search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி"

    கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கேரள சட்டமன்ற வைரவிழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். #PresidentRamNathKovind #PresidentVisitKerala
    திருவனந்தபுரம்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை மாலை கேரளா வந்து சேரும் அவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டமன்ற வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவை குறிக்கும் வகையில் ‘ஜனநாயக திருவிழா’வை தொடங்கி வைக்கிறார். 

    விழாவில் மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

    அதன்பின்னர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கிறார். ‘சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான அதிகாரங்களை பெறுவதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    ஆகஸ்ட் 7-ம் தேதி திரிச்சூரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #PresidentRamNathKovind #PresidentVisitKerala
    இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி பிரதமர் மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #President #RamNathKovind #Modi
    புதுடெல்லி:

    இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்றார். அவர் ஜனாதிபதியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி, ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவருக்கு ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    அதில், சிறப்பான பணி, ஞானம் மற்றும் பணிவின் மூலம் இந்தியர்களின் அன்புக்குரியவராக விளங்கி, ஓராண்டு பதவி காலத்தை நிறைவுசெய்துள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். மேலும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரங்கள் கிடைப்பதற்கு ஜனாதிபதி பாடுபடுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.   #President #RamNathKovind #Modi
    உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்தனர். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    தாம்ப்ரே:

    பின்லாந்தில் நடந்து வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பதக்கமேடையில் நின்ற அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்த ஹிமாதாசின் சொந்த ஊர், அசாம் மாநிலம் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமம் ஆகும். உடன் பிறந்தவர்கள் 4 பேர். ஹிமா தாசின் மகத்தான வெற்றியால் அந்த கிராமமே உற்சாகம் பூண்டுள்ளது. 18 வயதான ஹிமா தாஸ் கூறுகையில் ‘தேசத்திற்காக பதக்கத்தை கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும். இந்திய மக்களுக்கு இந்த பரிசை அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. உலக சாம்பியன் ஆனதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிபேன்’ என்றார்.



    புயல்வேக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹிமா தாசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையால் தேசம் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது. அவரது சாதனை இளம் வீரர், வீராங்கனைகளுக்கு நிச்சயம் உந்து சக்தியாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியில், ‘51.46 வினாடிகளில் இலக்கை எட்டியது என்பது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. புதிய சகாப்தத்தில் இது வெறும் தொடக்கம் தான். இன்னும் நிறைய பதக்கங்களை அவர் வெல்வார்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக இன்று கிரீஸ் நாட்டுக்கு சென்றடைந்தார். #RamnathKovind #3NationVisit

    ஏதென்ஸ்:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ், சுரிநாம், கியூபா ஆகிய நாடுகளுக்கு 7 நாள் பயணமாக இன்று புறப்பட்டு சென்றார். முதல் கட்டமாக கீரிஸ் நாட்டிற்கு சென்ற அவருக்கு அந்நாட்டு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது மனைவி சவிதாவும் அவருடன் சென்றுள்ளார்.



    16 முதல் 19-ம் தேதி வரை கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்பின் 19 முதல் 21-ம் தேதி வரை சுரிநாம் நாட்டிலும், இறுதியாக 21 மற்றும் 22-ம் தேதிகளில் கியூபா நாட்டிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். 

    அதன்பின் 7 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துகொண்டு கியூபா நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியா வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamnathKovind #3NationVisit
    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு சங்தோக்பா மனிதாபிமான விருதையும், ரூ.1 கோடி பரிசையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
    சூரத்:

    சமூக முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் ‘சங்தோக்பா மனிதாபிமான விருது’ என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றது.

    அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு விருதையும், ரூ.1 கோடி பரிசையும் வழங்கினார்.

    கைலாஷ் சத்யார்த்தி, அந்த விருதை குழந்தைகளுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சட்ட, மருத்துவ உதவி அளிப்பதற்காக, தான் தொடங்கிய நிதியத்துக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார்.
    காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சியின் தலைவர்களை பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதியுள்ளார். #ManmohanSingh #PMModi
    புதுடெல்லி:

    உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து நாட்டில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், பிரதமர் மோடி மவுனம் காத்ததை விமர்சித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “நீங்கள் எனக்கு அளித்த அறிவுரைகளை பின்பற்றி தற்போது வாய்திறந்து பேசுங்கள்” என மன்மோகன் குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த வாரம் கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரங்களில் பேசும் போது, காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்து மோடி பேசியிருந்தார். குறிப்பாக நாட்டின் முதல் பிரதமர் நேரு, பகத்சிங் உள்ளிட்டவர்களை சிறையில் சென்று சந்திக்கவில்லை என கூறினார். ஆனால், அது பொய்யான குற்றசாட்டு என பல வரலாற்று ஆசிரியர்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.


    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசுகிறார். இது பிரதமர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தகுதியானது அல்ல” என அதில் மன்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேற்கண்ட புகார் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமரிடம் கேட்டறிய வேண்டும் என மன்மோகன் சிங் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். #ManmohanSingh #PMModi
    ×