search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமிதாப்பச்சன்"

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    ஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. 

    பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய நடிகர் என இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
    லக்னோ:

    பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைந்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிர்சாப்பூரில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். சாலையில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி பேசுகையில், மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் மிகப்பெரிய நடிகரை (மோடியை) நீங்கள் பிரதமராக தேர்வு செய்திருக்கிறீர்கள். 

    அவருக்கு பதிலாக நீங்கள் அமிதாப்பச்சனைக்கூட தேர்வு செய்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கக்கூடும். யாரும் உங்களுக்கு எதுவும் செய்து விடப்போவதில்லை என்பது வேறு வி‌ஷயம் என்றார். 

    பிரதமர் மோடியை விமர்சனம் செய்த கையோடு அமிதாப்பச்சனையும் பிரியங்கா காந்தி விமர்சனத்திற்கு இழுத்ததற்கு காரணம் உள்ளது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன், பிரியங்காவின் தந்தை ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர். அவரை அரசியலுக்கு கொண்டு வந்த ராஜீவ் காந்தி 1983 தேர்தலில் அலகாபாத் பாராளுமன்ற தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்தவர். 

    கடந்த 1986-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன. பீரங்கிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசியல் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது. போபர்ஸ் ஊழலில் அமிதாப் பெயர் அடிபட்டபோது அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அந்த ஊழலில் அவர் குற்றம் செய்யவில்லை என நிரூபணமானது. ஆனாலும் அமிதாப்பச்சன் அரசியலைப் பற்றி திரும்ப நினைத்துப்பார்க்கவில்லை. அதனை குறிப்பிட்டு பிரியங்கா காந்தி பேசியுள்ளார். 
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

    கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி கடைசியாக சமந்தாவின் யு-டர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    அமரர் கல்கி எழுதியிருக்கும் இந்த கதையில், ஆதித்த கரிகாலனான விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க இருக்கின்றனர்.

    உ.பி. மாநில விவசாயிகள் சுமார் 850 ம்பேரின் வங்கிக் கடன்களை அடைக்க இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார். #AmitabhBachchan #AmitabhBachchanfarmersloan #farmersloan
    மும்பை:

    நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை பொய்த்துப் போனதுடன், வங்கிக்கடனும் சேர்ந்து தலைமேல் பாரமாகி விட்ட மனவேதனையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

    சில மாநிலங்கள் ஓரளவுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தாலும், பரவலாக வங்கிக் கடன்களால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

    இதற்கு முன்னர் மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்துள்ள அமிதாப் பச்சன், ‘என்னால் இயன்ற இந்த சிறிய உதவி இதர மாநிலங்களிலும் தொடரும்’ என தனது வலைப்பூ (பிளாக்) பதிவிட்டுள்ளார். #AmitabhBachchan #AmitabhBachchanfarmersloan  #farmersloan  
    மீடூ-வில் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை கூறிவரும் நிலையில், சிகை அலங்கார நிபுணர் சப்னா மோடி பவனானி, அமிதாப்பச்சன் மீது குறை சொல்லியிருக்கிறார். #MeToo
    மீ டூ இயக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பலர் தங்கள் பெயர்களும் மீடூ-வில் வெளியாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ‘மீ டூ’வில் சிக்கி உள்ளார்.

    இந்தி திரையுலகில் புகழ்பெற்ற சிகை அலங்கார நிபுணராக இருக்கும் சப்னா மோடி பவனானி தனது டுவிட்டரில் அமிதாப்பச்சன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    “நீங்கள் நடித்த பிங்கி படம் வெளியாகி உங்களுக்கு நல்ல பெயர் பெற்று தந்து இருக்கலாம். ஆனால் உங்களுடைய நல்ல பெயர் விரைவில் கெடப்போகிறது. உங்களுடைய சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். உண்மை கண்டிப்பாக வெளியே வரத்தான் செய்யும். இப்போது நீங்கள் உங்களது கையை கடிக்க தொடங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும்.”

    இவ்வாறு சப்னா மோடி பவனானி கூறியுள்ளார்.



    அமிதாப்பச்சன் இரு தினங்களுக்கு முன்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை கண்டித்தும், மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்த நிலையில் அவர் மீதான இந்த குற்றச்சாட்டு இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அமிதாப்பச்சன், அமீர்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் டிரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருக்கிறார். #Kamal #ThugsOfHindostan
    வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்திப்படங்களை தயாரித்த நிறுவனம், யாஷ்ராஜ் பிலிம்ஸ். இந்த நிறுவனம் தயாரித்து அடுத்து வெளிவர இருக்கும் இந்திப்படம், ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்.’ இது, அதிரடியான சண்டை காட்சிகளை கொண்ட படம். இது, தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் கத்ரினா கைப், பாத்திமா சனாசேக் ஆகிய இருவரும் நடித்துள்ளனர். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா டைரக்டு செய்திருக்கிறார். நவம்பர் முதல் வாரத்தில் படம் வெளியாக இருக்கிறது.

    இந்திப்பட உலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் ஆகிய இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்துள்ளனர். படத்தை பற்றிய தகவலை அமிதாப்பச்சன், அமீர்கான் இருவரும் வீடியோ ஒன்றில் பேசி, வெளியிட்டனர்.

    இந்த படத்தின் டிரைலர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார்.
    சமூக ஊடகங்களில் தன்னைப்பற்றிய தவறான பதிவுகள் வெளிவந்தாலும் அது தனது மேம்பாட்டுக்கு உதவுவதாக அமிதாப்பச்சன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். #AmitabhBachchan #SocialMedia
    மும்பை:

    நடிகர் அமிதாப்பச்சன், 75 வயதிலும் தீவிர சமூக ஊடக ஆர்வலர். அவற்றை தவறாக பயன்படுத்தி, தன்னைப்பற்றிய பதிவுகள் வெளிவந்தாலும் அது தனது மேம்பாட்டுக்கு உதவுவதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

    இது பற்றி அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதி இருப்பதாவது:-

    சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்த எனக்கு நேரம் இல்லை. என் வேலைக்குத்தான் எனக்கு நேரம் இருக்கிறது. இவற்றில் என்னை தவறாக பதிவு செய்வதை கண்டுகொள்வதற்கு எனக்கு நேரம் இல்லை. உள்ளபடியே இதை நான் நேசிக்கிறேன். என் நல்லதுக்கு இது தூண்டுகிறது.

    நான் பெருமைப்பட, என்னை மேம்படுத்திக்கொள்ள, என் நடத்தைக்கு, நான் நின்று கொள்வதற்கு, என் கண்ணியத்துக்கு இது தூண்டுகோலாய் அமைகிறது. இதில் என்னைப்பற்றி தவறாக சொல்வது, இதற்கெல்லாம் வழிநடத்தும் என்றால் நான் அவற்றை பதிவு செய்கிறவர்களுக்கு நன்றிக்கடன்பட்டு உள்ளேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.   #AmitabhBachchan #SocialMedia 
    ×