search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101907"

    அஸ்வின் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரின் அபார பந்து வீச்சால் இங்கிலாந்து அணி 86 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது. #ENGvIND #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 13 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தாவித் மலன் ஜென்னிங்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். ஜென்னிங்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் வெளியேறினார். முதல் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் சாய்க்க இங்கிலாந்து 39 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.



    அதன்பின் இஷாந்த் ஷர்மா பந்து வீசினார். இவரது பந்து வீச்சில் அனல் பறந்தது. தாவித் மலனை 20 ரன்னில் வெளியேற்றினார். மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் பேர்ஸ்டோவை 28 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸை 6 ரன்னிலும் ஒரே ஓவரில் வெளியேற்றினார். அப்போது இங்கிலாந்து 30.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் 3-வது நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

    தற்போது வரை இங்கிலாந்து 99 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 50 ரன்னுக்குள் இங்கிலாந்தை ஆல்அவுட் ஆக்கிவிட்டால், இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் மற்றும் விராட் கோலி விமர்சனங்களை தகர்த்தெறிந்தனர். #ENGvIND #ViratKohli #Ashwin
    இந்தியா அணி கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடும்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இந்த தொடரின்போது விராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    அதேபோல் அஸ்வினும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி 3 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இதனால் வெளிநாட்டு மண்ணில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசுவதில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

    தற்போது அவருக்கு ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணியில் இடம் கிடைக்கவில்லை. இதை பயன்படுத்தி கவுன்ட்டி போட்டியில் விளையாடினார்.

    தற்போது நடைபெற்று வரும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இங்கிலாந்து அணியில் ஏராளமான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் விராட் கோலி அஸ்வின் மீது நம்பிக்கை வைத்து ஆடும் லெவனில் சேர்த்தார்.



    வீராட் கோலியின் நம்பிக்கையை வீணடிக்காத வகையில் அஸ்வின் அபாரமான வகையில் பந்து வீசி முதல் நாளில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இவரது பந்து வீச்சால் இங்கிலாந்து 287 ரன்னில் சுருண்டது.

    கடந்த சீசனில் மூன்று விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்திய அஸ்வின், ஒரே இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.



    அதேபோல் 10 இன்னிங்சில் 134 ரன்கள் அடித்திருந்த விராட் கோலி நேற்றைய 2-வது நாளில் 149 ரன்கள் குவித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இரண்டு ஜாம்பவான்கள் ஒரே நாளில் தங்களது விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ள அஸ்வின், கவுண்டி போட்டிகளில் விளையாடியது உதவிகரமாக இருந்தது என்றார்.#ENGvIND #1000thTest
    பர்மிங்காம்:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ள அஸ்வின், கவுண்டி போட்டிகளில் விளையாடியது எனக்கு உதவிகரமாக இருந்தது என்றார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா 100 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடினார். அபாரமாக விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார். கடைசி விக்கெட்டாக அவுட் ஆன கோலி 149 ரன் (225 பந்து, 22 பவுண்டரி ஒரு சிக்சர்) எடுத்தார்.

    அவரது சதத்தால் இந்தியா 274 ரன் எடுத்தது. அடுத்து 13 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை இங்கிலாந்து விளையாடியது.


    அஸ்வின் பந்தில் தொடக்க வீரர் அலிஸ்டயர் குக் ரன் எதுவும் எடுக்காமல் கிளீன் போல்டு ஆனார். முதல் இன்னிங்சிலும் குக் அஸ்வின் பந்தில் போல்டாகி இருந்தார்.

    அத்துடன் 2-ம் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. அப்போது இங்கிலாந்து 3.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 9 ரன் எடுத்து இருந்தது. ஜென்னிஸ் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இதுவரை அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது-

    கடந்த 1½ ஆண்டாக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் அதிக நேரம் விளையாடி இருக்கிறேன். இங்கு வந்ததும் பந்து வீசும் கூடுதல் வேகத்துடன் வீசினால் பலன் அளிக்கும் என்பதை உணர்ந்தேன். அதற்கு ஏற்றாற்போல் பந்து வீசினேன்.

    எனது பந்து வீச்சு முறையில் சிறிது மாற்றத்தை எளிமையாக செய்து வீசினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கவுண்டி போட்டிகளில் விளையாடியது எனக்கு உதவிகரமாக இருந்தது என்றார்.  #ENGvIND #1000thTest
    இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது அஸ்வினை தமிழில் பேசி தினேஷ் கார்த்திக் ஊக்கப்படுத்தியது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. #ENGvIND #DineshKarthik #Ashwin
    பர்மிங்காம்:

    பர்மிங்காமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் முரளிவிஜய் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அஸ்வின் வீசிய ஒரு பந்தில் தடுமாறினார். இதை கவனித்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ‘நல்லாயிருக்கு அஸ்வின்....போடு மாமா....போடு மாமா...அடுத்த 3 பந்தையும் அப்படியே போடு மாமா. என்ன பண்றான்னு பார்க்கலாம் ”என்று அஸ்வினை நோக்கி தமிழில் உரக்க கத்தினார். அவரது பேச்சு ஸ்டம்பில் உள்ள மைக் மூலம் தெளிவாக கேட்க முடிந்தது.

    களத்தில் நின்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு புரியக்கூடாது என்பதற்காக தினேஷ் கார்த்திக் இவ்வாறு தாய்மொழியில் பேசியுள்ளார். அதே சமயம் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரஹானே ஆகியோருக்கும் தினேஷ் கார்த்திக்கின் அழகிய தமிழ் உரையாடல் புரியாமல் விழித்தனர். தினேஷ் கார்த்திக்கின் தமிழ் பேச்சு சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. #ENGvIND #DineshKarthik #Ashwin
    இன்றைய 2-வது நாளில் 10 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. #ENGvIND #Ashwin #Shami
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 42 ரன்களும், ஜோ ரூட் 80 ரன்களும், பேர்ஸ்டோவ் 70 ரன்களும் அடித்தனர்.

    சாம் குர்ரான் 24 ரன்னுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை அஸ்வின் வீசினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் எதிர்கொண்டார். இந்த ஓவரில் ஆண்டசர்ன் இரண்டு ரன்கள் சேர்த்தார்.



    அடுத்த ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சாம் குர்ரான் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்கள் விளையாடி 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இன்று 10 பந்துகள் சந்தித்த இங்கிலாந்து இரண்டு ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டை இழந்தது.

    இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அஸ்வின் பந்து வீசும்போது விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். #ENGvIND #DK #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 25 ஓவருக்கு 60 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட் சரிய முக்கிய காரணமாக இருந்தார்.

    இந்திய அணியில் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகிய மூன்று தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்.

    இந்நிலையில் அஸ்வின் பந்து வீசும்போது தினேஷ் கார்த்திக் அஸ்வினின் பந்து வீச்சை ஊக்குவிக்கும் வகையில் தமிழில் பேசி உற்சாகப்படுத்தினார். இதை சிரித்துக் கொண்டே அஸ்வின் ரசித்தார். தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் தினேஷ் கார்த்திக் அஸ்வினிடம், "டேய்..டேய்..டேய்.. வேற மாதிரி டா நீ... போடுறா மாமா..  நல்லாருக்கு அஷ்வின்.. போடு மாமா.. போடு மாமா.. அடுத்த மூணு பாலையும்.. அப்படியே போடு.. என்ன பண்ணுறான்னு பாக்கலாம் அஷ்வின்..

    ரொம்ப கிட்ட வேண்டாம்,  ஒரு ரன் போன பரவாயில்ல...கால்ல பட்டா காலி.. பொறுமையா பால் போடு... சீன் பால் ரா, ஆஷ்லி’’ என்று கூறுகிறார்.

    இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின்போதும் தினேஷ் கார்த்திக் வாஷிங்கடன் சுந்தர் மற்றும் விஜய் சங்கரிடம் தமிழில் அட்வைஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி இருப்பதை எதிரணி தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். #ENGvIND #1000thTest
    பர்மிங்காம்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூப் 80 ரன்னும், பேர்ஸ்டோவ் 70 ரன்னும், ஜென்னிஸ் 42 ரன்னும் எடுத்தனர்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. சாம்குர்ரான் 27 ரன்னிலும், ஆன்டர்சன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    நேற்று முகமதுசமி ஓவரில் சாம்குர்ரான் அவுட் ஆக வேண்டியது. அவரது கேட்சை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவறவிட்டார்.

    இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இங்கிலாந்து ஆடுகளத்தில் முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தி உள்ளார்.

    அஸ்வினை, இங்கிலாந்து தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். அவர் கூறியதாவது:-


    அஸ்வின் மிகவும் சிறந்த பவுலர். அவர் சரியான இடத்தில் பந்தை வீசினார். மேலும் வேகத்திலும் மாறுபாடு இருக்கும். பந்து நன்கு திரும்பும் ஆடுகளத்தில் நிறைய பந்துகள் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் இருக்கும். அதுபோன்ற பந்தில் அசிஸ்டயர் குக்கை போல்டு ஆக்கினார்.

    காலை வேளையில் இருந்து ஆடுகளத்தில் பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது. நாங்கள் 300 ரன்னுக்கு மேல் எடுப்போம் என்று கருதுகிறேன். அப்படி எடுத்துவிட்டால் எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான திசையில் நெருக்கடி கொடுப்பார்கள்.

    அதேவேளையில் இரு அணிகளும் பேட்டிங் செய்த பிறகுதான் எது நல்ல ஸ்கோர் என்பது தெரியும் என்றார். #ENGvIND #1000thTest #KeatonJennings #Ashwin
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடது கை பந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழந்து வருகிறார். #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? என்ற விவாதம் எழுந்தது.

    ஆனால், குல்தீப் யாதவை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் ஆடும் லெவனில் இடம்பிடித்தார். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் சாதகமாக இல்லை. இதனால் அஸ்வினை 7-வது ஓவரிலேயே இந்தியா அறிமுகப்படுத்தியது. அஸ்வினும் சிறப்பாக பந்து வீசினார்.

    9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் குக் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். எப்போதுமே அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இவர் பந்தை எதிர்கொள்ள குக் மிகவும் திணறினார். இன்றைய போட்டியின் மூலம் 8 முறை குக்கை வீழ்த்தியுள்ளார்.



    அஸ்வினை எதிர்த்து குக் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 8 முறை குக்கை அஸ்வின் அவுட்டாக்கி அசத்தியுள்ளார். இரண்டு முறை போல்டு, 1 முறை ஸ்டம்பிங், 3 முறை விக்கெட் கீப்பர் கேட்ச், இரண்டு முறை பீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

    வார்னர் 9 முறை அவுட்டாகி முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கோவன் 7 போட்டியில் 7 முறை ஆட்டமிழந்துள்ளார். டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், மோர்னே மோர்கல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 6 முறை ஆட்டமிழந்துள்ளனர்.



    இதில் பெரும்பாலானோர் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் குல்தீப் யாதவுக்கு பதிலாக அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார். #ENGvIND #Ashwin #MikeHussey
    சென்னை:

    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய குல்திப் யாதவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இங்கிலாந்து ஆடுகளங்கள் இருக்கும். இதனால் ஆடும் லெவனில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அஸ்வினை பயன்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.


    அணியில் தனது இடத்தை தக்க வைக்க அஸ்வினுக்கு தகுதி இருக்கிறது. அவர் புத்திசாலித்தனமாக டெஸ்ட் பவுலர்.

    ஆஸ்திரேலிய ஆப்-ஸ்பின்னர் நாதன் லயன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடது கை பேட்ஸ்மேனும் சிறப்பாக பந்து வீசினர். இதனால் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக முக்கிய பங்கு வகிப்பார். அவரை பயன்படுத்த வேண்டும்.

    குல்தீப் யாதவ் இளம் வீரர் அவரது வழியில் அவரை கற்றுக்கொள்ள விட வேண்டும். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் தனது பணியை சிறப்பாக செய்வார் என்று உறுதியாக கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #Ashwin #MikeHussey
    இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ம் தேதி நடக்கவுள்ள நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் அடைந்துள்ளார். #ENGvIND #Ashwin
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் அடைந்துள்ளார். எஸ்செக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்துக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டபோது அஸ்வின் கையில் காயம் அடைந்தார். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் குணமடைந்து விடுவார் என்று தெரிகிறது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் காயத்தால் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #ENGvIND #Ashwin
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் வொர்செஸ்டர்ஷைர அணிக்காக விளையாடுகிறார். #Ashwin
    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20-க்கான அணியில் இடம்பெறவில்லை.

    இதனால் அஸ்வினுக்கு அதிக நேரம் கிடைத்ததால் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தார். அதன்படி வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்.



    இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அஸ்வின் விளையாடுகிறார். இந்த தொடர் முடிந்த உடன் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுகிறார்.
    டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என அஸ்வின் கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
    சென்னை:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இதில் முதல் 3 போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று உள்ளனர். பொதுவாக இங்கிலாந்து ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாகவே இருக்கும்.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவது சந்தேகம்தான். 3 பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    இங்கிலாந்து அற்புதமாக இடம். அங்கு சென்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நல்ல அணியாக இருக்கிறோம். என்னை பொறுத்தவரை அங்கு சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நாம் செயல்படுவதுதான் முக்கியம்.

    நீண்ட டெஸ்ட் தொடரில் உத்வேகத்தை தொடர்ந்து காட்டுவது மிக முக்கியம். அதை செய்து காட்டி விட்டால் நல்ல பயன் அளிக்கும். நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #Test #Ashwin
    ×