search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ.ஆர்.முருகதாஸ்"

    விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நடிகை வரலட்சுமியும் படக்குழுவில் இணைந்திருக்கிறார். #Vijay62 #Thalapathy62
    நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். 

    இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், நடிகை வரலட்சுமியும் நேற்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 

    அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள்.



    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிரடி அரசியல் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Vijay62 #Thalapathy62 #Varalashmi
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடப்பு அரசியலை தீவிரமாக விமர்சித்திருப்பதாக கூறப்படுகிறது. #Vijay62 #Thalapathy62
    ரஜினி, கமலை போலவே விஜய்க்கும் அரசியல் ஆசை எழுந்தது. மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார்.

    இதனால் ‘தலைவா’ படத்துக்கு சிக்கல் எழுந்தது. அதன் பின்னர் அரசியல் ஆசையை ஒதுக்கி வைத்துவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்த தொடங்கினார்.

    சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘மெர்சல் படத்தில் மத்திய அரசை குறைகூறும் வசனங்கள் இருந்ததால் தீவிர எதிர்ப்பு கிளம்பியது.

    தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவசாயிகளுக்காகவும் மீனவர்களுக்காகவும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடும் பணக்காரராக வருகிறார். விவசாயிகளுக்கு துரோகம் செய்து தங்கள் சுயநலனுக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளாக ராதா ரவியும் பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள்.



    இந்த படத்துக்காக ஒரு காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. தாய் கழகத்தில் இருந்து பிரிந்த பழ.கருப்பையா மீண்டும் தாய்க்கழகமான ராதாரவியுடனே சேர்வது போலவும் கட்சியின் இணைப்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவது போலவும் காட்சி படமாக்கப்பட்டது.

    இந்த அரசியல் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிப்பது போலவும் காட்சி எடுக்கப்பட்டது. கட்சியின் பெயர் அ.இ.ம.மு.க. என்று இருந்தது.

    எனவே இந்த படம் தமிழகத்தில் சமீபகால அரசியல் சம்பவங்களை காட்சியாக்கி எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிய வருகிறது.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தாய்க் கழகத்துடன் இணைந்து எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்து வருகிறார். இந்த காட்சி படத்தில் இடம் பெறுகிறது.

    இந்த காட்சிகளில் நடப்பு அரசியலை கடுமையாக விமர்சித்து வசனங்கள் பேசியுள்ளார் விஜய் என்கிறது படக்குழு. படம் வெளியாகும்போது பிரச்சினை பெரிதாக வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. #Vijay62 #Thalapathy62 #KeerthySuresh
    முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 62 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் ஒரு பாடல் மற்றும் குண்டுவெடிப்பு காட்சியை படக்குழுவினர் படமாக்கி இருக்கிறார்கள். #Vijay62 #Thalapathy62
    நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் இருவரும் மூன்றாவது முறையாக இணையும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகநடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். 

    அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள்.

    சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் அரசியல் மாநாடு போன்ற காட்சியில், சமீபத்தில் குண்டுவெடிப்பு காட்சி ஒன்றை நள்ளிரவு படமாக்கி இருக்கிறார்கள். அந்த குண்டுவெடிப்பில் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்படுவது போல காட்சி அமைந்திருந்தது. மேலும் ஒரு மெலடி பாடலும் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. 



    சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிரடி அரசியல் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Vijay62 #Thalapathy62 

    ×