search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரியா"

    சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். #ISAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     


    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நேற்று  கிளர்ச்சியாளர்கள் மீது கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #ISAttack
    சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Syria #USledstrikes
    சிரியா:

    சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக சிரியா அரசு ஆதரவு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.



    இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் திடீரென வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சிரியாவில் செயல்படும் மனித உரிமை அமைப்பினர்  தெரிவித்துள்ளனர். #Syria #USledstrikes 
    சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.  அவர்களின் தலைநகராக ராக்கா நகரம் விளங்கியது.



    அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கு கடும்போர் நடந்தது. இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

    இந்த நிலையில் அந்த நகரத்தில் ராட்சத சவ குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இவர்கள் அனைவரும் அமெரிக்க கூட்டுப்படையின் வான்தாக்குதலில் பலியானவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், வான்தாக்குதல்கள் காரணமாக ராக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டு விட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. #Syria #DeadBody
    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் சிரிய ஜனநாயக படையினர், குர்து இன போராளிகள் என மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் ஒருபுறம் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.அங்கு ஈராக் எல்லையில் டெயிர் அல் ஜோர் நகரையொட்டிய பகுதிகளில் 4 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர்.

    சிரிய ஜனநாயக படையினருடன் அமெரிக்க கூட்டுப்படைகள் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்றும், சனிக்கிழமையன்றும் சிரிய ஜனநாயக படையினருக்கும், குர்து இன போராளிகளுக்கும் எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் சிரிய ஜனநாயக படையினர், குர்து இன போராளிகள் என மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்தை சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
    சிரியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அமெரிக்க ஆதரவு போராளிகள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. #ISAttack #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    கிளர்ச்சியாளர்களில் சிலர் அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     
    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர்.

    இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. #ISAttack #Syria
    சிரியாவின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பரிதாபமாக பலியாகினர். #ISAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.
     
    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. #ISAttack
    சிரியா அதிபரின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் சுமார் 88 ஆயிரம் போராளிகளை ரஷியப் படைகள் கொன்று குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Russianforceskilled #88000Syriarebels #rebelsinSyria
    மாஸ்கோ:

    சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம்மீது வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.

    மேலும்,சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்தின.

    இந்நிலையில், சிரியாவில் கடந்த மூன்றாண்டுகளில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து 1411 குடியிருப்பு பகுதிகள் உள்பட 95 சதவீதம் நிலப்பரப்பு மீட்கப்பட்டதாகவும், இதற்கான தாக்குதலில் 87 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கிளர்ச்சியாளர்களை ரஷியப் படையினர் கொன்றதாகவும் ரஷிய ராணுவ மந்திரி செர்கே ஷோய்கு தெரிவித்துள்ளார். #Russianforceskilled #88000Syriarebels #rebelsinSyria 
    உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கி சோய்கு தெரிவித்துள்ளார். #S300AirDefenseMissiles #Syria
    மாஸ்கோ :

    சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரசுப் படைகளுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் அவ்வப்போது விமான தாக்குதலும் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் அரசு ஏவுகணைகள் மூலம் சிரியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த ஏவுகணைகளை சிரியா அரசுப் படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்துகின்றன.

    இந்த பதற்றமான சூழ்நிலையில், சிரியாவின் லடாக்கியா மாகாணத்தில் கடந்த 17-ம் தேதி ரஷியாவுக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் பயணம் செய்த 15 ரஷிய ராணுவ வீரர்கள் பலியாகினர். இதைத்தொடர்ந்து, தங்கள் நாட்டின் விமானம் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என ரஷியா முதலில் குற்றம்சாட்டியது.

    ஆனால், தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கு இஸ்ரேல் விமானிகள் ரஷிய விமானங்களை கேடயமாக பயன்படுத்தி வந்துள்ளதாகவும்,  விமானம் வீழ்த்தப்பட்ட லடாக்கியா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அச்சமயம் அந்த பகுதி வழியாக வந்த ரஷிய விமானம் சிரியா ராணுவத்தால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது என விசாரணைக்கு பின்னர் ரஷியா தெரிவித்தது.

    எனினும், இந்த விபத்துக்கு இஸ்ரேல் தான் பொறுப்பேற்க வேண்டும் என சிரியா மற்றும் ரஷியா வலியுறுத்தியது. ஆனால் இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துவிட்டது.

    இதற்கிடையே, சுமார் 300 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட உயர்தொழில்நுட்ப எஸ்-300 ரக ஏவுகணைகள் இரண்டு வாரத்திற்குள் சிரியாவுக்கு வழங்கப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கி சோய்கு தெரிவித்துள்ளார்.

    ஏற்கெனவே, கடந்த 2016-ம் ஆண்டு இவ்வகை ஏவுகணைகளை சிரியாவுக்கு வழங்க ரஷிய முயன்ற போது, இந்த ஏவுகணைகளை எங்கள் நாட்டிற்கு எதிராக  சிரியா பயன்படுத்தக்கூடும் என இஸ்ரேல் கோரிக்கை தெரிவித்ததால் அந்த முடிவை ரஷியா கைவிட்டதை நினைவு கூற வேண்டும்.



    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை நேற்று தொடர்புகொண்டு பேசிய ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், ‘ சிரியாவிற்கு எஸ்-300 ஏவுகணைகளை வழங்க முடிவு செய்துள்ளோம். சிரியாவில் உள்ள ரஷிய ரணுவ வீரர்களின் உயிர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், ’ ரஷியாவின் இந்த முடிவு இஸ்ரேல் பிரதமருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷியா போர் விமானம் சுட்டு வீழத்தப்பட்டத்தற்கு பொறுப்பேற்க வேண்டியது சிரியா ராணுவம் தான். ஆனால், இவ்விவகாரத்தில் அங்கள் மீது ரஷியா குற்றம்சாட்டுகிறது.  

    உயர்தொழில்நுட்ப ஏவுகணைகள் பொறுப்பற்றவர்களின் கைகளில் கிடைத்தால், அதை அவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும். எனவே, ரஷியாவின் முடிவால் இந்த பிராந்தியம் அச்சுருத்தலுக்கு உள்ளாகியுள்ளது’. என குறிப்பிட்டுள்ளது. #S300AirDefenseMissiles #Syria
    சிரியா அரசு மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #Syria #chemicalweapons #JohnBolton
    வாஷிங்டன் :

    அரபு நாடான சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல் ஆசாத்தை தூக்கி எறிய அமெரிக்க ஆதரவு புரட்சி படைகள் ஒரு பக்கம் போரிட்டு வருகின்றன. இவை தவிர குர்திஸ் படைகள், துருக்கி ஆதரவு புரட்சி படை ஆகியவையும் போரிடுகின்றன.

    ஏற்கனவே புரட்சி படையினரிடம் இருந்த கிழக்கு அலப்போ, கிழக்கு கூடா, தாரா ஆகிய பகுதிகளை ரஷிய படைகள் உதவியுடன் சிரியா மீட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சண்டைக்கு இடையே குண்டுவீச்சில் சிக்கி பலியானார்கள்.

    சிரியாவில் இத்லிப் என்ற பெரிய நகரம் உள்ளது. இதுவும் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துருக்கியின் எல்லையில் உள்ள இந்த நகரை மீட்பதற்காக சிரியா படைகள் நகரை முற்றுகையிட்டுள்ளன.

    ஏராளமான கவச வாகனங்களும், பீரங்கி வாகனங்களும் தொடர்ந்து நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு தாக்குதல் நடக்கும் பட்சத்தில் இந்நகரில் தற்போது வசிக்கும் 7 லட்சம் மக்களும் கடுமையாக பாதிப்பை சந்திப்பார்கள் என அஞ்சப்படுகிறது.



    இந்நிலையில், இத்லிப் நகரில் பயங்கரவாதிகளை குறிவைத்து சிரியா அரசு ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குறிப்பிட்டுள்ளதாவது :

    சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரித்து வருவதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. மேலும், இத்லிப் நகரில் ரசாயன தாக்குதல் நடத்த சிரியா திட்டமிட்டுள்ளது. அவ்வாறு மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் கூட்டுப்படைகள் இணைந்து கடுமையான பதில் தாக்குதல் தொடுக்கும். இதற்கு பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அரசுகள் ஒப்புதல் வழங்கிவிட்டன.

    எனவே, பொதுமக்களின் பாதுக்காப்பை பற்றி கவலைப்படாமல் மீண்டும் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்தால், ஏற்கனவே கிழக்கு கவுட்டா நகரில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களை விட மோசமான தாக்குதலை சிரியா சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் சிரியா விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்களில் நடத்திய ரசாயன தாக்குதலில் குழந்தைகள் உள்பட 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.



    இதற்கு பதிலடியாக தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள், சிரியாவின் ஆயுத கிடங்குகள் மற்றும் ராணுவ முகாம்களை துல்லியமாக குறிவைத்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமனப்படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. #Syria #chemicalweapons #JohnBolton
    சிரியாவில் புரட்சி படையினரிடம் உள்ள இத்லிப் நகரை கைப்பற்றுவதற்காக அந்நாட்டு ராணுவ படைகள் பீரங்கி வாகனங்களுடன் தாக்குதல் நடத்த தயாராகி இருப்பதால் நகரில் உள்ள 7 லட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். #Syria
    டமாஸ்கஸ்:

    அரபு நாடான சிரியாவில் 7 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல் ஆசாத்தை தூக்கி எறிய அமெரிக்க ஆதரவு புரட்சி படைகள் ஒரு பக்கம் போரிட்டு வருகின்றன. இவை தவிர குர்திஸ் படைகள், துருக்கி ஆதரவு புரட்சி படை ஆகியவையும் போரிடுகின்றன.

    நாட்டின் பல பகுதிகள் புரட்சி படைகளின் கைவசம் உள்ளது. குறுகிய இடங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

    புரட்சி படை மற்றும் தீவிரவாதிகளிடம் இருக்கும் இடங்களை மீட்பதற்கு சிரிய ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது. அவர்களுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் உதவி வருகின்றன. ரஷியா நேரடியாகவே வான் தாக்குதலை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே புரட்சி படையினரிடம் இருந்த கிழக்கு அலப்போ, கிழக்கு கூடா, தாரா ஆகிய பகுதிகளை ரஷிய படைகள் உதவியுடன் சிரியா மீட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சண்டைக்கு இடையே குண்டுவீச்சில் சிக்கி பலியானார்கள்.

    சிரியாவில் இத்லிப் என்ற பெரிய நகரம் உள்ளது. இதுவும் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. துருக்கியின் எல்லையில் உள்ள இந்த நகரை மீட்பதற்காக சிரியா படைகள் நகரை முற்றுகையிட்டுள்ளன.

    ஏராளமான கவச வாகனங்களும், பீரங்கி வாகனங்களும் தொடர்ந்து நகரை நோக்கி முன்னேறி வருகின்றன. எந்த நேரத்திலும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று ஆங்காங்கே விமானம் மூலமும், பீரங்கி மூலமும் குண்டு வீசப்பட்டது. ரஷிய விமானங்களும் தாக்குதல் நடத்தின. இதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் 5 பேர ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் என்பது தெரிய வந்தது. 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.



    இந்த நகரில் தற்போது 7 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 2½ லட்சம் பேர் அந்த நகரை சொந்த ஊராக கொண்டவர்கள். மற்றவர்கள் வேறு இடங்களில் போருக்கு பயந்து தப்பி வந்தவர்கள். இங்கும் இப்போது சண்டை தொடங்கி இருப்பதால் 7 லட்சம் மக்களும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தாக்குதல் தீவிரமானால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாக கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, 7 லட்சம் பேரையும் பத்திரமாக வெளியேற்ற வேண்டும் என்று ஐ.நா. சபை சிரியா அரசை கேட்டு கொண்டுள்ளது.

    ஏற்கனவே புரட்சி படைகளிடம் இருந்த நகரங்களை மீட்ட போது, சிரியாவும், ரஷியாவும் கண்மூடித்தனமாக விமான தாக்குதல் நடத்தின. இதில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

    அதேபோன்ற நிலை இந்த நகரிலும் நடைபெறலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்லிப் நகரில் தாக்குதலை நடத்தக்கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அங்கு தாக்குதல் நடத்தினால் மிகப்பெரிய மனித படுகொலையாக அமையும். அதை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்து இருக்கிறது. #Syria
    சிரியா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ராணுவம் தொடர்பான புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. #Iran #Syria #NewDealSigned
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் உள்நாட்டு போரில் அதிபருக்கு ஆதரவாக ஈரான் நாட்டு இராணுவ படைகள் போரிட்டு வருகின்றன. சிரியா உள்நாட்டு போரில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளும், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களும் போரிட்டு மக்களை இரையாக்கி வருவதாக கருத்து நிலவுகிறது.

    இதையடுத்து சமீபத்தில், சிரியாவில் இருக்கும் ஈரான் படைகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தது. இதற்கு பதிலளித்திருந்த ஈரான், சிரியா அதிபரின் வேண்டுகோளை ஏற்று ஈரான் உதவி வருவதாகவும், படைகளை திரும்ப பெரும் எந்த நோக்கமும் தற்போது இல்லை எனவும் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், நேற்று ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமிர் ஹடாமி அரசு முறை பயணமாக சிரியா சென்றார். அங்கு சிரியா அதிபர் பஷார் அல்-அசாத் மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இரு நாடுகளுக்கு இடையே இராண்வ ஒத்துழைப்பு தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. #Iran #Syria #NewDealSigned
    சிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். #ISsuicideAttack
    பெய்ரூட்:

    சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 

    கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் நேற்று பயங்கரவாதிகள் தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களை நிகழ்த்தினர். இதில், 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. 

    இந்நிலையில், சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்வேடியா நகரில் தற்கொலைப்படையை சேர்ந்த 3 பேர் தொடர் தாக்குதல் நடத்தினர். அப்பகுதிக்கு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் இதேபோல் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலை நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சுமார் 127 பொதுமக்கள் உள்பட 221 பேர் பரிதாபமாதாக பலியாகினர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

    இந்த தொடர் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #ISsuicideAttack
    ×