search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யராஜ்"

    கடைக்குட்டி சிங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிப்பதாக கூறினார். #KadaikuttySingam #Karthi
    சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா, ப்ரியா பவானி சங்கர் மற்றும் அர்த்தனா நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்பிரியா, விஜி சந்திரசேகர், சூரி, சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிவக்குமார், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, பாண்டிராஜ், ஜான் விஜய், ஸ்ரீமன், பானுப்ரியா, திலீப் சுப்புராயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

    இதில் நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா நன்றி தெரிவித்து பேசியதாவது, 

    இந்த மாதிரியான கதையை மக்களுக்கு கொண்டு சொல்ல வேண்டும் என்று முயற்சியில் எடுக்கப்பட்ட படம் தான் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் நடித்துள்ள பலரும் அவர்களது உணர்ச்சியையே கதாபாத்திரத்தில் பிரதிபலித்திருக்கின்றனர். உறவுகளுக்கு மருந்தளிக்கும் படமாக கடைக்குட்டி சிங்கம் நிச்சயமாக இருக்கும். பயிரிடுபவர்களுக்கும், தாய் மாமன்களுக்கும் இந்த படத்தை சமர்பிக்கிறோம். உறவுகளை மீண்டும் புதுப்பிக்க, பலம் சேர்க்கும் படமாக நிச்சமாக அமையும் என்றார். 



    நடிகர் கார்த்தி பேசும் போது, 

    இயக்குநர் பாண்டிராஜ், படத்தில் மட்டும் விவசாயத்தை உட்புகுத்தாமல், சென்னையிலேயே ஒரு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்த படத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ரகமாக இருப்பார்கள். அனைவருக்கும் வித்தியாசமான கதபாத்திரங்களை கொடுத்திருக்கிறார். பட்டணத்திற்கு பிழைக்க சென்றவர்களை மீண்டும் கிராமத்திற்கு அழைக்கும் படம் தான் இது. அதேபோல் சொந்த பந்தங்கள் அழிந்து வருகிறது. சொந்தங்களை நியாபகப்படுத்தும் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்றார். 

    படத்தில் தனது கதாபாத்திரம் என்னவோ, அதுவாகவே வந்து சத்யராஜ் அனைவரையும் கவர்ந்தார். #KadaikuttySingam #Karthi


    தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட நடிகர் சத்யராஜ், ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். #Rajini #SathyaRaj
    பெரியார் திடலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

    நீங்கள் அரசியலில் குதித்து விட்டீர்கள். அப்படியே உள்ளே இறங்குவற்கு பெயர்தான் அரசியல். நீங்கள் வியாபாரத்துக்கு உள்ளே வந்துவிட்டு அதுக்கு ஏதோ ஒரு பெயர் வைக்க கூடாது. அந்த வியாபாரத்துக்கு ஆன்மீக அரசியல் அப்படின்னு பெயர். அந்த வியாபாரத்துக்கு, எனக்கும் கூட, நான் நினைத்த வரைக்கும் ஆன்மீக அரசியல்னா என்னான்னு எனக்கு தோணுதுன்னா... இரும்புக்கரம் கொண்டு அடக்குவதல்ல ஆன்மீக அரசியல். அன்புக்கரம் கொண்டு அடக்குவதுதான் ஆன்மீக அரசியல்.

    எனக்கு தெரிந்து ஆன்மீகம் என்றால் அன்பு. நாம் நிம்மதியைத் தேடி மலைக் கெல்லாமா போகிறோம். நமக்கு தெளிவாக இருக்கிறது. இந்த பெரியார் திடலில் படித்தவர்கள் நாம். இப்படியே நிம்மதியாகத்தான் இருப்பேன். எனக்கு எங்கேயும் போக வேண்டாம். காலையில் பல் விலக்கும் போது நிம்மதியாக விலக்குவேன். ஷேவ் பண்ணும் போதும் நிம்மதியாக ஷேவ் செய்வேன். இட்லி-தோசை சாப்பிட்டாலும் நிம்மதியாக சாப்பிடுவேன்.

    தெளிவாக இருக்கிறேன். அய்யா கொடுத்த அறிவு. தந்தை பெரியார் கொடுத்த அறிவு. ஒரு பஞ்ச் டயலாக் கூட அய்யாவை வைத்துத்தான் பேசுவேன். எனக்கு தலையில் முடி இல்லையேன்னு சொன்னாங்க. நாங்கள் எல்லாம் தலைக்கு மேல இருக்கிறதை நம்பி வாழ்றவங்க இல்லை. தலைக்கு உள்ளே இருக்கிறதை நம்பி வாழ்றவங்க. தலைக்கு மேல இருக்கிறது என்பது பரம்பரை. ஆனால் உள்ளே இருக்கிறது அய்யா கொடுத்தது. அது கொட்டாது, வளர்ந்துகிட்டே தான் இருக்கும்.



    தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து தான் நம்பிய கொள்கைக்காக தான் நம்பிய சுயமரியாதை கொள்கைக்காக அப்படியே களத்தில் இறங்கி, நம் எதிர்காலம் என்னாகும், நம் தொழில் என்னாகும், சிறைக்கு போவோமா, மாட்டோமா, அப்படிங்கிறதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வருவதற்கு பெயர்தான் அரசியல்.

    அதுதான் சமூக சேவை. திட்டம் போட்டு கணக்கு போட்டு அரசியலுக்கு வருவது அரசியல் அல்ல. அதுக்கு பெயர் வியாபாரம். கடைசியாக இருக்கிற நீதியும் கைவிட்டு விடும் போதுதான் சமுதாயம் புரட்சி மீது நம்பிக்கை வைக்கிறது.

    போராட்டத்தின் மீது நம்பிக்கை வைப்பது ஒரு நாடு சுடுகாடாக மாறுவதற்காக அல்ல. நாடு சுடுகாடாக மாறாமல் இருப்பதற்காகத் தான் போராட வேண்டியது இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா சய்கல் நடிப்பில் விவசாயத்தை மையப்படுத்தி கிராம பின்னணியில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் முன்னோட்டம். #KadaikuttySingam #Karthi
    2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரிக்கும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. 

    முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா, பிரியா பவானி ‌ஷங்கர், அர்த்தனா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பானுப்ரியா சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.



    ஒளிப்பதிவு - ஆர்.வேல்ராஜ், இசை - டி.இமான், கலை - வீரசமர், படத்தொகுப்பு - ரூபன், இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், தயாரிப்பு - சூர்யா, எழுத்து, இயக்கம் - பாண்டிராஜ்.

    “ இந்த படத்தில் கார்த்தி மாதம் ரூ.1½ லட்சம் சம்பாதிக்கும் கெத்தான விவசாயி வேடத்தில் நடித்துள்ளார். என்ஜினீயர், டாக்டர் போல் கார்த்தி தான் ஒரு விவசாயி என்பதை மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட் முதல் பல இடங்களில் பெருமையாக எழுதிக்கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார்.



    இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் ஐ.டி வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். 

    படம் வருகிற ஜூலையில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெற்று வருகிறார். #Kanaa
    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

    ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள்? என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சியும் ஆலோசனையும் பெற்று வந்து இருக்கிறார் ஐஸ்வர்யா. 



    ஐஸ்வர்யாவுடன் தான் இருக்கும் படத்தை பதிந்து அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் வாட்மோர். சமீபத்தில் வெளியான கனா படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #AishwaryaRajesh

    ஸ்டெர்லைட் போராட்டம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட கொடூரமானவை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை பதிவு செய்து வரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த சம்பவத்திற்கு கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுயதாவது,



    `தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வேதனையளிக்கிறது. நமது அரசு மற்றும் ஆட்சியாளர்கள் மீது பயம் வருகிறது. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் நாம் நினைப்பதை விட ரொம்ப கொடூரமானவயாக இருக்கின்றன.' 

    இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest #KarthikSubbaraj

    ஸ்டெர்லைட் ஆலை தலைவரின் கொடும்பாவியை எரித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர் லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதைக் கண்டித்து நேற்று மாலை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

    சென்னையில் இயக்குநர் கவுதமன் தலைமையில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. சந்திப்பு முடிந்து வெளியே வந்த கவுதமன் தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை தலைவரின் கொடும்பாவியை எரித்தனர். மாநில அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியவாறு சாலை மறியல் செய்ய முயன்றனர். இதைத்தொடர்ந்து கவுதமன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #Bansterlite #SaveThoothukudi
    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் வீடியோ வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    `தூத்துக்குடியில் நடந்த கொடுமைக்கு எனது கண்டனத்தை பதிவுசெய்கிறேன். இறந்தவர்கள் அத்தனை பேருக்கும், அந்த குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன். உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். ஒன்றே ஒன்றை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.



    எங்கோ வாழும் ஒரு முதலாளி நமக்கு முக்கியமா? இங்கு வாழும் நம் உறவுகளும், சொந்தங்களும், நம் தமிழ்நாட்டு மக்களும் முக்கியமா? என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இது நெஞ்சம் பதைக்க வைக்கிறது. மனதை மிகவும் வேதனைப்படுத்துகிறது. இந்தக் கொடுமைக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக்கொண்டு, இறந்தவர்களுக்கு என்னுடைய ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பெண்கள் இறந்திருக்கிறார்கள், மாணவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களில் ஒருவனாக' என்று தெரிவித்துள்ளார். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest #Sathyaraj

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகிய நிலையில், வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். #Kanaa #Vijay
    சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்திற்கு கனா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நடிகர் விஜய், அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 



    விஜய் வாழத்துக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,

    'என்னை உற்சாகப்படுத்தவும் பாராட்டவும் தவறாத எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா. காலை எழுந்தவுடன் உங்களது வாழ்த்தை பார்த்தேன். உங்களது இந்த ஊக்கமான வார்த்தைகள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டது. உங்களிடம் இருந்து வாழ்த்தும், ஆசீர்வாதமும் பெற்றதில் நான் பாக்கியம் செய்துள்ளேன். உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் தகாது. உங்களை எப்போதுமே நேசிக்கும் அருண்ராஜா காமராஜ்' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    அருண்ராஜா காமராஜ் விஜய்யின் பைரவா படத்தில் வரலாம் வரலாம் வா, பைரவா என்ற பாடலை எழுதி, பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #Vijay #ArunRajaKamaraj #AishwaryaRajesh

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது சொந்த தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் தலைப்பை வெளியிட்டிருக்கிறார். #Sivakarthikeyan
    நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய  படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி இப்படத்திற்கு ‘கனா’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 



    திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #ArunRajaKamaraj #AishwaryaRajesh #SivakarthikeyanProductions
    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி - சாயிஷா - நடிப்பில் உருவாகி இருக்கும் `கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல டி.வி. ஒன்று கைப்பற்றியிருக்கிறது. #KadaikuttySingam
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம்` கடைக்குட்டி சிங்கம்'.

    பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக முதிர்ந்த தோற்றத்தில் நடிகர் சத்யராஜ் நடித்திருக்கிறார். சூரி, ஸ்ரீமன், பானுபிரியா, மவுனிகா உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டி.வி. வாங்கியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியிருக்கிறது. 



    டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #AishwaryaRajesh
    நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்திய  படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 15-ஆம் தேதி (நாளை) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். 



    இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

    திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். #ArunRajaKamaraj #AishwaryaRajesh #SivakarthikeyanProductions

    ×