search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பிதுரை"

    திண்டுக்கல் அருகே குறை கேட்க சென்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். #ADMK #ThambiDurai #GajaCyclone
    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி மேட்டுப்பட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களிடம் குறை கேட்க சென்றார். அப்பகுதியில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி ஓடியது.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது தற்போது பெய்த மழையினால் தண்ணீர் தேங்கியதாக கூறினர். தம்பித்துரை வருகை குறித்து அறிந்ததும் சமத்துவபுரம் பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

    தங்கள் பகுதியில் கடந்த 2 வருடமாக குடிநீர் வரவில்லை என்றும் சுகாதார பணிகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்தனர். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும் தெரிவித்தனர்.

    இதனால் தம்பித்துரை அதிகாரிகளை அழைத்து இதுபோன்ற சிறு பணிகளைகூட செய்ய முடியவில்லையா? என ஆவேசமாக கண்டித்தார். அதன்பிறகு விரைவில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டதை மற்ற கட்சியினர் அரசியலாக்க பார்க்கின்றனர். உச்சநீதிமன்றத்தில் தூக்கு தண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருந்தனர்.

    சட்டவிதிகளுக்கு உட்பட்டு கவர்னரிடம் பரிந்துரை செய்ததின்பேரிலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலும் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ., ஒன்றி செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர்கள் மணி, பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜ்மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #ThambiDurai #GajaCyclone
    கஜா புயல் நிவாரண தொகையினை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #ThambiDurai #GajaCyclone
    கரூர்:

    கரூர் தான்தோன்றி வட்டார பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை இன்று மக்களிடம் நேரில் சென்று குறைகளை கேட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிகாரிகளுடன் மக்களின் குறைகளை கேட்க வந்திருக்கிறோம். மக்கள் அவர்களின் தேவைகளை சொல்கிறார்கள். அதனை அதிகாரிகள் நிறைவேற்றுகிறார்கள். கஜா புயலில் சிறப்பான முறையில் தமிழக அரசு செயல்பட்டதாக இந்த அரசை எல்லோரும் பாராட்டியது பாராட்டுக்குரியது. தானே புயல் முடிந்து போன ஒன்று. அந்த வி‌ஷயத்தை இப்போது பேசுவது அர்த்தம் அல்ல. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல்வேறு புயல்களை அ.தி.மு.க. அரசு சந்தித்துள்ளது.

    அந்த வழிகாட்டுதலை வைத்து முதல்வரும், துணை முதல்வரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். எனது தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை, விராலிமலை, கிருஷ்ணராயபுரம் பகுதியில் காற்றினால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளன. இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளேன்.

    கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உடனே குழு வரவழைத்து நிவாரண உதவிகளை வேண்டுகோளாக வைப்போம். இந்த மாதிரி மத்திய குழு வருவதற்கு முன்பாக மத்திய அரசு நிதி அறிவிப்பது வழக்கம். அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.


    சேத மதிப்பினை கணக்கெடுத்து முதல்வரும், துணை முதல்வரும் சொல்வார்கள். சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்ய அமைச்சர் தங்கமணியிடம் பேசி இருக்கிறேன். மத்திய அரசு உடனே நிதி ஒதுக்கவில்லை என்றால் நேரடியாக சென்று பிரதமரையோ, சம்பந்தபட்ட அமைச்சரையோ சந்தித்து கோரிக்கை வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது கீதா எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடனிருந்தனர்.  #ADMK #ThambiDurai #GajaCyclone
    அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #ADMK #ThambiDurai #Rajinikanth
    கரூர்:

    கரூர் தென்னிலையில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரசை தனிமைப்படுத்த அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது. இப்போது வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என பா.ஜ.க.வை எதிர்த்து. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசியுள்ளார். பா.ஜ.க. மதவாத கட்சி என்று சொல்கிற இடது சாரிகளும், தி.மு.க.வும் இணைந்துதான் அன்று பா.ஜ.க.வை காப்பாற்றினார்கள். இன்று மோடியை வீழ்த்துவோம் என்று சொல்வது அரசியல்.

    தி.மு.க. இந்தியாவை காப்பாற்றும் என்பது கேள்விக்குறியாகும். இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியாதவர்கள் தி.மு.க. இலங்கையில் 1½லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. ஆனால் அவர்களால் இலங்கை தமிழர்களை காப்பாற்ற முடியவில்லை. இப்போது. கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து இந்தியாவை வலிமையாக்குவோம் என்று கூறுவது அரசியலுக்காக, தேர்தலுக்காக, பிரசாரத்துக்காக.


    அ.தி.மு.க. தமிழகத்தை காப்பாற்றவும், இந்தியாவை வலிமையானதாக மாற்றுவதற்காகவும் பாடுபடும். தேர்தல் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் சேர்ந்தால் கூட்டணி குறித்து யோசிப்போம் என துணை முதல்வர் கூறியுள்ளார். அரசியலுக்கு வராத ரஜினியை குறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது என்றார்.

    பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், சிலையை முன்பே திறந்து வைத்து விட்டார்கள். இப்போது சிலையை மாற்றி வைக்கிறார்கள். இதற்கும் அழைப்பு வந்தது. ஆனால் மக்களிடம் மனு பெறும் நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிட்டிருந்ததால் இன்று ஜெயலலிதாவின் புதிய சிலை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றார். #ADMK #ThambiDurai #Rajinikanth
    தி.மு.க. தோல்விக்கு காரணமான வைகோ மீது மு.க.ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார் என்று கரூரில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #thambidurai #Vaiko #MKStalin
    கரூர்:

    கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பிதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சர்வ சிக்ச அபியான் என்று சொன்னால் யாருக்கு புரிகிறது. தமிழகத்தில் தமிழ் மொழியில் திட்டங்களை அறிவியுங்கள். காங்கிரசாக இருக்கட்டும், பா.ஜ.க.வாக இருக்கட்டும், இந்தியை புகுத்தி நம்மை அடிமையாக வைக்க பார்க்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. யார் ஆட்சியில் தமிழகத்திற்கு நன்மை கிடைத்தது.

    தி.மு.க.வும்-காங்கிரசும் 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். ஏதாவது தமிழகத்திற்கு நன்மை கிடைத்ததா? இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது கூட மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தி.மு.க. விலகவில்லை. இப்போது தி.மு.க. நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

    மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அந்த தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். ஒத்தக் கருத்துடையவர்களுடன்தான் தேர்தல் உடன்பாடு. எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருபவர்களுடன் அ.தி.மு.க. தலைமை கூட்டணி அமைக்கும். சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஒரு நாடகம். இருவரும் தங்கள் நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள். நாளை மோடியுடன் கூட ஸ்டாலின் பேசுவார்.


    பாராளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் முயற்சி பலிக்கும் என சொல்லும் இதே வைகோ, கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற தேர்தல் உடன்பாடு செய்தார். இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான காங்கிரஸ் ஒழிய வேண்டும் என கடுமையாக சாடினார். மோடி வெற்றி பெறுவதற்கு வைகோவும் காரணம் அல்லவா? இதை மறுக்க முடியுமா?

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்பதற்கும் வைகோ காரணம்தானே. 3-வது அணி அமைத்ததால் ஓட்டு பிரிந்து வெற்றி வாய்ப்பு பறிபோனதாக தி.மு.க.வினரே குற்றம் சாட்டினார்கள்.

    இதனால் இப்போதும் வைகோ மீது மு.க.ஸ்டாலின் கோபத்தில் இருக்கிறார். ஆனால் வெளியே காண்பிக்கவில்லை. நிச்சயம் அதையெல்லாம் காண்பிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #thambidurai #Vaiko #MKStalin
    பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. கூறினார். #Thambidurai #PonRadhakrishnan
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் வாங்கி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று 5-வது கட்டமாக மருங்காபுரி ஒன்றியம் கன்னி வடுகப்பட்டி பகுதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தம்பிதுரை மற்றும் ரத்தினவேல் எம்.பி., கலெக்டர் ராசாமணி ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நான் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு தருகிற நிதியும் மக்களின் வரிப்பணம்தான். எனவே திட்டப்பணிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தாமல் நிதியை வழங்கவேண்டும்.

    பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும்.

    அப்படி ஒதுக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தொகுதியின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். நிதி வரவில்லை என்றாலும் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.



    இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறும் என்னை பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி, என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். சுய பரிசோதனை என்ன? அனைத்து பரிசோதனையும் செய்ய தயார். அவரும் நாடு முன்னேற வேண்டும் என்று பாடுபடுகிறார். நானும் அது போல்தான். அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். நானும் ஒரு கட்சியில் இருக்கிறேன். மற்றப்படி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கருதவில்லை. தி.மு.க. வின் உதவியுடன் தான் தமிழகத்தில் சி.பி.ஐ. உள்ளிட்ட சோதனைகள் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #PonRadhakrishnan #ADMK #BJP

    தமிழக அரசுக்கு வழங்கவேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். #ADMK #ThambiDurai
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை திறந்து இருப்பது வரவேற்கத்தக்கது.

    மத்திய அரசிடமிருந்து தமிழக அரசிற்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி வரவேண்டும் அதை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு திட்டங்களாக இருந்தாலும் அதை மாநில அரசு தான் செயல்படுத்த வேண்டும்.

    எல்லாத் திட்டங்களும் மத்திய அரசு திட்டங்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளைத்தான் நான் மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறுகிறேன்.


    இதேபோன்று தமிழக அரசு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் தான் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

    எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. சந்திக்க தயாராக உள்ளது. அதற்காகத்தான் தொகுதி பொறுப்பாளர்களை அ.தி.மு.க. நியமித்துள்ளது. தற்போது நாங்கள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டமான கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூ.5 கோடியில் இருந்து தான் நான் கிராமங்களை தத்து எடுப்பதற்கு நிதி ஒதுக்கி வருகிறேன்.

    கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்திற்கு உடனடியாக மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai
    தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.வெள்ளோடு, ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தம்பிதுரை மக்களை சந்தித்து குறைகள் கேட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக நியமித்திருப்பது சரியான நடைமுறை இல்லை. பிரதமராக உள்ள ரணில்விக்கிரமசிங்கிற்கு போதிய மெஜாரிட்டி இருக்கும்போது ராஜபக்சேவை நியமனம் செய்திருப்பது ஜனநாயக விரோத செயல். 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்தவர் ராஜபக்சே. இவர் மீண்டும் பதவிக்கு வந்துள்ளதால் உலகத்தில் உள்ள தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் டெங்கு, பன்றிகாய்ச்சல் பரவல் குறித்தும், அது தொடர்பான நடவடிக்கை குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும்.

    அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்கள் எம்.எல்.ஏ.க்களே இல்லை என அறிவித்தபிறகு தாராளமாக ஆலோசனை கூட்டத்தை நடத்தலாம். அவர்களால் அ.தி.மு.க. ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டி.டி.வி. தினகரனை நம்பி சென்ற 18 பேரும் தெருவில் நிற்கிறார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். #ADMK #MRVijayabaskar #ThambiDurai
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் வேலாயுதம்பாளையத்தில் அ.தி.மு.க. 47 ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர். காளியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக ஆட்சியை ஊழல் ஆட்சி என ஸ்டாலின் கூறுகிறார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது தி.மு.க. என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த முறைகேட்டில் கருணாநிதி முதல்வராக இருக்கும்போதே அவரது மகள் கனிமொழியும் ராசாவும் திகார் ஜெயிலில் இருந்தார்கள்.

    இன்றைக்கு டி.டி.வி. தினகரனை நம்பி சென்ற 18 பேரும் (தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள்) தெருவில் நிற்கிறார்கள். செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ஜெயலலிதாவிடம் பொய் கூறி 35 ஆயிரம் ஊழியர்களை போக்குவரத்து கழகத்தில் நியமித்தார். இப்போது அவர்கள் நீதிமன்றத்துக்கு அலைகிறார்கள். இன்றைய போக்குவரத்து கழக நிலைமைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான் காரணம். இன்னும் இரண்டரை ஆண்டு காலம் அ.தி.மு.க. அரசை யாராலும் அசைக்க முடியாது. அதன் பிறகும் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியதாவது:- இந்தியா முழுவதும் 4 வழிச்சாலையைக் கொண்டு வந்தது வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த நான்தான். அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒவ்வொரு தொண்டனும் எம்.எல்.ஏ., எம்.பி.தான். மக்கள் பிரச்சனைகளை மக்களவையில் பேசுவதற்குதான் எம்.பி., உள்ளாட்சி தேர்தல் நடத்தவிடாமல் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.. திராவிட இயக்கம் உருவானது சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கவே. ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற ராஜபட்சேவுக்கு மரியாதை செய்தது தி.மு.க.வும் காங்கிரசும்தான். எந்த தேர்தல் வந்தாலும் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்றார்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், பேரூர் செயலாளர்கள் வக்கீல் சதாசிவம், சரவணன் மற்றும் பலர் உள்ளனர். #ADMK #MRVijayabaskar #ThambiDurai
    அ.தி.முக. ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் யாரையும் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது என்று கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தம்பிதுரை பேசினார். #ADMK #ThambiDurai #Jayalalithaa
    கரூர்:

    கரூர் நகர அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்கள் பதவியை இழந்து நிற்கிறார்கள். அ.தி.முக. ஆட்சிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கும் யாரையும் ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது. ஜெயலலிதா வழியில் 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று போட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இந்த ஆட்சி 5 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும். அதற்கு பின்னரும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க.வே தமிழகத்தை ஆட்சி செய்யும்.

    தி.முக.வில் குடும்ப அங்கத்தினருக்கே அதிகாரத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால் அ.தி.மு.க.வில் டீக்கடை நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தை ஜெயலலிதா முதல்வர் ஆக்கினார். உண்மையாக உழைத்தால் அ.தி.மு.க.வில் உயர் பதவிக்கு வர முடியும். மு.க. ஸ்டாலின் முதல்வராக வேண்டி சட்டையை கிழித்துக் கொண்டு ரோட்டுக்கு கூட வந்து பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.


    கருணாநிதியுடன் தி.மு.க.வின் உதயசூரியனும் அஸ்தமனம் ஆகிவிட்டது. ஆகவே மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வராக முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #ThambiDurai #Jayalalithaa
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். #18MLAsCaseVerdict #ADMK #ThambiDurai
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை அ.தி.மு.க.வுக்கு சாதகம் என்று சொல்ல முடியாது. நீதிமன்றம் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப வழங்கிய தீர்ப்பை சாதகம், பாதகம் என்று கூறக்கூடாது. நீதித்துறை பற்றி அவ்வாறு கருத்து சொல்வது சரியல்ல.

    சட்டப்பேரவை சபாநாயகர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் ஒரு ஜனநாயகத்தை காக்க வேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சி தொடரவேண்டும் என்று, சட்டத்திற்கு உட்பட்டு ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறார்.

    அதை சிலர் கொச்சைப்படுத்தியதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது. நீதித் துறையும் அவர் எடுத்த முடிவு சரியானது என்று தீர்ப்பின் மூலம் தெரிவித்து இருக்கிறது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி, அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லமுடியும்.

    தேர்தல் காலங்களில் அம்மாவுடன் பல பகுதிகளுக்கு சென்றவன் நான். அப்போதெல்லாம் அம்மா தனது உடலை வருத்திக்கொண்டு எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கம் தொடரவேண்டும், மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்று இந்த ஆட்சியை கொண்டு வந்தார். ஆனால் நமது துரதிஷ்டம் அவர் இல்லாமல் போனது.


    அவர் விட்டுச்சென்ற பணிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ. யாரும் இந்த ஆட்சியை கவிழ்க்க நினைக்க மாட்டார்கள், அவ்வாறு கூறுவது நியாயமும் இல்லை.

    எந்த ஒரு கருத்து இருந்தாலும் ஜனநாயகத்தில் பேச வேண்டுமே தவிர அதற்கென்று வழிமுறை உள்ளது. வேறு வழியில் சென்று ஆட்சியை கவிழ்ப்பேன் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் செய்வது சரியல்ல என்பது தான் சரியான தீர்ப்பு.

    1984-89 நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்த போது இந்த கட்சி தாவல் சட்டம் வந்தது. கட்சி தாவல் மூலம் கட்சி ஆட்சி மாறினால் ஜனநாயகம் நல்ல முறையில் இருக்காது, மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. எனவே கட்சி தாவல் இருக்ககூடாது, குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க கூடாது என்ற அடிப்படையில் சபாநாயகர் நல்ல முடிவை எடுத்துள்ளார். இது மக்களின் தீர்ப்பு.

    ஜனநாயகத்தில் கோர்ட்டிற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். அது அவர்களின் உரிமை. நாங்கள் அப்பீல் செய்ய முடியாது. எங்களுக்கு நகர்வு தேவை இல்லை. அவர்களின் நகர்விற்கு தடையாக இருக்க முடியாது.

    இரு அணிகளையும் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்வது குறித்து எனக்கு தெரியாது. பா.ஜ.க.விடம் தான் கேட்க வேண்டும். எனக்கு தெரிந்து தி.மு.க. பா.ஜ.க.வை நெருங்கி கொண்டு உள்ளது. அதற்கு பல ஆதாரங்களை கூறியுள்ளேன். முதலில் பா.ஜ.க.வை மதவாதம் என்று திமு.க கூறியது. தற்போது தனது நிலையை மாற்றியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCaseVerdict #ADMK #ThambiDurai
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ADMK #ThambiDurai
    கரூர்:

    கரூர் குள்ளம்பட்டியில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் வராது. ஏனெனில் அவர்கள் தரப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரே இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என கூறியிருக்கிறார்.

    இந்த ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாவின் ஆட்சி. ஐந்து ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும். தீர்ப்பு எப்படி வந்தாலும் அது அ.தி.மு.க. ஆட்சிக்கு உறுதி சேர்க்கும் வகையிலும், வலிமை சேர்க்கும் வகையிலும்தான் இருக்கும்.

    புகார்கள் காரணமாக சி.பி.ஐ. இயக்குனர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இதன் மூலம் சி.பி.ஐ. மக்களிடையே நம்பகத்தன்மையை இழந்து விட்டது. சி.பி.ஐ. எந்த நிலையில் இருக்கிறது என்பதை மு.க. ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

    2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா, கனிமொழியை விடுதலை செய்தபோது சி.பி.ஐ. எங்களுக்கு உரிய ஆதாரங்கள் தரவில்லை, அதனால்தான் விடுதலை செய்தோம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று கூறவில்லை.


    இதன் மூலம் சி.பி.ஐ. அவர்களுக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. தி.மு.க.வினர் பா.ஜ.க.வுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வர், அமைச்சர்கள் மீது சி.பி.ஐ.யை ஏவி விடுகிறார்கள்.

    தமிழகத்தில் இந்தியை தாய்மொழியாக கொண்ட 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக டெல்லி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தி படித்தால்தான் வேலை வாய்ப்பு என்று தேசிய கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் இந்தி படித்தவர்களே இங்கு வந்துதான் வேலை பார்க்கிறார்கள். தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

    அ.தி.மு.க. அரசு அதிகாரமில்லாத அரசாகத்தான் இருந்துகொண்டு இருக்கிறது. மாநில அரசின் அதிகாரங்களை படிப்படியாக மத்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.

    ஜி.எஸ்.டி., நீட் தேர்வு ஆகியவற்றை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், நாங்களும் எதிர்த்தோம். ஆனால் அதனை அமல்படுத்தி விட்டார்கள். சர்க்கசில் சிங்கம், புலிகளை கட்டுப்படுத்தும் ரிங் மாஸ்டர் போன்று அ.தி.மு.க.வை பிரதமர் நரேந்திரமோடி கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதனை நான் ஒத்துக்கொள்கிறேன்.

    எங்களுக்கு மோடி ரிங் மாஸ்டர் என்றால் தி.மு.க.வுக்கு அமித்ஷா ரிங் மாஸ்டராக இருந்துகொண்டு வருகிறார். இதுதான் உண்மை. இதனை காலப்போக்கில் என்னால் நிரூபிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #ThambiDurai #MLAsDisqualificationCase
    ஜெயலலிதாவிற்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாத தம்பி துரைதான் அவரது இறப்புக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். #SenthilBalaji #ThambiDurai
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மணப்பாறை சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பங்கேற்று பேசியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாட்களாக ஐ.சி.யூ. அருகே நின்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை.  ஜெயலலிதாவிற்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாத தம்பி துரைதான் ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம்.

    தம்பிதுரை நினைத்திருந்தால் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றிருக்கலாம். ஆனால் தம்பிதுரையின் கனவு, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தான் முதல்-அமைச்சராக வேண்டும் என்று 75 நாட்களும் மருத்துவமனை வாசலில் அமர்ந்திருந்தார்.

    ஆனால் விசாரணை ஆணையம் இதுவரை தம்பிதுரையை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கவில்லை என்பது தெரியவில்லை. இதில் இருந்தே தெரிகிறது தம்பிதுரை தான் முதல் குற்றவாளி என்று.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த அரசு காப்பாற்றப்பட வேண்டும் என்றால், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். நாங்கள் 18 பேரும் முதல்வரை மாற்ற வேண்டும் என்று தான் கவர்னரிடம் மனு கொடுத்தோம்.

    இந்த வாரம் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் சட்டமன்றத்திற்குள் செல்லும் நிலை வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்.

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய கட்சி கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்போம். இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று நிச்சயமாக வெற்றி பெறுவோம். எங்களை எதிர்ப்பவர்கள் டெபாசிட் கூட பெற முடியாது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என்பதால் தான், அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு தெரியவருகின்றது என்றார். #SenthilBalaji #ThambiDurai
    ×