search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதியுதவி"

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #sterliteprotest #MKStalin #DMK
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

    இந்நிலையில், போராட்டக் களத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பிலும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுவரை 5 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



    முன்னதாக துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #sterliteprotest #MKStalin #DMK
    உ.பி. மாநிலம் வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 18 பேர் பலியான நிலையில், அவர்களது குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். #VaranasiFlyoverCollapse #PMModi

    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நேற்று புதிதாக கட்டப்பட்டுவந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், மேம்பாலத்தின் கீழ் காரில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களது சடலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரு.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.  மேலும் படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்காக தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.



    மேம்பால விபத்து தொடர்பாக இதுவரை நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. #VaranasiFlyoverCollapse #PMModi
    ×