search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பல்"

    தேனி அருகே தொழில் போட்டியில் தம்பதியை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பூதிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மனைவி பஞ்சு (வயது35). ஆண்டவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த பொன்னாங்கன் என்பவரும் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று கடையில் இருந்த பஞ்சுவிடம் பொன்னாங்கன், அவரது மகன் தங்கபாண்டி, அல்லிநகரத்தை சேர்ந்த கோபி ஆகியோர் தகராறு செய்து தாக்கினர். இதை தட்டிகேட்ட ஆண்டவரையும் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.

    மேலும் கடையை காலி செய்யாவிட்டால் தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஆண்டவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பொன்னாங்கன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மார்க்கெட்டுகள், சுற்றுலா தலங்களை குறிவைத்து இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை கோவையில் கைதான கும்பல் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். #fakecurrency
    கோவை:

    கோவை சாய்பாபா காலனியில் கள்ளநோட்டுகள் அச்சடித்த ஆனந்த்(வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38), கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த கிதர் முகமது (55) ஆகியோரை தேடி வருகின்றனர்.

    இவர்கள் கடந்த 2 மாதங்களாக சாய்பாபா காலனி அருகே வேலாண்டிபாளையத்தில் அறை எடுத்து தங்கி கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்துள்ளனர். இதுவரை ரூ.5 கோடி வரை கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட், கோவை மேட்டுப்பாளையம் மார்க்கெட், ஈரோடு ஜவுளி மார்க்கெட் உள்ளிட்ட தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு தமிழகம் மட்டுல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து செல்வார்கள். இங்கு வழக்கமாக லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனையும் நடைபெறும் என்பதால் கள்ள நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டுள்ளனர்.



    மேலும் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி என சுற்றுலா தலங்களை குறி வைத்தும் இந்த கும்பல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    கமி‌ஷன் அடிப்படையில் ஊழியர்களை நியமத்து கள்ளநோட்டுகளை மாற்றி உள்ளனர். அந்த ஊழியர்கள் யார்-யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிதர் முகமது ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு கோவை சரவணம்பட்டி, போத்தனூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கோவை மற்றும் ஈரோட்டில் பலர் உதவி செய்துள்ளனர். அவர்கள் மூலம் தற்போது கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருக்கலாம் என கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    தலைமறைவான சுந்தர், கிதர் முகமது ஆகியோர் பிடிபட்டால் தான் இந்த கும்பலின் பின்னணி பற்றி முழு தகவல்களும் தெரியவரும். இவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் கேரளா, ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர்.

    இருவரின் செல்போனும் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடைசியாக யார்-யாரிடம்? பேசினார்கள் என பட்டியல் சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கிதர் முகமது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கியவர். தற்போது இந்த கும்பல் கோடிக்கணக்கில் கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர். அதிலும், யாரும் எளிதில் கண்டுபிடித்து விடாதபடி, குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நவீன வெள்ளை காகிதங்களை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    குஜராத்தில் இருந்து இந்த கும்பலுக்கு நவீன காகிதங்களை சப்ளை செய்தது யார்? என்பது மர்மமாக உள்ளது. இதன்பின்னணயில் மிகப் பெரிய கும்பல் இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு உள்ளது. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கள்ள நோட்டு வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்படும் என தெரிகிறது. #fakecurrency

    குத்தாலம் அருகே டியூசன் முடிந்து வந்த 10-ம் வகுப்பு மாணவனை கும்பல் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே உள்ள பெரிய செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 45). கொத்தனார். இவரது மனைவி புவனேஷ்வரி (36). இவர்களுடைய மகன் அபினேஷ்வரன் (14). பேரளந்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்நிலையில் நேற்று அபினேஷ்வரன் பள்ளிக்கு டியூசன் சென்றுள்ளான். பின்னர் டியூசன் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பேரளந்தூர் பகுதியில் உள்ள கோமல் ரோட்டில் பஸ்சிற்காக காத்திருந்துள்ளான். இதை நோட்டம் விட்டு கொண்டிருந்த 2 நபர்கள் புவனேஷ்வசனிடம் பேச்சு கொடுத்து நாங்கள் உன்னை வீட்டில் விட்டு விடுகிறோம் என்று கூறி அபினேஷ்வரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி உள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி அபினேஷ்வரனும் மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளான்.

    உடனே 2 நபர்களும் அவன் வாயை மூடி மயிலாடுதுறை அருகே கொண்டு சென்றுள்ளனர். இதையறிந்த அபினேஷ்வரன் வாயை மூடிய நபர் கையை கடித்து அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளான். அவர்கள் இருவரும் அபினேஷ்வரனை துரத்தியுள்ளனர். பின்னர் மயிலாடுதுறை ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளான். அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபினேஷ்வரன் பதட்டமாக வருவதை பார்த்து அவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதைதொடர்ந்து போலீசார் அபினேஷ்வரனை மீட்டு அவனது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அலுவலர் சிவராமன் முன்னிலையில் அபினேஷ்வரனை அவனது தாய் புவனேஷ்வரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    வங்கதேசத்தில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கையை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். #Bangladeshdrugs
    டாக்கா:

    வங்கதேசத்தில் போதை மருந்து புழக்கம் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக யாபா எனப்படும் போதை மாத்திரைகள் வங்கதேசத்திற்குள் கடத்தி வரப்படுவதால் அந்த கும்பலை களையெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

    இந்த நடவடிக்கையின்போது போதை மருந்து கடத்தல் கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்படுகிறது. இதில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் போதை மருந்து விற்பனை செய்யும் கும்பல்களுக்கு இடையிலும் மோதல் உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இன்று மட்டும் பல்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கி சண்டையில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் கடந்த 10 நாட்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்த கொலைகளை அரசுத் தரப்பு நியாயப்படுத்தி உள்ளது. ஆனால், கொல்லப்பட்டவர்களில் பலர் சட்டத்திற்கு புறம்பான வகையில் தீர்த்து கட்டப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. 

    அண்டை நாடுகளான மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு யாபா என்ற போதை மாத்திரைகள் அதிக அளவில் கடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 40 மில்லியன் மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews #Bangladeshdrugs
    மதுரையில் முதியவரை கடத்திய கும்பல் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக் கும்பலை தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை செல்லூர் போஸ் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவர் சம்பவத்தன்று நரிமேடு பஸ்நிறுத்தம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை வழிமறித்த 3 பேர் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும். எனவே போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் எனக்கூறி அவர்கள் சுப்பிர மணியத்தை அழைத்துச் சென்றனர். அப்போது அந்த கும்பல் சுப்பிரமணியத்தை தாக்கியது.

    சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் சுப்பிரமணியத்தை அடைத்த அந்த கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

    பின்னர் சுப்பிரமணியத்தின் நண்பர் திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகேந்திர பாண்டியன் என்பவரை தொடர்பு கொண்டு ரூ. 2 லட்சம் பணம் வேண்டும். இல்லை யென்றால் சுப்பிரமணியத்தை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நாகேந்திர பாண்டியன், மர்ம கும்பல் சொன்ன இடத்தில் வைத்து ரூ.2 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட பின் அந்த கும்பல் சுப்பிரமணியத்தை விடுவித்தது.

    இது குறித்து சுப்பிரமணியன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதில், சிவசுப்பிரமணியன் என்பவர் உள்பட 3 பேர் போலீஸ் போல் நடித்து கடத்திச் சென்று பணம் பறித்ததாக தெரிவித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருப்பையாபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் கார்த்திகா(வயது17). இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இப்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற கார்த்திகா திடீரென மாயமானார்.

    வெகுநேரமாகியும் கார்த்திகா வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த தாய் கவிதா அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். மேலும் கார்த்திகாவின் நண்பர்களிடம் விசாரித்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் கவிதா புகார் செய்தார்.

    அந்த புகார் மனுவில் தனது மகளை ஆனைமலையான் பட்டியை சேர்ந்த கனிஷ்குமார், சிங்கராஜபுரத்தை வசந்த், ஒத்தப்பட்டியை சேர்ந்த நந்தீஸ்குமார் ஆகியோர் கடத்தியிருக்கலாம் என கூறியிருந்தார். 

    இதையடுத்து அவர்களை தேடிச்சென்ற போலீசார் மேற்கண்ட 3 பேரும் தலைமறைவானதால் அவர்கள்தான் கார்த்திகாவை கடத்தியிருக்ககூடும் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே கிராமப்புறங்களில் மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள வி.எஸ். கோட்டை, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் மரம் கடத்தல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி அதனை டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கேட்டபோது உரிய அனுமதி பெற்றுதான் மரங்களை வெட்டி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாரிடம் புகார் அளித்தனர். அவர் விசாரணை நடத்தியதில் மரங்களை வெட்டி கடத்தியது சில்வார்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன், ராஜ்குமார் என தெரிய வந்தது.

    அனுமதி இல்லாமல் மரம் வெட்டியதும் தெரியவரவே அதனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின்பேரில் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் நீர்நிலைக்கு இடையூறாக உள்ள மரங்களை வெட்ட மட்டுமே அனுமதி கொடுத்துள்ளனர்.

    ஆனால் இதனை சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. மழைக்கு முறிந்து விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதாக சொல்லி பல இடங்களில் விதிமுறைகளுக்கு மாறாக மரம் வெட்டப்படுவதாக புகார்கள் வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பணப் பிரச்சினையில் திருமணத்தை தள்ளி போட்டதால் இளம்பெண்ணை கடத்திய கும்பல் குறித்து தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் ரத்தினம் (வயது 60) என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எனது 2-வது மகள் வெண்மதியை காடையாம்பட்டி தாலுகா ஆண்டிகுட்டை வளைவை சேர்ந்த பழனிசாமி மகன் கிஷோர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்தோம்.

    திருமண செலவுக்கு பணம் கிடைக்காததால் திருமணத்தை தள்ளி போடலாம் என்று நான் கூறினேன். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ள வில்லை.

    இதற்கிடையே எனது மகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவளை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து ஓமலூர் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி என்பவரிடம் புகார் கொடுத்தேன். அவர் இரு தரப்பினரையும் அழைத்து கட்ட பஞ்சாயத்து பேசியதால் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக நினைக்கிறேன்.

    எனவே எனக்கு சரியான தீர்ப்பு கிடைக்க சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உதவ வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×