search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101157"

    பெயருக்கு ஏற்றதுபோல உடலுக்கு சக்தி தரும் முத்திரை இது. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சக்தி முத்திரையையும் செய்துவந்தால், நல வாழ்வு நம் வசம்!
    பெயருக்கு ஏற்றதுபோல உடலுக்கு சக்தி தரும் முத்திரை இது. ஆரோக்கியமான உணவுகளை உண்டு, சக்தி முத்திரையையும் செய்துவந்தால், நல வாழ்வு நம் வசம்!

    செய்முறை :

    கட்டை விரலை மடக்கி, நடுவிரலின் அடியில் வைத்து, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டி இருக்க வேண்டும். பின்னர், இரண்டு கைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைக்க வேண்டும். சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, கால் தரையில் ஊன்றி இருப்பது போன்ற நிலையிலோ நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து, நீட்டியிருக்கும் விரல்கள் மேல்நோக்கி இருக்குமாறு செய்ய வேண்டும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்யலாம்.

    பலன்கள் :

    மனம், உடல்சோர்வை நீக்கி, உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது. உடலில் ஏற்படும் இறுக்கம், உடல்வலி நீங்கும். உடல் வெப்பத்தால் அடிவயிறு இழுத்துப்பிடிப்பது போன்ற வலி, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது.

    அடிவயிறு, அடிஇடுப்புப் பகுதியில் உள்ள வலி, இறுக்கம் குறைகிறது. ஆண்களுக்கு, ப்ராஸ்டேட் வீக்கம் காரணமாக ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கசிதல் போன்ற பிரச்னைகளுக்குத் தினமும் 10 நிமிடங்கள் சக்தி முத்திரை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

    வாயில் அளவுக்கு அதிகமாக உமிழ்நீர் ஊறுதலுக்கு சக்தி முத்திரை தீர்வாக அமையும். தூக்கமின்மை பிரச்சனை சரியாக, சக்தி முத்திரையைத் தினமும் செய்துவரலாம். சுவாசிக்கும் மூச்சு ஆழமாவதால், நுரையீரல் பலம் பெறும். சளி, சுவாசத் தொந்தரவுகள் சரியாகும். ஆஸ்துமா கட்டுப்படும்.

    வாய்வு தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம். இந்த முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது (Supress) என்று சொல்லலாம்.

    உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் வாயு அதிகமாகச் சேரும். மேலும், நம் இந்திய உணவுகள் வாயுவை உண்டாக்கக்கூடியவை. அதனால், மூட்டு வாதம், கை, கால் வலி, ஏப்பம், அஜீரணம், மலக்காற்று பிரிதல், நெஞ்சு எரிச்சல், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம், வயிற்றுப் புண், கை கால் பிடிப்பு, நெஞ்சு குத்தல், நெஞ்சு வலி போன்றவை ஏற்படலாம். வாயு முத்திரை இவற்றைச் சரி செய்யும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும்.

    வாயுப் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்யலாம். சிலருக்குத் தொடர்ந்து 10 நாட்கள் செய்யும்போது, மூச்சுத் திணறல் ஏற்படலாம். அவர்களுக்கு விசீங் பிரச்வனை இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, இதை அவர்கள் செய்ய வேண்டாம்.

    தரையில் விரிப்பை விரித்து, கண்கள் திறந்தவாறு கழுத்து மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்காரவும். முடியாதவர்கள், நாற்காலியில் அமரலாம். ஆனால், பாதங்கள் தரையில் முழுமையாகப் பட வேண்டும். கால்களைக் குறுக்காகவோ, கால் மேல் கால் போட்டு உட்காரவோ கூடாது. படுக்கையில் செய்வோர், தலையணை இல்லாமல் முத்திரைகளைச் செய்யலாம்.

    விரல் நுனிகள் தொட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாலே போதும். மூச்சு இழுத்துப் பிடிக்க தேவை இல்லை. சாதாரணமாக இருக்கலாம். வெறும் வயிற்றில் செய்வது சிறப்பு. தவிர, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். பஸ், கார் போன்ற பயணங்களில்கூட முத்திரைகள் செய்யலாம். காலை 6, 7 மணிக்குள் செய்தால், முழு பலன் கிடைக்கும். ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) செய்யலாம். புதிதாகச் செய்பவர்களுக்கு, ஐந்து நிமிடங்களே போதுமானது.

    பயன்கள் :

    மூட்டு வலி - ஆர்த்தரைடீஸ், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும். வாய்வு தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    உடலில் அதிக கொழுப்பு உடையவர்களுக்கு இந்த முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில் கெட்ட கொழுப்பு படிப்படியாக குறையத் தொடங்கும்.
    உடலில் நெருப்பை அதிகப்படுத்தும் இந்த முத்திரைக்கு 'சூரிய முத்திரை' என்று பெயர். உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்திற்கு துணை புரிந்து உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.

    சப்பளங்கால் இட்டு 5 - 10 நிமிடங்கள்வரை செய்தால் போதும். தினமும் இருவேளை வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும். முத்திரையை செய்யும் முன் அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.

    நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல்வாகு, படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர்தைராய்டு, கல்லடைப்பு, நீர்கடுப்பு, வாய்புண், வெள்ளைபடுதல், கண்சிவப்பு, ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையைத் தவிர்க்கலாம்.

    செய்முறை : மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொடவேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
     
    பலன்கள் : உடலின் வெப்ப நிலையை அதிகரித்து பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். உடலில் அதிக கொழுப்பு உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில் கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.  ஹைப்போதைராய்டு உள்ளவர்கள் ஒரு வேலை மட்டும் 20 நிமிடங்கள் செய்யலாம்.
    இந்த முத்திரையை செய்து வந்தால் மன ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். கோபம் கட்டுப்படும். பலவிதமான மனக்கோளாறுகளுக்கு நன்மை அளிக்கிறது. மனம் அமைதி பெறும்.
    பெயர் விளக்கம்: ‘அகோசரம்’ என்றால் ஸ்தூலமான கண்களுக்கு புலப்படாதது என்று பொருள்படுகிறது. இம்முத்திரை புறக்கண்களுக்கு புலப்படாத சூட்சும நாடிகளில் பிராண சஞ்சாரத்தை மிகைப்படுத்தி மூலாதார சக்கரத்தை தூண்டுவதால் அகோசரி முத்திரை என்றுஅழைக்கப்படுகிறது.

    செயல்முறை: வசதியான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்த்திக் கொள்ளவும். கண்களை மெதுவாக திறந்து கருவிழி இரண்டடையும் மூக்கு நுனியை பார்க்கும்படி வைக்கவும்.

    கண் தசைகளை அழுத்தாமல் வைத்துக் கொள்ளவும். முக தசைகள் இறுக்கமடையாதபடி பார்த்துக்கொள்ளவும். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களை மூடி ஓய்வு பெறவும்.

    இம்முத்திரையில் மூச்சு சாதாரணமாக இருக்கட்டும். அல்லது சில விநாடிகள் மூச்சுக்காற்றை உள்ளுக்குள் இழுத்து நிதானமாக வெளியே விடவும். ஆரம்பத்தில் ஒரு சுற்றுக்கு சில விநாடியென 5 சுற்று பயிற்சி செய்யவும். தொடர்ந்த பயிற்சியால் 10 சுற்று வரை அதிகரித்து 10 நிமிடம் வரை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கருவிழிகள் இரண்டும் கீழ் நோக்கி இணைந்திருப்பதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்: மன ஒரு நிலைப்பாடு அதிகரிக்கும். கோபம் கட்டுப்படும். பலவிதமான மனக்கோளாறுகளுக்கு நன்மை அளிக்கிறது. மனம் அமைதி பெறும்.
    சாம்பவி முத்திரை மன அழுத்தத்தையும், கோபத்தையும் நீக்கி மனதை அமைதிப்படுத்தும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : சம்பு என்றால் சிவம். சாம்பவி என்றால் சிவபெருமானின் மனைவி பார்வதியாகும். சாம்பவி என்பதில் சிவம் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் குறிக்கும் பொருள் உள்ளது. இம்முத்திரையினால் சிவஸ்தானமான புருவ நடுவில் சக்தியின் வடிவான மனம் லபம் அடைவதால் சாம்பவி முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்களை மெதுவாக திறந்து புருவ நடுவை நோக்கி உயர்த்தி, கருவிழிகள் இரண்டையும் ஒன்றாக இமைத்து புருவ நடுவை பார்க்கவும்.

    கண்களின் தசைகளை அழுத்தாமல் ஓய்வாக வைத்துக் கொள்ளவும். கருவிழிகளை இணைக்கும் போது தலை இடது அல்லது வலது பக்கம் திரும்பாதபடியும் தலை, முகம் மற்றும் கழுத்து பகுதி இறுக்கம் அடையாதபடியும் பார்த்துக் கொள்ளவும். கண்களை உயர்த்தும் போது மூச்சு சாதாரணமாக இருக்கட்டும். இம்முத்திரையில் மூச்சை சில விநாடிகள் நிறுத்தலாம். அல்லது நிதானமாகவும் ஆழமாகவும் இருக்கட்டும். பிறகு கண்களை மூடி ஓய்வு பெறவும்.

    ஆரம்பத்தில் ஒரு சுற்றுக்கு சில விநாடிகள் என 5 சுற்றுவரை பயிற்சி செய்யலாம். தொடர்ந்த பயிற்சியில் 10 சுற்று வரையில் அதிகரித்து 10 நிமிடம் வரை செய்யலாம்.

    மேற்கண்ட முறைப்படி இந்த முத்திரையை நன்கு பழகிய பிறகு பிராணாயாமம் மற்றும் தியானத்தின் போது, இந்த முத்திரையில் இமைகளை முடிய நிலையில் வைத்துக் கொண்டும் பருவ நடுவை கண்களால் பார்க்கும்படியும் செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கருவிழிகள் இரண்டையும் இணைத்து வைத்திருப்பதின் மீதும், ஆக்ஞாசக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்:
    சக்தி, சிவ வடிவான இடா நாடியும், பிங்களா நாடியும் புருவ நடுவில் சுஷிம்னா நாடியுடன் இணைகிறது. இம்முத்திரையினால் இரு நாடிகளும் சமமாக தூண்டப்பட்டு இரண்டு நாசிகளின் வழியாக மூச்சு சமமாக இயங்கும். இதனால் சுஷிம்னா நாடியில் பிராண சஞ்சாரம் அதிகரிக்கும். குண்டலினி சக்தி விழிப்படையும். ஆக்ஞா சக்கரம் நன்கு செயல்படும். மன அழுத்தத்தையும், கோபத்தையும் நீக்கி மனதை அமைதிப்படுத்தும். பீனியல் சுரப்பு நன்கு செயல்பட தூண்டும். உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். புலனடக்கம் வாய்க்கும்.
    முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
    முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.

    முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
    நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.

    * பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

    * நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.

    * முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.

    * எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

    * ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும். 
    உதான் முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள நடுப்பகுதியில் உள்ளது. இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.

    செய்முறை:

    நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை

    பயன்கள்

    * இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது.
    * உடலின் மேல் தோலுக்கு அதிக சக்தி கிடைத்து பளபளப்பாக இருக்கும்.
    * தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
    * உடலின் அனைத்து உறுப்புகளும் சக்தியுடன் விளங்கும்.
    * இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது.
    * இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
    * தொண்டையில் ஏற்படும் நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
    * தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும்  நிவாரணம் கிடைக்கிறது.
    * இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது.
    * சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது.
    * சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது.
    * கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.

    இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
    இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.
    மருந்துகளைச் சாப்பிட்டு, உடலைச் சுத்தம் செய்வது போலவே, முத்திரை செய்தும் உடலைச் சுத்தம் செய்துகொள்ள முடியும். உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கு வயிற்றில் தங்கும் நச்சுக்களும் தேவையற்ற வாயுக்களும்தான் முக்கியக் காரணம். சித்த மருத்துவத்தின்படி, உடலில் 10 விதமான வாயுக்கள் உள்ளன. அவற்றில், கழிவைக் கீழ் நோக்கித் தள்ளும் வாயுவின் பெயர் அபான வாயு. இந்த வாயுவைத் தூண்டும் செயலைச் செய்வதுதான் அபான வாயு முத்திரை. இந்த முத்திரையைச் செய்தால், வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறும் செயல் துரிதமாகும்.

    செய்முறை :

    கட்டை விரல் நுனியுடன், நடு விரல் மற்றும் மோதிர விரலின் நுனியைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற இருவிரல்கள் நீட்டி இருக்க வேண்டும். இந்த முத்திரையில் நிலம், நெருப்பு, ஆகாயம் என்ற மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

    பலன்கள்

    வயிறு, குடலில் தங்கியிருக்கும் கழிவுகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். வயிறு, குடல் சுத்தமாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் தெளிவடையும்.

    பள்ளிச் செல்லும் மாணவர்கள் இரவில் 20 நிமிடங்கள் செய்துவர, காலையில் மலம் கழிக்கும் பிரச்சனை இருக்காது. மந்த குணம், பசியின்மை நீங்கும். வயிற்றில் தங்கியுள்ள வாயு பிரிந்து, வாயுவால் ஏற்படும் வயிற்று வலி நீங்கும்.

    மூலக்கடுப்பு உள்ளவர்கள் கடுப்பு குறையும் வரை செய்யலாம். மூலத்துக்காக அறுவைசிகிச்சை செய்தவர்கள், ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த முத்திரையைச் செய்துவர, மீண்டும் மூலத்தில் கட்டி, மூலம் தொடர்பான பிரச்னைகள் வராது.

    முத்திரையைத் தொடர்ந்து செய்துவர, வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, இதயம், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளின் இயக்கம் சீராகும்.

    மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வலியைப் போக்க, 5-10 நிமிடங்கள் மட்டும் செய்யலாம்.

    சிறுநீரகக் கல்லடைப்பு, நீரடைப்பு, சிறிது சிறிதாகச் சிறுநீர் வெளியேறுதல் போன்ற  பிரச்சனையிருப்பவர்கள், தண்ணீர், இளநீர், கரும்புச் சாறு போன்றவற்றை அருந்திய அரை மணி நேரத்தில், நாள் ஒன்றுக்கு ஐந்துமுறை என்ற கணக்கில், 20 நிமிடங்கள் செய்யலாம்.

    மூக்கடைப்பு, தலைபாரம், தலையில் நீர் கோத்தல், மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
    காமதேனு முத்திரை முத்திரைக்கு மற்றொரு பெயர் சுரபி முத்திரை. இந்த முத்திரை செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
    சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.

    செய்முறை

    விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.

    ஸ்டெப் 1: நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.



    ஸ்டெப் 2: இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.

    ஸ்டெப் 3: இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.

    பலன்கள்

    * அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.

    * தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.

    * ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.

    * செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
    உடலிலுள்ள நீர் வியர்வை வழியாக வெளியேறி, உடலில் நீரின் அளவு குறைந்துபோவதால் நீர்க்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளுக்கு இந்த முத்திரையை செய்யலாம்.
    செய்முறை : விரிப்பில் அமர்ந்து பெருவிரலை வளைத்து, ஐந்தாவது விரலின் (சிறுவிரல்) நுனிப் பகுதியோடு இணையுங்கள். சுட்டு விரல், நடுவிரல், மோதிர விரல் மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
     
    அமரும் முறை: பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம். ஆசனம் பற்றி தெரியாதவர்கள் சாதாரணமாக சம்மணமிட்டு அமர்ந்தும் (சுகாசனம்) செய்யலாம். கால்களை மடக்கி தரையில் அமரமுடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். எந்த நிலையில் அமர்ந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருக்க வேண்டும். கவனம் முழுவதும் செய்யும் முத்திரையின்மீது பதிந்திருக்கட்டும்.
     
    எவ்வளவு நேரம் :  குறைந்தபட்சம் 24 நிமிடங்கள். காலையில் 12 நிமிடங்கள், மாலையில் 12 நிமிடங்கள் என பிரித்தும் செய்யலாம். உடற்சூடு மிக அதிகமாக உள்ளவர்கள் அதிகபட்சமாக 48 நிமிடங்கள் வரையிலும் (ஒரு நாளில்) செய்யலாம். ஒரே நேரத்தில் 48 நிமிடங்கள் செய்வது கடினமாக இருக்கும். காலையில் 16 நிமிடங்கள், மதியம் 16 நிமிடங்கள், மாலை அல்லது இரவில் 16 நிமிடங்கள் என மூன்று வேளையும் சேர்த்து 48 நிமிடங்கள் செய்யுங்கள்.
     
    பலன்கள் :
     
    1. உடற்சூடு தணியும்
     
    2. உடலில் நீர் எனும் பூதம் சமநிலையை அடையும்.
     
    3. வியர்வையால் உடலில் ஏற்படும் நீர் இழப்பு சரிசெய்யப்படும்.
     
    4.சூட்டுக் கட்டிகள் வராமல் தடுக்கப்படும். கட்டிகள் இருந்தால் அவை விரைவில் மறையும்.
     
    5. தோல் வறட்சி நீங்கி, தோல் மினுமினுப்பாகும்.
     
    6. தோலிலுள்ள சுருக்கங்கள் மறையும்.
     
    7. இளமையான தோற்றம் உருவாகும்.
     
    8. தாகம் தணியும்.
     
    9. உடலில் ரத்த ஓட்டம் சீரடையும்.
    இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    யோக சாஸ்த்திரத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகளில் கருட முத்திரையும் ஒன்று. இதுவும் கருடாசனத்தைப்போலவே செய்வதற்கு மிகவும் எளிமையான ஒன்று. ஆனால் பலனோ மிகவும் அதிகம். அவற்றை எவ்வாறு செய்வது என்பதையும், அதன் பலன்களையும் கீழே காண்போம்.

    செய்முறை :

    1. முதலில் இடது கையின் மேல் வலது கையை வைக்கவும்.

    2. பிறகு வலது கையின் பெருவிரலை படத்தில் காட்டியபடி இடது கையின் பெருவிரலோடு மடக்கிப் பிடிக்கவும்.

    3. இனிமற்ற விரல்கள் அனைத்தையும் நேராக இறக்கையைப் போல் விரிக்கவும். இதுவே கருட முத்திரையாகும்.

    கடைசியாக இறக்கையை விரித்தாற்போல் உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.

    இரண்டு கட்டை விரல்களைத்தவிர உள்ள மற்ற விரல்களை இங்கு உள்ளது போல் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதுவும் கருட முத்திரையில் ஒரு வகையாகும்.

    குறிப்பு

    இந்த கருட முத்திரையை வெறும் வயிற்றில் செய்வது கூடுதல் பலனை அளிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

    பலன்கள்

    1. உடல் அசதி, சோர்வு நீங்கும்.
    2. உடலில் புத்துணர்ச்சி பெருகும்.
    3. நினைவாற்றலை அதிகரிக்கும்.
    4. பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி, பார்வை கருடனைப் போல் கூர்மையாகும்.
    உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோக முத்திரை பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் பலன் பெற முடியும்.
    உடலின் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார். அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் உண்டாகும். அப்படி உடல்நிலையில் பிரச்சனை உருவாவதைத் தடுக்கவும், பிரச்சனை வந்தால் குணமடையவும் யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முடியும் என்று பரிந்துரைக்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்.

    குறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.

    முத்திரை பயிற்சி செய்யும் முன்...

    முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
    நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.

    * பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

    * நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.

    * முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.

    * எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

    * ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    * வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும்.
    ×