search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    முத்தலாக் முறையை தடை செய்து தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா வரும் 31-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. #TripleTalaqBill #RaviShankarPrasad #RajyaSabha
    புதுடெல்லி:

    கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கூடியபோது, மக்களவையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

    மாநிலங்களவையில் நேற்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா வரும் 31-ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தெரிவித்துள்ளார். #TripleTalaqBill #RaviShankarPrasad #RajyaSabha
    நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு மக்களைவயில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், அதிமுக வெளிநடப்பு செய்தது. #TripleTalaq
    முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் முத்தலாக் சட்ட மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அங்கு முடங்கிவிட்டது. எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. இதற்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த 19-9-2018 அன்று அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு அவசர சட்டமும் ஆறுமாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

    எனவே, தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக மக்களவையில் கடந்த வாரம் திங்கட்கிழமை முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதா விவாதம் இன்று நடைபெற்றது.

    விவாதத்தின்போது பெரும்பாலான கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்தது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் பல்வேறு திருத்தங்களை கொண்டு வர வற்புறுத்தின. ஆனால் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தது.

    இதனால் விவாதம் முடிந்தவுடன் சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டார். வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது.

    குரல் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 245 பேர் வாக்களித்தனர். 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
    முத்தலாக் மசோதா முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாக தலையிடுவதாகவும், இந்த மசோதா தேவையில்லை என்றும் மக்களவையில் நடந்த விவாதத்தின்போது அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
    புதுடெல்லி:

    மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியதாவது:-

    முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இந்த முத்தலாக் சட்டம் நேரடியாக தலையிடுகிறது. இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது. உணர்ச்சிகரமான விஷயத்தில் கண்மூடித்தனமாக மத்திய அரசு செயல்படுகிறது. முத்தலாக் பிரச்சனையில் கணவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிப்பது நியாயமற்றது. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நான் எதிர்க்கிறேன்.

    இந்த மசோதாவை கொண்டு வருவதால் மத்திய அரசு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? கண்துடைப்புக்காகவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.


    இந்த முத்தலாக் தடை மசோதா தேவையில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து மசோதா நிறைவேறாமல் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அன்வர் ராஜா பேசினார். இந்த விவாதத்தில் அன்வர் ராஜா தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், 20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் ஏன் அதை செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்பினார். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
    எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து 27ம் தேதி பாராளுமன்றம் கூடும். #LokSabhaAdjourned #ChristmasHolidays
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் தெலுங்குதேசம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பிற கட்சி எம்பிக்களும் தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    12 மணிக்கு அவை கூடியபோதும் அதிமுக, தெலுங்குதேசம் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். இந்த அமளிக்கு மத்தியிலும் ஜீரோ அவர் பணிகள் நடைபெற்றன. இதில் 5 உறுப்பினர்கள் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசினர். இதுதுவிர பொது கணக்கு குழு மற்றும் இரண்டு நிலைக் குழு அறிக்கைகளும் தாக்கல் செய்யப்பட்டன.

    ஜீரோ அவர் முடிந்த பின்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் பேசினார். அப்போது, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய நாட்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பெரும்பாலான எம்பிக்கள் கோரிக்கை வைத்திருப்பதாக கூறினார். இது தொடர்பாக தானும் கடிதம் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.



    இக்கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், டிசம்பர் 24 மற்றும் 26 ஆகிய நாட்கள் மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்தார்.

    அதன்பின்னர் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 5 நாட்கள் மக்களவை செயல்படாது. இனி டிசம்பர் 27-ம் தேதி மக்களவை கூடும். இதேபோல் மாநிலங்களவைக்கும் நாளை முதல் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaAdjourned #ChristmasHolidays
    பாராளுமன்றத்தில் சீக்கிய கலவர தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. #WinterSession #RafaleVerdict #AntiSikhRiotsVerdict
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. ஆனால், அவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாததால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது மக்களவையில் ரபேல் வழக்கின் தீர்ப்பு, சீக்கிய கலவர வழக்கின் தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். தனி மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். இதுபோன்ற காரணங்களால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.



    இதேபோல் மாநிலங்களவையில் மேகதாது, காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மற்ற கட்சியினரும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #RafaleVerdict #AntiSikhRiotsVerdict
    மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா முன்வைத்த தனிநபர் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது. #TransgenderBill #LokSabha
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சமூக அங்கீகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர் தங்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், பிற உரிமைகளை பாதுகாக்கவும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.யான திருச்சி சிவா கடந்த  2-8-2016 அன்று பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மசோதா ராஜ்யசபையில் நிறைவேறிய பின்னர் பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதா தொடர்பாக 27 பரிந்துரைகளை இணைத்திருந்தது.


    மூன்றாம் பாலினத்தவர்களை வற்புறுத்தி பிச்சை எடுக்கும் தொழிலில் தள்ளுவது, பொது இடங்களில் அனுமதிக்க மறுப்பது, வார்த்தைகளாலும், உடல்ரீதியாகவும் அவர்களை துன்புறுத்துவது போன்றவற்றை குற்றச்செயலாக அறிவித்து அபராதத்துடன் அதிகபட்சமாக இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்க மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமைகள் பாதுகாப்பு என்னும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

    இந்நிலையில், மத்திய சமூக நலத்துறை மற்றும் சமூகநீதித்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் இந்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

    இப்படி ஒரு சட்டம் தங்களுக்கு தேவை என மூன்றாம் பாலினத்தவர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளும் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வந்துள்ளதாக இந்த மசோதாவை அறிமுகம் செய்துவைத்த தாவர்சந்த் கெலாட் குறிப்பிட்டார்.

    இந்த மசோதா மீது பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து கொண்டிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி மக்களவையில் ஒருபுறம் அமளியும் நீடித்தது. இதற்கிடையே மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா முன்வைத்த தனிநபர் மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று நிறைவேறியது.

    இதன்பின்னர் மக்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.   #TransgenderBill #LokSabha 
    பாராளுமன்ற மக்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையில் புதிய முத்தலாக் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. #TripleTalaqBill #TripleTalaq
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும்  காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அமளியில் குதித்தனர்.

    இதற்கிடையே, முன்னர் மக்களவையால் நிறைவேற்றப்பட்டு, ராஜ்யசபையில் முடங்கிப்போன முத்தலாக் மசோதாவின் புதுவடிவத்தை மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று மீண்டும் தாக்கல் செய்தார்.

    முத்தலாக் முறையை மூன்றாண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றமாக இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மக்களின் மதநம்பிக்கை மற்றும் மதம்சார்ந்த பழக்க வழக்கங்கள் தொடர்புடைய விவகாரம் என்பதால் இவற்றை தடை செய்யும் வகையில் இதுபோன்ற மசோதாக்களை தாக்கல் செய்யும் வலிமை இந்த அரசுக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.

    அரசியலமைப்பு சட்டம் 15 மற்றும் 16 பிரிவுகளை மீறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மசோதாவை ஏற்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

    முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதால்தான் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்ததாக குறிப்பிட்ட ரவி சங்கர் பிரசாத், சிறிய பிரச்சனைகளைகூட காரணமாக காட்டி வாட்ஸ்அப் மூலமாக முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்யும் நடைமுறைகளை தண்டனைக்குரிய செயலாக மாற்ற இதுபோன்ற வலிமையான மசோதா அவசியமாக உள்ளது என்றும் கூறினார்.

    இதைதொடர்ந்து, கடும் அமளிக்கு இடையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


    இதற்கு பின்னரும் பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டதால் மக்களவையை பகல் 12 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

    முன்னர், ராஜ்யசபையில் முத்தலாக் மசோதா முடங்கிப் போனாலும், சில திருத்தங்களுக்கு பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அவசர சட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம். #Govtintroduces #TripleTalaqBill #TripleTalaq

    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #BJPRuckus
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது. இன்றும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம், பணமதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று மீண்டும் நோட்டீஸ் கொடுத்தார்.  இதேபோல் ரபேல் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி சுனில் குமார் ஜக்கார் மக்களவையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

    மேலும் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.

    ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக எம்பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #BJPRuckus
    ரபேல் ஒப்பந்தம், ரிசர்வ் வங்கி பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். #WinterSession #LokSabha #AdjournmentMotion
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது. இன்றும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.



    இந்நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம், பணமதிப்புநீக்க விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    இதேபோல் ரபேல் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி சுனில் குமார் ஜக்கார் மக்களவையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளார். #WinterSession #LokSabha #AdjournmentMotion
    மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #WinterSession #LSAdjourned
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது.



    மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.  இதேபோல் ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல், ராமர் கோவில், விசாகப்பட்டினம் ரெயில்வே மண்டலம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ், சிவசேனா மற்றும் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கமிட்டனர். உறுப்பினர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார். ஆனாலும் அமளி நீடித்தது. இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். #WinterSession #LSAdjourned
    மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #LokSabhaFormerSpeaker #SomnathChatterjee
    கொல்கத்தா:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை சபாநாயகராக பதவி வகித்தவர் சோம்நாத் சாட்டர்ஜி (89). மா. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று காலை சோம்நாத் சாட்டர்ஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், மாரடைப்பு ஏற்பட்டதால் சோம்நாத் சாட்டர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். #LokSabhaFormerSpeaker #SomnathChatterjee
    தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்கி வைக்கும் வன்கொடுமைக்கு முடிவு கட்டும் விதமாக கொண்டுவரப்பட்ட மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. #PPChaudhary #LokSabha
    புதுடெல்லி:

    தொழுநோயால் பாதிக்கப்படவர்களை அவர்களது உறவினர்கள் உட்பட ஏறத்தாழ அனைவருமே ஒதுக்கி வைக்கும் ஒரு சூழல் இருந்து வருகிறது. இதனை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு ஐ.நா ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில் இதுபோன்ற தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்க கூடாது என தெரிவித்திருந்தது.

    அதேபோல், சமீபத்தில் உச்சநீதிமன்றமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வை சீர்செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.



    இந்நிலையில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய சட்டமசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய சட்டத்துறை மந்திரி பி.பி சவுத்ரி தாக்கல் செய்த இந்த மசோதாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், மாநிலங்களவை மனு சீராய்வுக்குழு, தேசிய சட்ட ஆணையம், மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் பரிந்துரையின் அடிப்படையில், தனிநபர் சட்டத்தில் இருந்து தொழுநோயாளிகள் பிரிவை நீக்க முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabha
    ×