search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாகரன்"

    டி.கே. இயக்கத்தில் வைபவ் - வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காட்டேரி’ படத்தின் முன்னோட்டம். #Katteri #Vaibhav
    ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’.

    இதில் வைபவ் நாயகனாக நடிக்க, வரலட்சமி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நாயகிகளாக நடிக்கின்றனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 



    ஒளிப்பதிவு - விக்கி, இசை - எஸ்.என்.பிரசாத், படத்தொகுப்பு - பிரவீன்.எச்.எல்., சண்டைப்பயிற்சி - டான் அசோக், ஆடை வடிவமைப்பு - குஷ்பு பானர்ஜி, தயாரிப்பு - ஸ்டூடியோ கிரீன், தயாரிப்பாளர் - கே.இ.ஞானவேல்ராஜா கலை - செந்தில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - டீகே.

    காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில், படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Katteri #Vaibhav

    செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
    தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.

    இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.



    மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

    எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.



    கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.

    ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.



    சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

    டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது. 

    லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.



    இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

    லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra

    ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் வருகிற வாரத்தில் வெளியாக இருக்கிறது. #SilukkuvarpattiSingam #VishnuVishal
    விஷ்ணு விஷால் ராட்சசன் படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கமாக களம் இறங்குகிறார். அவர் அளித்த பேட்டி:

    திரும்ப காமெடி பக்கமே வந்து விட்டீர்களா?

    ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படப்பிடிப்பின் போதே, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கதையை இயக்குனர் செல்லா அய்யாவு சொன்னார். ஜாலியா இருக்கே. நம்ம பேனர்லயே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு தொடங்கிய படம். ‘ராட்சசன்’ சீரியஸ் போலீஸ், இது காமெடி போலீஸ். ரெஜினா, ஓவியா, யோகிபாபுன்னு ஒரு பெரிய பட்டாளமே வர்றாங்க. இது என் சொந்த படம். சீரியஸ் போலீஸையும், காமெடி போலீசையும் அடுத்தடுத்து விடவேண்டாம் என்று தான் காத்திருந்தேன்.

    காமெடி படங்களையே தொடர்ந்து தயாரிப்பது ஏன்?

    ஜாலியான படங்களை தயாரிப்பது எளிது. சீரியசான படங்களை தயாரித்தால் நமக்கு பிர‌ஷர் அதிகமாகி விடும். இனி என் தயாரிப்பில் எல்லா விதமான படங்களும் வரும். ராட்சசன், நீர்ப்பறவை போன்ற சீரியஸ் படங்கள் எனக்கு எளிது. காமெடி படங்கள் தான் கஷ்டம். காமெடியை தாண்டி இந்த படத்தில் சின்ன கதையும் இருக்கும்.

    ஓவியா கவுரவ வேடத்தில் நடித்தது எப்படி?

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர் நடித்த படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அவர் பிக்பாசில் கலந்துகொள்ள போவதாக கூறினார். இதில் கனகா என்னும் வேடத்தில் வருகிறார். கதையை நகர்த்தும் முக்கிய வேடம்.



    காடன் எந்த மாதிரியான படம்?

    பிரபு சாலமன் படம். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் வளரும் படம். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதில் யானைப் பாகனாக நடிக்கிறேன். மூணாறு உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துறோம். உடனே ‘கும்கி 2’ என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமா இருக்கும். இதில் ராணா 50 வயது நபரா நடிக்கிறார்.

    ஒரு தயாரிப்பாளராக கதாநாயகன் தோல்வியில் இருந்து மீண்டு விட்டீர்களா?

    அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. முதலில் ‘வீர தீர சூரன்’ என்று ஒரு படம் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பிச்சேன். சில பிரச்சினைகளால் நடுவிலயே அது நின்றுவிட்டது. அந்த படத்தின் கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘கதாநாயகன்’. படம் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு நடிப்பு, அனுபவம்னு சில வி‌ஷயங்களை அந்த படம் கற்றுத் தந்தது.

    ராட்சசன் வெற்றி பொறுப்பை அதிகமாக்கி விட்டதா?

    ஆமாம். ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் எதையும் ஓ.கே. பண்ணல. என்னுடைய பலம் என்ன என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது. வித்தியாசமான படங்கள் தான் என் கேரியரில் என்னை தூக்கி விட்டிருக்கின்றன. எனவே இனி 4 படங்கள் சீரியஸ் படங்கள் என்றால் ஒரு படமாவது காமெடி படம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இப்போ கிடைத்திருக்கிற இந்த இடத்துக்கு வர 6 வரு‌ஷங்களுக்கு மேல போராடியிருக்கேன். அதே வேகத்தில் அப்படியே ஏறுமுகமா இருக்கணும். #SilukkuvarpattiSingam #VishnuVishal

    நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar
    ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார்.

    படம் பற்றி இயக்குநர் நெல்சன் பேசும்போது, குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் படமென்பதால் குடும்பம் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் படம் இருக்கும்.

    நாயகன் தேர்வில் எந்த யோசனையுமின்றி எஸ்.ஜே.சூர்யாவை தேர்வு செய்தோம். அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி பிரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் கருணாகரன் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.



    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar

    மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக இணைய தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். #PriyaBhavaniShankar #Bharath #WebSeries
    பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். வைபவ் நாயகனாக நடித்த மேயாத மான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    அந்தப் படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது, அவர் கைவசம் எஸ்.ஜே.சூர்யாவின் மான்ஸ்டர் மற்றும் அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.



    இந்த நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பரத்துடன் இணைந்து நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், ரோபோ சங்கர் நடிக்கின்றனர். #PriyaBhavaniShankar #Bharath #WebSeries

    பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகி பாபு, தற்போது எமனாக மாற இருக்கிறார். #YogiBabu #DharmaPrabhu
    ஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக, முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.

    இப்படத்தை முத்துகுமரன் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே விமல் நடித்து வரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார். அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.

    எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள். தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.

    இந்த கதையை கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிரிக்கத்தான் தோன்றும். அதுவும், சமீபத்தில் தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் பார்த்த உடன் அனைவரையும் தன் பக்கம் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே சிரிக்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட இவர் இந்த எமன் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது படத்திற்கு மிக பெரிய பலம். நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கருணாகரனும் நடிப்பது மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது.

    இப்படத்திற்காக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குநர் பாலசந்தர் அரங்க அமைப்பிற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    டிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
    கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் - அன்யா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணாடி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், படத்தின் இசை விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kannaadi
    சமீபத்தில் வெளியான `மதுரவீரன்' படத்தை தயாரித்த வி ஸ்டுடியோஸ் அடுத்ததாக அமலாபால் நடிக்கும் `ஆடை' படத்தை தயாரித்து வருகிறது. அதேநேரத்தில் வி ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் `கண்ணாடி' எனும் படத்தையும் தயாரித்து வருகிறது.

    சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆன்யா சிங் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் ஆனந்த் ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    `திருடன் போலிஸ்', `உள்குத்து' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ இந்த படத்திற்க்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கி இருக்கிறார். ரசிகர்களுக்கு புதிய த்ரில் அனுபவங்களை வழங்கும் திகில் கலந்த த்ரில்லர் படமாக படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பதாகவும், மேலும் இது ஒளி மற்றும் ஒலியமைப்பின் சிறந்த பங்களிப்போடு ஒரு ரொமாண்ட்டிக் த்ரில்லராக படத்தை உருவாக்கி வருவதாக இயக்குனர் கார்த்திக் ராஜூ கூறியிருக்கிறார்.



    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இசை விரைவில் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Kannaadi #SundeepKishan #AnyaSingh 

    ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியான `இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது. #IndruNetruNaalai2 #VishnuVishal
    ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் `இன்று நேற்று நாளை'. விஷ்ணு விஷால் - மியா ஜார்ஜ், கருணாகரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் காலத்தை கடந்து பயணிக்கும் (Time Travel) கதையை மையப்படுத்தி உருவாகி இருந்தது.

    திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமாரும், ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜாவும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

    சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் உருவாகிய பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.



    இந்த நிலையில், இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அறிவித்துள்ளார்.

    இதையடுத்து படத்தில் நானும், கருணாகரனும் இருக்கிறோமா என்று நடிகர் விஷ்ணு விஷால் கேட்டதற்கு பதில் அளித்த சி.வி.குமார், நீங்கள் இருவரும் இல்லாமல் எப்படி? என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. 

    எனினும் படத்தை யார் இயக்குவார் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndruNetruNaalai2 #VishnuVishal

    தன்னை விஜய் ரசிகர்கள் போனில் மிரட்டியதாக நடிகர் அளித்துள்ள புகார் மனுவை ஏற்று, போலீஸ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. #Vijay #Karunakaran
    சூது கவ்வும், கலகலப்பு, தொடரி உள்ளிட்ட படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கருணாகரனுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. பின்னர் அது முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசும்போது, அரசன் பற்றிய குட்டிக் கதை ஒன்றை கூறினார்.

    அதை மேற்கோள் காட்டி நடிகர் கருணாகரன் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், அரசியல் வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்தக்கதை, அரசியல் வாதிகளுக்கு மட்டுமானதா? இல்லை நடிகர்களுக்கும் பொருந்துமா? தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என ரசிகர்களிடமும் சொல்லிப் பாருங்கள். கேட்கிறார்களா பார்ப்போம்’ என்று அதில் கூறி இருந்தார்.

    இதற்கு விஜய் ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தனர். விக்கிபீடியாவில் உள்ள கருணாகரன் பற்றிய குறிப்பை எடுத்துப் பதிவு செய்து, கருணாகரனை ‘ஆந்திராக்காரர்’ என அடையாளப்படுத்த முயன்றனர். இதற்கு பதில் தரும் வகையில் கருணாகரன் ‘நான் பிறந்தது ரெட்ஹில்ஸ் அருகிலுள்ள பாடியநல்லூர்’ என்று குறிப்பிட்டார்.

    மேலும் அவர் ‘நான் தமிழகத்தை சேர்ந்தவனா? என்று முட்டாள் தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா?’ என்று கேட்டுள்ளார்.

    கருணாகரனின் இந்த பதில்கள் விஜய் ரசிகர்களை மேலும் ஆத்திரமடைய செய்யவே மோசமான வார்த்தைகளால் கருணாகரனை திட்ட தொடங்கினார்கள்.



    கருணாகரனும் ‘நீங்கள் என்னை மிரட்டுவது பதில் அளிக்க முடியாத உங்களின் இயலாமையை காட்டுகிறது. அது எனக்கு பிடித்துள்ளது’ என்றும் ரசிகர்கள் போடும் கமெண்டுகள் அந்த நடிகரின் தராதரத்தை காட்டுகிறது என்றும் தெரிவித்தார். இந்த விவாதத்தை அடுத்து விஜய் ரசிகர்கள் கருணாகரனுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனைதொடர்ந்து கருணாகரன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். அதில் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    எந்தெந்த செல்போனில் இருந்து மிரட்டல் வந்தது என்பது பற்றியும் கருணாகரன் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கருணாகரனை போனில் மிரட்டிய விஜய் ரசிகர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் யார்-யார்? என்பது பற்றி கண்டுபிடித்து விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    கருணாகரன் - விஜய் ரசிகர்கள் இடையேயான ட்விட்டர் சண்டை முற்றிவிட்ட நிலையில், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீஸ் கமிஷனர் அலுலகத்தில் புகார் அளிக்க இருக்கிறார். #Vijay #Karunakaran
    சூது கவ்வும், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு கருணாகரனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. சில நாட்களில் அது முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில் ‘சர்கார்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசும்போது, அரசன் பற்றிய குட்டிக் கதை ஒன்றை கூறினார்.

    அதை மேற்கோள் காட்டி நடிகர் கருணாகரன் அரசியல்வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்தக்கதை, அரசியல்வாதிகளுக்கு மட்டுமானதா இல்லை நடிகர்களுக்கும் பொருந்துமா? தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என ரசிகர்களிடமும் சொல்லிப் பாருங்கள். கேட்கிறார்களா பார்ப்போம்’ என்று ஒரு பதிவை போட்டிருந்தார்.

    இதற்கு விஜய் ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

    விக்கிபீடியாவில் உள்ள கருணாகரன் பற்றிய குறிப்பை எடுத்துப் பதிவு செய்து, கருணாகரனை ‘ஆந்திராக்காரர்’ என அடையாளப்படுத்த முயன்றனர். இதற்கு பதில் தரும் வகையில் கருணாகரன் ‘நான் பிறந்தது ரெட்ஹில்ஸ் அருகிலுள்ள பாடியநல்லூர்’ என்று குறிப்பிட்டார்.



    மேலும் அவர் ‘நான் தமிழகத்தை சேர்ந்தவனா என்று முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா?’ என்று கேட்டுள்ளார். அடுத்த கேள்வி என் தாய் மொழி பற்றி. நீங்கள் ரெடியா சர்கார் அடிமை என்றும் கருணாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    கருணாகரனின் இந்த பதில்கள் ரசிகர்களை மேலும் ஆத்திரமடைய செய்யவே மோசமான வார்த்தைகளால் கருணாகரனை திட்ட தொடங்கினார்கள்.

    கருணாகரனும் ‘நீங்கள் என்னை மிரட்டுவது பதில் அளிக்க முடியாத உங்களின் இயலாமையை காட்டுகிறது. அது எனக்கு பிடித்துள்ளது’ என்றும் ரசிகர்கள் போடும் கமெண்டுகள் அந்த நடிகரின் தராதரத்தை விவரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

    இவற்றை ஆதாரமாக வைத்து கருணாகரன் தனது தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், தோற்றம் என பல விதங்களிலும் தவறாக கொலை மிரட்டல் விடுத்த சிலர் மீது இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளார். #Vijay #Karunakaran 

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், அம்மா கதாபாத்திரம் கொஞ்ச நாள் வேண்டாம் என்றிருந்தேன், ஆனால் கதை பிடித்திருந்ததால் லக்‌ஷ்மி படத்தில் நடித்ததாக கூறினார். #AishwaryaRajesh #Lakshmi
    விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் லக்‌ஷ்மி. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பேபி’ தித்யா, கோவை சரளா, கருணாகரன் எனப் பலரும் நடித்துள்ளனர்.

    காக்கா முட்டை, ஆறாது சினம் படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் இதில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது “பல படங்களில் அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம், கொஞ்ச நாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாம்னு தான் இருந்தேன். தயக்கத்தோடு தான் விஜய் சாரிடம் கதை கேட்டேன். கதை பிடிச்சது ஒத்துக்கிட்டேன். பிரபுதேவா சார் ஒரு லெஜெண்ட். அவரோடு நடிக்கிறது ரொம்ப பெருமையா இருந்தது.



    நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. லட்சுமி படத்தில் வேலை செஞ்ச எல்லாக் குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கும்” என்றார். #AishwaryaRajesh #Lakshmi

    வைகரை பாலன் இயக்கத்தில் கிஷோர் - ஷெரின் பில்லக்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `கடிகார மனிதர்கள்' படத்தின் விமர்சனம். #KadikaraManithargalReview
    பிழைப்புக்காக ஊரில் இருந்து தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சென்னை வருகிறார் கிஷோர். ஊரில் வாழ வழியில்லாத இவருக்கு, சென்னையிலும் தங்க வீடு கிடைக்காமல் அல்லப்படுகிறார். கடைசியாக குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருப்பதாக கூறி, தனது கடைசி மகனை பெட்டிக்குள் வைத்து மறைத்து ஒரு வீட்டில் குடிபோகிறார்.

    பன் சப்ளை தொழில் செய்து வரும் கிஷோர், தனது மகனை வீட்டு உரிமையாளரான பாலா சிங்குக்கு தெரியாமல் பன் பெட்டியில் வைத்து, பள்ளிக்கு கூட்டிச் செல்கிறார். கிஷோர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் கருணாகரன் பாட்டி ஒருவருடன் வசித்து வருகிறார். கருணாகரனுக்கும் வீட்டு உரிமையாளரின் மகளான நாயகி ஷெரின் பில்லக்களுக்கும் காதல் மலர்கிறது. 



    இந்த நிலையில், பாலா சிங் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை துவங்குகிறார். அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத நாயகி ஷெரின் கருணாகரன் வீட்டில் தங்குகிறார். ஆனால் தனது மகள் ஓடிப்போனதாக கருதி ஷெரினை தேடி வருகிறார். இந்த நிலையில் கிஷோரின் கடைசி மகனும் காணாமல் போகிறார்.

    கடைசியில் கிஷோரின் மகன் கிடைத்தானா? கருணாகரன் - ஷெரின் இணைந்தார்களா? பாலா சிங்குக்கு உண்மை தெரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

    கிஷோர் ஒரு நடுத்தர வீட்டு குடும்பஸ்தராக கடிகார மனிதனாக தினசரி வேலையை கவனித்து வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கருணாகரன் காமெடியில் சிரிக்க வைக்கிறார். ஷெரினுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி பாலாசிங், பிரதீப் ஜோஷ், ஷீலா கோபி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்தை முழுமையடைய வைத்திருக்கின்றனர். 



    சென்னையில் வீடு தேடுவதில் இருக்கும் சிக்கல், வீடு கிடைக்காமல் கஷ்டப்படும் குடும்பங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை கதைக்களமாக கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார் வைகரை பாலன். அடுத்தடுத்த காட்சிகள் மெதுவாக நகர்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும். 

    சாம்.சி.எஸ் பின்னணி இசை ஓரளவுக்கு வலுகூட்டியிருக்கிறது. உமா சங்கரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. 

    மொத்தத்தில் `கடிகார மனிதர்கள்' போராட்டம். #KadikaraManithargalReview

    ×