search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ்புக்"

    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மூலம் பயனர்களுக்கு பூமராங் வீடியோ, புதிய செல்ஃபி மோட் மற்றும் ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் என பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. #Facebook #messenger



    ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் பல்வேறு புதிய வசதிகளை சேர்ப்பதற்கான அப்டேட்களை வழங்கி வருகிறது. 

    அந்த வகையில் பயனர்களுக்கு பூமராங் வீடியோக்கள், செல்ஃபிக்களில் பேக்கிரவுண்டை தானாக பிளர் செய்யும் புதிய செல்ஃபி மோட், புகைப்படம் மற்றும் வீடியோக்களில் மெசஞ்சர் ஸ்டிக்கர்களை சேர்க்க ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



    மெசஞ்சர் செயலியில் ஏற்கனவே நார்மல், வீடியோ, டெக்ஸ்ட், பூமராங் மற்றும் செல்ஃபி உள்ளிட்ட கேமரா மோட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றின் வரிசையில் புதிய செல்ஃபி மோட் மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ளது. 

    முன்னதாக மெசஞ்சர் செயலியில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஏ.ஆர். ஸ்டிக்கர்கள் மூலம் சாட்களை சுவாரஸ்யமாக்க ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.



    இனி கேமரா ஐகானின் அருகில் இருக்கும் ஸ்டிக்கர் ஆப்ஷனை கிளிக் செய்து புதிதாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பொருளை சேர்த்துக் கொள்ள முடியும். மெசஞ்சரில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள் உலகம் முழுக்க மெசஞ்சர் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.

    அந்த வகையில் மெசஞ்சரின் புதிய வடிவமைப்பு பெற்ற செயலி மற்றும் பழைய பதிப்புகளில் அப்டேட் செய்வோருக்கு புதிய வசதிகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக மெசஞ்சர் லைட் செயலியில் அனிமேட் செய்யப்பட்ட ஜிஃப் படங்களுக்கான வசதி சேர்க்கப்பட்டது. எனினும், இந்த வசதியை இயக்க ஜிபோர்டு போன்ற மூன்றாம் தரப்பு கீபோர்டு செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.
    ஃபேஸ்புக் வலைத்தளம் பயன்படுத்துவோரில் 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் புதிய பிழை மூலம் கசிந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. #Facebook #databreach



    ஃபேஸ்புக் தளத்தில் கண்டறியப்பட்ட புது பிழை சுமார் 70 லட்சம் பயனரின் புகைப்படங்களை ஆப் டெவலப்பர்களுக்கு அம்பலப்படுத்தியதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    இம்முறை கண்டறியப்பட்ட பிழை பயனரின் புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக் தளத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் அரங்கேறுவது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

    மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு புகைப்படங்களை இயக்க அனுமதியளித்த சுமார் 68 லட்சம் பயனர்களின் புகைப்படங்கள் பிழையில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் 12 நாட்களுக்கு இந்த புகைப்படங்கள் அம்பலமாகி இருந்தது என்றும், இந்த பிழை சரி செய்யப்பட்டு விட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.



    ஃபேஸ்புக்கில் சரி செய்யப்பட்ட புதிய பிழை ஆப் டெவலப்பர்களுக்கு பயனரின் மற்ற புகைப்படங்கள்: அதாவது மார்கெட்பிளேஸ் அல்லது ஃபேஸ்புக் ஸ்டோரிக்களில் பதிவிடப்பட்டவைக்கான அனுமதியை வழங்கியிருந்தது என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

    இத்துடன் இந்த பிழை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய முயன்று, பின் தொழில்நுட்ப கோளாறு மற்றும் இதர காரணங்களால் பதிவேற்றப்படாத புகைப்படங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. சமீப காலங்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பல்வேறு கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது.
    ஃபேஸ்புக் நிறுவனம் சந்தித்து வரும் சோதனைகளுக்கிடையே அதன் ஊழியர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் வகையில் மற்றொரு சோதனை சிலிகான் வேலியை பரபரப்பில் ஆழ்த்தியது. #Facebook



    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இயங்கி வரும் ஃபேஸ்புக் மென்லோ பார்க் அலுவலக ஊழியர்களை வெடிகுண்டு மிரட்டல் சில மணி நேரங்களுக்கு பீதியில் ஆழ்த்தியது. 

    சிலிகான் வேலியில் அமைந்திருக்கும் ஃபேஸ்புக் தலைமையகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நியூ யார்க் காவல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுடன் ஃபேஸ்புக் அலுவலகம் விரைந்த காவல் துறை அதிகாரிகள், அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரையும் வேகமாக வெளியேற்றினர்.



    பின் வெடிகுண்டு நிபுணர்கள் குழு, வெடிமருந்துகளை கண்டறியும் பயிற்சி பெற்ற மோப்ப நாய்களுடன் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அலுவலகம் முழுக்க வெடிகுண்டுகளை தேடும் பணிகளில் நிபுணர்களுடன், மோப்ப நாய்கள் தீவிரமாக செயல்பட துவங்கிய நிலையில், வெளியே காத்திருந்த ஃபேஸ்புக் பணியாளர்களை பீதியில் ஆழ்த்தியது.

    தீவிர சோதனைக்கு பின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பதை நிபுணர்கள் குழு உறுதிப்படுத்தியது. மூன்றடுக்கு மாடிகளை கொண்ட ஃபேஸ்புக் அலுவலகம் முழுக்க நடைபெற்ற சோதனை முடிவு ஃபேஸ்புக் பணியாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியது.

    முன்னதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யூடியூப் அலுவலகத்தை நோக்கி மர்ம பெண் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி இறுதியில் தானும் சுட்டுக் கொண்டார். இந்த சம்பவத்தில் அங்கிருந்த மூன்று பேருக்கு தீவிர காயம் ஏற்பட்டது.
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது சேவையில் நேரலை வீடியோ மூலம் ஷாப்பிங் செய்ய புது வசதியை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook



    ஃபேஸ்புக் நிறுவனம் வியாபார நிறுவனங்களுக்கென நேரலை வீடியோ வசதியை சோதனை செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசதியை கொண்டு வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை நேரலை வீடியோ மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூற முடியும். 

    நேரலை வீடியோக்களை பார்க்கும் பயனர்கள், அவர்களுக்கு விரும்பிய பொருட்களை அவர்களது சாதனத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு பின், அதை வாங்கலாம். பயனர்கள் எடுத்து வைத்திருக்கும் ஸ்கிரீஷாட் படத்தை மெசஞ்சர் வழியே விற்பனையாளருக்கு அனுப்பி, சாட் செய்து பின் பண பரிமாற்றம் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம். 

    புது ஷாப்பிங் அம்சம் தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்ட சில ஃபேஸ்புக் பேஜ்களில் மட்டும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. தாய்லாந்து ஃபேஸ்புக் பயனர்கள் நேரலை வீடியோ மூலம் விற்பனை செய்வது பயன் தரும் வகையில் இருந்தது என தெரிவித்து இருக்கிறன்றனர்.




    வீடியோ மூலம் பொருட்களை விளக்கும் போது அவற்றின் பயன்பாடு பற்றி, வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும். ஃபேஸ்புக் தாய்லாந்து மார்கெட் பிளேஸ் அம்சத்தில் ஹோம் ரென்டல்ஸ் போன்ற அனுபவத்தை வழங்க திட்டமிட்டு வருவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் தளத்தின் மார்கெட் பிளேஸ் அம்சம் உலகின் மற்ற பகுதிகளை விட தாய்லாந்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது என ஃபேஸ்புக் அம்சங்களுக்கான மேளாலர் மயான்க் யாதவ் தெரிவித்திருக்கிறார். லைவ் ஷாப்பிங் அம்சத்திற்கான சோதனை தற்சமயம் நடைபெற்று வருகிறது. லைவ் ஷாப்பிங் விவரத்தை ஃபேஸ்புக் பேஜஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும். 

    இதன் மூலம் ஃபேஸ்புக் பேஜ்களில் இருப்பவர்கள் நேரலை வீடியோவை உடனுக்குடன் பார்த்து, குறிப்பிட்ட பொருட்களை வாங்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ள முடியும். தங்களுக்கு நேரலையில் வரும் பொருள் பிடித்திருக்கும் பட்சத்தில் மெசஞ்சரில் சாட் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம். #Facebook
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் 2019 இந்திய பொதுத் தேர்தலுக்காக அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. #Facebook



    இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களை நிர்வகிக்கும் வழிமுறைகளில் பெருமளவு மாற்றங்களை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    இதேபோன்ற மாற்றங்களை ஃபேஸ்புக் ஏற்கனவே அமெரிக்கா, பிரேசில் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இனி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை பதிவிட விரும்பும் அனைவரும் தங்களது அடையாளம் மற்றும் இருப்பிடம் சார்ந்த விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

    அடையாளம் மற்றும் இருப்பிட விவரங்களை உறுதிப்படுத்த சில வாரங்கள் ஆகும் என்பதால், விளம்பரதாரர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே துவங்க வேண்டி இருக்கும். இனி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அரசியல் விளம்பரங்களை பதிவிட விரும்புவோர் தங்களது அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சமர்பிக்க வேண்டும்.



    சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை பதிவிடுபவர் பற்றிய விவரங்கள் விளம்பரங்களில் தெரியும். இத்துடன் ஆன்லைனில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில், சர்ச் வசதி கொண்ட விளம்பர மையம் ஒன்றும் வழங்கப்பட இருக்கிறது. 

    ஃபேஸ்புக் விளம்பர மையத்தில் அரசியல் சார்ந்து குறிப்பிட்ட விளம்பரதாரர் பதிவிடப்பட்டு இருக்கும் விளம்பரங்கள், ஒவ்வொரு விளம்பரத்திற்கும் செலவிடப்பட்ட தொகை, விளம்பரத்தை எத்தனை பேர் பார்த்து இருக்கின்றனர் என்ற விவரங்களை பார்க்க முடியும். 

    பொதுத் தேர்தலின் போது, அரசியல் சார்ந்த விளம்பரங்களை பதிவிடுவோர், ஏற்கனவே அதற்கான உரிமத்தை பெற்று இருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கும். விளம்பரதாரர்களை அடையாளப்படுத்தி, விளம்பரங்களில் அதிக விவரங்களை வழங்குவதன் மூலம் இந்திய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு முடிந்த வரை குறைக்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook
    ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலியில் ஜிஃப், எமோஜி, ஃபைல் ஷேரிங் என பல்வேறு புது வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. #Facebook #Apps



    மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலிக்கு வழங்கப்படும் புது அப்டேட் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜிஃப் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்ய மூன்றாம் தரப்பு கீபோர்டு தேவைப்படும். இதைக் கொண்டு ஜிஃப்களை சேமித்துக் கொள்ளவும் அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பவும் முடியும்.

    இதனுடன் எமோஜிக்களை வெவ்வேறு நிறங்களில் தேர்வு செய்யும் வசதியும், எமோஜிக்களுக்கான வசதியும் வழங்கப்படுகிறது. எமோஜிக்களை பயன்படுத்த, வலதுபுறமாக இருக்கும் இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து நிறங்கள், நிக்நேம் மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம்.



    மாற்றம் செய்யும் போது, நீங்கள் மேற்கொண்ட மாற்றங்களை நீங்கள் சாட் செய்வோரும் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இனி மெசஞ்சரில் ஃபைல், பிக்சர், வீடியோ அல்லது ஆடியோ ஃபைல் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். தரவுகளை பகிர்ந்து கொள்ள “+” பட்டனை கிளிக் செய்து நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய தரவுகளை தேர்வு செய்து அவற்றை அனுப்பலாம்.

    வெறும் 10 எம்.பி. மெமரி கொண்டிருக்கும் மெசஞ்சர் லைட் செயலியில் வீடியோ காலிங் வசதி இந்த ஆண்டின் துவக்கத்தில் சேர்க்கப்பட்டது. செயலியில் பிழைகள் அடிக்கடி சரி செய்யப்பட்டு விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை அடிக்கடி எடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. #Facebook #Apps
    ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 50 லட்சம் பேருக்கு டிஜிட்டல் நுட்பங்களில் பயிற்சி அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. #Facebook



    உலகில் சிறு வியாபாரங்களை மேற்கொள்வோரும், சர்வதேச பொருளாதாரத்தை எட்டும் நோக்கில், ஃபேஸ்புக் நிறுவனம் 2021ம் ஆண்டிற்குள் சுமார் 50 லட்சம் பேருக்கு டிஜிட்டல் யுக்திகளை கற்பிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

    அந்நிறுவனம் ஏற்கனவே 50 நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து 150 நகரங்களில், 48,000 கிராமங்களில் வசிக்கும் சுமார் பத்து லட்சம் பேருக்கு பயிற்சி அளித்திருக்கிறது. ஃபேஸ்புக் கம்யூனிட்டி பூஸ்ட் திட்டத்தின் கீழ் மக்களுக்கு டிஜிட்டல் யுக்திகளில் தொடர்ந்து பயிற்சி வழங்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் சேவைகள் மற்றும் திட்டங்களின் மூலம் மக்களுக்கு எளிய முறையில் தொடர்ந்து பாடங்கள் நடத்தப்படுகிறது. இவற்றில் பயனர்களுக்கு டிஜிட்டல் யுக்திகளுடன், தங்களது வியாபாரத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றிய விளக்கங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்றும் கற்பிக்கப்படுகிறது. 



    இதன் மூலம் பயனர்களுக்கு வலைதளம் உருவாக்கும் போது ஏற்படும் பெருமளவு தொகையை தவிர்ப்பது, மொபைல் பொருளாதாரம் மூலம் சந்தைப்படுத்துவதில் அறிவை வளர்த்து கொள்வது, ஃபேஸ்புக் பயன்படுத்துவோரிடம் தங்களது பொருட்களை சுமார் 200 கோடி பேருக்கு கொண்டு சேர்ப்பதில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    இவ்வாறு செய்வதன் மூலம் பயனரின் வியாபாரம் மற்றும் வளர்ச்சி பெறாமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரமும் சேர்ந்து வளர்ச்சி பெறுகிறது. ஃபேஸ்புக் திட்டத்தின் கீழ் டிஜிட்டல் விளம்பரம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு வழிமுறைகள் உள்ளூர் மக்களுக்கு பயனுள்ளதாகவும், அவர்களுக்கு புரியும் வகையில் 14 மொழிகளில் வழங்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் வலைதளத்தில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது. #Facebook



    ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து வரும் பதிவுகளுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து போகும் போஸ்ட்களுக்கு ஃபேஸ்புக் சார்பில் கமென்ட்கள் பரிந்துரை செய்யப்படும். குறிப்பிட்ட போஸ்ட்களின் அர்த்தத்தை தானாக புரிந்து கொள்ளும் ஃபேஸ்புக் மென்பொருள் அதற்கு பொதுவான கமென்ட்களை பரிந்துரை செய்யும், பின் அதனை பதிவிட நீங்கள் ஒற்றை கிளிக் செய்தாலே போதுமானது.

    தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் கூகுளின் ஜிமெயில் சேவையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை போன்றதாகும், எனினும் ஃபேஸ்புக்கில் சோதனை செய்யப்படும் புதிய வசதி போஸ்ட்களை தானாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற கமென்ட்களை பரிந்துரை செய்யும்.



    நேரலை வீடியோக்களில் பயனர்கள் கண்டறிந்த புதிய அம்சம் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் ஃபேஸ்புக் பரிந்துரை செய்திருக்கும் கமென்ட்கள் சிறியதாக இருந்தாலும், அவை சீராக வேலை செய்வதாகவே தெரிகிறது.

    புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தள பயன்பாட்டை அதிகரிக்க முடியும். எனினும், இந்த போஸ்ட்களில் பிழை ஏற்படுத்தும் டூல்கள் பயன்படுத்தாமல் இருப்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்த வேண்டும்.

    சமீபத்தில் ஃபேஸ்புக் தளத்தில் யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறோம் என பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இந்தியாவுக்கான தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #WhatsApp



    ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் இந்தியா தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டார். வாட்ஸ்அப் செயலி பயனர்கள் எண்ணிக்கை உலகில் மற்ற நாடுகளை விட அதிக பயனர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது.

    முன்னதாக அபிஜித் போஸ் மொபைல் பேமென்ட் நிறுவனமான இசிடேப் இணை நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இத்துடன் வாட்ஸ்அப் இந்தியாவின் முதல் தலைவராக அபிஜித் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் இந்தியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அபிஜித் போஸ் 2019ம் ஆண்டின் துவக்கத்தில் பதவியேற்க இருக்கிறார். கலிபோர்னியாவை தொடர்ந்து முதல் முறையாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் நாடு முழுக்க பணியாற்றும் குழுவினை அபிஜித் உருவாக்க இருக்கிறார். இதற்கான தலைமையகம் குர்கிராமில் அமைகிறது.



    அபிஜித் போஸ் மற்றும் அவரது குழுவினர் இணைந்து வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை மேம்படுத்தி, சிறு மற்றும் பெரும் வியாபார மையங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்கச் செய்வதில் பணியாற்றுவர் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்சமயம் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    “இந்தியாவின் அதிவேக டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பொதுமக்கள் இணைந்திருந்து ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் புதிய சேவைகளை வழங்குவதில் வாட்ஸ்அப் குறிக்கோளாக கொண்டுள்ளது. வெற்றிபெற்ற தொழிலதிபரான அபிஜித் இந்தியா முழுக்க வியாபாரங்களை மேற்கொள்ளும் நுணுக்கங்கள் அறிந்து வைத்திருக்கிறார்,” என வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரியான மேட் இடிமா தெரிவித்தார்.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் பதிவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார். #Facebook #MarkZuckerberg



    ஃபேஸ்புக் நிறுவனத்தில் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

    இது குறித்த கேள்விக்கு, தற்சமயம் 'ஃபேஸ்புக் தலைமை பொறுப்பில் இருந்து பதவி விலகுவது குறித்து எந்த திட்டமும் இல்லை' என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பதில் அளித்து இருக்கிறார்.

    'இத்துடன் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான ஷெரில் சான்ட்பெர்க்கும் தன்னுடன் தொடர்ந்து பணியாற்றுவார் என அவர் தெரிவித்தார். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ஷெரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், பல முக்கிய திட்டங்களுக்கு அவர் தலைமை வகிக்கிறார்,' என அவர் தெரிவித்தார். 



    'கடந்த பத்து ஆண்டுகளாக ஷெரில் எனக்கு மிகவும் முக்கியமான சக பணியாளராக இருக்கிறார். அவரது பங்களிப்பு மற்றும், நாங்கள் இருவரும் மேற்கொண்ட பணிகளை பார்த்து பெருமை கொள்கிறேன், மேலும் நாங்கள் இருவரும் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றுவோம் என நம்புகிறேன்,' என அவர் தெரிவித்தார்.

    2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டு, வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய உதவியாக இருந்தது என்ற குற்றச்சாட்டு அந்நிறுவனத்தின் நற்பெயருக்கு முதல் அடியாக அமைந்தது. பின் இதில் தொடர்புடைய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சட்ட நடவடிக்கையில் பலர் தொடர்ந்து சிக்கியதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் பயனர் விவரங்கள் களவாடப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி, இவற்றில் சிலவற்றை ஃபேஸ்புக் ஒப்புக் கொண்டு அவற்றை சரி செய்வதாக தெரிவித்து இருக்கிறது.

    ஃபேஸ்புக்கில் மிகப்பெரும் பிரச்சனைகள் இருக்கிறது, அதை நான் இல்லை என்று கூறவில்லை.. எனினும், ஃபேஸ்புக் பற்றி வெளியாகும் செய்திகளில் உண்மை இருந்தாலும், அவை அனைத்தும் உண்மை இருப்பதாக என நான் நினைக்கவில்லை. என அவர் தெரிவித்தார்.
    ஃபேஸ்புக்கில் ‘யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக்’ வசதி உலகம் முழுக்க வழங்கும் பணிகளை அந்நிறுவனம் துவங்கி இருக்கிறது. #Facebook



    யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் அம்சம் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது பயன்பாட்டு விவரங்களை அறிந்து கொள்ள முடியும். முன்னதாக இதேபோன்ற அம்சம் இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஃபேஸ்புக்கின் யுவர் டைம் அம்சத்திற்கான டேஷ்போர்டு ஃபேஸ்புக் செயலியில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிட்டுள்ளனர் என்பதை அன்றாடம், கடந்த வாரம் உல்ளிட்டவற்றை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

    அன்றாடம் சேவையை பயன்படுத்துவதற்கான நேரத்தை செட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தினசரி பயன்பாட்டு அளவை கடந்ததும் ஃபேஸ்புக் நினைவூட்டும், பின் இதை நிறுத்திக் கொள்ள முடியும். மேலும் ஃபேஸ்புக்கின் நோட்டிஃபிகேஷன், நியூஸ் ஃபீட் மற்றும் பிரென்ட் ரிக்வஸ்ட் செட்டிங்களை ஷார்ட்கட் மூலம் இயக்க முடியும். 

    இரண்டு ஷார்ட்கட் மெனுக்களும் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபேஸ்புக் அம்சத்தினை இயக்க ஃபேஸ்புக்கின் மோர் டேப் -- செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி -- யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் ஆப்ஷன்களை தேர்வு செய்ய முடியும்.




    கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வெல்பீயிங் அம்சங்களை தங்களது இயங்குதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் யுவர் ஆக்டிவிட்டி அம்சம் சமீபத்தில் வழங்கியது. இதுமட்டுமின்றி டிஜிட்டல் வெல்பீயிங் அம்சம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும், இந்த அம்சங்கள் பயனர்களுக்கு எந்தளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வெல்பீயிங் அம்சங்களில் செயலியை வலுக்கட்டாயமாக வெளியேறச் செய்யும் வசதிகள் வழங்கப்படவில்லை. 

    ஃபேஸ்புக்கின் யுவர் டைம் அம்சம் நியூஸ் ஃபீட் பிரவுசிங் நேரம், ஸ்டோரி பார்க்கும் நேரம் அல்லது ப்ரோஃபைல் படங்களை பார்ப்பது, போஸ்ட், கமென்ட் மற்றும் க்ரூப்களில் உரையாடுவது உள்ளிட்டவற்றில் செலவிடும் நேரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கும் வசதி வழங்கப்படவில்லை. எனினும், இந்த வசதிகள் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் இருந்தபடியே வீடியோக்களை பார்த்து ரசிக்க புதிய வசதியை வழங்கும் பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Messenger



    ஃபேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் செயலியில் வீடியோக்களை பார்த்து ரசிக்க புது வசதியை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புது வசதியை கொண்டு பயனர்கள் தங்களது சாதனங்களில் க்ரூப் சாட் மூலம் நண்பர்களுடன் இணைந்து வீடியோக்களை பார்க்க முடியும்.

    ஃபேஸ்புக் மெசஞ்சரில் பயனர்கள் அதிக நேரத்தை செலவிட வைக்கும் நோக்கில் ஃபேஸ்புக் புது அம்சத்தை வழங்க இருக்கிறது. புது அம்சம் மெசஞ்சரின் கோட்பேஸ் மூலம் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஒரே வீடியோவை பயனர் தனது நண்பருடன் ஒன்றிணைந்து பார்க்க முடியும். இதேபோன்று ஒரே வீடியோவை பற்றி சாட் செய்ய முடியும். 

    இவ்வாறு வீடியோ பார்க்கும் போது அனைவரும் வீடியோவை இயக்க முடியும். மெசஞ்சரின் புது அம்சம் ஃபேஸ்புக் நிறுவனத்திற்குள் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.



    ஒன்றாக வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் எங்கிருந்து வீடியோக்களை தேட முடியும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், ஃபேஸ்புக்கில் இருந்து யு.ஆர்.எல். முகவரியை பதிவு செய்ய முடியும் என்றும், மெசஞ்சர் வழியாக வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

    இதுமட்டுமின்றி மெசேஜ் கம்போஸ் செய்யும் அல்லது டிஸ்கவர் டேப் மூலம் புது வீடியோக்களை பிரவுஸ் செய்ய முடியும் என்றும், யூடியூப் போன்ற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து வீடியோக்களை பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் மேம்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீடியோக்களை ஒன்றிணைந்து பார்க்கச் செய்வதன் மூலம், மெசஞ்சர் தளத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம் ஆகும். வீடியோ பார்க்கும் சேவையில், விளம்பர வீடியோக்கள், திரைப்பட டிரெயிலர்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். தற்சமயம் வரை இந்த அம்சம் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
    ×