search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101245"

    மாமல்லபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது28) சென்னையில் உள்ள தனியார் தொலைபேசி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவர் ஆயுதபூஜை கொண்டாட மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றார். பண்டிகை விடுமுறை முடிந்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரம் பைபாஸ் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்புச் சுவர் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரன் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் ஊற்றப்படுகிறது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கழிவு நீரை பெற்று வெளி இடத்துக்கு கொண்டு சென்று ஊற்ற தனியார் டேங்கர் லாரிகள் அதிக அளவு பணம் வசூலித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் டிரைவர்கள் ஊற்றி வருகிறார்கள்.

    இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தட்டிக் கேட்கும் பொது மக்களை டேங்கர் லாரி டிரைவர்கள் மிரட்டும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    கழிவுநீரால் அண்ணா நகர், சூளைமேடு பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    எனவே சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    மாமல்லபுரம் அருகே வடநெம்மேலி முதலை பண்ணையில் முதல் முறையாக சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப்பண்ணை உள்ளது.

    இங்கு 25 வகை முதலைகளும், ஆமைகள், பாம்புகள் உட்பட 35 வகை ஊர்வன விலங்குகளும் உள்ளன.

    இதனை காண சுற்றுலா பயணிகளுக்கு திங்கட்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் பகலில் மட்டும் அணுமதி வழங்கப்பட்டு வந்தது.

    பொதுவாக முதலைகள் இரவில் தான் சுதந்திரமாக உலவுவது வழக்கம். அப்போது முதலைகளின் கண்கள் சிகப்பாக ஒளி வீசுவதை பார்க்கும் போது, அதன் உறுமல் சத்தமும் திரில்-பயம் கலந்த புது அனுபவமாக இருக்கும்.


    முதலைகளை அதன் வசிப்பிடத்தில் இரவில் சென்று பார்க்கும் அனுமதி வெளிநாடுகளில் மட்டும் உண்டு. இந்தியாவில் கிடையாது.

    இந்த நிலையில் முதல் முறையாக வடநெம்மேலி முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கு ரூ.100-ம், பெரியவர்களுக்கு ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. #Tamilnews
    மாமல்லபுரம் அருகே கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    நெய்வேலி நகரியத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் சத்தியரேகா (வயது 17). மாமல்லபுரத்தில் பையனூரில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரியில் பயோ மெடிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டு சத்தியரேகா விடுதிக்கு வந்தார். அப்போது அவர் சோகமாக காணப்பட்டார். இது பற்றி கேட்ட போது எதுவும் கூறவில்லை.

    இந்த நிலையில் விடுதி வளாகத்தில் உள்ள கூரையில் சசிரேகா தனது துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சத்தியரேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சத்தியரேகா தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரத்தில் மாடியில் இருந்து விழுந்த 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், திருக்குளம் தெருவில் வசித்து வருபவர் முகமது யாமின். இவரது மனைவி சீமா பேகம்.

    இவர்களுக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் 6-வது மகள் அலிசா (வயது 6). இவர்களது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம்.

    கடந்த 15-ந்தேதி அலிசா, வீட்டின் அருகே உள்ள மாடியில் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் தவறி கீழே விழுந்தாள்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அலிசாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அலிசா பரிதாபமாக இறந்தாள். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    மாமல்லபுரம் அருகே ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் விக்டர் வெற்றிவேல். கேளம்பாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 10-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.

    நேற்று வீடு திரும்பியபோது பின்பக்க கதவு உடைபட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் வெள்ளி பெருட்கள், பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள அடுக்கு மாடி கட்டுமான நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் கமல நாதன் (வயது 36). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் மேலகுமாரமங்கலம் ஆகும்.

    இவர் கல்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். கடம்பாடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கமலநாதன் பலியானார்.#tamilnews
    ×