search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்திபூங்கா அருகில் உள்ள தேவாங்க நடுத்தெருவில் அ.தி.மு.க.வின் 47ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நகர கழக செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத்தலைவரும், மாவட்ட துணை செயலாளருமான  தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் முருகேசன் வரவேற்றார். மாவட்ட கழகச் செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் மற்றும் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம், பெரம்பலூர் எம்.பி. மருதை ராஜா உள்ளிட்டோர் கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினர்.

    நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை தண்டபாணி, எம்.ஜி.ஆர் மன்றம் மகாபாரிவள்ளல் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர கழக பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார். #ADMK
    அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் 3 நாட்கள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

    கோவை:

    கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல் -அமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணையின்படி நாளை (சனிக்கிழமை)அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை வார்டுகளில் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துவி மரியாதை செலுத்தியும் தலைமை கழகம் அறிவித்த பொதுக் கூட்டங்களை நகர, பகுதி, செயலாளர்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி புறநகர் மாவட்டத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் அண்ணா தொழிற் சங்க பேரவை யூ.ஆர். கிருஷ்ணன், மகேந்திரன் எம்.பி., நடிகர் அனுமோகன், பவானி ஜே. எஸ். வாசன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    கோவை சாய்பாபா காலனி பகுதி வேலாண்டி பாளையம் மருத கோனார் வீதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நடிகர் வையாபுரி, ஜெயகாந்தன் ஆகியோர் பேசுகிறார்கள். நாளை மறுநாள் ( ஞாயிற்றுக் கிழமை) குனியமுத்தூர் நகரம் இடையர் பாளையம் பிரிவில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், டி.பி. குலாப் ஜான், ராம சுப்பிரமணியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    குறிச்சி நகரம் சங்கம் வீதியில் முன்னாள் எம்.பி. இளவரசன், மார்க்கண்டேயன், நாகராஜன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    17-ந் தேதி தொண்டாமுத்தூர் பகுதி மாரியம்மன் கோவில் வீதி லாலி ரோடு பகுதியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் புத்தி சந்திரன், முன்னாள் வாரிய தலைவர் லியாகத் அலிகான், தோவாலா ரவி,விளதை செல்வராஜ், ஆகியோர் பேசுகிறார்கள். வால்பாறையில் முன்னாள் அமைச்சர் அண்ணாவி, ஜலேந்திரன், ஈரோடு சுப்பிரணியம் ஆகியோர் பேசுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். #anbumani

    ராமநாதபுரம்:

    தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை காக்கவும், வைகையை காப்போம் வறட்சியை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு பிரசார பொதுக்கூட்டம் பா.ம.க. சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில் நடந்தது. இதில் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    வைகை ஆற்றை காப்பதில் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபட்டுள்ளது.

    தண்ணீர் தேக்கும் திட்டங்கள் அரசிடம் இல்லை. மன்னர் காலத்தில் கட்டிய நீர்த்தேக்கங்களை 50 ஆண்டு காலமாக தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் கண்டுகொள்ள வில்லை. இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கட்சிகள்தான் தமிழகத்தில் உள்ளன.

    நீர் மேலாண்மை திட்டத்தில் திராவிட கட்சிகள் முதலீடு செய்யவில்லை. மாறாக இலவச திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். தமிழக முன்னேற்ற திட்டங்கள் பா.ம.கவிடம் நிறைய உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீரின்றி வைகை வறண்டுள்ளது. வைகை அணையின் 71 அடி உயரத்தில் 21 அடி தூர்ந்து போயுள்ளது.

    258 கி.மீ. நீளம் கொண்ட தமிழகத்தின் 4-வது பெரிய ஆறான வைகையை நாம் காப்பாற்ற வேண்டும்.

    தமிழக மீனவர்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை அரசு துப்பாக்கியால் சுட்டால் ஒரு செய்தியுடன் முடிந்து விடுகிறது.

    அதே சமயத்தில் மற்ற மாநில மீனவர்கள் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்துகிறது. எங்களுக்கு அரசியல் நோக்கம் கிடையாது. ஓட்டு நோக்கம் கிடையாது. தமிழகத்திலுள்ள நீர்நிலைகளை நாம் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்ல பூமியை விட்டுச் செல்ல வேண்டும்.

    காலநிலை மாற்றத்தால் வரும் காலங்களில் மிக மோசமான விளைவுகள் வரவிருக்கிறது. ஓராண்டு வெள்ளம். அடுத்த மூன்று ஆண்டு வறட்சி. அடுத்து மழை, அடுத்து வெள்ளம் இப்படி மாறி மாறித்தான் வரவிருக்கிறது. நாம் இதற்கு தயார் நிலையிலேயே இருக்க வேண்டும்.

    150 ஆண்டுகளுக்கு முன் புவியின் சராசரி வெப்ப நிலை 14 சென்டி கிரேட் ஆக இருந்தது. இன்று 15 சென்டிகிரேட் ஆக மாறி உள்ளது. 15.5 சென்டிகிரேட் ஆக ஆகும்போது உலகம் அழிந்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல்ரமணன், பொருளாளர் திலகபாமா, துணை செயலாளர் தளபதி ராஜ்குமார், மாவட்ட செயலாளர் அக்கீம் உள்பட பலர் பங்கேற்றனர். #anbumani

    கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் வகையில் தினகரன் ஆங்காங்கே பொதுக்கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #TTVDinakaran #MinisterJayakumar
    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்தில் அமைந்துள்ள குந்தாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மாநில அரசின் வருவாய் பட்டியலில் இருக்க வேண்டும். அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரக்கூடாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதனை எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன.

    மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு தான் ஜி.எஸ்.டி. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

    தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி.யாக ரூ.30 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம். அந்த ரூ.30 ஆயிரம் கோடியை இங்கு செலவு செய்யலாம்? அந்த பணத்தை சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை ஏழை- எளிய மக்களுக்கு நெசவாளர்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு உதவி செய்யலாம்.

    ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் நாம் ரூ.75 ஆயிரம் கோடி செலவு செய்கிறோம். ஜி.எஸ்.டி.யாக மத்திய அரசு பெற்றுக் கொண்டால் தமிழக அரசுக்கு எப்படி வருவாய் வரும்.

    மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு ரூ.17 ஆயிரம் கோடி வரவேண்டி இருக்கிறது. அதனை நண்பர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் வாங்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அதை வாங்கி தந்தால் அவர் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.

    தினகரன் போன்ற காளான்கள் முளைக்கும். கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் வகையில் ஆங்காங்கே ஒரு கூட்டத்தை போடும் வேளையில் ஈடுபட்டு இருக்கிறார். தினகரன் ஒரு பகல் கனவில் இருக்கிறார்.



    ஒரு பழமொழி சொல்வார்கள். “சொப்பனத்தில் காண்கின்ற அரிசி சோத்திற்கு உதவாது”. கடலை தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் கால் இருக்கணும். முதலில் வாய்க்கால் தாண்ட பார்க்கணும். வாய்க்கால் தாண்டவே வக்கு இல்லாதவர்கள் சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran #MinisterJayakumar
    பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கான நிதியை அளிப்பது யார்? என பாராளுமன்றத்தில் சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். #ShivSena
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் ஊழல் தடுப்பு மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த், பா.ஜ.க.வின் ஊழல் ஒழிப்பு கொள்கைக்கும், நடைமுறைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் செய்த அதே தவறை நாமும் செய்ய வேண்டுமா எனவும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.

    பிரதமர் மோடி நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிக்குமான நிதியை வழங்குவது யார்? என கேள்வி எழுப்பிய எம்.பி அரவிந்த், ஒருவேளை அரசாங்கத்தின் நிதியில் இருந்து செலவு செய்யப்படுமானால், அது சரியா எனவும் வினவினார்.

    தொடர்ந்து பேசிய எம்.பி, தேர்தல் ஆணையம் அனுமதித்த அளவு தொகையினை மட்டும் பயன்படுத்தி தேர்தலில் வென்றோம் என தங்கள் மனதை தொட்டு எம்.பிக்கள் கூற முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    மேலும், தேர்தலின்போது எம்.பிக்கள் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் அனுமதிக்கப்படாமல் இருப்பதுபோல், அனைத்து பிரதமர்களும் தேர்தலின்போது தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு எம்.பியாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், சிவசேனா எம்.பி அரவிந்த் சவந்த் தெரிவித்துள்ளார். #ShivSena
    பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து முதல்கட்டமாக நாடு முழுவதும் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. #pmmodi #parliamentelection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க.வை பலப்படுத்தும் வகையில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    சமீபத்தில் சென்னை வந்த அவர் சுமார் 16 ஆயிரம் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். இன்று தெலுங்கானா மாநிலத்தில் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் 400 பாராளுமன்ற தொகுதிகளிலாவது கட்சியினரை தயார்நிலையில் வைத்திருக்கும் திட்டத்தில் இதுவரை சுமார் 200 தொகுதிகளில் இதற்கான பணிகள் முடிந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து முதல்கட்டமாக வரும் பிப்ரவரி மாதத்துக்குள் 100 எம்.பி. தொகுதிகளில் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த 50 பொதுக்கூட்டங்கள் மூலமாக 100 முதல் 150 பாராளுமன்ற தொகுதிகளில் வாழும் வாக்காளர்களை கவர கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதுதவிர இந்த ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மேலும் சில பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன,

    இதன் முதல்கட்டமாக நேற்று பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, நாளையும், நாளை மறுநாளும் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட அசாம்கர், வாரணாசி, மிர்சாப்பூர் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதுடன் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். ஷாஜஹான்பூர் பகுதியில் விரைவில் பேசவுள்ளார். #pmmodi #parliamentelection 
    காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி மயிலாடுதுறையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
    மயிலாடுதுறை:

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. வருகிற 18-ந் தேதி மயிலாடுதுறையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    திருவாரூரில் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுகிறார்கள்.

    காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வந்தது. இதைதொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது.

    காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்து உள்ளனர். உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

    அதன்படி மயிலாடுதுறையில் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று உரையாற்றுகின்றார்.

    மயிலாடுதுறைக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி திருச்சி சரக போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் ஆகியோர் நேரில் சென்று பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மயிலாடுதுறை சின்னக்கடைத்தெரு இடத்தை பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது முதல்- அமைச்சர் பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பாதை மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வரும் பாதை, திரும்பி செல்லும் பாதை, கார்களை நிறுத்துவதற்கு போதுமான இடவசதி உள்ள நகராட்சி மருத்துவமனை வளாக திடல் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும், பாதுகாப்பு காரணங்களையொட்டி போலீசார் பணிபுரிய வேண்டிய இடங்கள், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய இடங்கள், மாற்றம் செய்யப்பட வேண்டிய போக்குவரத்து வழித்தடங்கள், திடீர் மழை பெய்தால் பொதுமக்கள் சிரமப்படாமல் அமரும் வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து போலீஸ் ஐ.ஜி. வரதராஜுலு போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். #TNCM #Edappadipalanisamy
    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஜெயலலிதா நடத்திய சட்ட போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாக காத்து நிற்கின்றன. ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பொறுப்பிலும், தமிழக முதல்-அமைச்சர் பதவியிலும் இருந்து நடத்திய சட்ட போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்ட போராட்டங்களை நடத்தியும், மத்திய அரசிடம் வலியுறுத்தி பேசியும், உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்றுள்ளது.

    இது அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உடனடியாக காவிரி நீர் பங்கீட்டை தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாக திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். தமிழக அரசு, காவிரி தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

    காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரது வழிகாட்டுதலின்பேரில் காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை பெற்று தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வருகின்ற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மற்றும் ஜூலை 11-ந்தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி மாநிலம் மற்றும் காரைக்காலிலும் ‘காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி’ விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

    திருவாரூரில் 17-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், மயிலாடுதுறையில் 18-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். மாவட்ட செயலாளர்கள் அனைத்து அணியினருடனும் இணைந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து அதன் விவரங்களை தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் தீர்ப்பை பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-ந்தேதி முதல் 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடத்திய சட்டப் போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாகக் காத்து நிற்கின்றன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலும், தமிழ்நாடு முதல்-அமைச்சர் என்ற பதவியிலும் இருந்து, ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி, சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக் கும் தீர்ப்பைப் பெற்றுள்ளது, அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    உடனடியாக காவிரி நீர்ப் பங்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு, அதனை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

    இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலன்காக்க நடைபெற்று வரும் தமிழ்நாடு அரசு, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது.

    காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதில் அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து, காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக் கும் தீர்ப்பைப் பெற்றுத்தந்த அ.தி.மு.க. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-5-2018 முதல் 27-5-2018 வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

    கூட்டம் நடைபெறும் தேதி, இடம், தலைமை தாங்குவோர் விவரம் வருமாறு:-

    24-5-2018 - கரூர் - அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர். 24-5-2018 - அரியலூர் - அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ.க்கள் தாமரை எஸ்.ராஜேந்திரன், ஆர்.டி.ராமச்சந்திரன்.

    25-5-2018 - தஞ்சாவூர் - அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி. 25-5-2018 - புதுக்கோட்டை - அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து. 26-5-2018 - நாகப்பட்டினம் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஓ.எஸ்.மணியன். 26-5-2018 - திருச்சி - பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி, ப.குமார் எம்.பி., டி.ரத்தினவேல் எம்.பி. 27-5-2018 - திருவாரூர் - துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.காமராஜ். 27-5-2018 - கடலூர் - அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், ஆ.அருண்மொழிதேவன் எம்.பி.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் அனைத்து நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கட்சித் தொண்டர்களும், விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×