search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102561"

    சியோமி நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.



    சியோமி நிறுவனத்தின் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் மே 27 ஆம் தேதி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனை சியோமி அறிமுகம் செய்கிறது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

    இன்ஸ்டாகிராமில் ப்ளிப்கார்ட் தளத்தின் புதிய விளம்பரத்தில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இடம்பெற்று இருக்கிறது. இது புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருப்பதை உறுதி செய்திருக்கிறது. இதே விளம்பரத்தில் கூகுள் மற்றும் போகோ உள்ளிட்ட பிராண்டுகளும் இடம்பிடித்து இருக்கிறது. இந்தியாவில் சியோமி நிறுவனம் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 



    பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனில் லிக்விட் கூல் 3.0 தொழில்நுட்பம் மற்றும் ஹீட்-கண்டக்டிங் காப்பர் பிளேட் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் அதிக சுடாகாமல் பார்த்துக் கொள்ளும். இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ட்ரூவியூ டிஸ்ப்ளே சப்போர்ட் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் எலைட் கேமிங் வழங்கப்பட்டுள்ளது.

    மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080x2340 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அட்ரினோ 640 GPU மற்றும் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. #Xiaomi



    சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் சியோமி புதிய ஸ்மார்ட்போனின் டீசரை வெளியிட்டிருந்தார். இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், சியோமி மற்றொரு புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டிருக்கிறது. இந்த டீசரின் படி புதிய ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்பட இருப்பது பற்றிய விவரம் இடம்பெற்றிருக்கிறது. 



    முன்னதாக வெளியான தகவல்களில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13 எம்.பி. அல்ட்ரா-வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.



    சியோமியின் மனு குமார் ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் ஆகியோர் ப்ளிப்கார்ட் தலைமை செயல் அதிகாரியை சந்தித்ததை மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி நிறுவனம் விரைவில் சர்வதேச புகைப்பட போட்டி ஒன்றை அறிவிக்க இருப்பதாகவும் இதில் வெற்றி பெறுவோர் Mi 9 ஸ்மார்ட்போனை வென்றிட முடியும் என சியோமி தெரிவித்துள்ளது.
    ஒப்போவின் துணை பிராண்டான ரியல்மி மார்ச் 4 ஆம் தேதி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. #Realme3 #Smartphone



    ஒப்போ நிறுவனத்தின் துணை பிராண்டு ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 4 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் ரியல்மி தனது புதிய ஸ்மார்ட்போனிற்கென டீசர்களை வெளியிட்டு வந்தது. இதில் ஸ்மார்ட்போன்களில் செங்குத்தாக பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ரியல்மியின் முந்தைய ஸ்மார்ட்போன்களான ரியல்மி 2 மற்றும் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் கிடைமட்டமாக டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருந்தது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ரியல்மி 1 மற்றும் ரியல்மி 2 மாடல்களிலும் டைமண்ட் கட் வடிவமைப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய ஸ்மார்ட்போனுடன் கவர்ச்சிகரமான கேஸ் வழங்கப்படுகிறது. 



    ஸ்மார்ட்போனின் அழைப்பிதழில் “Power Your Style” எனும் டேக்லைன் இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், ஏ.ஐ. என்ஜின், ஜி.பி.யு. அக்செல்லரேஷன் மற்றும் கேமிங் மோட் உள்ளிட்டவை வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி உறுதிப்படுத்தி இருந்தார்.

    ரியல்மி 2 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.8,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியானது. #GalaxyS10 #Flipkart



    சாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீட்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் தளத்தில் பதிவிடப்பட்டது. கேலக்ஸி எஸ்10 அறிமுக நிகழ்வின் இந்திய நேரத்துடன் ப்ளிப்கார்ட் தளத்தில் சிறப்பு பேனர் வெளியிடப்பட்டிருந்தது. இத்துடன் கேலக்ஸி எஸ்10 அறிமுக நிகழ்வுக்கான நோட்டிஃபை பட்டனும் இடம்பெற்றிருந்தது.

    புதிய டீசர் வெளியாகியிருப்பதையொட்டி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சர்வதேச வெளியீட்டுடன் அறிமுகமாகும் என்பதை உணர்த்துகிறது. இத்துடன் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் இயர்போன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    கேலக்ஸி அன்பேக்டு 2019 விழா சான்பிரான்சிஸ்கோ நகரில் பிப்ரவரி 20, காலை 11.00 மணிக்கு (இந்திய நேரப்படி பிப்ரவரி 21, நள்ளிரவு 12.30 மணி) துவங்குகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுக நிகழ்வுக்கான பேனரில் விழா அழைப்பிதழும் இடம்பெற்றிருந்தது.

    ப்ளிப்கார்ட்டில் மட்டும் விளம்பரப்படுத்தப்பட்டு இருப்பதால், கேலக்ஸி எஸ்10 சீரிஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமானதும் இந்தியாவில் விற்பனை செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மார்ச் 8 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட சில சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. 

    சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போன்களுக்கான முன்பதிவுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி துவங்கும் என கூறப்பட்டது. இம்முறை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10இ, கேலக்ஸி எஸ்10 லைட் மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையை தற்காலிகமாக குறைத்திருக்கிறது. #Nokia #flipkartoffers



    ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் நோக்கியா டேஸ் விற்பனையில் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வழங்கப்படுகிறது.

    இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து தள்ளுபடி பெறுவதோடு, ப்ளிப்கார்ட் சார்பில் பைபேக் வேல்யூ சலுகை ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது.

    நோக்கியா டேஸ் விற்பனையில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் வெளியிடப்பட்டது. இதேபோன்று நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் வெளியிடப்பட்டது.



    இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருப்பதுடன், வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், பைபேக் வேல்யூ சலுகை ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    முன்னதாக நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என ஹெச்.எம்.டி. குளோபல் அறிவித்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    ப்ளிப்கார்ட் தளத்தில் அசுஸ் சிறப்பு விற்பனை துவங்கியது. அசுஸ் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ.8000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. #ASUS #Flipkart



    அசுஸ் இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்து அசுஸ் டேஸ் எனும் சிறப்பு விற்பனையை நடத்துகின்றன. இன்று (ஜனவரி 9) துவங்கியிருக்கும் சிறப்பு விற்பனை ஜவனரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    ப்ளிப்கார்ட் அசுஸ் டேஸ் சிறப்பு விற்பனையில் அசுஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் அசுஸ் அறிமுகம் செய்த சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2, சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.



    அசுஸ் டேஸ் விற்பனையில் தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

    - அசுஸ் சென்ஃபோன் 5 இசட் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,000 குறைக்கப்பட்டு ரூ.28,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    - அசுஸ் சென்ஃபோன் 5 இசட் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,000 குறைக்கப்பட்டு ரூ.24,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 6 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 3 ஜி.பி. + 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.4,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    இதுதவிர மொபைல் பாதுகாப்பு திட்டம் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 (ரூ.1,299) மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 (ரூ.799) தற்சமயம் ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகம் செய்த நோக்கியா 106 மொபைல் போன் தற்சமயம் ரூ.1,309க்கு விற்பனை செய்யப்படுகிறது. #NokiaMobile #offer



    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 106 (2018) மொபைல் போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1,700 விலையில் அறிமுகமான நோக்கியா 106 (2018) மொபைல் போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

    இந்நிலையில், நோக்கியா 106 (2018) தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.1,309க்கும், அமேசான் வலைத்தளத்தில் ரூ.1,478 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நோக்கியா 106 மொபைல் போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக அறிமுகமான நோக்கியா 106 (2018) முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது.

    நோக்கியா 106 (2018) மாடலில் 1.6 இன்ச் 160×128 பிக்சல் TFT டிஸ்ப்ளே, 4-வழி நேவிகேஷன் பட்டன் மற்றும் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பாலிகார்போனேட் பாடி, கான்டொர்டு வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா மொபைலில் அந்நிறுவனத்தின் பாரம்பரிய ஸ்னேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் நைட்ரோ ரேசிங், டேன்ஜர் டேஷ், டெட்ரிஸ் மற்றும் பல்வேறு இதர கேம்கள் பிரீ-லோடு செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 106 (2018) அம்சங்கள்:

    - 1.8-இன்ச் QQVGA (160×128 பிக்சல் ) கலர் TFT டிஸ்ப்ளே
    - மீடியாடெக் 6261D பிராசஸர்
    - 4 எம்.பி. ரேம்
    - டூயல் பேன்ட், EGSM 900/1800
    - எஃப்.எம். ரேடியோ
    - கேம்கள்
    - ஃபிளாஷ்லைட்
    - மைக்ரோ யு.எஸ்.பி.
    - 3.5 எம்.எம். ஏ.வி. கனெக்டர்
    - 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள் மற்றும் தலைசிறந்த மொபைல் போன் பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Flipkart #smartphone



    2018 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தைக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. பல்வேறு பிராண்டுகள் தங்களது சாதனங்களில் புதுவித அம்சங்களை அறிமுகம் செய்து ஆண்டு முழுக்க பல்வேறு டிரெண்ட்களை உருவாக்கின. எனினும் இவற்றில் பயனர் விரும்பும் சாதனங்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் அம்சங்கள், அதன் வடிவமைப்பு என பல்வேறு காரணங்களை கடந்து அதனை எத்தனை பேர் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பதே ஸ்மார்ட்போன் மற்றும் அதனை உருவாக்கும் பிராண்டுகளின் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் மாடல்கள், அதிக பிரபலமாக இருந்த பிராண்டு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.



    ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்

    2018 ஆம் ஆண்டு ப்ளிப்கார்ட் தளத்தில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டாக சியோமி இருந்தது. எனினும் சியோமியை தொடர்ந்து பல்வேறு பிராண்டுகளும் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன. அந்த வரிசையில் சியோமிக்கு அடுத்த இடத்தில் ரியல்மி, ஹானர் மற்றும் அசுஸ் போன்ற பிராண்டுகள் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளன.

    தனிப்பட்ட ஸ்மார்ட்போன்களாக பார்க்கும் போது ரியல்மி 2 ஸ்மார்ட்போன் இருபது லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன. இதேபோன்று அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் பத்து லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பிரபல ஸ்மார்ட்போன்கள் என்ற அடிப்படையில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி 5ஏ மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முன்னணி இடங்களில் உள்ளன.



    ப்ளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 மற்றும் ஹானர் 9 லைட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையான பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களாக இருந்துள்ளன. மேலும் ப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஆண்டு பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வரிசையில் அதிகம் விற்பனையான விலை குறைந்த ஸ்மார்ட்போன் மாடலாக சியோமியின் ரெட்மி 5ஏ, ரெட்மி 6 மற்றும் ரியல்மி சி1 உள்ளிட்டவை இருக்கின்றன.



    பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள்

    2018 ஆம் ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி மற்றும் ரியல்மி உள்ளிட்டவை அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் பிராண்டுகளாக இருந்துள்ளன. பண்டிகை காலத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 5 ப்ரோ, ரியல்மி 2, ரெட்மி 6, ரியல்மி 2 ப்ரோ மற்றும் ரெட்மி 5ஏ உள்ளிட்டவை இடம்பிடித்துள்ளன.
    இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தக துறையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. #OnlineBusiness #onlineshopping



    இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக முறை பிரபலமாகி இருக்கிறது. இந்த வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் ஈடுபட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களும் இந்தியாவில் களம் இறங்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    அதே நேரத்தில் உள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. ஆனால், உள்நாட்டு நிறுவனங்கள் போட்டி போட முடியாத அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதாவது சில குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே விற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொள்கின்றன.

    எனவே அந்த நிறுவனத்தில் மட்டுமே குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்ற நிலை இருப்பதால் சில பொருட்களுக்கு இஷ்டத்துக்கு விலை வைக்கிறார்கள். மேலும் உற்பத்தி நிறுவனங்களையும் தங்களுக்கு மட்டுமே அந்த பொருளை தர வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.



    இதுபோன்ற காரணங்களால் உள்ளூர் நிறுவனங்கள் செயல்பட முடியாமல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களுக்கு எதிராக இந்திய ஆன்லைன் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

    புகாரை விசாரித்த மத்திய வர்த்தக அமைச்சகம், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி எந்த ஒரு நிறுவனமும் தனது உற்பத்தி பொருளில் 25 சதவிகிதத்தை மட்டுமே ஆன்லைனில் விற்க வேண்டும். மற்றவற்றை வெளிச்சந்தைக்கு விட வேண்டும்.

    குறிப்பிட்ட பொருள் இந்த ஆன்லைன் நிறுவனத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்று விளம்பரம் செய்ய கூடாது. அதுபோன்ற நிலையையும் உருவாக்க கூடாது. எந்த ஒரு தயாரிப்பாக இருந்தாலும் எல்லா ஆன்லைன் நிறுவனங்களிலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.



    தள்ளுபடி விலைகளை அறிவிக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சலுகை என்பது போன்ற அறிவிப்புகளையும் வெளியிட கூடாது. இவ்வாறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடு வருகிற பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

    ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் குறிப்பிட்ட வகை செல்போன்களை ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்து அவர்கள் மட்டுமே ஏகபோகமாக விற்பனை செய்து வந்தனர். இதன் மூலம் கொள்ளை லாபம் பெற்றதுடன் மற்ற ஆன்லைன் நிறுவனங்களையும் பாதிக்க செய்தது.

    மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் இனி சிறப்பு சலுகை விற்பனை மற்றும் இதர பிரத்யேக தள்ளுபடி உள்ளிட்டவை நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #smarttv



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் புதிய டி.வி. 32 இன்ச் ஹெச்.டி., 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மற்றும் 50 இன்ச் ஃபுல் ஹெச்.டி. வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

    ஆன்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் டி.வி. மாடல்களில் ஆப்டொய்ட் ஆப் ஸ்டோர் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து செயலிகளை டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் வயர்லெஸ் கன்ட்ரோல் வசதி கொண்டு ஸ்மார்ட்போன்களை டி.வி.யுடன் எளிமையாக இணைத்து, முழு டி.வி. மற்றும் கேம்களை விளையாட முடியும்.



    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. சிறப்பம்சங்கள்:

    - 32 இன்ச் (1366x768 பிக்சல்) ஹெச்.டி. ரெடி 
    - 40 இன்ச் / 50 இன்ச் (1920x1080) ஃபுல் ஹெச்.டி. டைரக் எல்.இ.டி. பேனல்
    - குவாட்-கோர் பிராசஸர் டூயல் கோர் GPU
    - 1 ஜிபி ரேம்
    - 5.5 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு டி.வி. சார்ந்த ஆன்ட்ராய்டு 7.0
    - வைபை 802.11b/g/n, 3 x ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி., ஈத்தர்நெட் போர்ட்
    - 24W இன்பில்ட் பாக்ஸ் ஸ்பீக்கர்கள்

    மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் வேரியன்ட் விலை ரூ.13,999 என்றும், 40 இன்ச் ஃபுல் ஹெச்.டி. மாடல் ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேன்வாஸ் 3 ஸ்மார்ட் டி.வி. 50 இன்ச் விலை விரைவில் நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. 
    மைக்ரோமேக்ஸ் துணை பிரான்டான யு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #YuACE



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிரான்டான யு இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. யு ஏஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்ப்ளே, மீடியாடெக் MT6739 சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.



    யு ஏஸ் சிறப்பம்சங்கள்:

    - 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
    - பவர் விஆர் ரோக் GE8100 GPU
    - 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி / 32 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    யு ஏஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் கிரே, எலெக்ட்ரிக் புளு மற்றும் ரோஸ் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 2 ஜிபி ரேம் கொண்ட யு ஏஸ் ஸ்மார்ட்போன் விலை ரூ.5,999 என்றும் 3 ஜிபி ரேம் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் யு ஏஸ் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மார்கியூ பிரான்டு புத்தம் புதிய வாஷிங் மெஷின்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Flipkart



    இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அறியப்படும் ப்ளிப்கார்ட் இந்தியாவில் புத்தம் புதிய வாஷிங் மெஷின் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ப்ளிப்கார்ட்டின் லேபெல் பிரான்டு மார்கியூ பெயரில் விளம்பரப்படுத்தப்படும் புதிய வாஷிங் மெஷின்கள் பண்டிகை கலத்தில் விற்பனைக்கு வருகிறது.

    புதிய வாஷிங் மெஷின் மாடல்கள் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் தேவையாக இருக்கும் சிறப்பான தரம், அதிநவீன தொழில்நுட்பம், அனைவரும் வாங்கக் கூடிய விலை மற்றும் குறைவான மின்சார பயன்பாடு உள்ளிட்டவற்றை குறைக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ரூ.6,999 எனும் துவக்க விலையில் கிடைக்கும் வாஷிங் மெஷின்கள் 6.5 மற்றும் 7.5 கிலோ என இருவித கொள்ளலவுகளில் கிடைக்கிறது. ப்ளிப்கார்ட்டின் மார்கியூ வாஷிங் மெஷின்கள் நடுத்தர குடும்பங்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய அளவாக இவை இருக்கின்றன.

    முன்பக்கம் முழுமையான ஆட்டோமேடிக் ரேன்ஜ் துவங்கி, செமி ஆட்டோமேடிக் மற்றும் டாப் லோடு வாஷிங் மெஷின்கள் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் அப்கிரேடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×