search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கப்பதக்கம்"

    டெல்லியில் இன்று நடைபெற்ற ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதி தங்கப்பதக்கம் வென்றார். #JuniorAsianChampionships #SachinRathi
    புதுடெல்லி:

    ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டி தலைநகர் டெல்லியில் கடந்த 17ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது.

    இன்று நடைபெற்ற 74 கிலோ எடைப்பிரிவுக்கான ’பிரீ ஸ்டைல்’ இறுதி போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதியும், மங்கோலியா வீரர் பாட் எர்டெனும் மோதினர்.

    இந்த போட்டியில் இந்திய வீரர் சச்சின் ரதி, மங்கோலிய வீரரை அபாரமாக வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற சச்சின் ரதிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #JuniorAsianChampionships #SachinRathi
    சிறந்த சேவைக்காக ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ தங்கப்பதக்கம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
    சென்னை:

    டெல்லியில் உள்ள ‘ஸ்கோச் குரூப்’ என்கிற அமைப்பு, மாநில மற்றும் தேசிய அளவில் சுகாதாரம், கல்வி, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு, நிதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் சிறந்த சேவையை அளிக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ என்கிற பெயரில் தங்கப்பதக்கம் வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ‘ஸ்கோச் ஆர்டர் ஆப் மெரிட்’ தங்கப்பதக்கம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. முதலாவது கட்டப்பணிகள் மூலம் பயணிகளுக்கு தரமான சேவை அளிப்பதுடன், ரெயில் நிலையங்களையும் தரமான முறையில் அமைத்து செயல்படுத்தி வருவதை கவுரவிக்கும் வகையில் இந்த தங்கப்பதக்கத்தை வழங்குவதாக ஸ்கோச் குரூப் அமைப்பு தெரிவித்தது.

    அந்த அமைப்பின் தலைவர் சமீர் கோச்சார், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் தங்கப்பதக்கத்தை வழங்கினார்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, ‘மிகச் சிறந்த மற்றும் செயல்திறன் மிக்க செயல்திட்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கி வருவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு இந்த உயரிய தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது’ என்றனர். 
    ரஷியாவில் நடந்து வரும் உலக அளவிலான ‘கிக் பாக்சிங்’ போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    சென்னை:

    உலக அளவிலான ‘கிக் பாக்சிங்’ விளையாட்டு போட்டி ரஷியாவில் அனப்பா நகரில் நடந்து வருகிறது. இதில் 55 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 80 கிலோவுக்கு கீழ் உள்ள எடைப் பிரிவில் சென்னை மாணவர் ஏ.பி.வசீகரன் பங்கேற்றார். இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இதேபோல் 75 கிலோ எடை பிரிவில் அருண் தனுஷ்க் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற வசீகரன் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    நாளை சென்னை திரும்பும் வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    ×