என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 101761
நீங்கள் தேடியது "போலந்து"
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. #AzlanShahhockey
அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா போலந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 - 0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
வருண் குமார் 18, 25-வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 50, 51-வது நிமிடத்திலும் தலா 2 கோல் அடித்தனர். விவேக் பிரசாத் (1), சுமித் குமார் (7), சுரேந்தர் குமார் (19), சிம்ரன்ஜித் (29), நீலகண்டா ஷர்மா (36), அமித் ரோஹிதாஸ் (55) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். #AzlanShahhockey
போலந்து நாட்டின் டேன்சிக் நகர மேயர், பொது நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, அவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #PolishMayor
வர்சா:
போலந்து நாட்டின் துறைமுக நகரமான டேன்சிக் நகர மேயராக 1998ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் பாவெல் அடமோவிச் (வயது 53). ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர். குடியேறிகளின் உரிமைகளுக்காகவும் பிரச்சாரம் செய்தார்.
இந்த கொலை தொடர்பாக ஸ்டெபான் என்ற 27 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வாலிபர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தாக்குதலுக்கு அரசியல் பகை காரணம் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். #PolishMayor

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று கிறிஸ்துமஸ் அறக்கட்டளை சார்பில், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் டேன்சிக் மேயர் பாவெல் அடமோவிச் கலந்துகொண்டார். அப்போது, மேடையை நோக்கி வந்த வாலிபர், திடீரென மேயரை கத்தியால் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மேயரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமையன்று அவர் உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக ஸ்டெபான் என்ற 27 வயது வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வாலிபர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், தாக்குதலுக்கு அரசியல் பகை காரணம் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் கொலையைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். #PolishMayor
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. #WorldCup2018 #COLPOL
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் இடம் பிடித்துள்ள போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து கொலம்பியா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் கொலம்பியா அணியின் யெரி மினா ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கொலம்பியா அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கொலம்பியா அணியின் சார்பில் ராடமல் பால்கோ 70-வது நிமிடத்திலும், ஜுவான் குவாட்ராடோ 75-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் கொலம்பியா அணி 3-0 என முன்னிலை பெற்றது.
கொலம்பியா அணியினரின் அதிரடி ஆட்டத்தின் முன்னால் போலந்து வீரர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கூடுதலாக கிடைத்த நிமிடங்களிலும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொலம்பியா அணி 3 புள்ளிகள் பெற்றது.
ஆனாலும், எச் பிரிவில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டதால் கொலம்பியா, போலந்து அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போலந்தை 2-1 என வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு போலந்து மற்றும் செனகல் அணிகள் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 37வது நிமிடத்தில் செனகல் அணியின் தியாகோ சியோனெக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் எம் பாயே நியாங் ஒரு கோல் அடிக்க, செனகல் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
தொடர்ந்து ஆடிய போலந்து அணி ஆட்டத்தின் இறுதியில் 86 வது நிமிடத்தில் கிரிசோவியக் ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஆட்டம் முடியும் வரை போலந்து அணி மற்றொரு கோல் அடிக்கவில்லை.
இறுதியில், செனகல் அணி போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. #FIFA2018 #WorldCupRussia2018 #WorldCup2018
×

X