search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பல்"

    நிலக்கோட்டை அருகே மைனர் பெண்ணை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்த 15 வயது மைனர் பெண் போடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கிருந்து மீண்டும் சொந்த ஊருக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு கும்பல் நோட்டமிட்டு வந்தது.

    வத்தலக்குண்டு பகுதியில் பஸ் வந்த போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மைனர் பெண்ணிடம் நைசாக பேசினர். இதில் மயங்கிய அந்த பெண்ணை அவர்கள் கடத்தி சென்றனர். உறவினர் வீட்டுக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் தந்தை அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    பின்னர் தெரிந்த நண்பர்களிடம் விசாரித்த போது அந்த பெண்ணை செங்கோட்டையை சேர்ந்த இளங்கோவன், கார்த்திக், குமரேசன் ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து நிலக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தி சென்ற மைனர் பெண் மற்றும் அந்த கும்பலை தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூர் அருகே இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அத்தியூர் இந்திராநகரை சேர்ந்தவர் அன்புராஜா . இவரது மனைவி செல்வநாயகி (வயது 22) . இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அன்புராஜா சென்னையில்  தங்கியிருந்து அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.  செல்வநாயகி, குழந்தைகளுடன் அத்தியூரில் வசித்து வந்தார். 

    நேற்று அவர் பெருமத்தூர் குடிக்காட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக  உறவினர்களிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் பெற்றோர் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள்  இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. 

    இந்த நிலையில் இன்று காலை பெருமத்தூர்-குடிக்காடு இடையே புதர் நிறைந்த பகுதியில் உள்ள நாவல் மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாக தொங்கினார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது செல்வநாயகி என்பது தெரியவந்தது. அவரது  தலையில் காயங்கள் இருந்தது. மேலும் உடலில் கீறல்கள் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் அடித்துக் கொன்று , கொலையை மறைக்க தூக்கில் தொங்க விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

    கற்பழிப்பு முயற்சியில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  பெரம்பலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    மேலூர் அருகே பிளஸ்-2 மாணவரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள முத்துவேல்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. விவசாய தொழிலாளி. இவருடைய மகன் எழிலரசன் (வயது 17). மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எழிலரசன் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று அவர் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது 5 பேர் கும்பல் அங்கு வந்தது.

    அந்த கும்பல் எழிலரசனை சுற்றி வளைத்து தாக்கியது. அரிவாளாலும் வெட்டிவிட்டு மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில் காயம் அடைந்த எழிலரசன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    தாக்குதல் தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    வீரகனூரில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கேலி கிண்டல் செய்யும் கும்பல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்கா வீரகனூர் ஊரில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். காலை 7 மணி முதலே மாணவிகள் வர தொடங்கி விடுவார்கள் மீண்டும் மாலை 5 மணியிலிருந்து ஆறு மணிவரை மாணவிகள் பள்ளி விட்டு சென்று விடுகிறார்கள்.

    இந்த பள்ளியில், காலையில் மாணவிகள் பள்ளிக்கு வரும்போது சில இளைஞர்களும், மாணவர்களும் ஆண்கள் பள்ளியின் சுவர்களின் மீது ஏறிக்கொண்டு அசிங்கமான வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்கின்றனர். மேலும் ரோட்டில் வரும் போதும் சிலர் கேலி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை பார்த்து செல்லும் பொதுமக்களுக்கு முகச் சுளிப்பு ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அரசு பள்ளி மீது அவ நம்பிக்கையும் ஏற்படுகிறது.

    எனவே வீரகனூர் காவல்துறை ஆய்வாளர் பள்ளியில் புகார் பெட்டி முறையை அமல்படுத்தி மாணவிகளின் குறைகளை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி சென்ற 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 46) ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சங்கரம்மாள். முத்துகிருஷ்ணன் தொழில் செய்வதற்காக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக வட்டி கட்டி வந்துள்ளார்.

    இந்நிலையில் கிருஷ்ணன் கொடுத்த பணத்தை முத்துகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து நேற்று மாலை முத்துகிருஷ்ணன் புதுக்கோட்டையை அடுத்த கே.தளவாய்புரத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் தனது வீட்டிற்கு பைக்கில் திரும்பி கொண்டிருந்தார். அவர் அல்லிகுளம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது அங்கு வந்த கிருஷ்ணன், புதுக்கோட்டையை சேர்ந்த கனி உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் முத்துகிருஷ்ணனை காரில் கடத்தி சென்றனர்.

    பின்னர் அந்த கும்பல் முத்துக்கிருஷ்ணன் மனைவி சங்கரம்மாளுக்கு போன் செய்துள்ளனர். அப்போது நாங்கள் முத்துகிருஷ்ணனை கடத்தி சென்னைக்கு கொண்டு வந்துள்ளோம். தங்களிடம் முத்துகிருஷ்ணன் கடன் வாங்கிய பணத்தை உடனடியாக திருப்பி தந்தால் தான் அவரை விடுவோம் என கூறி போனை வைத்து விட்டனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரம்மாள் உடனடியாக இது குறித்து புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரியல் எஸ்டேட் அதிபர் முத்துகிருஷ்ணனை அவர்கள் எங்கு கடத்தி சென்றுள்ளனர் என்று விசாரணை நடத்தி 7 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அறந்தாங்கி அருகே இன்று காலை மகனுடன் தொழுகைக்கு சென்ற தொழிலதிபரை 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவை சேர்ந்தவர் சர்க்கரை ஜமால் என்ற ஜமால் முகமது (வயது 50).

    கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களிடம் மீன்களை வாங்கி அதனை பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்திருந்தார்.
    தினமும் அதிகாலையில் எழும் ஜமால் முகமது சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு தொழுகைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை எழுந்த அவர் தனது மகன் யாசர் அராபத் (25)துடன் 4.45 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தவ்ஹீத் பள்ளி வாசலுக்கு தொழுகை நடத்த நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு திடீரென டவேரா கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜமால் முகமதுவை குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டது. இதனை தடுத்த அவரது மகன் யாசர் அராபத்தை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    அதிகாலை நேரமாக இருந்ததால் செய்வதறியாது தவித்த யாசர் அராபத் ஊருக்குள் சென்று  தனது உறவினர்களிடம் தெவித்தார்.  அவர்கள்  சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். காரில் கடத்தி சென்றவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்ற விபரம் தெரியாமல் அவர்கள் பதட்டம் அடைந்தனர்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து யாசர் அராபத் கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்த ஜமால் முகமதுவுக்கு ஏராளமான தொழில் போட்டிகள் இருந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்கள் ஜமால் முகமதுவை கடத்தி சென்றார்களா? அல்லது அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கடத்தி சென்றார்களா? என்பது  உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சமீப காலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கடலோர பகுதிகள் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் தொடர்புடைய நபர்கள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அடிப்படையிலும் போலீசார் முதல் கட்டவிசாரணையை தொடங்கி உள்ளனர்.
    சீட்டு பணத் தகராறில் ஆசிரியரை காரில் கடத்தி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பாப்பாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 52). விவசாய ஆசிரியராக பணி புரிந்தவர். இவரது மனைவி பெயர் சுமதி (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    பழனிசாமி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி இவருக்கும், சிலருக்கும் பணத் தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை ஈரோட்டை சேர்ந்த கார் டிரைவர் சிலம்பரசன், மேலும் 2 பேர் காரில் வந்தனர். சிலம்பரசனின் மாமியார் பெயர் கிருஷ்ணகுமாரி.

    கிருஷ்ணகுமாரிக்கும், ஆசிரியர் பழனிசாமிக்கும் இடையே சீட்டு போட்டதில் பணம் கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினை உள்ளது. இதையொட்டி பழனிசாமி வீட்டுக்கு வந்த சிலம்பரசனும் அவருடன் வந்தவர்களும் பழனிசாமியிடம் 90 ஆயிரம் பணத்தை எப்போது கொடுப்பாய்...? கேட்டு தகராறு செய்த அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    பிறகு அவரை வலுகட்டாயமாக கடத்தினர். இதை தடுத்த அவரது மனைவி சுமதியை தள்ளி விட்டு விட்டு பழனிசாமியை காரில் தூக்கிபோட்டு கடத்தி சென்று விட்டனர்.

    தனது கண் எதிரேயே கணவர் கடத்தப்பட்டதை கண்டு திடுக்கிட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி பழனிசாமியை காரில் கடத்தி சென்ற கும்பலை தேடி வருகிறார்கள். 

    ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் அப்துல்ஜபார் (வயது 64). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவருக்கு சபீரா, ரபாயா‌ஷபி என்ற 2 மனைவிகளும், ஜலால், ஜாபர், ஜாகீர் என்ற 3 மகன்களும், ஜைத்துன்பீ என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    அப்துல்ஜபார் குடும்பத்துடன் திருக்கோவிலூர் இந்திரா நகரில் தற்போது வசித்து வந்தார். எடப்பாளையத்தில் அப்துல் ஜபாருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. வேலையில் இருந்து ஓய்வுபெற்றதும் அவர் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். விவசாயத்தை கவனிப்பதற்காக அங்கு ஒரு வீடும் கட்டி இருந்தார்.

    அவர் தினமும் விவசாய நிலத்தை சென்று பார்வையிட்டு வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து விவசாய நிலத்துக்கு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதைத்தொடர்ந்து அப்துல்ஜபாரின் உறவினர் ஒருவர் எடப்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அங்குள்ள வீட்டில் அப்துல் ஜபார் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    அவரது தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதைப்பார்த்ததும் உறவினர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து அப்துல்ஜபார் குடும்பத்தினருக்கும், திருவெண்ணைநல்லூர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    அப்துல்ஜபாரின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    அப்துல்பஜாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அப்துல்ஜபார் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், விவசாய பணியில் ஈடுபட்டார். அவரது உறவினர்களுக்கிடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதில் அப்துல் ஜபார் தலையிட்டு சமரசமாக பேசி பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார்.

    சொத்துக்கிடைக்காத ஆத்திரத்தில் மர்ம மனிதர்கள் அவரை கொலை செய்தார்களா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    காசிமேடு மாநகராட்சி ஊழியர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    காசிமேடு, அமராஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது40). இவர் சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று காலை சிவக்குமார், காசிமேடு காசிபுரம் ‘பி’ பிளாக்கில் உள்ள டீக் கடையில் இருந்தபோது மர்ம நபர்களால் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தினர். இது தொடர்பாக எண்ணூர் தாழங்குப்பம் பகுதியைச் சேர்ந்த திவாகர், வேணு, ராகவன், தேசப்பன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், புழல் ஜெயிலில் இருக்கும் கஞ்சா வியாபாரி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் கூலிப் படையை ஏவி சிவக்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    காசிமேடு பவர்குப்பத்தில் கடந்த ஆண்டு புதிதாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் சிலருககு வீடுகள் ஒதுக்க சிவக்குமார் உதவி உள்ளார்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவரும் தனக்கு வேண்டியவர்களுக்கு வீடு கிடைக்க முயற்சி செய்து இருக்கிறார். இதனை சிவக்குமார் தடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும் கஞ்சா வியாபாரம் குறித்தும் அடிக்கடி போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்த மோதலில் கூலிப்படையை ஏவி சிவக்குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    தற்போது அந்த கஞ்சா வியாபாரி ஒரு வழக்கில் கைதாகி புழல் ஜெயிலில் உள்ளார். அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். #Tamilnews

    காசிமேட்டில் இன்று காலை முன்விரோத தகராறில் மாநகராட்சி ஊழியரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம், ஜூன், 17-

    காசிமேடு, அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). ராயபுரத்தில் உள்ள மாநக ராட்சி அலுவலகத்தில் மெக் கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை அவர் காசிமேடு காசிபுரம் பி பிளாக் கில் உள்ள கடைக்கு சென்று டீக்குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த 5 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சிவக் குமாரை சுற்றி வளைத்தனர்.

    அதிர்ச்சி அடைந்த அவர் கொலை வெறி கும்பலிடம் இருந்து தப்பிக் ஓட்டம் பிடித்தார். ஆனால் அவர்கள் ஓட, ஓட விரட்டி சிவக்குமாரை சரமாரியாக வெட்டினர். தலை, முதுகு, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள் ளத்தில் கீழே சரிந்தார்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதற்கிடையே உயிருக்கு போராடிய சிவக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார்.

    இது குறித்து காசிமேடு போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அதே பகுதியை சேர்ந்த ஓருவருடன் ஏற் பட்ட முன்விரோதத்தில் சிவக்குமார் தீர்த்து கட்டப் பட்டிருப்பது தெரிந்தது.

    இது தொடர்பாக சிவக் குமார் உறவினர் ஒருவர் கூறும்போது, ‘அமராஞ்சி புரத்தை சேர்ந்த ஒருவருக்கும், சிவக்குமாருக்கும் கால்வாய் தொடர்பாக கடந்த 1 ஆண் டுக்கு மேலாக பிரச்சினை உள்ளது. இதுகுறித்து சிவக் குமார் பலமுறை போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் அவர்களுக் கிடையேயான மோதல் தீவிர மடைந்து இருந்தது.

    இந்த தகராறில் கூலிப் படையை ஏவி சிவக்குமாரை தீர்த்து கட்டி விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    மேலும் சிவகுமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவருக்கும் தகராறு உள்ளது. அவரை பற்றி சிவகுமார் போலீ சுக்கு தகவல் தெவித்து வந்தார். தற்போது அந்த கஞ்சா வியாபாரி ஜெயி லில் உள்ளார். அவரது கூட்டாளிகள் திட்டமிட்டு சிவகுமாரை தீர்த்துகட்டி இருக்கலாம் என்ற கோணத் திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட சிவக் குமாருக்கு குமுதா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலையால் காசிமேடு பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    வீட்டில் தனியாக இருந்த மாணவியை கும்பல் கடத்தி சென்று உள்ளது. இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் கும்பலை தேடி வருகிறார்கள்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் செவல்விளை தேவர் தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரது மகள் மஞ்சு (வயது 17) .பிளஸ்-2 முடித்துள்ள இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மஞ்சுவின் பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டனர். மஞ்சு மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகேசன், மூர்த்தி, சிவா, சரவணன், கணேஷ், முத்துராஜ், யோகேஷ் ஆகிய 6 பேர் அங்கு வந்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த மஞ்சுவை அவர்கள் காரில் கடத்தி சென்றதாக தெரிகிறது. அப்போது மஞ்சு வீட்டில் இருந்த ரூ.12லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரூ.63ஆயிரம் ஆகியவற்றையும் கொண்டு சென்றுவிட்டனர். இது பற்றி மஞ்சுவின் தந்தை மாரியப்பன் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுவை கடத்திய கும்பல் காதல் விவகாரத்தில் கடத்தி சென்றார்களா? அல்லது நகை-பணத்தை அபேஸ் செய்யும் நோக்கில் கடத்தினார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது தொடர்பாக முருகேசன் உள்ளிட்ட 6 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடையநல்லூர் பகுதியில் சமீபகாலமாக மாணவிகள், இளம்பெண்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

    டிரைவருடன் கடத்தப்பட்ட லாரி விபத்தில் சிக்கியதால் அந்த லாரியில் வந்த 10 பேர் கும்பல் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழித்துறை:

    கருங்கல் முள்ளங்கினா விளையைச் சேர்ந்தவர் ராபர்ட் கிறிஸ்டியான். இவருக்கு சொந்தமான லாரியில் டிரைவர்களாக ஜெயக்குமார், ராஜா ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த லாரி மூலம் ஆந்திராவில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மார்த்தாண்டத்தை அடுத்த நட்டாலம் பரக்காணி விளை பகுதியில் நிறுத்தியிருந்தனர். இந்த அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டு இருந்தனர்.

    நேற்று இரவு அந்த அரிசி லாரியில் டிரைவர் ராஜா படுத்திருந்தார். அப்போது அங்கு ஒரு சொகுசு கார் மற்றும் மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் டிரைவர் ராஜாவை சரமாரியாக தாக்கினர். பிறகு அவரை சொகுசு காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும் அரிசி லாரியையும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் ஓட்டிச் சென்றனர்.

    புல்லுவிளை பகுதியில் அந்த லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. அந்த பகுதியில் உள்ள 3 வீடுகளின் காம்பவுண்டு சுவர்களை இடித்து தள்ளியபடி அந்த லாரி நின்றது. இதை பார்த்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

    பொதுமக்கள் திரண்டதால் லாரி டிரைவர் ராஜாவை விடுவித்து விட்டு அந்த கும்பல் காரில் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மார்த்தாண்டம் போலீசார் லாரியின் டிரைவர்கள் ராஜா, ஜெயக்குமார் மற்றும் உரிமையாளர் ராபர்ட் கிறிஸ்டியான் ஆகிய 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரித்து வருகிறார்கள்.

    லாரியையும், டிரைவர்கள் கடத்தியவர்கள் யார், எதற்காக கடத்தினர், பைனான்ஸ் பிரச்சினை காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×