search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒவைசி"

    இந்தியர்களுக்கு இனி மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் அரசின் சலுகைகள் ரத்து செய்ய வேண்டும் என்ற பாபா ராம்தேவ் கருத்தை ஒவைசி கண்டித்துள்ளார்.
    ஐதராபாத்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரபல யோகாசன குருவும் ‘பதாஞ்சலி’ நிறுவனத்தின் தலைவருமான பாபா ராம்தேவ், இந்தியாவில் மக்கள்தொகை பெருக்கம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

    ‘அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு நமது நாட்டின் மக்கள்தொகை 150 கோடியை தாண்டிப்போக நாம் அனுமதிக்க கூடாது. 150 கோடியை கடந்த ஒரு மக்கள்தொகையை தாங்கும் சக்தி நம்மிடம் இல்லை.

    இனி மூன்றாவதாக அல்லது அதற்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை மற்றும் அரசின் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று சட்டம் இயற்றினால் மட்டுமே இது சாத்தியமாகும்’ என்று பாபா ராம்தேவ் வலியுறுத்தி இருந்தார்.

    பாபா ராம்தேவின் இந்த கருத்துக்கு ஐதராபாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாட்-உல்-முஸ்லிமீன் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி இன்று கண்டனம் தெரிவித்துள்ளார்.



    ‘அரசியலமைப்புக்கு முரணாக கருத்து தெரிவிப்பவர்களை தடுக்கும் சட்டம் ஏதுமில்லாத நிலையில் பாபா ராம்தேவின் பேச்சு அவசியமில்லாத முக்கியத்துவத்தை எப்படி பெறுகிறது?

    அவர் (பாபா ராம்தேவ்) தனது வயிற்றை வைத்து வித்தை காட்டுவார், அமர்ந்தவாறே கால்களை சுழற்றுவார் என்பதற்காக மூன்றாவது பிள்ளையாக பிறந்த காரணத்துக்காக நரேந்திர மோடி தனது வாக்குரிமையை இழக்க வேண்டுமா?’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
    பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அசாதுதீன் ஒவைசி பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் வைத்துள்ள உறவு லைலா-மஜ்னு காதலை விட வலிமையானது என குறிப்பிட்டுள்ளார். #ModiNitishLove #Modi #NitishKumar #LailaMajnu #Owaisi
    பாட்னா:

    மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி இந்த பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள கிசான்கஞ்ச் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் அக்தாருல் இமாம் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

    முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்தாருல் இமாமுக்கு ஆதரவாக வாக்கு திரட்டினார்.

    பாஜகவுக்கு வாக்களிக்கா விட்டால் முஸ்லிம்கள் அரசு வேலைகளில் சேர முடியாது என்று பேசிய மத்திய மந்திரி மேனகா காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஒவைசி, பாஜகவின் ‘சப் கா சாத் - சப் கா விகாஸ்’ (எல்லோருடனும் இணைந்து - எல்லோரின் நன்மைக்காகவும்) என்ற கோஷம் இதன் மூலம் பொய் என்று புலப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.



    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோரை கடுமையாக தாக்கிப் பேசிய அவர், மோடிக்கும் நிதிஷ் குமாருக்கும் இப்போதுள்ள உறவு மிகவும் வலிமையானது. லைலா-மஜ்னு காதலை விடவும் வலிமையானது.

    இந்த காதல் கதை புத்தகமாக எழுதப்படும்போது இவர்களில் யார் மஜ்னு? என்று என்னை கேட்காதீர்கள் நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

    ஆனால், இந்த லைலா-மஜ்னுவின் கதை எழுதப்படும்போது காதலுக்கு பதிலாக அதில் வெறுப்புணர்வு இருக்கும். இந்த ஜோடி ஒன்று சேர்ந்த பிறகு இந்தியாவில் இந்து-முஸ்லிம் இடையே பதற்றம் அதிகரித்தது என அதில் எழுதப்பட்டிருக்கும் எனவும் ஒவைசி கூறினார்.

    கடந்த 2015-ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று முதல் மந்திரியான நிதிஷ் குமார், பின்னர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பாஜகவுக்கு ஆதரவாக தனது போக்கை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ModiNitishLove #Modi #NitishKumar #LailaMajnu #Owaisi
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி தங்களிடம் பேரம் பேசியது என ஒவைசி புகார் தெரிவித்துள்ளது. #TelanganaAssembly #AsaduddinOwaisi
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 7-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் அங்கு நிர்மல் தொகுதியில் அனைத்து இந்திய மஜ்லிஸ் இ இத்தாஹாதுல் முஸ்லிமீன் கட்சி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) தலைவர் அசதுத்தீன் ஒவைசி எம்.பி., பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர், “இந்த தொகுதியில் நான் பிரசாரத்தை ரத்து செய்தால் ரூ.25 லட்சம் லஞ்சம் தருவதாக காங்கிரஸ் கட்சி பேரம் பேசியது. இது தொடர்பாக இடைத்தரகர் ஒருவர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அந்த ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது” என்ற திடுக்கிடும் புகாரை கூறினார்.

    ஆனால் இந்த புகாரை அந்த தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் ரெட்டி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நிராகரித்தனர்.
    முத்தலாக் ஒழிப்பு அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஒவைசி, கணவர்களால் கைவிடப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் சட்டம் தேவை என குறிப்பிட்டுள்ளார். #Owaisi #TripleTalaqBill
    ஐதராபாத்:

    முஸ்லிம் ஆண்கள் முத்தலாக் முறை மூலம் விவாகரத்து செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நடவடிக்கைக்கு அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரும் ஐதரபாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒவைசி, ’இந்த அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. அவர்களுக்கான நீதியை இந்த அவசர சட்டம் அளிக்காது. இஸ்லாம் மதத்தில் திருமணம் என்பது இருவருக்கு இடையிலான பொது ஒப்பந்தம் போன்றது. இதற்குள் தண்டனைக்குரிய கிரிமினல் சட்டங்களை நுழைப்பது தவறானது.

    முஸ்லிம்களுக்கு மட்டும் எதிராக உருவாக்கப்பட்ட இந்த அவசர சட்டமானது ‘அனைவரும் சமம்’ என்னும் அரசியலைப்பு சட்டத்துக்கு உட்பட்டது அல்ல. அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் மகளிர் அமைப்புகள் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்க தொடர வேண்டும்’ என குறிப்பிட்டார்.



    இதற்கு ஒரு அவசர சட்டம் இயற்றியதுபோல் கணவர்களால் கைவிடப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்க ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பிரதமரை நான் வலியுறுத்துகிறேன். தேர்தல் காலத்தில் இவர்களின் கணவர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் தாங்கள் திருமணம் ஆனவர்கள், ஆனால், மனைவியுடன் சேர்ந்து வாழவில்லை என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கின்றனர்.

    எனவே, இப்படி கைவிட்டப்பட்ட 24 லட்சம் பெண்களுக்கு நீதி கிடைக்கவும் பிரதமர் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்' எனவும் ஒவைசி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் திருமணமானவர், ஆனால், தனியாக வாழ்பவர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் அவரை மறைமுகமாக தாக்கும் நோக்கத்தில் ஒவைசி இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Owaisi #TripleTalaqBill #24lakhmarriedwomen
    ×