search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 101907"

    டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளினார் அஸ்வின். #INDvAFG #Ashwin
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்த, அதன்பின் அஸ்வின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை அள்ள ஆரம்பித்தார்.

    அவர் ஹஸ்மதுல்லா ஷாஹிதி, கேப்டன் அஷ்கர் ஸ்டானிக்ஸ் ஆகியோரை வீழ்த்தினார். இந்த டெஸ்டிற்கு முன் அஸ்வின் 57 டெஸ்ட் போட்டியில் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இன்றைக்கு 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.



    ஜாகீர் கான் 311 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 4-வது இடத்தில் இருந்தார். தற்போது அஸ்வின் 4-வது இடத்திற்கு முன்னேறி ஜாகீர் கானை ஐந்தாவது இடத்திற்கு தள்ளியுள்ளார். ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் கும்ப்ளே முதல் இடத்திலும் உள்ளனர்.
    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன் என்பதற்கு கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.#IPL2018 #kxip #Ashwin
    புனே:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் (0), லோகேஷ் ராகுல் (7 ரன்) சோபிக்காத நிலையில் கருண் நாயர் அரைசதம் அடித்து (54 ரன், 3 பவுண்டரி, 5 சிக்சர்) சரிவில் இருந்து காப்பாற்றினார். பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

    அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 9-வது வெற்றியை ருசித்தது. துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் டோனி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியை 100 ரன்களுக்குள் மடக்கினால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் பஞ்சாப் அணி தோல்வியுடன் (மொத்தம் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி) பரிதாபமாக வெளியேறியது.

    தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

    இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சரியில்லை. ‘பவர்-பிளே’யிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. கருண் நாயர் நன்றாக ஆடினாலும் 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே எடுத்து விட்டோம். ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினோம். ஆனால் மே மாதம் (கடைசி 7 ஆட்டங்களில் 6-ல் தோல்வி) மோசமாக அமைந்து விட்டது.

    இந்த தொடரை எடுத்துக் கொண்டால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடினோம். ஆனால் பிற்பகுதியில் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் போய் விட்டது. தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் மட்டுமே அணியில் கணிசமான ரன்களை குவித்து இருக்கிறார்கள். மிடில் வரிசை பேட்டிங் எதிர்பார்த்தபடி ‘கிளிக்’ ஆகவில்லை. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

    இதே போல் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வி (88 ரன்னில் சுருண்டது) எங்களது முன்னேற்றத்தை கெடுத்து விட்டது என்று சொல்லலாம். அந்த தோல்வியால் ரன்ரேட் குறைந்ததோடு, வீரர்களின் மனஉறுதியும் வெகுவாக சீர்குலைந்து போனது.

    இவ்வாறு அஸ்வின் கூறினார். #IPL2018 #kxip #Ashwin
    ×