search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்விட்டர்"

    ட்விட்டர் சமூக வலைதளத்தில் தவறான ட்விட்களுக்கு புகார் அளிக்க புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. #Twitter



    ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் ட்விட்களை புகார் அளிக்கும் போது புதிய மெனு திறக்கும். இதில் பயனர்கள் ட்விட் பற்றி அதிகளவு விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரச்சனையை விரிவாக புரிந்து கொள்ள முடியும்.

    புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர் எதிர்கொள்ளும் ட்விட்கள் பற்றி அதிகளவு விவரங்களை தெரிவிக்க முடியும்.



    இத்துடன் ரிப்போர்ட் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்க முடியும். முன்னதாக பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ட்விட்டர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

    இவற்றில் பலரது குற்றச்சாட்டுகள் டாக்சிங் ஆகும். டாக்சிங் என்பது ஒருவரின் அனுமதியின்றி அவரது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தாகும். இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தீங்கு ஏற்படுத்த காரணமாக அமையும். 

    ட்விட்டரில் கருத்து சுதந்திரம் மற்றும் கேலி கிண்டல்களை வித்தியாசப்படுத்துவதில் ட்விட்டர் சிரமப்படுகிறது. அந்த வகையில் புதிய அம்சம் மூலம் அவற்றை எதிர்கொள்ள ட்விட்டர் முயன்று வருகிறது.
    ட்விட்டர் பயன்பாடு பற்றி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ட்விட்டரை ஆபத்து காலங்களில் பயன்படுத்துவோர் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. #Twitter #SocialMedia
    ட்விட்டர் சமூக வலைதளம் என்றாலே பிரபலங்களின் வெரிஃபைடு அக்கவுண்ட் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ட்விட்டரை அதிகளவு பயன்படுத்துவோர் பிரபலங்கள் தான் என நம்மில் பலரும் நினைத்திருக்கிறோம். இதனை முற்றிலும் பொய் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.

    பல லட்சம் ஃபாளோவர்களை பெற்று ட்விட்டரில் பிரபலங்களாக அறியப்படுவோர் அவ்வப்போது டிரெண்டிங் பட்டியலில் தோன்றுவர். ஆனால் குறைந்த ஃபாளோவர்களுடன் அவ்வப்போது சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் தான் இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் தீவிரமாக ட்விட்டர் பயன்படுத்துகின்றனர் என வெர்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதவிர இயற்கை பேரழிவு காலங்களில் பல லட்சம் ஃபாளோவர்களை கொண்டிருப்பவர்களை விட, குறைந்தபட்சம் 100 முதல் 200 ஃபாளோவர்களை கொண்டிருப்பவர்களே ட்விட்டர் தளத்தை அதிகளவு சரியாக பயன்படுத்துகின்றனர் என்கிறது வெர்மாண்ட் பல்கலைக்கழக ஆய்வு.

    ஆபத்து காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பரிமாற்றம் செய்ய அதிக ஃபாளோவர்களை வைத்திருப்பவர்களை விட, குறைந்தளவில் மிக சரியான தொடர்புகளை வைத்திருப்போரை பயன்படுத்துவதே சிறப்பானதாக இருக்கும் என வெர்மாண்ட் நடத்திய ஆய்வு முடிவுகளில் பரிந்துரைக்கப்படுகிறது.



    சராசரியாக சிறிது நேரம் மட்டும் ட்விட்டர் பயன்படுத்துவோர் ஆபத்து காலங்களில் அதிகளவு ட்விட்களை பதிவிட்டிருந்தனர். இவர்கள் பதிவிடும் பெரும்பாலான ட்விட்கள் மிகமுக்கிய தகவல்களை கொண்டிருந்ததாக ஆய்வுக் குழுவை சேர்ந்த பெஞ்சமின் எமிரி தெரிவித்தார்.

    இவ்வாறாக பயனர்கள் குறைந்தளவு ஃபாளோவர்களை கொண்டிருந்தாலும், இவர்களது ஃபாளோவர்கள் பெரும்பாலும் அதிகளவு நண்பர்கள், குடும்பத்தார் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர். இவ்வாறு நெருங்கிய உறவுகள் ஆபத்து காலங்களில் மிகமுக்கிய தகவல்களை பலருக்கும் கொண்டு செல்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.

    இயற்கை பேரிடர் போன்ற ஆபத்து காலங்களில் ட்விட்டர் பயன்படுத்துவோர் மீட்பு பணிகள் அல்லது நிவாரண பொருட்கள் பற்றியே அடிக்கடி தகவல் பரிமாற்றம் செய்திருக்கின்றனர். #Twitter #SocialMedia
    ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயனர் விவரங்களை நிரந்தரமாக அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Twitter #socialmedia

     

    ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகின்றன. சமூக வலைதளங்களை பயன்படுத்தி உலகின் பல நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்கின்றன.

    நண்பர்கள் தங்கள் கருத்துக்களையும், செயல்பாடுகளையும், நட்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்கி பணம் சம்பாதிக்கின்றனர். இது போன்று எத்தனையோ நன்மைகள் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுகின்றன.

    அதே நேரத்தில் இங்கு தனி மனித ரகசியங்களை எப்போதும் பாதுகாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் வலைதளத்தில் ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி உள்ளே நுழைந்து மிகப் பெரிய தகவல் திருட்டு நடந்தது. இதை தொடர்ந்து பலர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள கணக்கில் இருந்து விலகினார்கள். இவற்றை பலர் தவறாக பயன்படுத்தியதாக கூறி நீக்கப்பட்டனர். 



    ஆனால் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கில் இருந்து ஒருவர் விலகினாலும், நீக்கினாலும் அதில் அவர் பதிவிட்டு இருந்த தகவல்களை அழிக்க முடியாது. இதன் மூலம் தனி மனித ரகசியத்துக்கு ஆபத்து உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகமும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகமும் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டது.

    ட்விட்டரில் 13,905 பேர் பதிவு செய்த 3 கோடி தகவல் திரட்டுகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. அதே போன்று ஃபேஸ்புக்கில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு கம்பெனியோ, அரசாங்கமோ அல்லது நடிகரோ, சாதாரண குடிமகனோ யாராக இருந்தாலும் இவற்றில் இருந்து விலகினாலும், நீக்கப்பட்டாலும் அவர்களின் தகவல்களை மீண்டும் பெற முடியும். ரகசியங்கள் பாதுகாக்க முடியாது என தெரியவந்துள்ளது.
    பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் இணைய பதிப்பின் இன்டர்ஃபேஸ் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Twitter #socialmedia



    ட்விட்டர் வெப் பயனர்களுக்கு புதிய இன்டர்ஃபேஸ் வழங்கும் பணிகள் நடைபெறுகிறது. ட்விட்டரில் புதிய வடிவமைப்பு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் சோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. 

    புதிய வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளவோ அல்லது முந்தைய வடிவமைப்பிலேயே தொடரலாம். புதிய இன்டர்ஃபேசை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ‘opt-in’ ஆப்ஷனை க்ளிக் செய்யலாம். புதிய வடிவமைப்பில் இரண்டு அல்லது மூன்றடுக்குகளை கொண்டிருக்கிறது. 

    இத்துடன் எமோஜி பட்"ன், க்விக் கீபோர்டு ஷார்ட்கட்கள், மேம்படுத்தப்பட்ட டிரெண்ட்கள், அட்வான்ஸ்டு சர்ச் மற்றும் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இன்டர்ஃபேஸ் பயன்படுத்த விரும்பாத பட்சத்தில் வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பழைய இன்டர்ஃபேசிற்கு மாற்றிக் கொள்ளலாம். 



    ட்விட்டரில் டார்க் மோட் சீராக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி, விரைவில் மேம்படுத்தப்பட்ட டார்க் மோட் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். சில வாடிக்கையாளர்கள் டார்க் மோட் கருப்பு நிறத்திற்கு பதிலாக டார்க் புளு நிறத்தில் தோன்றுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.

    சமீபத்தில் ட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் அவரவர் விரும்பும் டைம்லைனை தேர்வு செய்து கொள்ளும் வசதியை சேர்த்தது. ட்விட்டர் இந்த வசசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. முன்னதாக இந்த வசதி ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், விரைவில் வலைதளத்தில் வழங்கப்பட இருக்கிறது. 
    தென்னிந்திய பிரபலங்களில் ட்விட்டரில் அதிகம் பின்பற்றுபவர்கள் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். 80 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்பற்றுகின்றனர். #Dhanush
    நடிகர், பாடகர், பாடலாசியர், இயக்குநர், தயாரிப்பாளர் பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் பிரபலங்களின் பட்டியிலில் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துவிட்ட தனுஷை தற்போது 80 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்பற்றுகின்றனர்.

    இந்த நிலையில், தனுஷ் நடிப்பில் மாரி 2 படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் சாய் பல்லவிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளார்.



    இதுதவிர தனுஷ் தனுஷ் இயக்கி நடிக்கும் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம், ராம்குமார், மாரி செல்வராஜ், துரை செந்தில்குமார் இயக்த்தில் தலா ஒரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் வடசென்னை இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். #Dhanush

    ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. #Twitter



    ட்விட்டர் ஆன்ட்ராய்டு தளத்தில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ட்வீட் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது, வீடியோ பிளேபேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    இந்த அம்சங்கள் ஒருவேளை சோதனையிலோ அல்லது ஒவ்வொரு கட்டமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. இதனால் புது அம்சங்களை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க சில காலம் ஆகும். புது வீடியோ கன்ட்ரோல்கள் மிகவும் பயனுள்ள அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.



    திரையின் வலது புறம் அல்லது இடது புறங்களில் சிறிய கிளிக் செய்வதன் மூலம் வீடியோக்களை ஐந்து நொடிகளுக்கு முன்னரும், பின்னரும் ஃபார்வேர்டு செய்ய முடியும். யூடியூப் ஆப் இதற்கு ஏற்றார் போல் வேளை செய்கிறது, எனினும் இருமுறை கிளிக் செய்யும் போது வீடியோ பத்து நொடிகளுக்கு ஃபார்வேர்டு ஆகிறது.

    ட்விட்டர் ஆன்ட்ராய்டு செயலியை பயன்படுத்தும் சில பயனர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் செயலியின் எந்த வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதனால் புது அம்சங்கள் அனைவருக்கும் எப்போது வழங்கப்படும் என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. #Twitter #Apps
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்விட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படலாம். #Twitter


     
    ட்விட்டர் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும், பலருக்கும் அதிகம் தேவைப்படும் அம்சமாக ட்விட்களை எடிட் செய்யும் வசதி இருக்கிறது. ட்விட்டரில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டொர்சி ட்விட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவலை சமீபத்தில் வழங்கி இருக்கிறார். டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜாக் டொர்சி ட்விட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

    ட்விட்களை எடிட் செய்யும் அம்சத்தை பலரும் வீணடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக ட்விட்களை எடிட் செய்யும் வசதி கட்டுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். மக்கள், ட்விட்டர் சேவையில் பிரச்சனையாக பார்ப்பதை நீக்கிவிட்டு, அதை சரி செய்யும் முயற்சிகளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என டார்சி தெரிவித்தார்.



    ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து, அதை சரியாக வழங்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நாங்கள் உருவாக்கி வரும் அம்சம் பொது வெளியில் இருந்து எதையும் நேரடியாக எடுத்துவிடவோ அல்லது திசைத்திருப்பும் வகையிலோ இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

    ட்விட்களுக்கு எடிட் பட்டன் வழங்குவது பற்றி அதிகம் சிந்திக்கப்படுகிறது என 2016ல் டொர்சி தெரிவித்திருந்தார். எனினும் இதுபற்றி எவ்வித முடிவும் இதுவரை உறுதியாகவில்லை.

    ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எடிட் வசதி பற்றிய விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கும் நிலையில், இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷாவின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக திரிஷா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #TrishaKrishnan
    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா. 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான 96 படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்துக்கு ஜோடியாக ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் திரிஷா பேட்ட படம் பற்றி ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

    இன்று அதிகாலை திரிஷாவின் ட்விட்டர் கணக்கை மர்ம கும்பல் கைப்பற்றியதாக தகவல் பரவியது. திரிஷா இதுபற்றி தனது நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.

    திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்ட போது, ‘ஏதோ ஒரு மர்ம கும்பல் திரிஷாவின் ட்விட்டர் கணக்கில் ஊடுருவி தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் அவரது கணக்கில் இருந்து தவறான வீடியோக்களையும், செய்திகளையும் அனுப்பியதை கண்டுபிடித்தோம்.

    உடனடியாக ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றிவிட்டோம். எனவே அந்த அறிவிப்பை திரிஷா வெளியிட்டார். அவர் தற்போது பேட்ட படப்பிடிப்புக்காக வாரணாசியில் இருக்கிறார்’ என்றார்.

    திரிஷாவின் ட்விட்டர் கணக்கு ஏற்கனவே ஒரு முறை இதேபோல் கைப்பற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடந்த சமயத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிந்து திரிஷாவை சிக்கலில் சிக்க வைத்தனர்.

    இதற்காக திரிஷா கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். #TrishaKrishnan

    ட்விட்டர் தளத்தின் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலிகளில் வழங்கப்பட்டு இருக்கும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது. #Twitter #Moments



    ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளத்திற்கான ட்விட்டர் செயலிகளில் இருந்து மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுவதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

    அக்டோபர் 23-ம் தேதி முதல் செயலிகளில் இருந்து மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படுகிறது. ட்விட்டரில் அதிகம் பயன்படுத்தப்படாத அம்சங்கள் நீக்கும் வழக்கம் இருந்து வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனருக்கு பயனுள்ள அம்சங்களை வழங்குவதில் அதிக கவனம் செலுத்த முடியும்.

    மொபைல் செயலிகளில் இருந்து மட்டும் மொமன்ட்ஸ் அம்சம் நீக்கப்படும் நிலையில், பயனர்கள் டெஸ்க்டாப் பதிப்பில் இருந்து மொமன்ட்ஸ் அம்சத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். மொமன்ட்ஸ் அம்சம் மூலம் பல்வேறு ட்விட்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட முடியும். 

    ட்விட்டர் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். செயலியில் 2016-இல் இருந்து மொமன்ட்ஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. மொமன்ட்ஸ் பதிவிடும் அம்சம் நீக்கப்பட்டாலும், அதனை பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. மொமன்ட்ஸ்-ஐ உருவாக்க கிரியேட் நியூ மொமன்ட் ஆப்ஷனை கிளிக் செய்து மொமன்ட் பெயர் மற்றும் விவரங்களை பதிவிட வேண்டும்.

    பின் மொமன்ட்ஸ்-இல் சேர்க்கப்பட வேண்டிய ட்விட்களை தேர்வு செய்து செக்மார்க் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். மொமன்ட்ஸ்-க்கு ஏற்ற கவர் படத்தை தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது பதிவிட்ட ட்விட்களில் இருந்தோ தேர்வு செய்யலாம்.


    தன்னை விஜய் ரசிகர்கள் போனில் மிரட்டியதாக நடிகர் அளித்துள்ள புகார் மனுவை ஏற்று, போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Vijay #Karunakaran
    சூது கவ்வும், கலகலப்பு, தொடரி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. பின்னர் அது முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசும்போது, அரசன் பற்றிய குட்டிக் கதை ஒன்றை கூறினார்.

    அதை மேற்கோள் காட்டி நடிகர் கருணாகரன் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், அரசியல் வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்தக்கதை, அரசியல் வாதிகளுக்கு மட்டுமானதா? இல்லை நடிகர்களுக்கும் பொருந்துமா? தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என ரசிகர்களிடமும் சொல்லிப் பாருங்கள். கேட்கிறார்களா பார்ப்போம்’ என்று அதில் கூறி இருந்தார்.

    இதற்கு விஜய் ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தனர். விக்கிபீடியாவில் உள்ள கருணாகரன் பற்றிய குறிப்பை எடுத்துப் பதிவு செய்து, கருணாகரனை ‘ஆந்திராக்காரர்’ என அடையாளப்படுத்த முயன்றனர். இதற்கு பதில் தரும் வகையில் கருணாகரன் ‘நான் பிறந்தது ரெட்ஹில்ஸ் அருகிலுள்ள பாடியநல்லூர்’ என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் ‘நான் தமிழகத்தை சேர்ந்தவனா? என்று முட்டாள் தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா?’ என்று கேட்டுள்ளார்.

    கருணாகரனின் இந்த பதில்கள் விஜய் ரசிகர்களை மேலும் ஆத்திரமடைய செய்யவே மோசமான வார்த்தைகளால் கருணாகரனை திட்ட தொடங்கினார்கள்.



    கருணாகரனும் ‘நீங்கள் என்னை மிரட்டுவது பதில் அளிக்க முடியாத உங்களின் இயலாமையை காட்டுகிறது. அது எனக்கு பிடித்துள்ளது’ என்றும் ரசிகர்கள் போடும் கமெண்டுகள் அந்த நடிகரின் தராதரத்தை காட்டுகிறது என்றும் தெரிவித்தார். இந்த விவாதத்தை அடுத்து விஜய் ரசிகர்கள் கருணாகரனுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனைதொடர்ந்து கருணாகரன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். அதில் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    எந்தெந்த செல்போனில் இருந்து மிரட்டல் வந்தது என்பது பற்றியும் கருணாகரன் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கருணாகரனை போனில் மிரட்டிய விஜய் ரசிகர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் யார்-யார்? என்பது பற்றி கண்டுபிடித்து விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் நீங்கள் பதிவிட்ட பழைய ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #Twitter #socialmedia



    ட்விட்டர் துவங்கப்பட்ட காலத்தில், இந்த வலைதளம் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் தளமாக இருக்கும் போல என்ற கருத்து பரவலாக பரவியிருந்தது. 

    பின் படிப்படியாக ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ட்விட்டர் பயன்பாடுகளில் அந்நிறறுவனம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

    ட்விட்டர் பயன்படுத்த துவங்கிய காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் தொடர்ந்து அதிகப்படியான ட்விட்களை பதிவிட்டு, தற்சமயம் அவை அர்த்தமற்றதாக உணர்கிறீர்களா?

    ட்விட்டரில் நீங்கள் பதிவிட்ட ட்விட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சிரமமான காரியமாக தெரிகிறதா, கவலை வேண்டாம். நீங்கள் பதிவிட்ட ட்விட்களை இனியும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளீர்களா?

    அப்படியெனில் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். சமூக வலைதளங்களில் இருந்து சற்று தள்ளியிருக்கவோ அல்லது சில காலம் தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களா. அப்படியெனில் உங்களது ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க பல்வேறு சேவைகள் இருக்கின்றன.

    ட்விட்டர் டைம்லைனில் 3200 ட்விட்கள் மட்டுமே தெரியும் என்றாலும், உங்களது பழைய ட்விட்களை சர்ச் கன்சோலில் இருந்து தேடினால் அவை கிடைக்கும். 



    பழைய ட்விட்களை பேக்கப் செய்வது

    உங்களது அனைத்து ட்விட்களையும் அழிக்க நினைக்கும் பட்சத்தில், அவற்றை டவுன்லோடு செய்து பேக்கப் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் டவுன்லோடு செய்யும் சிப் ஃபைல் அனைத்து ட்விட்கள் மற்றும் ரீட்விட்களையும் கொண்டிருக்கும்.

    உங்களின் ட்விட்டர் ஆர்ச்சிவ் ஃபைலை டவுன்லோடு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

    1) முதலில் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்

    2) கீழ் புறம் ஸ்கிரால் செய்து பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் Request your archive ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

    3) இனி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதில் உங்களது விவரங்கள் இருக்கும் டவுன்லோடு செய்யக்கூடிய ஃபைலாக இடம்பெற்றிருக்கும்



    ட்விட்டெலீட் (TweetDelete) சேவையை கொண்டு உங்களின் அனைத்து ட்விட்களையும் அழிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் பதிவிடும் ட்விட்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து போக செய்ய முடியும். எனினும் மூன்றாம் தரப்பு சேவை என்பதால் சமீபத்தில் பதிவிட்ட 3200 ட்விட்களை மட்டுமே அழிக்க முடியும். 

    உங்களது எதிர்கால ட்விட்களை அழிக்க குறைந்த பட்சம்: ஒரு வாரம், இரண்டு வாரங்கள், ஒரு மாதம், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வருடம் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டெலீட் உங்களின் அக்கவுன்ட்டை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை சரிபார்க்கும். ட்விட்டர் செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்கள் சென்று இதற்கான அனுமதியை மாற்றியமைக்கலாம்.



    ட்விட்டர்இரேசர் (TwitterEraser) கொண்டு உங்களது 3200 ட்விட்களையும் அழிக்க முடியும். எனினும் 6.99 டாலர்கள் செலுத்தி அப்கிரேடு செய்யும் போது அதிகப்படியான ட்விட்களை அழிக்கலாம்.

    உங்களது அனைத்து ட்விட்டர் ஆர்ச்சிவ்களையும் ட்விட்டெலீட்டில் அப்லோடு செய்ய வேண்டும். பின் சர்ச் ஃபில்ட்டர் மூலம் ட்விட்களை தேதி, ஹேஷ்டேக் மற்றும் குறியீட்டு சொல் கொண்டு தேடலாம். 

    பல்வேறு ட்விட்களை அழிக்கும் போது, அந்த மாற்றங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட மாட்டாது. ட்விட்டரில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்விட்களை மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும், இந்த எண்ணி்க்கை ஆயிரங்களை கடக்கும் பட்சத்தில் அதற்கான நேரம் அதிகமாகும். 

    ட்விட்களை அழிக்கும் போது அவற்றை பொது மக்கள் தேடும் போது கிடைக்காமல் போகும். எனினும் நீங்கள் அழிக்கும் ட்விட்களை ட்விட்டர் சர்வெர்களில் இருக்கும். சட்ட ரீதியிலான தேவைகளுக்காக அவை தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக ட்விட்டர் உங்களது ட்விட்களை பேக்கப் வைத்திருக்கும். #Twitter #socialmedia
    கொல்கத்தாவில் மேஜெர்ஹர் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். #kolkatabridgecollapse
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் என்ற மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த பின் பேசிய மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம், இந்த மேம்பாலம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து பகுதியில் இருந்து 6 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதேவேளையில், டார்ஜிலிங்கில் இருக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளம் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மீட்பு பணிகளை கண்காணித்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    இந்நிலையில், இந்த மேம்பால விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் இறைவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
    ×