search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஆர்டிஓ"

    தரையில் இருந்து விண்ணுக்கு சென்று இலக்கை தாக்கும் ஆகாஷ் 1எஸ் ஏவுகணை இன்று மீணடும் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    தரையில் இருந்து விண்ணில் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆகாஷ் ரக ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஏ) தயாரித்துள்ளது. குறுகிய தொலைவு பாயும் இந்த ஏவுகணையானது ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து சூழ்நிலையிலும் இந்த ஏவுகணைகளை செயல்படுத்த முடியும். 

    அவ்வகையில் உள்நாட்டு சீக்கர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் 1எஸ் ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின்போது, ஏவுகணை தனது இலக்கை துல்லியமாக தாக்கியது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பும் இதேபோன்று சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள என்ஜீனியரை உ.பி பயங்கரவாத தடுப்பு பிரிவு 3 நாள் காவலில் எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    லக்னோ :

    மராடிய மாநிலம் நாக்பூரில் பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய என்ஜீனியர் நிஷாந்த் அகர்வாலை ராணுவத்தின் உளவுப்பிரிவு, மராட்டியம் மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து கைது செய்தது.

    பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக என்ஜீனியர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய தனிப்பட்ட லேப்-டாப்பில் அதிகமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அவர் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என தெரியவந்துள்ளது.

    மராட்டிய மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிஷாந்த் அகர்வாலை காவலில் அனுப்ப உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நிஷாந்த் அகர்வால் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தொடர்பாக முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து நிஷாந்த் அகர்வாலை 3 நாட்களில் காவலில் எடுக்க உத்தரபிரதேச பயங்கரவாத பிரிவுக்கு அனுமதி வழங்கியது.

    நேகா சர்மா மற்றும் பூஜா ராஜன் என்ற பெயர்களிலான பேஸ்புக் கணக்குகளுடன் நிஷாந்த் அகர்வால் தொடர்பில் இருந்துள்ளார். இந்த கணக்குகள் இஸ்லாமாபாத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இவை பாகிஸ்தான் உளவுத்துறையால் இயக்கப்பட்டு உள்ளது என சந்தேகிக்கிறோம் என விசாரணை பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



    பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆசைவார்த்தையில் சிக்கி உளவு பார்த்த ராணுவ வீரர் ஒருவர் செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பெண்கள் பெயரிலான போலியான பேஸ்புக் கணக்குகளை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு சோதனையிட்டது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் கணக்குகள் இந்தியாவின் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களுடன் தொடர்பு உள்ளது தொடர்பாக கண்காணித்தது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. #BrahMos #DRDO
    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் (DRDO) எஞ்சினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். #BrahMos #DRDO
    மும்பை:

    ரஷியா மற்றும் இந்தியா இணைந்து கூட்டு தொழில்நுட்பத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஏவுகணையை தயாரிக்கும் மையம் உள்ளது. 

    இந்நிலையில், ஏவுகணை தொழில்நுட்பட்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பில் பணியாற்றும் (DRDO) எஞ்சினீயர் நிஷாந்த் அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நிஷாந்த் அகர்வால் தற்போது விசாரணையில் உள்ளதாகவும், எந்த அளவு தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை விசாரித்து வருவதாக ராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ×