search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோர்"

    வெயில் காலத்தில் மோர் குடிப்பது உடல் சூட்டை தணிக்கும். உடல் சூட்டை குறைக்கும் குளுகுளு மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கெட்டித் தயிர் - 1 கப்
    தண்ணீர் - 1 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு
    மோர் மிளகாய் - 1
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்

    அரைப்பதற்கு...


    பச்சை மிளகாய் - 1/2
    கறிவேப்பிலை - 3 இலை
    இஞ்சி - 1/4 இன்ச்



    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை ஒரு பௌலில் போட்டு, அதனை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

    அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மோரில் சேர்த்து, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால், மசாலா மோர் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோடைகாலத்தில் கிடைக்கும் நுங்கை வைத்து சுவையான சத்தான உணவுகளை செய்யலாம். இன்று நுங்கு சேர்த்து மோர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோல் நீக்கி பொடியாக நறுக்கிய நுங்குத் துண்டுகள் - ஒரு கப்,
    கடைந்த மோர் - கால் லிட்டர்,
    உப்பு - தேவையான அளவு,
    கொத்தமல்லித்தழை, தோல் சீவிய இஞ்சி - தலா சிறிதளவு,
    பச்சை மிளகாய் - சிறியது ஒன்று,



    செய்முறை :

    இஞ்சியுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து அரைக்கவும்.

    அரைத்த விழுதுடன் அதனுடன் மோர் சேர்த்து ஒரு சுற்று விடவும்.

    பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து நுரை வர அடித்தெடுத்து கண்ணாடி டம்பளர்களில் ஊற்றி பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வெயில் காலத்தில் வயிற்று கோளாறு, உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் கற்றாழை மோர் பருகலாம். இன்று இந்த மோரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புளிக்காத தயிர் - அரை கப்
    கற்றாழை - 4 சிறு துண்டுகள்
    இஞ்சி - சிறு துண்டு
    பெருங்காய தூள் - சிறிதளவு
    கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கற்றாழைத்துண்டுகளை நீரில் பத்து முறை நன்கு கழுவ வேண்டும். இல்லையென்றால் கசக்கும்.

    மிக்ஸியில் இஞ்சித்துண்டை தூளாக்கிய பின் கற்றாழைத்துண்டுகளை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் தயிர், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பும் சேர்த்து அரைத்து அதில் பின்னர் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றி நிறுத்தவும். (தயிர் அரைத்த பின் கற்றாழைப் போட்டால் கற்றாழை நன்றாக அரையாது).

    இதனை டம்ளரில் ஊற்றி அதில் கொத்துமல்லித் தழை போட்டு பருகவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
    மோரில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும். வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும். மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.



    இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

    மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர். மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றை குளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.

    கோடை காலத்தில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும். ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.
    ×