search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101157"

    இந்த முத்திரையை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். இன்று முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    முதல் நிலை செய்முறை:

    ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    பின் மோதிர விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    இரண்டாம் நிலைசெய்முறை :

    ஆள்காட்டி விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். பிறகு நடுவிரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    பின் மோதிர விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும். கடைசியாக சுண்டு விரல் நகத்தை கட்டை விரலால் லேசாக அழுத்தவும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும், மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    மூன்றாம் நிலைசெய்முறை :

    ஐந்து விரல்களின் நுனிகளும் ஒன்றாக சேர்ந்திருக்குமாறு வைக்கவும்.மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளிவிடவும்.

    தினமும் காலை, மாலை மூன்று நிலைகளையும் 3 - 5 நிமிடம் செய்யவும்.

    பலன்கள்: சிந்தனை தெளிவு அடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது. இன்று இந்த முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும். இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.

    இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம்.



    பலன்கள் :

    தைராய்டு நோய் குணமடைகிறது.

    திக்கிப் பேசுவது குணமடைகிறது. குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது.

    இந்த முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது.

    நல்ல பசி கொடுக்கிறது. ஜீரண சக்தி அதிகமாகிறது. உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது.

    அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.
    கணேச முத்திரை ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    இடது கைவிரல்களை மடக்கி கைபாதம் நெஞ்சைப் பார்த்தபடி வைக்கவும். வலதுகை விரல்களை மடக்கி இடதுகை விரல்களில் கொக்கி போல் மாட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடும்போது கை புஜங்களில் அழுத்தம் கொடுத்து கைகள் ஒன்றை ஒன்று இழுத்த வண்ணம் இருக்கட்டும்.

    கை மாற்றி செய்யவும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்யவும்.

    பலன்கள் :

    ஒவ்வொருவர் தேகத்திலும் 6 ஆதார சக்கரங்களும் ஏழாவதாய் சகஸ்ராரமும் உள்ளது. இது தியானத்திற்கு ஏழு படிகள் என்று கூறப்படுகிறது. தியானத்தின் மூலம் சக்தியை மூலாதாரத்திலிருந்து எழுப்பி, தொடர்ந்து ஸ்வாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்று கடந்து கொண்டு செல்லப்படுகிறது.

    இதில் நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது இம்முத்திரை. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மேலும் மூச்சினை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்யும் வல்லமை வாய்ந்தது. ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும்.

    இந்த முத்திரை படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.
    இதயத்தைப் பாதுகாக்க, ஒப்பில்லாத மருந்து முத்திரை வடிவில் நம் கைவிரல்களிலேயே உள்ளது. இந்த முத்திரைக்கு ‘ம்ருத்யூசஞ்சீவி’ எனப் பெயர். ‘ம்ருத்யூ’ என்றால் மரணம். ‘சஞ்சீவி’ என்றால் மரணமற்ற நீண்ட ஆயுள். அதாவது, ‘மரணமில்லாதப் பெருவாழ்வு’ என்பது இந்த முத்திரையின் பெயர்.

    செய்முறை :

    வலது கை:  

    ஆள்காட்டி விரலை மடக்கி, கட்டை விரல் அடிரேகையைத் தொட வேண்டும்.

    இடது கை:

    கட்டைவிரல் நுனியுடன் மோதிரவிரல் மற்றும் நடுவிரல் நுனியை சேர்த்து வைக்கவும். சுண்டு விரல் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள் :

    படபடப்பு, சீரற்ற சுவாசம், பதற்றம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனைகள் சரியாகின்றன. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுகிறது. ரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீர்செய்து, தசைகளை வலுவாக்கும்.

    உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிகமாக வியர்த்தல், தலை சுற்றுதல் போன்ற பிரச்சனை இருக்கும்போது, இந்த முத்திரையைச் செய்தால் உடனடி பலன் தெரியும்.

    வாயு அதிகமாவதால் ஏற்படும் வயிற்று உப்புசம், வயிற்றைப் பிரட்டுதல், மலச்சிக்கல், மலம் மற்றும் வாயு தங்கியிருந்து வலி ஏற்படுதல் ஆகியவை குணமாகும்.

    நெஞ்சு வலி, வாயுப்பிடிப்பு, நெஞ்சு எரிச்சல், குத்துதல் போன்றவை குணமாகும். ஹார்ட் பிளாக் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்துவர அறுவைசிகிச்சையைத் தடுக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

    40 வயதைக் கடந்தவர்கள், மன அழுத்தச் சூழலில் இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள் தினமும் இந்த முத்திரையைச் செய்துவர, இதய நோய் பாதிப்பிலிருந்து முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியும்.

    கட்டளைகள் :

    தரையில் நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து செய்யலாம்; நாற்காலியில் நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து, பாதங்களைத் தரையில் பதித்துச் செய்யலாம்.

    காலை, மாலை என வெறும் வயிற்றில் 10-30 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    இதய அறுவைசிகிச்சை செய்தவர்கள், முத்திரை பயிற்சியாளரின் ஆலோசனைக்குப் பிறகே செய்ய வேண்டும். முத்திரையைச் செய்யத் தொடங்கும்போது, மிதமாக வலி வருவதுபோலத் தெரியும். ஏனெனில், முதன்முறையாக சீரான ரத்த ஓட்டம் செல்வதால் ஏற்படும் அறிகுறி இது. பின் வலி மறையும். தொடர்ந்து செய்துவர, நல்ல பலன்களை உணரலாம்.

    அவசர காலத்தில், அதாவது நெஞ்சுவலி ஏற்பட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் செய்யலாம். உயிர் காக்க உதவும் முத்திரை இது. மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற சந்தேகம் தோன்றிய உடனேயே, இம்முத்திரையைச் செய்யத் தொடங்கவும். வலி, படபடப்பு, நெஞ்சு எரிச்சல் குறையும். மருத்துவரை அணுகி சிகிச்சை தொடங்கும் வரை முத்திரையை விடாமல் செய்வது நல்லது.

    ஹாக்கினி முத்திரை ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
    வலது மூளை இடது மூளை இரண்டையும் தூண்டிவிட்டு, ஒரே நேரத்தில் அவற்றை இணைந்து இயங்க வைக்கும் ஒரு எளிய தந்திர யோக வழியே ஹாக்கினி முத்திரையாகும். இதன் மூலம் நினைவு திறன் அதிகரிக்கும்.

    இந்த முத்திரை ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.

    செய்முறை :

    இடதுகை வலதுகை விரல்கள் ஒன்றை ஒன்று தொடாமல் நேராக நீட்டி அவைகளின் நுனிகளை ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

    விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம்.

    முதுகும் கழுத்தும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரண்டு கைகளின் விரல் நுனிகளும் மறு கை விரல்களின் ஒத்த விரல்களை (படத்திலுள்ளபடி) தொட்டபடி இருக்கும்படி செய்ய வேண்டும் அழுத்தக்கூடாது.

    சுவாசம் இயல்பாகவும் சீராகவும் இருக்க வேண்டும். முழுக் கவனமும் செய்யும் முத்திரையின் மீது குவிந்திருக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

    மாணவர்கள் தினசரி நான்கு முறை (காலை, மதியம், மாலை, இரவு) 10-15 நிமிடம் வரையில் செய்யலாம்

    பயன்கள்

    இந்த ஹாக்கினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும். நினைவுத்திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த முத்திரையை பயன்படுத்துகிறார்கள்.

    இந்த முத்திரையைச் செய்துவிட்டு படிக்கத் துவங்கினால், படித்தவை அப்படியே மனதில் தங்கும். எளிதில் புரியும். மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு கேள்விக்கான பதில் மறந்து போனால், உடனே இந்த முத்திரையைச் செய்தால் அது நினைவுக்கு வந்துவிடும்.

    உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    நம் உடலில் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலை அடைவதால் உடலுக்கு அபரிதமான ஆற்றல் கிடைக்கிறது.  

    செய்முறை  :


    விரிப்பில் அமர்ந்து கொண்டு அல்லது சேரில் அமர்ந்து கொண்டு ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும்.

    கட்டளைகள்: சப்பளம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்யவேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது. முத்திரை செய்யும்போது உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்கவேண்டும்.  ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்யவேண்டும்.

    பலன்கள்: உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது. அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக மூளை சுறுசுறுப்படையும். பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர தெம்பு கிடைக்கும். உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால் இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.

    தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும். கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து சுறுசுறுப்பாகத் தயாராக முடுயும். தன்னம்பிக்கை, மனஉறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும். தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால் ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.

    வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும். எந்த முத்திரை நமக்கு சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள் சமான முத்திரையை  மட்டும் செய்தாலே போதும். நல்ல தீர்வு கிடைக்கும்.
    நீர் கோத்தலால் ஏற்படும் தலைவலி, கண்களுக்கு கீழுள்ள எலும்புகளைத் தொட்டாலோ அழுத்தினாலோ ஏற்படும் வலி, தலைபாரம், சைனஸ் ஆகியவை குணமாக ஒரு மாதத்துக்கு இரு முறை என 20 நிமிடங்கள் செய்யலாம்.
    குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல செயல்படுகிறது. உடல்நலம், மனநலம், வளமான வாழ்க்கை, உயர்ந்த லட்சியங்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடையத் துணைபுரிகிறது.

    செய்முறை :

    கட்டைவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டுவிரலை மடக்கி உள்ளங்கை நடுப்பகுதியில் தொட வேண்டும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரை பிடிக்க வேண்டும்.

    தரையில் விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் உட்கார்ந்து கால்களை தரையில் ஊன்றியோ செய்யலாம். ஒரு நாளைக்கு இருவேளை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். படுத்துக்கொண்டு செய்யக் கூடாது.

    பலன்கள் :

    நீர் கோத்தலால் ஏற்படும் தலைவலி, கண்களுக்கு கீழுள்ள எலும்புகளைத் தொட்டாலோ அழுத்தினாலோ ஏற்படும் வலி, தலைபாரம், சைனஸ் ஆகியவை குணமாக ஒரு மாதத்துக்கு இரு முறை என 20 நிமிடங்கள் செய்யலாம்.

    மூக்கில் அடைப்பு, குளிரால் மூச்சுவிட முடியாதது, மூச்சுத் திணறல், சளி, சுவாசப்பாதையில் உள்ள பிரச்னைகள் சரியாகும்.

    குழந்தைகள் ஒரு மாதத்துக்கு 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்ய, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி, நினைவுத்திறன் அதிகரிக்கும். வளர் இளம் பருவத்தினர் செய்ய, நல்ல எண்ணங்கள் உருவாகும்.

    மூளையை ஆல்ஃபா நிலைக்குக் கொண்டுசெல்வதால், மனதில் எண்ணும் காட்சிகள் ஆழ்மனதில் பதியும்; நினைத்த எண்ணங்கள் நிறைவேறும்; உயர்ந்த லட்சியங்களை அடைய உறுதுணையாக இருக்கும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

    அஞ்சலி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது. இந்து முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை :

    தரையில் நின்றுகொண்டோ, சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடைவெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும்.

    10 - 15 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்யலாம்.

    பலன்கள் :

    மூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு கிடைக்கும். விரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி மற்றும் பலம் கிடைக்கிறது.

    இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது. மனப்பிரச்சனைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

    இந்த முத்திரையை நமது இதயத்திற்கு நேராக வைத்து செய்தால் நமது மனம் அமைதி பெறும். நமது மூளையின் இருபக்கமும் அதாவது வலது இடது பக்க மூளைகளும் அமைதி பெறும்.

    விரல் நுனிகள் அழுத்தத்துடன் தொடுவதால் நமது உடலுக்கு அதிக சக்தி கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் நமது உறவினர்களிடம் மகிழ்ச்சியான உறவும் நல்ல நண்பர்களின் தொடர்பும் அதிகரிக்கிறது.

    இந்த முத்திரையை செய்வதால் நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.
    ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும்போது சிசு தன் கையில் இந்த முத்திரையை வைத்திருக்கும். நவீன ஸ்கேன் படத்தில் இதைக் காண முடியும். இந்த முத்திரை நமக்குப் புதிதானது அல்ல. பஞ்ச பூதங்களும் ஒடுங்கி நிற்கும் நிலையை இந்த முத்திரை தருவதால், வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட இந்த முத்திரை உதவும்.

    செய்முறை :

    கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.

    விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும்.

    தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள் :

    நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது. முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.

    தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது. மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

    வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
    இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.
    செய்முறை: விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டு விரல், கட்டை விரலின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். இந்த முத்திரையை 10 நிமிடங்கள் வரை செய்யலாம்

    பலன்கள்: கருவளையத்தைப் போக்கும். தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்துவர, இரண்டு வாரங்களிலேயே மாற்றம் தெரியும். முகப்பரு மறையும். முகத்தில் பளபளப்பு அதிகரிக்க, இதைச் செய்யலாம். முகத்தில் உள்ள மாசு, மருக்கள் மறையும். சருமம் மற்றும் கூந்தல் வறட்சி சரியாகும். சருமம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். வயோதிகத்தால் வரும் தோல் சுருக்கங்கள் தாமதமாகும்.

    இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துவலி, கழுத்து எலும்புத் தேய்மானம், கழுத்து வீக்கம், இடுப்புவலி, கணினி முன் வேலை செய்பவர்களுக்கான மூட்டுவலி தீரும்.
    செய்முறை :

    வலது கை: நடு விரல், சுண்டு விரல், கட்டை விரல் ஆகிய நுனிகள் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    இடது கை: சுண்டு விரல், கட்டை விரலின் நடுப்பகுதியைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

    பலன்கள் :

    கழுத்துவலி, கழுத்து எலும்புத் தேய்மானம், கழுத்து வீக்கம், இடுப்புவலி, கணினி முன் வேலை செய்பவர்களுக்கான மூட்டுவலி தீரும்.

    கட்டளைகள் :

    வாயு, சந்தி முத்திரையைச் செய்த பின், கழுத்துவலி முத்திரையை 20 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
    வலிப்பு நோய் இருப்பவர்கள் இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை :

    முதலில் விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். பின்னர் படத்தில் காட்டியுள்ளபடி பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் இடையில் உள்ள மேடான பகுதியில், மற்ற கையின் பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலைப் பயன்படுத்தி அழுத்திப் பிடிக்கவும்.

    இந்த முத்திரையை எந்த இடத்தில் இருந்து வேண்டுமென்றாலும் செய்யலாம். காலை நேரத்தில் இந்த முத்திரையை செய்து வந்தால் மிகவும் நல்லது. தினமும் 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

    பயன்கள் :

    இந்த முத்திரையை தினமும் செய்து வந்தால் வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம். இந்த முத்திரை செய்வதற்கு முன்னால் நல்லஅனுபவம் வாய்ந்த ஆசிரியரிடன் பயிற்சி பெறுவது நல்லது.
    ×