search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102167"

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டதாக கூறினார். #Modi #SoniaGandhi #RahulGandhi #Demonetisation
    பிலாஸ்பூர்:

    கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி, அப்போது புழக்கத்தில் இருந்த 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.

    ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப்படுத்தி உள்ளார். சத்தீஸ்காரின் பிலாஸ்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-



    பணமதிப்பு நீக்க நடவடிக்கையை குறைகூறுவது முட்டாள்தனமானது. ஏனெனில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் நாட்டில் இருந்த போலி நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு உள் ளன. அதன் விளைவாகத்தான் காங்கிரஸ் தலைவர்களான சோனியாவும், ராகுல் காந்தியும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது.

    நாட்டின் வளர்ச்சிக்காகவே பா.ஜனதா பாடுபட்டு வருகிறது. இதனால் பா.ஜனதாவுடன் எப்படி போட்டியிடுவது? எனத்தெரியாமல் எதிர்க்கட்சிகள் குழம்பி இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் அரசியல் தொடக்கமும், முடிவும் ஒரே குடும்பம்தான். ஆனால் எங்கள் அரசியலோ ஏழைகளின் குடிசையில் தொடங்குகிறது.

    வாழ்வோ, சாவோ நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் ஒரு தலைமையை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் பெறவில்லை. அந்தவகையில் சத்தீஸ்காரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால், தற்போதைய வளர்ச்சியை மாநிலம் அடைவதற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கும்.

    ஏழைகளுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயிலும், வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எவ்வளவு உண்மையுடன் கூறியிருக்கிறார்? அந்த மீதமுள்ள 85 பைசாவை உறிஞ்சுவது ‘கை’தான் (காங்கிரஸ் கட்சியின் சின்னம்).

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 
    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #IndiraGandhi #RahulGandhi #SoniaGandhi #Congress
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



    டெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் மற்றும் மாநில கமிட்டி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. #IndiraGandhi #RahulGandhi #SoniaGandhi #Congress
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். #Congress #RahulGandhi #RanilWickremesinghe
    புதுடெல்லி:

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.



    இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Congress #RahulGandhi  #RanilWickremesinghe

    நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை விவகாரத்தில் பழைய வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து சோனியா, ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுக்களை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
    புதுடெல்லி:

    அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துவக்கப்பட்டது. 

    மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.

    பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்குமேல் பெறுமானமுள்ள அசையா சொத்துக்கள் உண்டு.

    இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி  ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.

    2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும். 

    காங்கிரஸ் கட்சி யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது.

    அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி பெறுமானமுள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.

    தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல்  AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது. 

    இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது. 

    ரூ. 2000 கோடி பெறுமானமுள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் ரூ. 50 லட்சம் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார். 

    இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது. 

    கடந்த  2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    இதற்கு தடை விதிக்ககோரி டெல்லி ஐகோர்ட்டில் இவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோரை கொண்ட அமர்வு இன்று உத்தரவிட்டது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #RajivGandhi #RajivBirthAnniversary
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அங்கு சென்று மரியாதை செலுத்தினார்.



    இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



    இதேபோன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். #RajivGandhi #RajivBirthAnniversary

    காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி, சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

    தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நாளை குமாரசாமி டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கூட்டணி மந்திரி சபையில் காங்கிரசுக்கு எத்தனை மந்திரி பதவி அளிப்பது, யார்-யாரை நியமிப்பது பற்றியும், சோனியா, ராகுலுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த சந்திப்பின் போது பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு சோனியா, ராகுலுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கிறார்.

    பின்னர் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை முறியடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும், சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அவர்களையும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

    குமாரசாமி மந்திரிசபை பதவி ஏற்பு விழா பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. எடியூரப்பாவும் பதவி ஏற்க இந்த ஸ்டேடியத்தைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தார். பின்னர் கவர்னர் மாளிகையிலேயே தனி ஆளாக பதவி ஏற்றார்.

    அவர் தேர்வு செய்த ஸ்டேடியத்தில் குமாரசாமி பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

    ×