search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101157"

    மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.
    செய்முறை :

    விரிப்பில் அமர்ந்து கொண்டு இரண்டு கை விரல்களையும் கோர்த்து, உள்ளங்கை பகுதிகள் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். இரண்டு கைகளில், நடுவிரலை மட்டும் மேல்நோக்கி நீட்ட வேண்டும். கைகளை தாடைக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். எனினும் விரல் நுனி தாடையை தொடக்கூடாது. ​இதனை, ​ஒரு நாளைக்கு இரண்டு முறை என 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

    பலன்கள்

    மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சுத் திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.

    பிறரை தன்வசமாக்கிக் கொள்ளும் தன்மையும், பயமற்ற பதற்றமற்ற நிலையும், எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து செய்து முடிக்கும் திறனும் ஏற்படும்.

    புத்தியானது நேர்வழியில் சென்று, ஆத்மஞானம் மேம்படும்.

    தாடைகளில் ஏற்படும் இறுக்கம், மனஅழுத்தம் குறையும்.

    குறிப்பிட்ட வயது தாண்டியும் பூப்பெய்தாத பெண்கள் இதைச் செய்து வர பூப்பெய்துவார்கள்.
    மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.
    செய்முறை : விரிப்பில் அமர்ந்து கொண்டு சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம்.

    பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.

    அர்த்தசின் முத்திரை

    ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    பலன்கள்: 10 - 40 நிமிடங்கள் செய்யலாம். அதிக சிந்தனை, மனக்குழப்பம், மூளை சோர்வடைதல், தலைவலி தீர அர்த்தசின் முத்திரை உதவும்.
    இந்த முத்திரை செய்வதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.
    சிவலிங்க வடிவம் தனக்குள் அனைத்து வடிவங்களையும் அடக்கியுள்ளதோடு, ஆராய்ச்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மாபெரும் சக்தியையும், பல்வேறு ரகசியங்களையும் பொதிந்து வைத்துள்ளது. இந்த சிவலிங்க வடிவில் காணப்படும் சிவலிங்க முத்திரை அனைத்து நல்ல பலன்களையும் அளிக்கவல்லது.

    எப்படிச் செய்வது?

    ஆசனத்தில் அமர்ந்து, இடது கையை கிண்ணம் போல் லேசாகக் குழித்து, உள்ளங்கை மேல்நோக்கி இருக்குமாறு, தொப்புள் பகுதிக்கு நேரே வைக்கவும். அதன்மேல், மற்றொரு கையை  நான்கு விரல்களையும் மூடிய நிலையிலும் கட்டை விரல் நேராக இருக்கும்படியும் வைக்க வேண்டும் கண்களை மூடி அமர்ந்து கொள்ளவும். ஒருநாளைக்கு இருமுறை என 5 நிமிடங்கள் இதைச் செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.

    பலன்கள்

    சிவலிங்க முத்திரை செய்யும்போது, நமது உடலில் பஞ்ச பூதங்களும் அதனதன் அளவீடுகளில் நிலைத்து, ஆக்க சக்தியை வெளியிடுகின்றன. உயிரோட்டத்தின் மொத்த வடிவமாக நமது உடல் மாறுவதால் தீய எண்ணங்கள், அவநம்பிக்கை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அழிந்து, தன்னம்பிக்கையும், மனோ தைரியமும் உண்டாகிறது.

    உடலில் உள்ள உஷ்ணம் நீங்கினால், மரணம். அதாவது, சிவம் உடலிலிருந்து அகன்றுவிட்டால் சவம்! உடலில் உள்ள குளிர்ச்சி என்னும் கபத்தை வெளியேற்றி, உஷ்ணத்தைத் தக்க வைக்க சிவலிங்க முத்திரை உதவும். எந்தவித நோயாக இருந்தாலும், விரைவில் விடுபட வேண்டுமென்றால் சிவலிங்க முத்திரையை உட்கார்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ செய்யலாம். குளிர், நடுக்கம், அவநம்பிக்கை, சோர்வு ஆகியவை பறந்தோடும்.
    தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும் இந்த முத்திரை நிவாரணம் தருகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே உள்ள நடுப்பகுதியில் உள்ளது. இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.

    செய்முறை:

    நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை

    நன்மைகள்

    இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது. தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது. இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

    தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கிறது. இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்படுகிறது.

    சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது. சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் நீங்குகிறது. கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.

    இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
    இந்த முத்திரை சுவாச கொள்ளளவை அதிகப்படுத்துவதால் தீர்க்க ஸ்வாச முத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : தீர்க்க என்றால் ஆழமான என்றும், ஸ்வாச என்றால் மூச்சு என்றும் பொருள்படுகிறது. இந்த முத்திரை சுவாச கொள்ளளவை அதிகப்படுத்துவதால் தீர்க்க ஸ்வாச முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை : அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரண்டு கைவிரல்களையும் ஒன்றாக இணைத்து நீட்டி வைக்கவும். மற்ற விரல்கள் மடங்கி இருக்கட்டும்.

    கைகளின் பெருவிரல்கள் இரண்டும் மூளையோடு நேரடியாக தொடர்புடையதால், இம்முத்திரையில் இடது கை கட்டை விரலின் கீழ் பகுதியில் வலது கை கட்டை விரல் வரும்படி விரல்களை கோர்த்தால் மூச்சு வலது ராசியில் வரும். அதே போல் வலது கை கட்டை விரலின் கீழ்ப்பகுதியில் இடது கை கட்டைவிரல் வரும்படி விரல்களை கோர்த்து வைத்தால் மூச்சு இடது ராசியில் வரும்.

    இதனால் இந்த முத்திரையோடு பிராணாயாமம் செய்யும்போது, செய்யும் கால அளவில் பாதி நேரம் இடது கை கட்டை விரல், கீழ்ப்பகுதியில் வலது கை கட்டை விரல் வரும்படியும், பிறகு மாற்றி வலது கைகட்டை விரலின் கீழ் இடது கை கட்டை விரல் வரும்படியும் வைத்து செய்யவும்.

    எப்பொழுது பயிற்சி செய்யலாம்  : தீர்க்க ஸ்வாச முத்திரை பிராணாயாம பயிற்சியின்போது இந்த முத்திரை பயன்படுகிறது.

    பயன்கள் : இடது கை நடுவிரலில் இருந்து செல்லும் நாடி பிங்களா நாடியுடனும், வலது கை நடுவிரலில் இருந்து செல்லும் நாடி இடா நாடியுடனும் தொடர்பு கொண்டுள்ளதால், இந்த முத்திரையை பிராணாயாமத்துடன் செய்யும்போது இம்முத்திரையில் வரும் கட்டை விரலின் நிலைக்கேற்ப இடா, பிங்களா நாடிகளில் மின்னோட்டம் அதிகரித்து மூளையில் உள்ள சுவாச மையம் தூண்டப்பட்டு, நுரையீரலின் இயங்கு திறன் அதிகரித்து, நுரையீரல் நன்கு விரிந்து பிராணாயாமத்தில் மூச்சு காற்றை அதிக அளவில் இழுத்து வெளியிட உதவுகிறது.

    தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. தலைவலிக்கு அர்த்த சின் முத்திரை நல்ல பலனை தரும்.
    தலைவலி ஏற்பட ஆயிரக்கணக்கான காரணங்கள் உள்ளதாக மருத்துவம் சொல்கிறது. ஆனால், எதைப் பற்றியும் கவலையின்றி வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற வேண்டும். அதனுடன், சில முத்திரைகள் செய்வதன் மூலம் விரைவில் குணம்பெற முடியும்.

    செய்முறை: ஆட்காட்டி விரல் கட்டை விரலின் முதல் ரேகையில் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    இந்த முத்திரையை தரையில் அமர்ந்தும், சேரில் அமர்ந்தும் செய்யலாம்.

    செய்ய வேண்டிய கால அளவு: தினமும் 15 நிமிடங்களும் அதற்கு மேலும் செய்யலாம். தலைவலி இருக்கும் போது செய்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.
    காதுவலி, தலைவலி, தலைசுற்றல், மூட்டுவலி போன்ற பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் தருகிறது வாத நாசக முத்திரை. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    வாத நாடி கூடினால் சந்திவாதம், கீல் வாதம், முடக்கு வாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும். மேலும், காதுவலி, தலைவலி, தலைசுற்றல், சக்தியின்மை, பொறுமையின்மை, சுறுசுறுப்பின்மை, குறைவான நினைவாற்றல், தூக்கமின்மை, ரத்த ஓட்ட குறைவால் உடலில் மதமதப்பு ஏற்படுதல், மூட்டுவலிகள்(ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்),தலைமுடி, நகம், கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல், பிறப்புகளிலிருந்து வாயு பிரிதல், ஏப்பம் போன்ற நிறைய நோய்குறிகள் தோன்றும் அவற்றில் இருந்து நிவாரணம் தருவது இந்த முத்திரை.

    ஆள்காட்டிவிரல், நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும். மற்றவிரல்கள் நீட்டிய படி இருக்கட்டும். இதுவே வாத நாசக முத்திரை. காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். மிகுந்த பலனளிக்கும். 30 வினாடியிலிருந்த 15 நிமிடம் வரை செய்வது உத்தம பலன் கொடுக்கும்.

    இந்த முத்தியை தொடர்ந்து செய்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து விடும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை : நடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்தாலே போதும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.

    பயன்கள் : இரத்த அழுத்தம் உடனடியாக கட்டுக்குள் வந்து விடும். தலைசுற்றல், படபடப்பு குறையும். வெயிலில் அலையும் போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப்படபடப்பு பி.பி.அதிகரிக்கும். அந்த சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.

    விரிப்பில் மீது நேராக சப்பணம் இட்டு அமர்ந்து நாற்காலியில் பாதங்கள் தரையில் பதிய அமர்ந்தபடி செய்யலாம். வெறும் வயிறு அல்லது சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து செய்யலாம்.
    இந்த முத்திரையை செய்து வந்தால் சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீத தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், ஆகியவை குணமாகும்.
    செய்முறை: ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இரண்டும் கட்டைவிரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கஙள நேராக நீட்டி இருக்க வேண்டும்.

    10 நிமிடங்கள் வரை, ஒரு நாளைக்கு 3 முறை செய்யலாம்.

    பலன்கள் : சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீத தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், ஆகியவை குணமாகும். வெயிலால் ஏற்படும் பக்கவாதம், படபடப்பு, ரத்தக்கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.
    கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை : ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிவிரல், சுண்டுவிரல் ஆகியவற்றை மடக்கி, உள்ளங்கைப் பகுதியில் வைத்து, கட்டைவிரலை நடுவிரலின் மேல் வைத்து மிதமாக அழுத்த வேண்டும்.

    15-30 நிமிடங்கள் வரை வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்ய வேண்டும்.

    பலன்கள் : கல்லீரலின் இயக்கம், சீராக மனச்சோர்வு, களைப்பு, கோபம், டென்ஷன், கவரை, மனஉளைச்சல், பயத்தை போக்கும், பித்தப்பபை, கணையம், குடல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய இந்த முத்திரையை செய்யலாம்.

    அஜீரணம் சரியாகி பசி எடுக்கும், கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இதய கோளாறு கட்டுப்படும்.
    கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8-ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
    பெயர் விளக்கம்: மனித உடலின் அடிவயிற்று பகுதியில் செயல்படும் அபான வாயுவை இந்த முத்திரை நன்கு இயங்க செய்வதால் அபான முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை மடக்கி வைத்து உட்காரவும். முடிந்தால் அர்த பத்மாசனத்தில் வலது கால் மேல் வரும்படி வைத்து உட்காரவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். இண்டு கைகளையும் நேராக நீட்டி முழங்கால்களின் மேல் உள்ளங்கைகளை வைக்கவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். அடுத்து இரண்டு உள்ளங்கைகளையும் திருப்பி மேல் நோக்கியபடி வைக்கவும்.

    பிறகு கண்களை மெதுவாக திறந்து இரண்டு கைகளின் நடுவிரல் மற்றும் மோதிரவிரலை மடக்கி இவ்விரு விரல்களின் நுனிப் பகுதியோடு அந்தந்தக் கையின் கட்டை விரலின் நுனிப்பகுதியை தொடும்படி வைக்கவும். இரண்டு கைகளிலும் உள்ள மற்ற விரல்களான ஆள்காட்டி விரலையும் சிறுவிரலையும் நீட்டி வைக்கவும். கண்களை மூடவும் இந்த முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடம் என காலை, மாலை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிற்றுப் பகுதியின் மீதும் மணி பூர சக்ரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: தரை விரிப்பின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்ய இயலாத கர்ப்பிணிப் பெண்கள் ஒரு மர நாற்காலியின் மேல் அமர்ந்து அபான முத்திரையை பயிற்சி செய்யலாம்.

    தடைக்குறிப்பு: கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமான முதல் மாதத்திலிருந்து எட்டாம் மாதம் முடியும் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்யக் கூடாது

    பயன்கள்: உடல் பலம் பெறும். இருதயம் வலுப்பெறும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். படபடப்பு, பயம் நீங்கி மனம் வலிமை பெறும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பமாகி 8ம் மாதம் முழுமை அடைந்த பிறகு தொடர்ந்து பேறுகாலம் வரை இந்த முத்திரையை பயிற்சி செய்து வந்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.
    இரண்டு நாசிகளின் நுனியிலும் குறிப்பிட்ட முறையில் கை விரல்களை வைத்து மூச்சை மாற்றி மாற்றி இழுத்து விடுவதால் நாசாக்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
    பெயர் விளக்கம்: ‘நாசாக்ர’ என்றால் நாசியின் நுனிப்பகுதி என்று பொருள். இரண்டு நாசிகளின் நுனியிலும் குறிப்பிட்ட முறையில் கை விரல்களை வைத்து மூச்சை மாற்றி மாற்றி இழுத்து விடுவதால் நாசாக்ர முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: வலது கை மோதிர விரலோடு சிறுவிரலை சேர்த்து வைத்து ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உள்ளங்கையில் மடக்கி கட்டை விரலை நீட்டி வைக்கவும்.

    எப்பொழுது பயிற்சி செய்யலாம்: நாடி சோதனா போன்ற சில குறிப்பிட்ட பிராணாயாமத்தின் போது இந்த முத்திரை பயன்படுகிறது.

    பயன்கள்:- பிராணாயாமப் பயிற்சியில் நாசிகளில் அளவாக காற்றை இழுக்கவும், குறிப்பிட்ட நாசியை அடைத்து மற்றொன்றின் வழியாக சுவாசத்தை நடத்தவும் பயன்படுகிறது. 
    ×