search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரணாசி"

    வாரணாசியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை இன்று துவக்கி வைத்தனர். #YogiAdityanath #SushmaSwaraj #YouthPravasiBharatiyaDiwas
    வாரணாசி:

    மத்திய அரசின் சார்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிரவசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 15வது பிரவசி பாரதிய திவாஸ் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கியது. வாரணாசில் இந்த மாநாடு முதல் முறையாக நடக்கிறது. இந்த ஆண்டுக்கான பிரவேச பாரதி திவாஸின் கருப்பொருள் "புதிய இந்தியாவை உருவாக்க இந்திய புலம்பெயர்ந்தோர்களின் பங்கு" ஆகும்.

    மாநாட்டின் முதல் அங்கமாக, இளைஞர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



    இன்று முதல் 23 வரையிலான மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காஷ்மீர், சாரநாத் மற்றும் கங்கா காட்ஸ் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    அடுத்த மூன்று நாட்களில் கலந்துரையாடல்களின் போது, ​​இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல உலகத் தலைவர்கள்,  புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கினைக் குறித்து கலந்துரையாடுவார்கள்.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:

    இன்று நடைபெறும் நிகழ்வில் அடுத்த தலைமுறை மீது, குறிப்பாக உத்திரபிரதேச இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான இளம் புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். துவக்க விழாவில் உ.பி முதல்வருடன் மத்திய மந்திரிகள் சுஷ்மா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கன்வல் ஜீத் சிங் பக்ஷி, நார்வே எம்.பி.  ஹிமான்ஷு குலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நாளை நடைபெற உள்ள நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை விருந்தினரான மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜுக்நாத் ஆகியோர் ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டை துவக்கி வைக்க உள்ளனர். சவால்கள் மற்றும் வாய்ப்புகள் முதல்,  நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் திறன் வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரவசி பாரதிய பிரதிநிதிகளுக்கும், மாநில தலைவர்களுக்கும் பிரதமர் மோடி மதிய விருந்தினை வழங்க உள்ளார்.

    புதன்கிழமை  நடைபெற உள்ள விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.ஐ., பி.ஐ.ஓ.க்கள் மற்றும் என்ஆர்ஐக்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு பிரவசி பாரதிய சம்மான் விருது (பிபிபிஏ), வழங்கப்படும். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளில் கணிசமான பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.

    மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் பிரதிநிதிகளை உற்சாகமூட்டவும், ஓர் அற்புத அனுபவத்தை வழங்கவும் கங்கை மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட்டு கண்கவர் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. #YogiAdityanath  #SushmaSwaraj  #YouthPravasiBharatiyaDiwas

    வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியில்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. #AamAadmi #Kejriwal

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.

    இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் இது தொடர்பாக கூறியதாவது:-


    கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார். வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவாவில் போட்டியிடுவோம். உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் நிற்போம். அடுத்த மாதம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AamAadmi #Kejriwal

    பிரதமர் நரேந்திர மோடி தற்போது கூடுதலாக மேலும் ஒரு கிராமத்தை மோடி தத்தெடுத்துள்ளார். இதற்காக வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள டோமாரி கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி பதவி ஏற்றதும் எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

    அதன்படி எம்.பி.க்கள் குறைந்தது ஒரு கிராமத்தையாவது தத்தெடுத்து அந்த கிராமத்தின் வளர்ச்சி திட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

    சமீபத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் தற்போது நாடு முழுவதும் 1448 கிராமங்கள் மட்டுமே எம்.பி.க்களால் தத்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இங்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் திருப்திகரமாக செயல்படுத்தப்படவில்லை என்று உயர் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

    அடுத்து வருகிற மார்ச் மாதத்துக்குள் 2,370 கிராமங்களை தத்தெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இரு சபைகளின் 790 எம்.பி.க்களும் கூடுதலாக கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

    இந்த தகவல் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவர் தனது வாரணாசி தொகுதியில் ஜெயநகர், நாகாபூர், ககார்கியா ஆகிய 3 கிராமங்களை தத்து எடுத்து உள்ளார்.

    தற்போது கூடுதலாக மேலும் ஒரு கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துள்ளார். இதற்காக வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள டோமாரி கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு கங்கை நதியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்புவது உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

    பிரதமர் மோடி கூடுதலாக ஒரு கிராமத்தை தேர்வு செய்து இருப்பது போல் மற்ற எம்.பி.க்களும் கூடுதலாக கிராமத்தை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று முத்த அரசு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இப்போதைய நிலவரப்படி 790 எம்.பி.க்களில் 202 பேர் மட்டுமே தலா 3 கிராமங்களை தத்தெடுத்து உள்ளனர். இவர்களில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மந்திரிகள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதிஇரானி, சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர், ராம் விலாஸ் பஸ்வான், ஹர்சிம் ரத்கவுர் பாதல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

    காங்கிரஸ் தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, மோதிலால் வோரா ஆகியோர் தலா 3 கிராமங்களையும், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தலா 3 கிராமங்களையும் தத்தெடுத்துள்ளனர்.

    இதே போல் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #PMModi
    உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் நேபாளத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Nepal #UP #Accident
    லக்னோ:

    நேபாளத்தின் சிந்தூலி மாவட்டத்தில் இருந்து வாரணாசிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுற்றுலா வந்திருந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தின் ராஜதேபூர் கிராமம் வழியே கார் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Nepal #UP #Accident
    வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக ஆற்றிய பணிகளை இன்று குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி நான் உங்கள் சேவகன், நீங்கள்தான் என் எஜமானர்கள் என்று கூறினார். #PMModi #ModiInVaranasi
    லக்னோ:

    வாரணாசி பாராளுமன்ற தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி  550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் இன்று தொடங்கி வைத்தார். அந்த தொகுதியின் எம்.பியாக கடந்த நான்காண்டுகளில் தாம் செய்த பணிகளை பட்டியலிட்ட அவர், கிழக்கிந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.



    மக்கள் பிரதிநிதி என்ற முறையில் நான் உங்களின் சேவகன். நீங்கள் தான் எனது எஜமானர்கள். அதனால் இந்த தொகுதிக்கு நான் செய்துள்ளவற்றை உங்களிடம் விளக்க வேண்டியது எனது கடமையாகும். வாரணாசியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
     
    வாரணாசி அனைத்து வகையிலும் முன்னேறியுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தில் இருந்து தற்போது 21 லட்சமாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இங்குள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சாரநாத் ஸ்தூபி அமைந்துள்ள இடத்தில் ஒலி, ஒளி காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். #PMModi #ModiInVaranasi
     
    பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவித், நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #HappyBdayPMModi #HappyBirthDayPM
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மோடி நீண்ட ஆயுளுடன் நாட்டிற்கு பல ஆண்டுகள் அர்ப்பணிப்புமிக்க சேவை செய்ய வாழ்த்துவதாக கூறியுள்ளார். மோடி நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தனை செய்வதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மோடியின் பல்வேறு புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் டுவிட்டரில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



    கடந்த ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று தாயார் ஹிராபாவை சந்தித்து ஆசி பெற்றார் மோடி. இந்த ஆண்டு வாரணாசியில் எளிமையாக பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடும் அவர் பின்னர் காசி விஸ்வநாதர் ஆலயம் சென்று சிவபெருமானை தரிசிக்க உள்ளார்.

    வாரணாசி சுற்றுப்பயணத்தின்போது பாபத்பூர்-ஷிவபூர் சாலை விரிவாக்கம், ரிங் ரோடு-2 மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சில திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி சுற்றுப்பயணத்தை முன்னிட்ட வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மோடியின் பிறந்தநாளான இன்று அவருக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான ஹேஷ்டேக்குகள் இன்று இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளன. #HappyBdayPMModi #HappyBirthDayPM 
    சுமார் 5 ஆயிரம் குழந்தைகளுடன் வாரணாசியில் நாளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். #PMModi
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை (17-ம் தேதி) 67 வயது முடிந்து 68-வது வயது பிறக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக அவர் நாளை உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார்.

    தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் உள்ள பாரா லால்பூரில் சுமார் 5 ஆயிரம் குழந்தைகளுடன் பிரதமர் மோடி பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
     
    18-ம் தேதி வாரணாசியில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, நிறைவடைந்த சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். வாரணாசியின் புறநகர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் அன்றிரவு டெல்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #PMModi #ModiinVaranasi
    பிரதமர் மோடி தனது பிறந்தநாளை கொண்டாட 17 ம் தேதி வாரணாசி செல்லவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #Varanasi #Modi
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடிக்கு வரும் 17-ம் தேதி 67 வயது முடிந்து 68-வது வயது பிறக்கிறது. இதையொட்டி, 2 நாள் பயணமாக அவர் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்கிறார்.

    இதுதொடர்பாக, காசி பிராந்திய பாஜக தலைவர் மகேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்லும் மோடி, அங்குள்ள பாரா லால்பூரில் 5 ஆயிரம் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    மேலும், வாரணாசியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

    மறுநாள் 18-ம் தேதி வாரணாசியின் புறநகர் குதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். #Varanasi #Modi
    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கட்டுமான பணியில் இருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விபத்து குறித்து ராஜன் மிட்டால் உட்பட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த வாரம் இந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன.

    இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்து குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழு தங்கள் அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக உ.பி மேம்பால கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜன் மிட்டால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

    தற்போது ராஜன் மிட்டால், முதன்மை திட்ட மேலாளர் தெவாரி, திட்ட மேலாளர் சுதன், துணை பொறியாளர் ராஜேஷ் சிங், பொறியாளர் லால் சந்த், முன்னாள் திட்ட மேலாளர் ஜெண்டா லால் மற்றும் கூடுதல் திட்ட மேலாளர் ராஜேஷ் பால் ஆகிய 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


    மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் நிதி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Varanasiflyovercollapse #YogiAdityanath
    உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. #Varanasi #flyovercollapse
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று மாலையளவில் இந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன. மேலும், அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி பலரை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


    இச்சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதும் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்-ஐ தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி, பலியானவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சம்பவ இடத்துக்கு 250 வீரர்களை கொண்ட தேசிய பேரிட மீட்பு படையினரை அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்ட யோகி ஆதித்யாநாத், இந்த துயர சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவுக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Varanasi #flyovercollapse
    ×