search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குப்பதிவு"

    வேப்பந்தட்டை அருகே சிலை வைக்கும் தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த பாண்டகப்பாடியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40). இவரது மகன் சிலம்பரசன் கடந்த 7 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். 

    இந்நிலையில் இறந்த சிலம்பரசனுக்கு குல தெய்வ கோவிலில் சிலை வைத்தால் குடும்பம் விருத்தியடையும் என உறவினர்கள் சிலர் சின்னதுரையிடம் கூறியுள்ளனர். இதனைக்கேட்ட  சின்னதுரை தனது மகன் சிலம்பரசனுக்கு சிலை செய்து அதே ஊரில் உள்ள தீப்பாஞ்சியம்மன் கோவிலில் வைத்துள்ளார். சாமி கும்பிடும் இடத்தில் இறந்தவரின் சிலை வைக் கக்கூடாது என அதே ஊரை சேர்ந்த சின்னதுரையின் உறவினர்கள் முத்துசாமி, சுப்பிரமணி மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சின்னதுரையின் தங்கை கொளஞ்சி பாண்டகப்பாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது முத்துசாமி தரப்பினர் வந்து கோவிலில் வைத்துள்ள சிலையை அகற்ற சொல்லியதாக தெரிகிறது. 

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாகியது. இதில் காயம் அடைந்த கொளஞ்சி, சின்னதுரை, அவரது தம்பி வடிவேல் ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கொளஞ்சி வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் முத்துசாமி  உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவதானப்பட்டி அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் பாவனா (வயது 16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் செந்தில் (24) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாவனாவின் தந்தை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாவனாவின் இருக்கும் இடம் தெரிந்து அங்கு சென்று தன்னுடன் வருமாறு கூறினார்.

    ஆனால் பாவனா அதற்கு மறுப்பு தெரிவித்து தான் செந்திலை திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே அவருடனேயே வசிப்பதாகவும் கூறினார். பாவனாவின் தந்தை இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் செந்தில் மீது கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி பேராசிரியையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வருவாய் ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமங்கலம்- சோழவந்தான் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் பாண்டி. புதுக்கோட்டையில் வருவாய்த்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி வித்யா (வயது 27). விருதுநகரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வித்யா தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் பாண்டி, வித்யா வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வித்யா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    வருவாய் ஊழியர் பாண்டி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குழந்தைகள் கடத்தப்பட்டால் மாயம் என்று வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவை டி.கே.ராஜேந்திரன் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
    சென்னை:

    குழந்தை கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாயமானதாக வழக்குப்பதிவு செய்யக்கூடாது’ என்று கூறினர்.



    நீதிபதிகள் வழங்கிய உத்தரவை அரசு வக்கீல் ஆர்.ரவிச்சந்திரன் தமிழக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு அலுவல் ரீதியாக தெரிவித்தார். இதையடுத்து டி.கே.ராஜேந்திரன் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி., டி.ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அதில் அவர், ‘குழந்தைகள் மாயமானதாக புகார்கள் கொடுக்கும்போது, நேரடியாக கடத்தல் புகார் கொடுக்கப்பட்டாலும் போலீசார் வழக்கமாக காணவில்லை என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். இனிமேல் காணாமல் போன சம்பவங்களின்போது நேரடி கடத்தல் புகார்கள் பெறப்பட்டால் இந்திய தண்டனை சட்டம் 363 அல்லது 366 (ஏ) பிரிவுகளின் கீழ் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று அறிவுறுத்தி உள்ளார். 
    ×