search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101815"

    சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் நியமனத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற அமர்வில் இருந்து மேலும் ஒரு நீதிபதி விலகி உள்ளார். #CBIDirector #JusticeNVRamana
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாகேஸ்வர ராவின் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பு அளித்தது.

    அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூடி, அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுத்தது. அதைத் தொடர்ந்து புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரையில் நாகேஸ்வரராவை இடைக்கால இயக்குனராக நியமித்து கடந்த 10-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 21-ந் தேதி விலகினார். சி.பி.ஐ.யின் புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.



    மேலும், சுப்ரீம் கோர்ட்டில் 2-வது இடத்தில் உள்ள நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமயிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்தார். ஆனால், அவரும் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறி, விசாரணையில் இருந்து சமீபத்தில் விலகினார்.

    எனவே, இந்த வழக்கு இனி வேறொரு நீதிபதியின் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணை நடத்தும் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி என்.வி. ரமணா திடீரென வழக்கில் இருந்து விலகினார். அவர் இந்த வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கில், விசாரணையை தொடங்குவதில் இழுபறி நீடிக்கிறது.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகியது குறித்து நீதிபதி என்.வி.ரமணா கூறியதாவது:-

    நாகேஸ்வரராவ் எனது சொந்த மாநிலத்தை சேர்ந்தவர். அவரது மகள் திருமணத்தில் நான் பங்கேற்று உள்ளேன். இதனால் இந்த வழக்கு விசாரணையில் இருந்து நான் விலகி கொள்கிறேன். இந்த வழக்கை வேறு அமர்வு விசாரிக்கும். இது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.#CBIDirector #JusticeNVRamana
    கொடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SC #KodanadEstate #CBI
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

    இவர்கள் விபத்தில் இறந்ததாக சொன்னாலும், அது சந்தேகத்துக்கு இடமான ஒன்றாகவே இருந்தது. மேலும் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் தெகல்கா இணைய தள முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.


    அதில் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். இதே போல் வழக்கில் 2-வது குற்றவாளியான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் நடந்தது என தெரிவித்துள்ளனர்.

    எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் எதுவும் இல்லை. அவர் பத்திரிகை மற்றும் டி.வி.சேனல்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று முடிவு செய்கிறோம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #SC #KodanadEstate #CBI
    ராகேஷ் அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. #RakeshAsthana #CBI
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசால் கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்றார். பின்னர் அவரை மத்திய அரசு தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமித்ததால், அவர் பணியில் இருந்து விலகி விட்டார்.

    இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இந்தநிலையில், ராகேஷ் அஸ்தானா நேற்று திடீரென்று சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.



    சி.பி.ஐ. இணை இயக்குனரான அருண்குமார் சர்மா, டி.ஐ.ஜி. மனிஷ் குமார் சின்கா, சூப்பிரண்டு ஜெயந்த் ஜே நாயக்னாவரே ஆகிய மேலும் 3 அதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.  #RakeshAsthana #CBI

    சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 31-10-1984  அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய்  பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடன் மகேந்தர் யாதவ் மற்றும் கிஷன் கோக்கார் ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த தண்டனைக்கு எதிராக சஜ்ஜன் குமார் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அசோக் பூஷன்,  நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு  சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக மேல் முறையீடு செய்துள்ளதால் சஜ்ஜன் குமாரை ஜாமினில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் மீது பரிசீலிக்கவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. #SC #antiSikhriots #SajjanKumar 
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
    சென்னை:

    கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

    இதற்கிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
    பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது, புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் என பிரதமர் மோடி பேசினார். #BJPMeeting #Modi
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நிறைவுரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக, மத்திய அரசுக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதையும், ஊழல் இல்லாமல் அரசு இயங்க முடியும் என்பதையும் பாஜக ஆட்சி நிரூபித்துள்ளது.

    வறுமை காரணமாக வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் அரசு வேலைகளில் பொதுப்பிரிவில் உள்ள ஏழை வாலிபர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது, புதிய இந்தியாவுக்கான நம்பிக்கையை அதிகரிக்கும்.

    முந்தைய அரசுகள் விவசாயிகளை வாக்காளர்களாக மட்டுமே பார்த்தன. நாம் அவர்களின் குறைகளையும் சவால்களையும் களைய முயற்சிக்கிறோம். 2022 ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்துவதற்கு நாம் இரவு பகலாக பணியாற்றுகிறோம். காங்கிரஸ் கட்சி தனது வழக்கறிஞர்கள் மூலம் அயோத்தி வழக்கை முடிக்க முடியாமல் தடுக்கிறது.


    ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றம் சத்தீஸ்கர் மாநிலங்களில் சிபிஐ நுழைவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். தவறு செய்துவிட்டு பயப்படுவதால் அவர்கள் இவ்வாறு செய்கிறார்களா? இன்று சிபிஐ அமைப்பை ஏற்க மறுக்கிறார்கள், நாளை மேலும் சில அமைப்புகளை ஏற்க மறுப்பார்கள். ராணுவம், போலீஸ், சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையம், சிஏஜி என எல்லாம் தவறான அமைப்புகள், தாங்கள் மட்டும் தான் சரியானவர்கள் என நினைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்த ஊழல் தொடர்பாக பேசிய மோடி,  காவலாளியை தடுத்து நிறுத்த முடியாது என்றும், திருடர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை காவலாளி தப்ப விட மாட்டான் என்றும் குறிப்பிட்டார். #BJPMeeting #Modi
    அலோக் வர்மா ராஜினாமா குறித்து பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.யை துஷ்பிரயோகம் செய்கிறது என கண்டனம் தெரிவித்தார். #AlokVarma #MamataBanerjee #BJP
    கொல்கத்தா:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தால், அவர் மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றார்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நியமனக்குழு ஆலோசனை கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவானது. மேலும், அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.



    இதற்கிடையே, மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். 

    இந்நிலையில், அலோக் வர்மா ராஜினாமா குறித்து பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.யை துஷ்பிரயோகம் செய்கிறது என கண்டனம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, மம்தா வெளியிட்டுள்ள செய்தியில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை சீர்குலைத்து வருகின்றன. தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ அமைப்பை பாஜக அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். #AlokVarma #MamataBanerjee #BJP
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
    கொல்கத்தா:

    கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். 

    இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இதற்கிடையே, ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.

    இந்நிலையில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது. #CBI #NaliniChidambaram #Chargesheet
    மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #AlokVarma
    புதுடெல்லி: 

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

    டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவானது.



    இதற்கிடையே, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த சிபிஐ முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். 

    இதுதொடர்பாக அவர் மத்திய பணியாளர் அமைச்சக செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இன்றோடு என் பணிக்காலம் முடிவடைந்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள். தீயணைப்புத்துறை இயக்குநர் பணிக்கான வயது வரம்பை நான் முன்பே கடந்துவிட்டேன். மீண்டும் முன்பே முடித்த பணிக்கு செல்வது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார். #AlokVarma
    சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, மத்திய தீயணைப்புத் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். #AlokVarma
    புதுடெல்லி: 

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக நேற்று பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    கூட்டத்தின் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல்படை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    அலோக் வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ இயக்குநர் பொறுப்பை நாகேஸ்வர ராவ் கவனிப்பார் என்றும், புது இயக்குநர் நியமிக்கப்படும் வரை சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. #AlokVarma
    டெல்லியில் நடைபெற்ற நியமனக்குழு கூட்டத்தில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. #AlokVarma #CBIDirector
    புதுடெல்லி: 

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும், ஊழல் விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய ஆலோசனை டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் நீதிபதி ஏ.கே.சிக்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் நியமனக்குழு விவாதித்தது.

    கூட்டத்தின் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவு செய்யப்பட்டது. #AlokVarma #CBIDirector
    இன்றுடன் முடிவடைவதாக இருந்த பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டம் நாளை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. #RajyaSabha #RajyaSabhaextended
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை நேற்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.

    சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும், ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டதால் அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.


    இன்று மீண்டும் மாநிலங்களவை தொடங்கியதும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், இரண்டாவது நாளாக அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்றுடன் முடிவடைவதாக இருந்த பாராளுமன்ற மாநிலங்களவை கூட்டம் நாளை வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, மாநிலங்களவை ஒரு நாள் நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பாராளுமன்ற  வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #RajyaSabha #RajyaSabhaextended

    ×