search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹன்சிகா"

    ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மஹா’ படத்திற்காக நடிகர் சிம்பு இடைவிடாமல் நடித்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
    ஹன்சிகா நடிப்பில் தற்போது 'மஹா' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, கோவாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு சிம்பு மற்றும் ஹன்சிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

    எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். 

    இது குறித்து அவர் கூறும்போது, "நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். இந்த கட்ட படப்பிடிப்பில் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. 



    சிம்பு உடனான தருணங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. அவரை பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, சிம்பு ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, "சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார். 

    நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார். அத்தகைய ஒரு நடிகரை பெறுவது எங்களை போன்ற ஒரு வளரும் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வரம். 

    ஹன்சிகா முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் ஜமீல் மிகத் திறமையாக சிறப்பாக செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாக கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரை போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜியை முழுமையாக பரப்பி வருகின்றது" என்றார்.
    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியாகி இருக்கும் `100' படத்தின் விமர்சனம். #100TheMovie #Atharvaa #Hansika
    நாயகன் அதர்வா போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வேலைக்காக காத்திருக்கிறார். அவரது காதலியான ஹன்சிகா டெலிகாலராக வேலை பார்க்கிறார். இதற்காகவே ஹன்சிகாவை கிண்டல் செய்து வருகிறார். 

    அதர்வாவின் நண்பர் மகேஷ் போலீஸ் வேலையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அதர்வாவுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. ரவுடிகள் மற்றும் தவறு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கனவோடு பணியில் சேரும் அதர்வாவிற்கு, அவசர உதவி எண்ணான 100-க்கு வரும் அழைப்புகளை எடுக்கும் டெலிகாலராக பணியாற்றும் நிலை ஏற்படுகிறது.



    தொலைப்பேசியில் அவசர உதவிக்கு அழைப்பவர்களை காவல் நிலையத்திற்கு மாற்றாமல், தானே நேரில் சென்று உதவி செய்து வருகிறார் அதர்வா. இந்நிலையில், இறந்ததாக கருதப்படும் அதர்வாவிற்கு தெரிந்த பெண் ஒருவர் 100 நம்பரை அழைக்கிறார். அவருடன் பேசும் அதர்வா அதிர்ச்சியடைகிறார். மேலும் அந்த பெண் தான் ஒரு பெரிய ஆபத்தில் இருப்பதாகவும், தன்னை கடத்தி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.

    இதற்கு பின்னால் பெரிய கும்பல் இருப்பதை அறியும் அதர்வா, தன்னுடைய நண்பன் மகேஷ் இதில் ஈடுபட்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறார். 

    இறுதியில் அந்த பெண்ணை காப்பாற்றினாரா? நண்பன் மகேஷுக்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, முதல் முறையாக போலீஸ் உடை அணிந்து நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது என்றே சொல்லலாம். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிடுக்கான போலீசாக வலம் வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகாவிற்கு அதிகமாக வேலை இல்லை. பாடல் மற்றும் சில காட்சிகளில் வந்து சென்றிருக்கிறார்.

    நண்பராக வரும் மகேஷ் கொடுத்த வேலையை சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், ராதாரவி ஆகியோர் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். யோகிபாபுவின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது.



    போலீஸ் கதையாக இருந்தாலும் வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சாம் ஆண்டன். அவசர எண்ணான 100 பற்றியும், அதன் பின் செயல்படுபவர்களை பற்றியும் விளக்கி இருக்கிறார் இயக்குனர். அதர்வாவிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.

    த்ரில் காட்சிகளுக்கு ஏற்றவாறு வரும் சாம் சி.எஸ்-ன் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘100’ அவசரம். #100TheMovie #Atharvaa #Hansika #YogiBabu

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடித்திற்கும் `100' படத்திற்கான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. #Atharvaa #Hansika
    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் இன்று வெளியாவதாக இருந்தது.

    ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குனர் இன்று வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்திற்கு வழங்கப்பட்ட தடை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், 100 திரைப்படம் நாளை (மே 10, 2019) உலகமெங்கும் ரிலீசாக இருக்கிறது.



    ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். #Atharvaa #Hansika
    சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் `100' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். #Atharvaa #Hansika
    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 100. முதன்முறையாக அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் நாளை ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக படத்தின் இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் சாம் ஆண்டன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


    100 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. எங்களது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாததற்காக வருந்துகிறேன். இதில் என் தவறு ஏதும் இல்லை. மன்னிக்கவும். இவ்வாறு கூறியிருக்கிறார். 

    ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். #Atharvaa #Hansika

    சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா - ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `100' படத்தின் முன்னோட்டம். #100TheFilm #Atharvaa #Hansika
    ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `100'.

    இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ், அர்ஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - சாம்.சி.எஸ்., ஒளிப்பதிவு - கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு - ரூபன், கலை - உமேஷ் ஜே.குமார், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன் & அனுஷ்யா ஸ்வாமி, பாடல்கள் - விவேக், ஒலி வடிவமைப்பு - விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ ஷங்கர், ஆடை வடிவமைப்பு - சாரா விஜயகுமார், தயாரிப்பு - காவியா வேணுகோபால், எழுத்து, இயக்கம் - சாம் ஆண்டன்.



    100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். பள்ளி சிறுமிகளுக்கு நிகழும் கொடூரம், சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த படத்தை உருவாகி இருக்கிறது.

    இந்த படம் மூலம் தான் அடுத்த ரவுண்டு வருவேன் என்று நடிகை ஹன்சிகா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். #100TheFilm #Atharvaa #Hansika

    100 படத்தின் டீசர்:

    மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி - ஹன்சிகா - பல்லக் லால்வானி நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `பார்ட்னர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Partner #Adhi #Hansika
    ஆதி - ஹன்சிகா முதன்முதலாக இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு `பார்ட்னர்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். ஹன்சிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக குப்பத்து ராஜா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

    முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவி மரியா, 'டைகர்' தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


    டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது, "முழு நீள காமெடி படமாக இது உருவாகிறது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இது இருக்கும். இந்த பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் படமாக இருக்கும்" என்றார்.

    சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இந்த படத்திற்கு சபீர் அஹமது ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஃப்.சி. கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.பி.கோலி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Partner #Adhi #Hansika #PallakLalwani

    மஹா படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது நடிகை ஹன்சிகாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. #Hansika #Maha
    ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார்.

    இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகை ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, காயத்தில் முடிந்தது. விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது. திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்கு பின்னரும் கூட, ஹன்சிகா எந்தவொரு கையசைவும் இன்றி அந்த காட்சியில் நடித்தார். 



    இப்படம் ஹன்சிகாவின் 50வது படம், இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது படமாகும்.
    முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் ஒரு படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். #Varalakshmi #Haniska
    தமிழ் சினிமாவில் தற்போது அதிகமான படங்களில் நடிப்பது வரலட்சுமி தான். கதாநாயகியாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார்.

    தான் நடிக்கும் படங்களில் வேறு கதாநாயகிகள் இருந்தாலும் கவலைப்படாமல் நடிக்கிறார். சர்கார், சண்டக்கோழி 2, மாரி 2 என்று அந்த வரிசையில் நீயா 2, காட்டேரி படங்களிலும் 2 ஆம் கதாநாயகியாக நடிக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வெல்வெட் நகரம், சக்தி, ராஜபார்வை, டேனி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கன்னிராசி அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது.



    இந்த நிலையில், தெலுங்கிலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் வருகின்றன. தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.,பிஎல் என்ற தெலுங்கு படத்தில், சந்தீப் கி‌ஷனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். அதில், வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப்போகிறார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கவும் வரலட்சுமி திட்டமிட்டு உள்ளார். #Varalakshmi #Haniska

    தமிழில் பல படங்களை கைவசம் வைத்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், முதல்முறையாக புதிய படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகம் ஆக இருக்கிறார். #Varalakshmi
    கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே தனது பயணத்தை மாற்றி வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார் வரலட்சுமி. இதனால் அவருக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கின.

    இவரது நடிப்பில் தற்போது ‘வெல்வெட் நகரம், கன்னிராசி, நீயா 2, காட்டேரி, ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், முதல் முறையாக தெலுங்கு படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.



    சந்தீப் கிஷன், ஹன்சிகா நடிக்க இருக்கும் புதிய படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நாகேஷ்வர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். 
    சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘துப்பாக்கி முனை’ படத்தின் வெற்றியை நடிகர் விக்ரம் பிரபு படக்குழுவினருடன் கொண்டாடி இருக்கிறார். #VikramPrabhu
    கலைப்புலி எஸ். தாணு தயாரித்து விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் ‘தூப்பாக்கி முனை’. இப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. 

    இந்த 25-வது நாள் வெற்றி விழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். 



    மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
    தமிழில் முன்னணி நடிகையாகவும் தற்போது மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, இந்த புத்தாண்டுக்கான சபதம் பற்றி கூறியிருக்கிறார். #Hansika
    ஹன்சிகா முன்னணி நடிகையாக விளங்குவது மட்டும் அல்லாமல் நல்ல மனதுக்கும் சொந்தக்காரர். இதுவரை 34 குழந்தைகளுக்கு மேல் தத்தெடுத்து தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறார்.

    அவர்களை என் குழந்தைகள் என்று தான் கூறுவார். அடுத்து மும்பையில் பெரிய முதியோர் இல்லம் ஒன்றை கட்டும் முயற்சியில் இருக்கிறார். அவர் புத்தாண்டு பற்றி கேட்டபோது ‘என் குழந்தைகளில் ஒருவர் இந்த ஆண்டு 10 -ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிறார். அவரை நல்ல மதிப்பெண் எடுக்க வைத்து மாநிலத்திலேயே முதல் மாணவனாக கொண்டு வருவதையே என் புத்தாண்டு சபதமாக எடுத்துள்ளேன். மஹா படம் ஒரு திரில்லர் படம். அந்த படத்தை பற்றி ஏன் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.



    இன்னும் 3 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக வருகின்றன. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறினார்.
    விக்ரம் பிரபு நடிப்பில் துப்பாக்கி முனை படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இப்போ எல்லாப் படங்களுக்கும் யாராவது ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி விடுவதாக விக்ரம் பிரபு கூறினார். #ThuppakkiMunai #VikramPrabhu
    துப்பாக்கி முனை படம் வெற்றி அடைந்த உற்சாகத்தில் விக்ரம் பிரபு அளித்த பேட்டி:

    இளம் வயதிலேயே வயதான தோற்றத்தில் நடித்தது எப்படி?

    இந்தப் படத்துக்காக 45 வயது போலீஸ் அதிகாரியா நடிக்கணும்னு இயக்குநர் தினேஷ் சொன்னபோது, கொஞ்சம் யோசித்தேன்.

    பிறகு, சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில்ல ஒரு போட்டோஷூட் பண்ணிமோம். அது பக்காவாக செட் ஆனது. ஏற்கெனவே போலீசாக `சிகரம் தொடு’ படத்துல நடிச்சிருக்கேன்.

    அதுல இளமையான போலீஸ். இந்தப் படத்துல வயதான போலீஸ் அதிகாரி. 33 என்கவுன்டர் பண்ணின போலீஸ் எப்படி இருப்பார், அவரோட மனநிலை எப்படி இருக்கும்னு புரிஞ்சுக்கிட்டு நடித்தேன். அதுக்குப் பின்னாடி காவல் துறையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் இருக்கு. ஆரம்பத்துல சில தயக்கங்கள் இருந்தாலும், படத்தின் கதை அதை உடைச்சு என்னை பாசிட்டிவ் மனநிலைக்குக் கொண்டு வந்திருச்சு.



    எந்த மாதிரியான படங்களில் நடிக்க ஆசை?

    பொதுவா நடிகர்களுக்கு எல்லாப் படமும் ஹிட் ஆகாது. சில படங்கள்தான் மக்கள் மனசுல பதியும். அப்பாவுக்கு `சின்னத்தம்பி’, `அக்னி நட்சத்திரம்‘ படங்கள். அப்படி இருந்தது. எனக்கு, `கும்கி’ படம். அந்தப் படத்துக்குக் கிடைச்ச பெயரை தக்க வைத்துக்கொள்ள, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரேமாதிரியான வி‌ஷங்களை திரும்பத் திரும்பப் பண்ணுவதில்லைனு உறுதியாக இருக்கேன். அதனால், வெற்றி தோல்வி ரெண்டுமே என் கேரியர்ல இருக்கு. காமெடி, ஆக்‌‌ஷன், ரொமான்ஸ்னு எல்லா வரையிலும் நடிக்க ஆசைப்படுறேன். பத்து வருடத்துக்கு முன்னாடி ஒரு படத்தை ரிலீஸ் பண்றது ஈசியா இருந்துச்சு. இப்போ எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு பிரச்னையை சமூகவலைதள ஆள்கள் கிளப்பி விடுறாங்க. இதனால நடிகர்களுக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கு.

    சினிமா துறையில அப்பா, தாத்தா எடுத்த பெயரை நீங்களும் எடுக்கணும்ங்கிற அழுத்தம் உங்களுக்கு இருக்கா?

    யார் என்ன வேலை செய்கிறோமோ, அதுக்கான பலன் கட்டாயம் கிடைக்கும். நான் சினிமாவுல நல்லா நடிக்கிறதுக்கான அத்தனை முயற்சிகளையும் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கதை படமாக வந்தால், நான் தியேட்டர்ல போய்ப் பார்ப்பேனானுதான் முதல்ல யோசிப்பேன். இப்படி நானும் நடிப்புல நிறைய மெனக்கெடுறேன். நேரமும் நமக்குக் கைகூடி வரணும்; வரும். #ThuppakkiMunai #VikramPrabhu

    ×