search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்விட்டர்"

    கர்நாடக மாநிலத்தில் இளைஞர் மறைவை சுற்றி வெளியாகி வந்த புரளிகளுக்கு காவல் துறை முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.



    கர்நாடக மாநிலத்தின் பெலகவி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞர் மாடுகளை காப்பாற்ற முயன்றதால், அடித்துக் கொல்லப்பட்டார் என வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில், உண்மையை கண்டறிய பெலகவி காவல் துறை அதிரடி விசாரணையை துவங்கியது.

    விசாரணையில் உயிரிழந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது முதல், இவர் மாடுகளை காப்பாற்ற முயன்றதால் கொல்லப்பட்டார் என்ற வாக்கில் தகவல்கள் பரவத் துவங்கின. 



    இது தொடர்பாக பா.ஜ.க. எம்.பி.யான ஷோபா, இளைஞரின் படுகொலைக்கு காவல் துறை முறையான விசாரணை மேற்கொண்டு அரசாங்கம் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

    இந்நிலையில், காவல் துறை ஆணையர் லோகேஷ் குமார் இளைஞரின் மறைவு தற்கொலை தான் என உறுதிப்படுத்தி இருந்தார். உயிரிழந்த நிலையில், கைப்பற்றப்பட்ட இளைஞரின் உடலில் தாக்கப்பட்டதை உணர்த்தும் காயங்கள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் இளைஞர் தற்கொலையை அவரது குடும்பத்தாரும் உறுதிப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் ரீட்வீட் செய்யும் போது இனி ஜிஃப், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தலாம். #Twitter



    ட்விட்டர் சமூக வலைதளத்தில் சமீப காலங்களில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. முன்னதாக ரிபோர்ட், ஹைட் ரிப்லைஸ் போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டன. 

    அந்த வகையில் ரீட்வீட் செய்ய ஜிஃப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் வசதி தற்சமயம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரீட்வீட் செய்யும் போது கமெண்ட் மட்டும் செய்ய முடியும். ரீட்வீட் செய்யும் போது அதில் மீடியா எதையும் சேர்க்க முடியாது. 



    புதிய அப்டேட் மூலம் ட்விட்டரில் ரீட்வீட் செய்யும் போது ஜிஃப், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை சேர்க்க முடிகிறது. இந்த அம்சம் பயன்படுத்தும் போது ஜிஃப், வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றால் தகவலின் அளவு அதிகரிக்கும்.

    புதிய அம்சம் வழங்குவதற்கென ட்விட்டர் டைம்லைன், ட்வீட் டீடெயில் பக்கம் மற்றும் பல்வேறு இதர அம்சங்களில் மாற்றம் செய்ய வேண்டி இருந்ததாக ட்விட்டர் தெரிவித்திருக்கிறது. 

    புதிய ரீட்வீட் அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளம் மற்றும் மொபைல் வலைதளம் உள்ளிட்டவற்றில் ஏற்கனவே கிடைக்கிறது. எனினும், வலைதள பதிப்பில் இதுவரை இதற்கான அப்டேட் வழங்கப்படவில்லை.
    இந்திய பொது தேர்தலையொட்டி ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. #Twitter



    ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை கண்டறிந்து தெரிவிக்க மேலும் ஓர் புதிய வசதியை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த அம்சம் இந்தியா முழுக்க நடைபெறும் பொது தேர்தல் மற்றும் ஐரோப்பிய தேர்தலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சங்கள் வாக்களிப்பது பற்றி தவறாக உள்ளது (It’s misleading about voting) என்றும் ரிபோர்ட் ட்விட் “Report Tweet” என அழைக்கப்படுகிறது. 

    ட்விட்டரில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், மற்றபடி விதிகளை மீறாமல் இருக்கும் நோக்கில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. ட்விட்டரை பயனர்கள் உரையாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நிறுவனம் கருதுகிறது.



    இந்திய பொது தேர்தல் 2019 மற்றும் ஐரோப்பிய யூனியன் தேர்தல் காலத்தில் மக்களுக்கு இந்த அம்சங்கள் வழங்கப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி உலகம் முழுக்க பல்வேறு இதர நாடுகளிலும் இந்த அம்சம் தேர்தல் சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

    வாக்களிப்பது பற்றி தவறான விவரங்களை ட்விட்டர் பயனர்கள் பதிவிட முடியாது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. வாக்களிப்பது பற்றி எவ்வித தகவலையும் அவர்களால் பதிவிட முடியாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரஙகளை தவறாக பதிவிடுவதும் ட்விட்டர் தகவல் விதிகளுக்கு எதிரானது ஆகும்.

    புதிய அம்சங்கள் ட்விட்டர் டெஸ்க்டாப் பதிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ செயலியில் வழங்கப்படுகிறது. புதிய அம்சங்கள் பற்றிய விவரம் ஏற்கனவே ட்விட்டர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுல்ளது என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
    ட்விட்டரில் ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், ட்விட்டர் சி.இ.ஒ.-வை அழைத்து டோஸ் விட்டார் டொனால்டு டிரம்ப். #DonaldTrump



    ட்விட்டரில் தனது ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அதிருப்தியடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் சமூக வலைதளத்தின் போக்கு பற்றி டிரம்ப் சாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    "வெள்ளை மாளிகையில் ட்விட்டரில் இருந்து ஜாக் டார்சியை சந்தித்தேன். எங்களுக்குள் ட்விட்டர் தளம் மற்றும் சமூக வலைதள உலகம் பற்றி பொதுவான உரையாடல் அரங்கேறியது." என டிரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இத்துடன் ஜாக் டார்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார். 



    இதற்கு முன் டொனால்டு டிரம்ப்பை நேரில் சந்திக்காத ஜாக் டார்சி, அதிபர் டிரம்ப்பின் ட்வீட்டிற்கு பதில் அளித்தார். அதில் "தங்களது நேரத்திற்கு நன்றி. பொதுப்படையான கருத்து பரிமாற்றங்களுக்காகவே ட்விட்டர் இயங்குகிறது. அந்த வகையில் தளத்தை ஆரோக்கியமாகவும், அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடியதாக மாற்றவே விரும்புகிறோம். இதுபற்றிய உரையாடலுக்கு நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார். 



    மேலும் ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்தது பற்றி கவலை தெரிவித்த டிரம்ப்பிற்கு டார்சி பதில் அளித்துள்ளார். அதில், போலி மற்றும் தீங்கு விளைவிக்கும் அக்கவுண்ட்களை நீக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இதன் காரணமாக எனது ஃபாலோவர்களும் குறைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    முன்னதாக ட்விட்டர் தனக்கு பாரபட்சம் காட்டுகிறது, இதனால் எனது ஃபாலோவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சிகள் வாக்காளர்களை கவர சமூக வலைதளங்களை பயன்படுத்திய விவகாரம் வெளியானதும், ட்விட்டர் சந்தேகத்திற்குரிய அக்கவுண்ட்களை நீக்கும் பணிகளை துவங்கியது.

    இந்நிலையில், கீஹோல் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டொனால்டு டிரம்ப் சுமார் 2,04,000 ஃபாலோவர்களை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஆபாச தகவல்களை தடுக்கும் நோக்கில் புதிய வசதி சேர்க்கப்படுகிறது. #Twitter



    ட்விட்டர் தளத்தை பயன்படுத்துவோருக்கு தீங்கு, ஆபாசம் மற்றும் போலி தகவல்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற நோக்கில் அந்நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் வரும் மாதங்களில் ட்விட்டர் மேற்கொள்ள இருக்கும் புதிய மாற்றங்களை அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

    ட்விட்டரில் தீங்கு விளைவிக்கும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள ட்விட்டர் பயனர்களிடம் கருத்து கேட்காமல், இவற்றை கண்காணிக்க பிரத்யேக குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தகவல்களை ஆய்வு செய்யும். அதன்படி ட்விட்டரில் தீங்கு விளைவிப்பதாக குறிப்பிடப்படும் 38 சதவிகித தகவல்கள் ட்விட்டர் குழுக்களுக்கு அனுப்பப்படுகிறது.

    ஜனவரி - மார்ச் 2019 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டும், புதிய கணக்குகளை துவங்க முயன்ற சுமார் ஒரு லட்சம் அக்கவுண்ட்களும் நீக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 45 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டரில் எழுப்பப்படும் புகார் மற்றும் சந்தேகங்களுக்கு 60 சதவிகிதம் வரை வேகமாக பதில் அளிக்கப்படுகிறது.



    ஆபாச தரவுகள் அடங்கிய அக்கவுண்ட்கள் மும்மடங்கு அதிகமாக நீக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். புதிய வழிமுறைகளை பின்பற்றுவதால், 2.5 மடங்கு தனிப்பட்ட விவரங்கள் நீக்கப்படுகின்றன.

    தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்று 38 சதவிகித அச்சுறுத்தல் நிறைந்த தரவுகளை மனித குழுவின் ஆய்வுக்கு பின் நீக்க முடிகிறது. இதனால் ட்விட்டர் பயன்படுத்துவோரிடம் கருத்து கேட்க வேண்டிய நிலை மாறியிருக்கிறது என ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

    தீங்கு விளைவிக்கும் தகவல், மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற பல்வேறு வகையான தகவல்களை ஆய்வு செய்ய பயன்படுத்தும் அதே விதிமுறைகளை பயன்படுத்தி எங்களது குழுவினர் ஆபத்து நிறைந்த தகவல்களை நீக்கி வருகின்றனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



    எங்களது தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி ஆபத்து நிறைந்த, விதிகளை மீறும் தரவுகளை மற்றவர் குறிப்பிடும் முன் அவற்றை வேகமாக நீக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். 

    இத்துடன் தீங்கான தகவல்களை குறிப்பிடும் பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கி அவற்றின் மீது வேகமாக நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    அடுத்த சில வாரங்களில் எங்களது விதிமுறைகளை மாற்ற திட்டமிட்டு இருக்கிறோம். குறுகிய காலக்கட்டம் என்ற போதும், இவை மிக எளிமையானதாகவும், எளிதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
    தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 500-க்கும் அதிக போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன. #SocialMedia



    தேர்தல் விதிகளை மீறியதாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 503 பதிவுகள் தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 500 பதிவுகள் ஃபேஸ்புக்கில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இயக்குனர் ஜெனரல் திரேந்திர ஓஜா தெரிவித்தார்.

    இரண்டு பதிவுகள் ட்விட்டரில் இருந்தும், ஒன்று வாட்ஸ்அப் செயலியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஃபேஸ்புக்கில் எட்டு குற்றச்சாட்டுகளும், ட்விட்டரில் 39 குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். 



    கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தேர்தல் சமயத்தில் விதிகளை மீறும் பதிவுகளை 48 மணி நேரத்திற்குள் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டிருந்தன. இதற்கென தேர்தல் ஆணையம் மற்றும் சமூக வலைதள நிறுவன அதிகாரிகளிடையே சந்திப்பு நடைபெற்றது.

    தேரதலையொட்டி சமூக வலைதளங்களின் மீது இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையைகும். 
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்கள் இனி இப்படி செய்ய முடியாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #Twitter



    ட்விட்டர் தளத்தில் சமீபகாலங்களில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரிசையில், ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை பேரை பின்தொடர வேண்டும் என்ற எண்ணிக்கையில் மாற்றம் செய்திருக்கிறது.

    ஸ்பேம் மற்றும் ரோபோட் பயன்பாடுகளை தடுக்கும் நோக்கில், ட்விட்டர் தளத்தில் பயனர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 400 பேரை மட்டுமே பின்தொடர முடியும். முன்னதாக நாள் ஒன்றுக்கு பயனர் 1000 பேரை பின்தொடரும் வசதி வழங்கப்பட்டிருந்தது. புதிய மாற்றத்தின் மூலம் வெரிஃபைடு இல்லாத பயனர்கள் தினமும் 400 அக்கவுண்ட்களை பின்தொடரலாம்.



    வெரிஃபைடு அக்கவுண்ட் வைத்திருப்போர் தினமும் 1000 பேரை பின்தொடரலாம். இதுதவிர பயனர் அதிகபட்சம் 5000 பேரை மட்டுமே பின்தொடர முடியும். 5000 பேரை பின்தொடர்ந்த பின் பயனர் குறிப்பிட்ட அளவு பின்தொடர்வோர் எண்ணிக்கையை கடக்கும் வரை காத்திருக்க வேண்டும்.



    இந்த எண்ணிக்கை ஒவ்வொரு அக்கவுண்ட்டிற்கும் வேறுபடும். இது ஒவ்வொருத்தர் பின்தொடரும் அக்கவுண்ட்களுக்கு ஏற்ப வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்தொடர்வதற்கான எண்ணிக்கையை கடந்ததும் பயனருக்கு “You are unable to follow more people at this time.” தகவல் கிடைக்கும்.

    இந்த தகவல் பயனர் குறிப்பிட்ட நாளில் பின்தொடரும் அளவை கடந்ததும் திரையில் தோன்றும். இதே தகவல் பயனர் மொத்த பின்தொடர்வோர் எண்ணிக்கையை கடக்கும் போதும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் இந்த புதிய வழிமுறை பயனர்களை அவர்களது அக்கவுண்ட்களில் இருந்து லாக் அவுட் செய்கிறது. #Twitter



    ட்விட்டரில் வைரலாகி வரும் புதிய பிழை பயனர்களை அவர்களது அக்கவுண்ட்களில் இருந்து லாக்-அவுட் செய்கிறது. இந்த பிழை பயனர்களிடம் அவர்களது பிறந்த தேதியை 2007 ஆம் ஆண்டு மாற்றக் கோருகிறது. இவ்வாறு செய்யும் போது அவர்களின் ஃபீட் புதிய நிறங்களில் வித்தியசமாக மாறும் என தகவல் பரவி வருகிறது.

    இதை நம்பி பிறந்த தேதியை மாற்றுவோர் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்தே லாக்-அவுட் செய்யப்படுகின்றனர். ட்விட்டர் பயன்படுத்துவோர் நிச்சயம் 13 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் தற்சமயம் 2019 ஆம் ஆண்டில் இருக்கிறோம். இதனால் பிறந்த வருடத்தை 2007 என மாற்றும் போது பயனர் வயது 12 ஆகவே இருக்கும்.

    ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த வழக்கத்தை பின்பற்ற வேண்டாம் என பயனர்களுக்கு ட்விட்டர் வலியுறுத்தி வருகிறது. இதனை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது. ஒருவேளை ஏற்கனவே இந்த வழிமுறையை பின்பற்றியவர்களுக்கு ட்விட்டர் சார்பில் அனுப்பப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற ட்விட்டர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. 



    ட்விட்டர் கூறியபடி வழிமுறைகளை பின்பற்றினால் மீண்டும் ட்விட்டர் பயன்படுத்த முடியும். எனினும், இந்த வழிமுறையின் போது பயனர் தங்களின் வயதை நிரூபிக்க வேண்டும். பயனர்கள் ட்விட்டர் சப்போர்ட்டை தொடர்பு கொண்டு அவர்களது வயதை நிரூபிக்கும் அடையாள சான்றின் புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும்.
    இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டர் சமூக வலைதளத்தில் இணைந்திருக்கிறது. #LokSabhaElections2019 #ElectionCommission



    மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் கணக்கு துவங்கியிருக்கிறது. இந்தியாவில் விரைவில் பொது தேர்தல் துவங்க இருப்பதையொட்டி ட்விட்டர் சார்பில் சிறப்பு தேர்தல் எமோஜி (பாராளுமன்ற கட்டிடம்) ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிறது.

    புதிய தேர்தல் எமோஜியை கொண்டு தேர்தல் தொடர்பான விவாதங்கள், பொது மக்களிடத்தில் வாக்கு செலுத்துவதை ஆதரிப்பது உள்ளிட்டவற்றுக்கு ஊக்கப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளது. 12 மொழிகளில் கிடைக்கும் ஹேஷ்டேக்களில் இந்த தேர்தல் எமோஜி இணைக்கப்பட்டுள்ளது.

    வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய தேர்தல் ஆணையம் ட்விட்டரில் வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு (Systematic Voters' Education and Electoral Participation) எனும் திட்டத்தை துவங்கியிருக்கிறது. 



    இதுகுறித்து ட்விட்டர் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ட்விட்டரில் மத்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு திட்டத்தை ட்விட்டர் இந்தியா வரவேற்கிறது என தெரிவித்துள்ளது.

    "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு நடைபெற இருக்கும் தேர்தல் ட்விட்டரில் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தளத்தில் நேபர்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த கடந்த சில மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த்திருக்கிறோம். அந்த வகையில் ட்விட்டர் தளத்திற்கு தேர்தல் ஆணையத்தை வரவேற்கிறோம்," என ட்விட்டர் இந்தியாவின் மஹிமா கௌல் தெரிவித்திருக்கிறார்.

    ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தேர்தல் தொடர்பான உண்மை தகவல்களை நேரடியாக தேர்தல் ஆணையத்தின் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும். 
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் லைவ் போட்டோஸ் வசதி வழங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. விரைவில் இதற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. #Twitter



    ஆப்பிள் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு லைவ் போட்டோஸ் அம்சத்தை அறிமுகம் செய்தது. ஐபோன் 6எஸ் மாடலுடன் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இவை 1.5 நொடிகள் கொண்ட அனிமேட்டெட் புகைப்படங்கள் ஆகும். புகைப்படம் க்ளிக் செய்யும் முன் மற்றும் க்ளிக் செய்த பின் காட்சிகளை பதிவு செய்வதே லைவ் போட்டோ என அழைக்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் ட்விட்டரிலும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியின் கோட்களில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்குவது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இதனை சமூக வலைதள ஆய்வாளர் மேட் நவாரா தனது ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட்களுடன் பதிவிட்டிருக்கிறார். ட்விட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிஃப்களாக மாற்றுவதற்கான அம்சம் சோதனை செய்யப்படுவதாக நவாரா தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ட்விட்டரில் லைவ் போட்டோக்களுக்கான வசதி வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



    எனினும், ட்விட்டர் லைவ் போட்டோக்களை சாதாரண ஜிஃப்களாக கருதுமா அல்லது லைவ் போட்டோக்களாக கருதுமா இல்லை ஃபேஸ்புக் போன்று லைவ் போட்டோக்களாகவே குறிப்பிடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஐ.ஓ.எஸ். ட்விட்டர் செயலியில் ஏற்கனவே லைவ் போட்டோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது, எனினும் இது சற்று சிரமமான காரியமாகவே இருக்கிறது.

    இதை செய்ய தற்சமயம் போட்டோஸ் செயலியை திறந்து, லைவ் போட்டோவினை தேர்வு செய்து அதனை லூப் அல்லது பவுன்ஸ் ஆக மாற்றி, பின் அந்த போட்டோவினை ட்விட்டர் ஐ.ஓ.எஸ். செயலியில் பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது போட்டோ ஜிஃப் ஆக மாறியிருக்கும்.

    லைவ் போட்டோக்களுக்கான வசதியின் மூலம் பயனர்கள் எவ்வித சிரமமும் இன்றி நேரடியாக லைவ் போட்டோவினை தேர்வு செய்து செயலியில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்படுவதால் இது எப்போது அனைவருக்கும் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 
    ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள நிறுவனங்கள் மத்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. #Socialmedia



    சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்றவை தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் தேர்தல் ஆணையம் வழங்கும் உத்தரவுகளை பூர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளன. 

    அதன்படி தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் சமூக வலைதளங்களில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கக்கோரும் பதிவுகளை மூன்று மணி நேரத்தில் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்துடன் நடைபெற்ற சந்திப்பில் கையெழுத்தானது.



    இந்தியாவில் பொது தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் துவங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான தேர்தல் பரப்புரைகளுக்கும் தடை அமலாகியிருக்கும். 

    தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தில் வாட்ஸ்அப், கூகுள், ஷேர்சாட் மற்றும் டிக்டாக் போன்ற நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

    சமூக வலைதளங்கள் அனைத்தும் சின்கா கமிட்டி பரிந்துரையின் படி சட்டத்திற்கு புறம்பானதாக மேற்கோள் காட்டப்படும் பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் நீக்குவதாக உறுதியளித்துள்ளன. சட்டப்பிரிவு 126 இன் படி தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை செய்வது குற்றமாகும்.
    மோட்டோரோலாவின் மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. #motog7



    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துவிட்டது. முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன்கள் பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    கடந்த மாதம் அறிமுகமான மோட்டோ ஜி7 சீரிஸ் இல் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பிளஸ், மோட்டோ ஜி7 பிளே மற்றும் மோட்டோ ஜி7 பவர் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    சமீபத்தில் மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மோட்டோ ஜி7 வெளியீட்டு தேதியை மோட்டோரோலா தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது.



    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் மார்ச் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் அறிவிப்பை சிறிய டீசர் வீடியோவுடன் மோட்டோரோலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் வழங்கப்படுகிறது. இத்துடன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு இயங்குகிறது. 

    மோட்டோ ஜி7 மாடலில் 6.24 இன்ச் 1080x2270 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க டூயல் லென்ஸ் 12 எம்.பி. மற்றும் 5 எம்.பி. பிரைமரி கேமரா, முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 
    ×