search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தரப்பிரதேசம்"

    முன்னாள் மத்திய மந்திரியான ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் மர்ம நபர்களால் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இங்குள்ள பரவுலியா கிராமத்தின் குடியிருப்புவாசிகளிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங். கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.



    கிராம மக்களுக்கு காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் (50) ஈடுபட்டார்.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட கூடுதலாக 55 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைவிட 55 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி.
     


    அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 467598 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 4,13,394 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் ராகுலைவிட 55 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஸ்மிருதி இரானி.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
    லக்னோ:

    வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்தபோது வங்காளம் என்றழைக்கப்பட்ட பெரும்பகுதியின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஈஷ்வர் சந்திரா வித்யாசாகர். சிறந்த கல்வியாளராகவும், தத்துவவாதி மற்றும் மொழிபெயர்ப்பாளராகவும், பேராசிரியராகவும், பெரும் கொடையாளராகவும் திகழ்ந்த இவரை மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் சமூக சீர்திருத்தவாதியாக போற்றி, மதித்து வருகின்றனர்.
     
    இதற்கிடையே, கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது அக்கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஷ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என உறுதியளித்தார்.
    மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். 



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் மம்தா பானர்ஜியை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர்.
    நாட்டின் பிரதமராக இருப்பவர் அநீதி இழைப்பது அவரது பதவிக்கு பொருத்தமாக இருக்காது.

    மேற்கு வங்காளத்தில் இன்று இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஏனென்றால் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டங்கள் நடைபெற உள்ளது. தடைவிதிக்க வேண்டும் என முடிவெடுத்த தேர்தல் ஆணையம், அதை காலை 10 மணி முதலே அறிவித்திருக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார்.
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தலை முன்னிட்டு சாலைகளில் பேரணிகள், மத தலங்களில் வழிபாடுகள் உள்ளிட்டவற்றுக்கு அரசியல் கட்சிகள் பெரிய தொகைகளை செலவிட்டு வருகின்றன. எனவே தேர்தல் ஆணையம் இந்த செலவையும் வேட்பாளர் கணக்கில் சேர்க்க வேண்டும்.



    பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வேட்பாளர்கள் மத வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்வது போன்ற காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்.இதுகுறித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு இது கடைசி தேர்தல். இத்தேர்தலில் பா.ஜ.க. அரசு நிச்சயம் தோற்கும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூழ்கிக் கொண்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
    தேர்தல் கமிஷனின் அனுமதியை பெற்றுதான் நம் வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பது ஆகின்ற காரியமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், குஷிநகர் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.

    தலித் மக்களின் ரட்சகராக தன்னை காட்டிக் கொள்ளும் மாயாவதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் பகுதியில் தலித் இளம்பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட பின்னரும் அம்மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துக்கொண்டு, தலித்துகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார் என மோடி குற்றம்சாட்டினார்.

    ராஜஸ்தான் மாநில அரசும் ‘நடந்தது நடந்து விட்டது’ என்னும் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தின்படி இந்த அல்வார் கற்பழிப்பு சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்தது வெட்கக்கேடான சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் இன்று இரு பயங்கரவாதிகளை நமது ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் மோடி ஏன் பயங்கரவாதிகளை கொல்ல வேண்டும்? என்று சிலர் கவலைப்படுகின்றனர்.

    ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தங்களை தாக்க வரும்போது அவர்களை சுட்டுக் கொல்வதற்கு எனது வீரர்கள் தேர்தல் கமிஷனின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? எனவும் மோடி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

    பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளுடன் எதிரே நிற்கிறார்கள். இவன் மீது துப்பாக்கியால் சுடலாமா, வேண்டாமா? என்று தேர்தல் கமிஷனிடமிருந்து எனது வீரர்கள் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா?.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாதிகளை களையெடுத்து காஷ்மீரை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி விட்டது. இந்த தூய்மைப் பணியும் எனது பணிகளில் ஒன்றுதான் என மோடி குறிப்பிட்டார்.
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கைலாஹட் ரெயில் நிலையம் அருகில் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீ பற்றியதால் பரபரப்பை ஏற்படுத்தியது. #KamakhyaExpress
    லக்னோ:

    குஜராத் மாநிலத்தின் காந்திதம் நகரில் இருந்து அசாம் மாநிலத்தின் காமாக்யாவுக்கு செல்வது காமாக்யா எக்ஸ்பிரஸ்.

    நேற்று மதியம் புறப்பட்ட காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில், இன்று காலை 11.30 மணிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தை அடைந்தது. அங்குள்ள கைலாஹட் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, காமாக்யா எக்ஸ்பிரசின் ஜெனரேட்டர் அறையில் திடீரென தீ பிடித்தது.

    இதையறிந்த ரெயிலின் டிரைவர் ஜெனரேட்டர் பெட்டியை தனியாக அகற்றினார். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் டெல்லி - ஹவுரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். #KamakhyaExpress
    உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் மோடி கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    இதையொட்டி, பாஜக சார்பில் வாரணாசியில் இன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துடன் இதில் பங்கேற்றார்.



    தொண்டர்கள் சூழ பிரதமர் மோடி சாலையில் ஜீப்பில் நின்றபடி தசாஸ்வமேத நதி முகத்துவாரத்தை அடைந்தார். இதையடுத்து கங்கை நதியை வழிபட்ட பிரதமர் மோடி அங்கு கங்கா ஆரத்தி செய்து வழிபாடு நடத்தினார்.  
     
    முன்னதாக, வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனர் மதன் மோகன் மாளவியா உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Modi
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்தினார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

    வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதால் அங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், உ.பி.யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று மாலை பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.
     


    வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பேரணி சென்றார். வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.  #LokSabhaElections2019 #Modi
    உ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    அப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். #LokSabhaElections2019 #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி தொடங்கி முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. மே 19ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் போட்டியிடுகின்றனர். 

    உபியின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் மே 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நாளை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    ரேபரேலியில் சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங்கும், அமேதியில் ராகுலை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி இரானியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #SoniaGandhi #RahulGandhi
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் ஹவுராவில் இருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். #PoorvaExpressderail
    லக்னோ:

    ஹவுராவில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. இந்த  ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை இன்று அதிகாலை ஒரு மணிக்கு அடைந்தது.

    அப்போது ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #PoorvaExpressderail
    ×