என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 102455
நீங்கள் தேடியது "அதிபர்"
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா இன்று பதவியேற்றார். விழாவில் சர்வதேச தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
பிரிட்டோரியா:
தென்னாப்பிரிக்க நாட்டி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் ஜேக்கப் ஜூமா கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடர்ந்து, சிரில் ராமபோசா (வயது 66) அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இதன்பின் அதிபருக்கான தேர்வில் சிரில் ராமபோசாவின் பெயரே முன்மொழியப்பட்டது. அவர் போட்டியின்றி மீண்டும் தென்னாப்பிரிக்க குடியரசின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அந்நாட்டு பாராளுமன்றத்தில் தலைமை நீதிபதி மொகோயெங் கடந்த வாரம் கூறினார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் நிர்வாக தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள லாப்டஸ் வெர்ஸ்பெல்டு ஸ்டேடியத்தில் அதிகாரிகள் மற்றும் குடிமக்கள் முன்னிலையில் முறைப்படி இன்று அதிபராக ராமபோசா பதவியேற்று கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைவர்கள் மற்றும் மாநில முன்னாள் தலைவர்கள், சர்வதேச தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராமபோசா, ஊழலை ஒழிக்கவும், தடுமாறும் பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்கவும் பாடுபடுவதாக உறுதி அளித்தார்.
மடகாஸ்கர் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் 55.66 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆன்ட்ரி ரஜோலினா இன்று பதவியேற்றார். #AndryRajoelina #MadagascarPresident
அன்டனானாரிவோ:
ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவு நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர் நாட்டின் அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தலில் 55.66 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்த ஆன்ட்ரி ரஜோலினா நேற்று அந்நாட்டின் அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
தனது ஆட்சிக்காலத்தில் நாட்டில் உள்ள 6 மாகாணங்களும் சரிசமமான வளர்ச்சியை பெறும் என தனது பதவியேற்பு விழா பேருரையில் குறிப்பிட்ட ஆன்ட்ரி ரஜோலினா, சூரிய ஆற்றலின் மூலம் மின்சார உற்பத்தி மையங்கள் நிறுவப்பட்டு, மக்களுக்கு மிககுறைவான விலையில் வினியோகிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
மடகாஸ்கர் நாட்டில் சுதந்திரத்துக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக சுமுகமான முறையில் இங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததன் மூலம் உலக அரசியல் வரலாற்றில் நமது நாடு தனி முத்திரையை பதித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இவ்விழாவில் சுமார் 35 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். #AndryRajoelina #MadagascarPresident
சுவிஸ் நாட்டின் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #SwissParliament #FinanceMinister #Maurer
ஜெனீவா:
சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் அதிபரை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும். இந்த நிலையில் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
இவர் 7 உறுப்பினர்களைக் கொண்ட பெடரல் கவுன்சிலுக்கு (மந்திரிசபை) தலைமை தாங்குவார். அதே நேரத்தில் அவருக்கென்று சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது. மந்திரிகளுக்கு உள்ள அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படுகிறது.
மேலும் அந்த நாட்டின் எரிசக்தி துறை மந்திரியாக வயோலா அம்ஹெர்டும், பொருளாதார துறை மந்திரியாக கரின் கெல்லரர் சுட்டரும் தேர்வு செய்யப்பட்டனர்.

அயர்லாந்து நாட்டின் அதிபராக மிக்கேல் ஹிக்கின்ஸ் 2-வது முறையாக தேர்வு பெற்று இருக்கிறார். #Ireland #President #MichaelDHiggins
டப்ளின்:
அயர்லாந்து நாட்டில் கடந்த 26-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் மீண்டும் போட்டியிட்டார். சுயேச்சையாக போட்டியிட்ட அவரை எதிர்த்து பீட்டர் கேசி, சியான் கலாகெர் உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ் 55.8 சதவீத ஓட்டுகள் வாங்கி அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக அதிபராக தேர்வு பெற்று இருக்கிறார். 1966-ம் ஆண்டுக்கு பின்னர் அங்கு அதிபர் ஒருவர் தொடர்ந்து 2-வது முறை போட்டியிட்டது இதுவே முதல் முறை.
அவரை எதிர்த்து போட்டியிட்டவர்களில் தொழில் அதிபரான பீட்டர் கேசி 23.25 சதவீத ஓட்டுகளையும், சியான் கலாகெர் 6.41 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர்.
அயர்லாந்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, பிந்தைய கருத்துக்கணிப்பிலும் சரி, அதிபர் மிக்கேல் ஹிக்கின்ஸ்தான் முன்னிலை பெற்றிருந்தார். அதன்படியே தேர்தலிலும் கூடுதல் ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.
அவரை அயர்லாந்தில் உள்ள முக்கியமான 3 கட்சிகளும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்தில் அதிபர் பதவிக்காலம் 7 ஆண்டுகள் ஆகும். அந்த நாட்டின் சட்டப்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபர் ஆக முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #Ireland #President #MichaelDHiggins

வியட்நாம் நாட்டின் புதிய அதிபராக கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான குயேன் பு டிராங் இன்று பதவி ஏற்றார். #NguyenPhuTrong #Vietnampresident
ஹனோய்:
தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் தெற்கு சீனக் கடல் பகுதியின் அருகாமையில் அமைந்துள்ள அழகிய நாடு வியட்நாம். இந்த நாட்டின் ஆட்சி முறையில் ஒருநபர் அதிகாரம் என்பது கிடையாது.
அதிபர், பிரதமர், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என இந்த நான்கு தரப்பினரின் கைகளிலும் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டின் அதிபராக பதவி வகித்த டிரான் டாய் குவாங் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். இதைதொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களால் இன்று தேர்வு செய்யப்பட்ட ந்குயேன் ஃபு டிராங்(74) வியட்நாம் புதிய அதிபராக பதவி ஏற்று கொண்டார்.
கம்யூனிச சித்தாந்தத்தில் அதிக பிடிப்புள்ள ந்குயேன் ஃபு டிராங், கடந்த 1997-ம் ஆண்டில் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரானார். 2011-ம் ஆண்டில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2016-ம் ஆண்டில் அவரது பதவிக்காலம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரும் முன்னாள் அதிபருமான ஹோ சி மின்ஹ் மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும், அதிபர் பதவியையும் ஒருசேர வகிப்பவர் ந்குயேன் ஃபு டிராங் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. #NguyenPhuTrong #Vietnampresident

பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம் அதிபரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். #PAYTM #Employee #Blackmailing #VijayShekharSharma
நொய்டா:
பிரபல இ-வாலட் நிறுவனமான பேடிஎம்-ஐ நிறுவியவர் விஜய் சேகர் சர்மா. இந்நிறுவனத்தின் தலைமையகம் டெல்லி அருகே நொய்டாவில் உள்ளது.
அதில், அதிபரின் செயலாளராக பணியாற்றும் ஒரு பெண், தன் கணவர் ரூபக் ஜெயின், சக ஊழியர் தேவேந்திர குமார் ஆகியோருடன் சேர்ந்து அதிபரின் தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துக்கொண்டு, அவரை பிளாக்மெயில் செய்தனர்.
அந்த தகவல்களை வெளியிட்டால், நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படும், நற்பெயர் கெட்டுப்போகும் என்றும் எனவே, வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், ரூ.20 கோடி தர வேண்டும் என்றும் மிரட்டி வந்தனர். இதுபற்றி நொய்டா போலீசில் விஜய் சேகர் சர்மா புகார் செய்தார்.
அதன்பேரில், அந்த பெண் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 4-வது நபரான ரோகித் சோமல் என்பவனை தேடி வருகிறார்கள். #PAYTM #Employee #Blackmailing #VijayShekharSharma

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக எம்மர்சன் ம்நங்காக்வா இன்று மீண்டும் பதவி ஏற்று கொண்டார். #ZimConCourt #EmmersonMnangagwa
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சியின் மூலம் அதிபர் ராபர்ட் முகாபே(94) பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இடைக்கால அதிபராக எம்மெர்சன் ம்நாங்காவா பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை பதவியில் அமர்த்துவது தொடர்பாக தெற்காப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் ஜிம்பாப்வே தற்காலிக அதிபர் எம்மெர்சன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, ஜிம்பாப்வே அதிபர் பதவிக்கு கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி நடைபெற்ற தேர்தலில்
தற்காலிக அதிபராக இருந்த எம்மர்சன் ம்நங்காக்வா-வை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 50 சதவீதம் வாக்குகளை பெற்ற எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தல் முடிவை எதிர்த்து அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசாவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். வன்முறையாக மாறிய இந்த போராட்டத்தை அதிபர் எம்மர்சன் ம்நங்காக்வா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வெடித்த மோதலில் கடந்த முதல் தேதி 6 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், தலைநகர் ஹராரே நகரில் உள்ள தேசிய விளையாட்டு திடலில் ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் ம்நங்காக்வா இன்று மீண்டும் பதவி ஏற்றார். அந்நாட்டு உச்சநீதி மன்ற நீதிபதி லுக்கே மலாபா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், எம்மர்சனின் ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். #ZimConCourt #EmmersonMnangagwa

இதற்கிடையில், எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக வெளியான அறிவிப்பை எதிர்த்து அந்நாட்டு அரசியலமைப்பு சட்ட நீதிமன்றத்தில் நெல்சன் சாமிசா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றியை உறுதிப்படுத்தி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தலைநகர் ஹராரே நகரில் உள்ள தேசிய விளையாட்டு திடலில் ஜிம்பாப்வே அதிபராக எம்மர்சன் ம்நங்காக்வா இன்று மீண்டும் பதவி ஏற்றார். அந்நாட்டு உச்சநீதி மன்ற நீதிபதி லுக்கே மலாபா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், எம்மர்சனின் ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். #ZimConCourt #EmmersonMnangagwa
பாகிஸ்தான் நாட்டில் அதிபர், பிரதமர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல் வகுப்பில் பய்ணம் செய்ய தடை விதித்து பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. #PakistanCabinet #Bansfirstclassairtravel
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில், அதிபர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில், அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, பார்லிமென்ட் மேலவை மற்றும் கீழவை தலைவர்கள், முதல் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராணுவ தளபதி எப்போதும் சாதாரண வகுப்பில் தான் பயணம் செய்வார். வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமானத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். #PakistanCabinet #Bansfirstclassairtravel
ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி உறுதியளித்துள்ளார். #AfganSikhAttack
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் சமீபத்தில் ஐ.எஸ் அமைப்பினர் ஜலாலாபாத் பகுதியில் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் அதிபரை சந்திக்க சீக்கியர்கள் குழு சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, குருத்வாராவுக்கு சென்று இறந்த சீக்கியர்களுக்காக அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். #AfganSikhAttack

தென்கொரிய அதிபர் மூன் ஜே 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வரவுள்ளதாக அந்நாட்டு அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MoonJaevisitIndia
சியோல்:
தென்கொரிய அதிபர் மூன் ஜே ஜூலை 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இதுதொடர்பாக தென்கொரிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் மூன் ஜே இந்தியா வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு முதல்முறையாக வருகைதரும் மூன் ஜே, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைத் தொடர்ந்து மூன் ஜே சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #MoonJaevisitIndia

3 நாள் அரசு முறை பயணமாக மங்கோலியா சென்றுள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மங்கோலிய அதிபர் பட்டுக்லாவை சந்தித்து பேசினார். #RajnathSingh #Mongolia
உல்லன்பாட்டர்:
ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அரசு முறை பயணமாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மங்கோலியா நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இந்தியாவின் நிதி உதவியுடன் துவங்க உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் துவக்க விழாவில் பங்கேற்றார்.
மேலும், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாரம்பரிய மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என இருநாடுகளுக்கு இடையே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மங்கோலியாவில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி புறப்பட்டார். #RajnathSingh #Mongolia

அதைத்தொடர்ந்து மங்கோலியா நாட்டின் அதிபர் பட்டுக்லாவை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், அந்நாட்டின் பிரதமர் குரேல்சுக், துணை பிரதமர் எண்டுவ்ஷின் மற்றும் உள்துறை மந்திரி நியாம்டோர்ஜ் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், இருநாட்டுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
மேலும், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், பாரம்பரிய மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பு அளிக்கப்படும் என இருநாடுகளுக்கு இடையே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மங்கோலியாவில் இருந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி புறப்பட்டார். #RajnathSingh #Mongolia
தேர்தல் பிரசார கூட்டத்தின்போது ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் ம்நான்காவா மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். #Zimbabwepresidenrally
ஹராரே:
ஜிம்பாப்வே நாட்டின் அதிபர் பதவிக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுகிறது. பிரதான வேட்பாளர்களிடையே பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள புலாவாயோ நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் எம்மர்சன் ம்நான்காவா பேசினார். அவரது பேச்சை கேட்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
பேச்சை முடித்துவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கியபோது எம்மர்சன் ம்நான்காவாவை நோக்கி ஒரு வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு அதிபரின் மீது படாத வகையில் அவரது பாதுகாவலர்களை அவரை ஒருபக்கமாக இழுத்து தள்ளி, எம்மர்சன் ம்நான்காவாவின் உயிரை காப்பாற்றியதாகவும் இந்த தாக்குதலில் சிலர் காயம் அடைந்ததாகவும் தலைநகர் ஹராரேவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. #Zimbabwepresidenrally #EmmersonMnangagwa #Mnangagwanothurt

×

X