. ஷேன் மார்ஷ், 2. நாதன் லயன், 3. ஆஷ்டோன் டர்னர், 4. கவுல்டர்-நைல்
    ஐபிஎல் தொடக்க சீசனை கைப்பற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்னாள் வீரர்களை கவுரவிக்கும் வகையில் கேலரிகளுக்கு அவர்கள் பெயரை சூட்ட இருக்கிறது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசன் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனை யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்றியது.

    அந்த அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தை சொந்த மைதானமாகக் கொண்டு விளையாடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட், வார்னே, தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் போன்ற மூத்த வீரர்கள் விளையாடியுள்ளனர்.

    மேலும், ஜேம்ஸ் பால்க்னெர், நமன் ஓஜா, முனாப் பட்டேல், பிரவின் தம்பே போன்றோரும் விளையாடியுள்ளனர். இவர்களை கவுரவிக்கும் வகையில் ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிகளுக்கு இந்த வீரர்களின் பெயர்களை சூட்ட முடிவு செய்துள்ளது.
    இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரின்போது ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறினார். #ShaneWarne #RishabhPant
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி, ரிஷப் பந்த் இருவரும் விளையாட வேண்டும். ரிஷப் பந்த், அற்புதமான வீரர். ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏன் தொடரக்கூடாது? என்னைக்கேட்டால் அவரை ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கூட இறக்கலாம்.

    தற்போது தொடக்க வரிசை பணியை ஷிகர் தவான் சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் ரிஷப் பந்தை ரோகித் சர்மாவுடன் இறக்கும்போது, இந்திய அணிக்கு நெருக்கடி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் அது ஒரு வித்தியாசமான யுக்தியாக எதிரணிக்கு ஆச்சரியத்தை அளிக்கும். விரைவில் தொடங்க உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரின் போது ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைத்து சோதித்து பார்க்கலாம். ஷிகர் தவானை அதற்கு அடுத்த வரிசையில் ஆட வைக்கலாம்.

    இவ்வாறு வார்னே கூறினார். #ShaneWarne #RishabhPant

    உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் தேர்வு கேலிக்கூத்தானது என்று வார்னே ஆவேசமடைந்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இங்கிலாந்தில் மே மாதம் 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களது சிறந்த அணியைத் தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னணி வீரர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், ஹசில்வுட், ஆர்கி டி'ஷார்ட் போன்றவர்கள் அணியில் சேர்க்கப்பட்டாமல் பீட்டர் சிடில், கவாஜா, நாதன் லயன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு கேலிக்கூத்தானது என்று கடுமையாக சாடியுள்ளார்.

    இதுகுறித்து வார்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் பெயரை அறிவித்ததை பார்த்தேன். சில வீரர்களை நீக்கியதும், சேர்த்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தேர்வு செய்ததில் எந்த அர்த்தமும் இல்லை. இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட்டை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக பட்லரை நியமிக்க வேண்டும் என்று வார்னே தெரிவித்துள்ளார். #joeRoot
    ஜோ ரூட் 21 போட்டிகளில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் அவரின் சராசரி 51.04-ல் இருந்து 46.80 ஆக குறைந்துள்ளது. 14 டெஸ்ட் சதங்களில் மூன்று மட்டுமே கேப்டனாக இருந்தபோது வந்துள்ளது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேப்டன் பதவியை பெற்ற பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக அவரை பார்க்கலாம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வார்னே கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அரைசதத்தை சதமாக மாற்றுவதில் அவர் தோல்வியடைந்துள்ளார். அதேவேளையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அசத்துகிறார்கள்.



    ஜோ பட்லர் சிறந்த கேப்டனாக முடியும். அவருடன் நான் பணியாற்றியதை வைத்து கூறுகிறேன். அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன். அவரால் இங்கிலாந்து அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும்.

    இங்கிலாந்து அணி ஜோ ரூட் அசைக்க முடியாத தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற நிலையை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கக் கூடாது. ஜோஸ் பட்லர் போன்ற ஒருவரிடம் கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும்’’ என்றார்.
    ×