search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதி"

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், மோகன் பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



    ஆதி, அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு படமொன்றில் நடிக்கும் ஆதி அதற்காக தனது உடல் எடையை குறைத்து வருவதால் அவர் படத்தில் ஒப்பந்தமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. 

    மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
    இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

    கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அமலாபாலிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்களின்படி, மணிரத்னம் ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது உறுதியாகி இருக்கிறது. விரைவில் ஆதி இந்த படத்தில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதி கடைசியாக சமந்தாவின் யு-டர்ன் படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    படத்திற்கான முதற்கட்ட பணிகளில் மணிரத்னம் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. மணிரத்னமின் மெட்ராஸ் டாக்கீசுடன் பிரபல தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    அமரர் கல்கி எழுதியிருக்கும் இந்த கதையில், ஆதித்த கரிகாலனான விக்ரமும், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்க இருக்கின்றனர்.

    `பார்ட்னர்' படத்தை தொடர்ந்து ஆதி அடுத்ததாக அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் தடகள விளையாட்டு வீரராக நடிக்கிறார். #Aadhi
    நடிகர் ஆதி தற்போது மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் `பார்ட்னர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.



    தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன் மற்றும் குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா இணைந்து தயாரிக்கின்றனர். பிரவீன்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பையும், வைரபாலன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    படம் பற்றி இயக்குநர் பேசும் போது,

    தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது. இது தடகள விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் படம் என்றார். #Aadhi

    சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நட்பே துணை படத்தில் நடித்த அஸ்வின், கதாநாயகன் ஆதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். #NatpeThunai
    சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுதலை பெற்றவர் அஸ்வின். நெகடிவ் கதாபாத்திரம் போன்று ஆரம்பமாகி பின்னர் பாசிடிவ் கதாபாத்திரம் ஆதியின் நண்பராக நடித்திருந்தார்.

    இப்படம் குறித்து அஸ்வின் கூறும்போது, ‘நான் சிங்கப்பூரில் மாஸ்டர் ஆப் பிஸினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டு ஒரு ஹோட்டல் நிறுவனத்தில் உயரிய பொறுப்பில் இருந்தேன். கை நிறைய சம்பளம். கெளரவமான வேலை. அத்துடன் டான்ஸ் ஸ்கூல், ஜிம் என்று நடத்திக் கொண்டிருந்தேன்.

    அந்த நேரத்தில் யானும் தீயவன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. என் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. படம் வெளியான நேரத்தில் பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதனால் படத்திற்கு வெற்றி கிடைக்காமல் போனது.



    அதன்பின் பஞ்சாட்சரம் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்தேன். அந்தப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. பின்னர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றேன். அதற்கான பரிசு நட்பே துணை படத்தில் கிடைத்தது. எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து என் வாழ்க்கைகு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தி கொடுத்த ஆதிக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அதே மாதிரி தயாரிப்பாளர் சுந்தர்.சி சாருக்கும் குஷ்பு மேடத்துக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். 

    என்னோட அப்பா ஜெரோம் புஷ்பராஜ் ஒரு லாயர்...அதோடு இல்லாமல் மியூசிக் டைரக்டர். அதனால் எனக்கு மியூசிக் ஆர்வம் அதிகம் நிறைய மியூசிக் ஆல்பங்களை தயாரித்திருக்கிறேன். இப்போ வெப் சீரியல்களை தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கும் இந்த கலைத்துறையில் மதிப்பு மிக்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.
    மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி - ஹன்சிகா - பல்லக் லால்வானி நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `பார்ட்னர்' என்று தலைப்பு வைத்துள்ளனர். #Partner #Adhi #Hansika
    ஆதி - ஹன்சிகா முதன்முதலாக இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு `பார்ட்னர்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். ஹன்சிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஆதி ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக குப்பத்து ராஜா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

    முக்கிய கதாபாத்திரங்களில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவி மரியா, 'டைகர்' தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


    டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இந்த படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறியதாவது, "முழு நீள காமெடி படமாக இது உருவாகிறது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இது இருக்கும். இந்த பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் படமாக இருக்கும்" என்றார்.

    சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இந்த படத்திற்கு சபீர் அஹமது ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஃப்.சி. கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.பி.கோலி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. #Partner #Adhi #Hansika #PallakLalwani

    தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க விடா முயற்சி செய்து வரும் நடிகர் ஆதி, அஜித்தை தான் எனக்கு பிடிக்கும். அவர் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். #ThalaAjith #Aadhi
    தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் ஆதி. மிருகம், ஈரம் முதல் சமீபத்தில் வெளியான யு டர்ன் வரை அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் இன்னும் சரியான இடம் கிடைக்கவில்லை.

    ஒரு கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடி வருகிறார். ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ‘உங்களின் அனைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் யாகாவாராயினும் நா காக்க தான் சிறந்தது. நீங்கள் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
    ரசிகரின் ட்விட்டை பார்த்த ஆதி ’அஜித் எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் இல்லை. அவரைத் தான் எனக்கு பிடிக்கும். அவர் படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் ’ என்று தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். #ThalaAjith #Aadhi

    பவன்குமார் இயக்கத்தில் சமந்தா - ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன், பூமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் `யு டர்ன்' படத்தின் விமர்சனம். #UTurnReview #Samantha
    இன்ஜினியரிங் முடித்துவிட்டு பிரபல பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்கிறார் சமந்தா. தனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலையில், வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகிறார். வேளச்சேரி மேம்பாலத்தில் சாலையை கடக்கக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளை நகர்த்திவிட்டு சாலையை கடப்பவர்களை தேர்வு செய்து அவர்களை பேட்டி எடுக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதற்காக சாலை விதிகளை மீறுபவர்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கிறார்.

    ஒருநாள் தனது லிஸ்டில் இருக்கும் பெயர்களில் ஒன்றை தேர்வு செய்து, அவரை பேட்டி காண செல்கிறார். ஆனால் குறிப்பிட்ட அந்த நபரை சந்திக்க முடியாமல் திரும்பி விடுகிறார். இந்த நிலையில், சமந்தா பேட்டி காண சென்ற நபர், மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். அதில் மரணத்தில் சமந்தாவுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் போலீசார் சமந்தாவை கைது செய்கின்றனர்.

    இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியான ஆதி, சமந்தாவிடம் கொலை பற்றி விசாரிக்க தான் அந்த கொலையை செய்யவில்லை என்றும், கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறுகிறார். ஆனால் சமந்தா சென்ற நேரத்தில் தான் கொலை நடந்ததாக போலீசார் கூற, தான் ஒரு பத்திரிகை நிருபர் என்பதையும், அங்கு சென்றதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.



    சமந்தாவின் பேச்சில் உண்மை இருப்பதாக உணரும் ஆதி, சமந்தாவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடிவு செய்கிறார். அதேநேரத்தில் சமந்தாவிடம் உள்ள அனைவரின் தகவல்களையும் வாங்கி தனது விசாரணையை தொடங்குகிறார். அதில் சமந்தா சேகரித்த பட்டியலில் உள்ள அனைவருமே இறந்து விடுகின்றனர். 

    இந்த மரணங்களில் இருக்கும் ஆதியும், அந்தமும் புரியாமல் தவிக்கும் ஆதி இந்த மரணங்களுக்கான காரணங்களை கண்டுபிடித்தாரா? சமந்தாவின் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் இறக்க காரணம் என்ன? சமந்தா இந்த வழக்கில் இருந்து எப்படி தப்பித்தார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஒரு இளம் பத்திரிகை நிருபராக, என்னவென்றே புரியாத ஒரு வழக்கில் சிக்கித் தவித்தும், அதை சமாளிக்க போராடும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பு அபாரமாக இருக்கிறது, பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார். போலீஸ் அதிகாரியான ஆதி திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்த தவறவில்லை. அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய அங்கமாக பயணிக்கிறது. எப்போதுமே வித்தியாசமாக கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்கும் நரேனின் கதாபாத்திரம் படத்திற்கு அச்சாணியாக விளங்குகிறது. பூமிகா இந்த படத்தில் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, அதை சிறப்பாகவே நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 



    சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனின் கதாபாத்திரமும் ரசிக்கும்படியாகவே வந்துள்ளது. மற்றபடி ஆடுகளம் நரேன், ரவி பிரகாஷ், கீதா ரவிசங்கர் என மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் விறுவிறுப்புக்கு துணையாக இருந்துள்ளனர்.

    கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற யு டர்ன் படத்தின் ரீமேக் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான அச்சாணியை போட்டியிருக்கிறார் இயக்குநர் பவண் குமார். படம் ஆரம்பிக்கும் நிமிடம் முதல் இறுதி வரை படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு செல்வதே இயக்குநரின் பலம். அடுத்ததடுத்த காட்சிகள் வேககமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்வது ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கிறது. இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

    அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வியின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக உள்ளது. நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `யு டர்ன்' விறுவிறுப்பு. #UTurnReview #Samantha #Aadhi

    பவன்குமார் இயக்கத்தில் சமந்தா - ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் `யு டர்ன்' படத்தின் முன்னோட்டம். #UTurn #Samantha

    பி.ஆர்.8 கிரியேஷன்ஸ், ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் மற்றும் விஒய் கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் `யு டர்ன்'.

    நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையான இந்த படத்தில், அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தா நடித்திருக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நரேன், பூமிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி, இசை - அனிருத், பூர்ணசந்திரா தேஜஸ்வி, எடிட்டிங் - சுரேஷ் ஆறுமுகம், பாடல்கள் - சுபு, கலை - ராமன்ஜனேயலு, ஏ.எஸ்.பிரகாஷ், லதா தருண் தாஸ்யம், சண்டைப்பயிற்சி - சேத்தன் டி சவுசா, ஆடை வடிவமைப்பு - பல்லவி சிங், தயாரிப்பு - ராம்பாபு பந்தாரு, ஸ்ரீனிவாச சித்தூரி, வசனம் - கவின் பாலா, இணை இயக்குநர் - கவின் பாலா, சூரி ரவி, திரைக்கதை, இயக்கம் - பவன்குமார்.



    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் செப்டம்பர் 13-ஆம் தேதி (நாளை) ரிலீசாக இருக்கிறது. அதேநாளில் தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள சீமராஜா படமும் ரிலீசாக இருக்கிறது. 

    இதுபற்றி சமந்தாவிடம் கேட்டபோது, ‘2 படங்களுமே வேறு வேறு வகையை சேர்ந்தவை. சீமராஜா கிராமத்து படமாகவும், யு டர்ன் ஒரு கொலை சம்பவத்தின் பின்னணியிலும் உருவாகி இருக்கின்றன. இரண்டையுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்று கூறி உள்ளார். #UTurn #Samantha

    யு டர்ன் படத்தின் டிரைலர்:


    ஆதி நடிப்பில் ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில் உருவாகும் ‘ஆர் எக்ஸ் 100’ படத்தின் முன்னோட்டம்.
    மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது. 

    சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற "ஆர் எக்ஸ் 100" என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி நடிக்க உள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் 100 ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.

    "விநியோக துறையில் ஒரு நம்பகத்தன்மையான நிறுவனம் என்று பெயர் பெற்றாலும், திரைப்பட தயாரிப்பில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ராஜ தந்திரம் வீரா நடிக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா - ஹன்சிகா நடிப்பில் சாம் அன்டன் இயக்கும் 100 ஆகிய இரு படங்களும் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் தருவாயில் உள்ளது. நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை.இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார்.

    எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது. தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பிடிக்கும் கதை அம்சம் கொண்டு உள்ள படம் இது. ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒருவர் தான் இந்த படத்தை இயக்க வேண்டும். அதற்கான தேடல் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதாநாயகி பாத்திரம் மிகவும் சவாலானது. கதாநாயகி தேர்வு கூட நடைபெறவுள்ளது.இந்த மாத இறுதிக்குள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைபெறும். செப்டெம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.. அதிவிரைவில் உருவாகி ரசிகர்களின் உள்ளத்தில் சீறி பாயும் " ஆர் எக்ஸ் 100" ஏன்று உற்சாகத்துடன் சொன்னார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.
    தமிழில் ஆடுகளம் படம் மூலம் பிரபலமான டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். #Taapsee
    வெற்றி மாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் டாப்சி. அதன்பின்னர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் தொடர்ந்து அவர் நடித்தபோதும் பெரிய அளவிலான இடத்தை தமிழில் அவரால் பிடிக்க முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்குப் படங்களிலும் நடித்துவந்த டாப்சி திடீரென இந்திக்குத் தாவினார்.

    அமிதாப்பின் ‘பிங்க்’கால் இந்தியில் அவருக்கு நன்றாகவே வரவேற்புகள் கிடைக்க கிட்டத்தட்ட பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். கைவசம் தற்போது நான்கு இந்திப்படங்களை வைத்துள்ள டாப்சி படங்களை தேர்ந்தெடுக்கும் விதத்தில் முன்னணி இந்தி நடிகைகளுக்கே சவாலாக இருந்துவருகிறார்.



    இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ஆர்.எக்ஸ்100 படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதிக்கு ஜோடியாக டாப்சியை நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. டாப்சி அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
    மிருகம், ஈரம், அரவான், மரகத நாணயம் ஆகிய படங்களை தொடர்ந்து தெலுங்கில் இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த படத்தில் ஆதி நடிக்க இருக்கிறார். #Aadhi
    மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை அடைந்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இவர் படங்கள் வெற்றி பெறுவதால் இந்த இரு மாநிலங்களிலும் இவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே போகிறது.

    சமீபத்தில் தெலுங்கில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற "ஆர் எக்ஸ் 100" என்ற படத்தின் தமிழ் பதிப்பில் கதாநாயகனாக நடிக்க தற்போது ஆதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இளைஞர்களை பெருமளவில் கவர்ந்த இந்த படம் தெலுங்கு திரை உலகில் பல்வேறு சாதனைகளை முறியடித்து இருக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது. 

    இந்த படத்தின் தமிழாக்கம் உரிமையை பலத்த போட்டிகிடையே பிரபல திரைப்பட விநியோக நிறுவனமும், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதர்வா ஹன்சிகா இணையாக நடிக்கும் ‘100’ ஆகிய படங்களை தயாரிக்கும் நிறுவனமுமான ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார்.



    தற்போது இப்படத்தின் நடிகை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    ×