search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல்நாத்"

    பாராளுமன்ற தேர்தலில் தங்களது மகன்களுக்காக சிலர் எம்பி சீட் கேட்டு நிர்பந்தித்ததாக ராகுல் காந்தி வெளியிட்ட தகவலுக்கு மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு மூத்த தலைவர்கள்தான் காரணம் என்று ராகுல் குற்றம் சாட்டி உள்ளார்.

    குறிப்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக்கெலாட் ஆகியோர் தங்கள் மகன்களுக்கு எம்.பி. சீட் கேட்டு மிரட்டியதை ராகுல் ஆதங்கத்துடன் நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தெரிவித்தார்.

    ப.சிதம்பரம் தனது மகனுக்கு சீட் தரவில்லை என்றால் காங்கிரசில் இருந்தே விலகி விடுவேன் என்று மிரட்டியதையும் ராகுல் அந்த கூட்டத்தில் விமர்சித்தார். அது மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரிகள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்யாமல் தங்கள் மகன்களின் தொகுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர் என்றும் தெரிவித்தார்.


    ராகுலின் இந்த அதிரடி குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம், அசோக் கெலாட் இருவரும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் நேற்று போபால் திரும்பிய மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் இது தொடர்பாக கூறுகையில், “நான் எனது மகனுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை. இது தொடர்பாக ஒருபோதும் நான் ராகுல்காந்தியிடம் பேசியதும் இல்லை” என்று மறுப்பு தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், “எனக்கு வழங்கப்பட்ட முதல்-மந்திரி பொறுப்பில் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. எனவே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

    ராகுலின் குற்றச்சாட்டுக்கு கமல்நாத் அளித்துள்ள மறுப்பு தகவல், காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
    மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. கமல் நாத் முதல்வராக பொறுப்பேற்றார்.

    230 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களும், பாஜகவுக்கு 109 உறுப்பினர்களும் உள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 4 சுயேட்சை உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளித்தது.

    இந்நிலையில், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா (பாஜக) கூறியதாவது:-


    மத்திய பிரதேச சட்டமன்ற சிறப்பு அமர்வை விரைவில் கூட்டும்படி கவர்னருக்கு கடிதம் எழுத உள்ளேன். விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க விரும்புகிறோம். அரசின் ஸ்திரத்தன்மையை  சோதிக்கவும் விரும்புகிறோம்.

    முடிவுகள் எடுப்பதிலும், நிதி விவகாரங்களிலும் இந்த பலவீனமான காங்கிரஸ் அரசுக்கு சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இருக்கிறதா என்பதை சோதிக்க விரும்புகிறோம். அரசு  மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எந்த முயற்சியையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஸ்திரத்தன்மை குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியான நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றுசேரும் என்று மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத் கூறியுள்ளார். #KamalNath

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

    காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் காங்கிரஸ் 5 தொகுதியில் கூடுதல் பெற்று அட்சியை பிடித்தது. ஆனால் ஓட்டு சதவீதத்தில் பா.ஜனதாவே சற்று முன்னிலை பெற்றது. பா.ஜனதாவுக்கு 41 சதவீத ஓட்டுகளும், காங்கிரசுக்கு 40.9 சதவீதமும் கிடைத்தன.

    பாராளுமன்ற தேர்தலிலும் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவலாம் என்று கருதப்படுகிறது. அங்கு மொத்தம் 29 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று முதல்கட்டமாக 6 தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய பிரதேசத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளோம். விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டது.

    100 யூனிட்டுக்கு ரூ.100 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் ரூ.200 ஆக இருந்தது. இதே போல் விவசாயிகளுக்கு பென்சனும் வழங்கப்பட்டுள்ளது.

    நாங்கள் கொண்டுவந்த இந்த திட்டங்கள் எல்லாம் மக்களை சென்றடைந்து விட்டது. இதனால் தேர்தல் முடிவு எங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

    பாராளுமன்ற தேர்தலில் எது பிரச்சினை என்று மக்களுக்கு நன்கு தெரியும். பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலை மையமாக வைத்து அரசியல் செய்வதை மக்கள் நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள்.

    புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானது தொடர்பாக மோடி முதலில் பதில் அளிக்க வேண்டும். பாதுகாப்பில் குளறுபடு ஏற்பட்டது எப்படி என்று பற்றி அவர் கண்டிப்பாக விளக்க வேண்டும். மோடி அரசின் உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக வரும். தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரும்.

    பெரும்பாலான கட்சிகள் பா.ஜனதாவை எதிர்க்கின்றன. இதனால் தேர்தலுக்கு பிறகு அவை அனைத்தும் ஒன்றிணைக்கப்படும். பா.ஜனதாவை வெளியேற்றுவதுதான் எதிர்க்கட்சிகளின் குறிக்கோளாக இருக்கும்.

    திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானா, ராஷ்டிரிய சமிதி, ஆகிய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இல்லை. ஆனால் அவைகள் பா.ஜனதாவை கடுமையாக எதிர்க்கின்றன. இதுமாதிரியான கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை வெளியேற்ற ஒன்றிணைக்கப்படும்.

    மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் வெற்றிபெறும்.

    இவ்வாறு கமல்நாத் கூறியுள்ளார். #KamalNath 

    பாஜக தோல்வி பயத்தால் எதிர்க்கட்சியினரை குறி வைத்து வருமானவரி சோதனை நடத்தியதாக கமல்நாத் குற்றம்சாட்டியுள்ளார். #kamalnath
    போபால்:

    மத்தியபிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துக்கு நெருக்கமானவர்கள் அலுவலகம் மற்றும் வீடு என 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ. 11 கோடி பணம் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

    இது சம்பந்தமாக கமல்நாத் கூறியதாவது:-

    மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக தனது எந்திரத்தை எதிர்க்கட்சியினரை பழிவாங்க பயன்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

    5 ஆண்டு காலத்தில் இவர்கள் செய்த சாதனையை மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.

    இந்த தோல்வி பயத்தால் தான் வருமான வரித்துறையினரை ஏவி எதிர்க்கட்சியினரை குறி வைத்து சோதனை நடத்துகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலின் போதும் இதைத்தான் செய்தார்கள். இப்போதும் அது தொடர்கிறது.



    பா.ஜ.க. அரசின் இது போன்ற நடவடிக்கைகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை. இவர்கள் என்னவெல்லாம்  செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது. எதையும் சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதன் மூலம் எங்களை நீக்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.

    மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். அவர்கள் தக்க பதில் சொல்வார்கள்.

    இவ்வாறு கமல்நாத் கூறினார்.

    இது சம்பந்தமாக பா.ஜ.க. முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் கூறும் போது ‘மம்தா பானர்ஜி வழியில் கமல்நாத்தும் செயல்பட ஆரம்பித்துள்ளார். வருமான வரித்துறை கடமையை செய்கிறது. அதை விமர்சிப்பது ஒரு முதல்-மந்திரிக்கு அழகல்ல. வருமான வரி சோதனையில் பணமும், ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதற்கு கமல்நாத் பதில் சொல்ல வேண்டும்’ என்றார். #kamalnath
    மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பேசியுள்ளார். #Sachinpilot #congress #bjp #kamalnath
    மத்திய பிரதேசம் மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பசு இறைச்சி விவகாரத்தில் மூவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் கடும் விமர்சனம் எழுந்தது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களே விமர்சனம் செய்தனர். 

    இந்நிலையில் பெங்களூருவில் தி இந்து பத்திரிக்கையின் 'ஹடூல்' எனப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் துணை முதல்வருமான சச்சின் பைலட், மாடா? மனிதனா? என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என கூறியுள்ளார். 

    பசுக்கள் வதை மற்றும் பசு கடத்தல் விவகாரங்களில் வேறுபாட்டுடன் செயல்பட வேண்டும். என்னுடைய சொந்தக் கருத்து என்னவென்றால் பெண்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், சக மனிதன் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்வதற்கும், கண்ணியமற்ற முறையில் சக மனிதனை தாக்கும் செயல்களுக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். புனிதமான விலங்குகளை காப்பாற்றுவது நல்லது. எனக்கு அதில்  நம்பிக்கை உண்டு. ஆனால், மாடா? மனிதனா? என்று வரும்போது மனிதனுக்குத்தான் முக்கியம் தரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

    கமல்நாத் மத்தியபிரதேசத்திற்காக இப்பிரச்சினைகளில் முடிவெடுப்பதில் சிறந்தவர். ஆனால் ராஜஸ்தானுக்காக அல்ல என்பதுதான் எனது எண்ணம் என கூறியுள்ளார். #Sachinpilot #congress #bjp #kamalnath
    மத்திய பிரதேசத்தில் பசுவைக் கொன்றதாக பிடிபட்ட 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். #KamalNath #MPGovernment #CowslaughterNSA
    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா மாவட்டம், மோகாட் பகுதியில் கடந்த ஜனவரி 31 அன்று பசுக்கள் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் குழுவாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியை சேர்ந்த  சிலர் இப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், குற்றவாளிகள் கர்கலி கிராமத்தைச் சேர்ந்த  ராஜு , ஷக்கீல் மற்றும் அசார் என கண்டறிந்தனர்.  இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 அன்று போலீசார் அவர்களைக் கைது செய்ய முற்படும்போது மூவரும்  தப்பி ஓடினர். இதில் ராஜூ மற்றும் ஷக்கீலை  போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

    அசார் என்பவர் தப்பினார். இதனையடுத்து கடந்த திங்களன்று போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு அசாரையும் கைது செய்தனர். பின்னர் உடனடியாக இவர்களின் மீது பசுவதை தடுப்பு சட்டத்தின்கீழ் போலீசாரால்  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதன்பின்னர், அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர், 3 பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, மூன்று பேரின் மீதும் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

    மத்திய பிரதேசத்தில் கடந்த 2016ம் ஆண்டு பாஜக ஆட்சியின் போது பசுவை படுகொலை செய்வோரின் மீது இச்சட்டம் பாய்ந்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் பசுவதை குற்றவாளிகள் இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #KamalNath #MPGovernment #CowslaughterNSA
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் ஆனந்தி பென் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். #Kamalnath #MadhyapradeshCM
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவுகளில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நிலை நீடித்தது. மறுநாள் அதிகாலைவரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை கிடைக்காமல் காங்கிரஸ் கட்சி திணறியது.

    அம்மாநிலத்தில் உள்ள 300 சட்டசபை தொகுதிகளில் 114 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியது.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் உள்ள ஜம்பூரி திடலில் இன்று பிற்பகல் நடைபெற்ற விழாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அம்மாநில கவர்னர் ஆனந்தி பென் அவருக்கும் இதர மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.



    இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்தியப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்ற அசோக் கெலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #Kamalnath #MadhyapradeshCM

    போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். #MadhyaPradeshCM #ChiefMinisterKamalNath
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது.

    இதையடுத்து 3 மாநிலங்களிலும் முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கியது.

    மத்திய பிரதேசத்தில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் பெயர்கள் அடிபட்டது. திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.  இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது.

    இதனிடையே போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக  கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். #MadhyaPradeshCM #ChiefMinisterKamalNath
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் அடுத்த முதல்வராக யாரை நியமிக்கலாம்? என தேர்வு செய்யும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு அளித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். #MadhyaPradeshMLAs #KamalNath #MPCongress #RahulGandhi
    போபால்:

    மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர். 
     
    மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மெஜாரிட்டியை நெருங்கிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரசுக்கு சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்ததால், போதிய பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

    இதையடுத்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்தனர். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் கடிதம் அளித்தனர். இந்த சந்திப்பின்போது திக்விஜய் சிங், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர். 

    போபால் நகரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. மாநில தலைவர் கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷோபா ஓஸா, ‘மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபையின் ஆளும்கட்சி தலைவராக (அடுத்த முதல்வர்) யாரை நியமிக்கலாம்? என முடிவெடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு அளித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.

    இந்த ஒருவரி தீர்மானத்தின் அடிப்படையில் அடுத்த முதல்வர் யார்? என்பதை ராகுல் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக, கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோரில் ஒருவரை அவர் தேர்வு செய்யலாம் என தெரிகிறது.  #MadhyaPradeshMLAs #KamalNath #MPCongress #RahulGandhi 
    ×