search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #LokSabha #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.
     
    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்கு உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த மசோதா மீதான விவாதம் மாலை 6 மணியில் இருந்து நடைபெற்றது. சுமார் 4 மணி நேரங்களுக்கும் மேலாக இந்த
    விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பலர் இரவு 10 மணிக்கு மேல் மக்களவைக்கு வருகை தந்தனர். இறுதியில், வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது. வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் தான் இந்த மசோதா நிறைவேற்றம் அடையும்.

    இந்நிலையில், இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக 323 வாக்குகளும் எதிர்ப்பு தெரிவித்து 3 வாக்குகளும் பதிவாகின. இதனால் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் நாளை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெறவுள்ளது. #LokSabha #10pcquota #economicallybackward
    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. #CitizenshipBill
    புதுடெல்லி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிமல்லாத பிற மதங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மேற்கண்ட நாடுகளில் சிறுபான்மையினத்தவர்களாக இருந்து, இந்தியாவுக்கு வந்து வாழ விரும்பும் இந்து, ஜைன, கிறிஸ்தவ, புத்த, பார்சி மதத்தினர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.


    ஆனால், காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த மசோதாவுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இதை பாராளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொள்ளாததால் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது. #CitizenshipBill #CitizenshipBillAmendment #LokSabha  
    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். #CitizenshipBill
    புதுடெல்லி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்துவரும் முஸ்லிமல்லாத பிற மதங்களை சேர்ந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதாவுக்கு பாராளுமன்ற கூட்டுக்குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

    பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்து பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மேற்கண்ட நாடுகளில் சிறுபான்மையினத்தவர்களாக இருந்து, இந்தியாவுக்கு வந்து வாழ விரும்பும் இந்து, ஜைன, கிறிஸ்தவ, புத்த, பார்சி மதத்தினர் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார்.

    ஆனால், காங்கிரஸ் உள்பட சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


    இந்த மசோதாவுக்கு பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இதை பாராளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொள்ளாததால் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

    அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த அசாம் கன பரிஷத் கட்சி மத்திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அம்மாநில அரசுக்கு அளித்துவந்த ஆதரவை நேற்று விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இதை சுட்டிக்காட்டி இன்று மக்களவையில் சில உறுப்பினர்கள் பேசியபோது, ‘வெளிநாடுகளில் இருந்துவரும் குடியேறிகளின் மொத்த சுமையையும் அசாம் மாநிலம் தனியாக தாங்கப் போவதில்லை. அனைத்து மாநிலங்களும் அதை பகிர்ந்துக்கொள்ளப் போகிறது’ என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.  #CitizenshipBill #CitizenshipBillAmendment #Billintroduced #LokSabha 
    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #10pcquota #economicallybackward
    புதுடெல்லி:

    நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இவ்வகையில் ஒட்டுமொத்தமாக பல்வேறு பிரிவினருக்கான  இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உள்ளது.

    இதேபோல், முற்பட்ட வகுப்பினர்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களுக்குஉயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கூடுதலாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


    இதுதொடர்பாக இயற்றப்பட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர் சந்த் கேலாட் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவை சட்டமாக்க, அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதாவாக இது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்பு தெரிவித்துள்ளார். எனினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தேர்தல் காலத்து தந்திரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  #10pcquota #economicallybackward #introducedinLokSabha
    பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabhaadjourned #LokSabhaadjourned #oppositionuproar
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவை இன்று கூடியதும் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசுவதற்கு சில கட்சி உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர்.

    உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், 2012-2016 ஆண்டுகளுக்கு இடையில் அம்மாநிலத்தின் சிறிய சுரங்கங்கள் துறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார். இந்த காலகட்டத்தில் அனுமதி பெறாமல் பல சுரங்கங்கள் இயங்கியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்த துறையை முன்னர் நிர்வகித்த அகிலேஷ் யாதவ் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியதால் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டி சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலத்தில் சபரிமலை கோவில் விவகாரத்தில் பா.ஜ.க.வினரால் நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.க்களும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

    இதனால் மாநிலங்களவையை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கூறிய சபாநாயகர் வெங்கையா நாயுடுவின் முயற்சி பலனளிக்காததால் அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.

    2 மணிக்கு பின்னர் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.


    மக்களவையிலும் இன்று ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைத்தார். அதற்கு  பின்னர் அவை கூடியபோது அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் ஒரு தெலுங்கு தேசம் உறுப்பினரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து  அமளி நீடித்ததால் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த அமளிகளுக்கு இடையில், விவாகரத்துக்கான காரணத்தில் இருந்து தொழுநோயை நீக்கும் தனிநபர் சட்டதிருத்த மசோதா நிறைவேறியது.

    இதன் பின்னரும் அவையில் கூச்சல் நீடித்ததால் மக்களவையை நாளைவரை ஒத்திவைப்பதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.  #RajyaSabhaadjourned #LokSabhaadjourned #oppositionuproar
    இந்தியாவில் தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்த மசோதா இன்று பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. #PersonalLawsAmendmentBill #LokSabha
    புதுடெல்லி:

    மலட்டுத்தன்மை, தீராத நோய் பாதிப்பு ஆகியவற்றை காரணம்காட்டி கணவனோ, மனைவியோ விவாகரத்து கோரும் முறை நமது நாட்டில் நடைமுறையில் உள்ளது.



    இந்த தீராத நோய்கள் பட்டியலில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்க இந்திய தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய மந்திரிசபை கடந்த ஆண்டு தீர்மானித்தது.

    இந்நிலையில், தனிநபர் சட்டத்தின்கீழ் விவாகரத்து கோரும் சட்டவிதியில் இருந்து தொழுநோய் பாதிப்பை நீக்கும் சட்டத்திருத்தம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #PersonalLawsAmendmentBill #LokSabha
    பாராளுமன்ற மக்களவையில் இருந்து மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்களை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று உத்தரவிட்டுள்ளார். #Parliament #ADMKMPs #MekedatuDam
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா அரசு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. இதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையம் ஒப்புதல் அளித்து இருந்தது.

    மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாள்தோறும் கோ‌ஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் டெல்லி மேல் சபையிலும் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை கிளப்பி வந்தனர்.

    பாராளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் 24 பேரை ‘சஸ்பெண்டு’ செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நடவடிக்கை எடுத்தார்.

    இதேபோல் அதற்கு மறுநாள் அமளியில் ஈடுபட்ட மேலும் 7 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மக்களவை இன்று கூடியதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேகதாது பிரச்சனையை கிளப்பி முழக்கமிட்டனர்.


    அவையை சுமூகமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் மேலும் 3 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். வேணுகோபால், செங்குட்டுவன், ராமசந்திரன் ஆகிய 3 அ.தி.மு.க. எம்.பி. களை இடை நீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.

    இதுவரை மக்களவையில் 34 அ.தி.மு.க. எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    அ.தி.மு.க. எம்.பி.க்களின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் தம்பித்துரை வலியுறுத்தி உள்ளார். #Parliament #ADMKMPs
    தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்து இன்று பாராளுமன்றத்துக்கு வந்த ஆந்திரா எம்.பி.யால் பரபரப்பு ஏற்பட்டது. #TDPMP #NaramalliSivaprasad #MGR
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ், தெலுங்கு தேசம், அ.தி.மு.க. மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மக்களவையை செயல்பட விடாமல் இடையூறு செய்ததாக அ.தி.மு.க.வை சேர்ந்த 31 உறுப்பினர்கள் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தும் இவர்கள் 46 பேரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமீபத்தில் உத்தரவிட்டார்.


    இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கண்ட பிரச்சனைகளை மையப்படுத்தி அமளியில் ஈடுபட்டனர். தனியாக இருந்த ஒரேயொரு அ.தி.மு.க. எம்.பி. மட்டும் சபாநாயகர் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்று மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினார்.

    அவருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போல் தொப்பி, கண்ணாடி, சால்வை அணிந்தவாறு குரல் எழுப்பிய ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    நரமள்ளி சிவபிரசாத் என்ற அந்த உறுப்பினர் இதற்கு முன்னர் பெண் வேடமிட்டும், மந்திரவாதி, சலவை தொழிலாளி ஆகிய வேடங்களிலும் முன்னர் மக்களவைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து அமளியும் கூச்சலும் நிலவியதால் 5 நிமிடம் மட்டுமே இருக்கையில் அமர்ந்திருந்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு எழுந்துச் சென்று விட்டார். #TDPMP #NaramalliSivaprasad #MGR 
    மக்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது என்றார். #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன்  இன்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் விவகாரத்தில் உண்மைகளை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. ராணுவத்திற்கு உபகரணங்களை சரியான நேரத்தில் வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். 
     
    நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. காங்கிரஸ் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டு, குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும், தற்போது காங்கிரஸ் அமளியில் ஈடுபடுவது உண்மைகளை மறைப்பதற்காகவே. அவர்களுக்கு (காங்கிரஸ்) விமானத்தை வாங்க  விருப்பம் கிடையாது, அவர்கள் எதுவும் செய்யவில்லை. 



    வரும் செப்டம்பர் மாதத்தில் முதல் ரபேல் விமானம் வழங்கப்படும். விமானம் இந்த ஆண்டு இந்தியாவிற்கு வழங்கப்படும். 36 விமானங்களில் கடைசி விமானம் 2022-ம் ஆண்டு வழங்கப்படும். ஒப்பந்தம், பேச்சுவார்த்தை, பேரம் என அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

    பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பில் ஒப்பந்தம் என்பதற்கு இடையே வேறுபாடு உள்ளது. தேசிய பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.  #RafaleDeal #BJP #NirmalaSitharaman #Congress
    மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவை சேர்ந்த மேலும் 7 எம்பிக்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்துள்ளார். #WinterSession #ADMKMPsProtest
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேர் 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

    இதையடுத்து அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் மக்களவையில் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடைந்துவிடும். எனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எம்பிக்கள் அனைவரும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது. #WinterSession #ADMKMPsProtest
    மேகதாது அணைத்திட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RajyaSabhaAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்களும், ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மாநிலங்களவை கூடியதும் அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு மசோதாக்களும் விவாதங்களும் நிலுவையில் இருப்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார். 

    ஆனாலும் எம்பிக்களின் அமளி நீடித்தது. இதையடுத்து முதலில் 15 நிடங்களுக்கும், அதன்பின்னர் மதியம் 12 வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

    2 மணிக்கு மாநிலங்களவை கூடியபோது அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி நாளை காலை 11 மணிக்கு மாநிலங்களவை கூடும். #WinterSession #RajyaSabhaAdjourned
    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இன்று அதிமுக தெலுங்குதேசம் கட்சிகளின் எம்பிக்களின் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #ParliamentAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அதிமுக எம்பிக்களும், ஆந்திர தலைநகர் அமராவதிக்கு சிறப்பு நிதி தொகுப்பு வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காங்கிரஸ் எம்பிக்கள் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில் அதிமுக எம்பிக்கள் எழுந்து கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடியே அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். கைகளில் கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

    பின்னர் அவர்களுடன் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் இணைந்துகொண்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவையை மதியம் வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.


    இதேபோல் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு மசோதாக்களும் விவாதங்களும் நிலுவையில் இருப்பதால் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதிமுக உறுப்பினர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

    ஆனாலும் எம்பிக்களின் அமளி நீடித்தது. இதையடுத்து முதலில் 15 நிமிடங்களுக்கும், அதன்பின்னர் மதியம் 12 வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #ParliamentAdjourned
    ×