search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ"

    சோனி பிக்சர்ஸ் நிறுவனம் யூடியூபில் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருக்கிறது.


    சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ரெட்-பேன்ட் டிரெயிலருக்கு பதில் காலி தி கில்லர் முழு திரைப்படத்தையும் யூடியூபில் பதிவேற்றம் செய்திருக்கிறது. 

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் சோனி நிறுவனம் 89 நிமிடங்கள் 46 நொடிகள் ஓடக்கூடிய முழு திரைப்படத்தையும் ஜூலை 3-ம் தேதி தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. CBR.com எனும் வலைத்தளம் இந்த விஷயத்தை முதலில் கண்டறிந்ததாக கூறப்படுகிறது.

    யூடியூப் தளத்தில் இருந்து திரைப்படம் எடுக்கப்படும் வரை முழு திரைப்படமும் எட்டு மணி நேரம் லைவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் திரைப்படத்தை சுமார் ஏழு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்து இருந்தாக கூறப்படுகிறது.

    தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட திரைப்படத்தை தவரவிட்டவர்கள் இனி யூடியூபில் பணம் செலுத்தி இந்த திரைப்படத்தை பார்க்க முடியும். ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடக்கூடிய காலி தி கில்லர் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. ஜான் மேத்யூஸ் இயக்கிய இந்த திரைப்படத்தின் டிவிடி கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.
    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர்.
    மசினகுடி:

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்தனர். இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோவையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது நண்பர்கள் 9 பேருடன் நீலகிரி மாவட்டம் முதுமலையை சுற்றி பார்க்கவும், தனியார் நிறுவனத்திற்கு விளம்பர படம் எடுக்கவும் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மசினகுடிக்கு வந்துள்ளார். மசினகுடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர்கள் நேற்று முன்தினம் காலை முதலே முதுமலை புலிகள் காப்பகத்தை ரகசியமாக ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்து வந்து உள்ளனர். புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயார் பகுதிக்கு நேற்று மாலை சென்ற அவர்கள் வனப்பகுதியையும், மாயார் அணை மற்றும் நீர்மின்நிலையத்தையும் வீடியோ எடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மசினகுடி வனச்சரகர் மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் 10 பேரையும் மசினகுடி வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்த அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதமாக விதிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    அபராத தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவையை சேர்ந்த சில காவல்துறை உயர் அதிகாரிகளிடம் செல்போனில் பேசினர். அதனையடுத்து அந்த அதிகாரிகள் சம்பந்தபட்ட 10 பேரையும் விட்டுவிடும்படி சிபாரிசு செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மசினகுடி வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ஆளில்லா விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு சிறிய தொகையாவது அபராதம் விதிக்க வேண்டும் என்பதற்காக சந்தோசுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். அத்துடன் ஆளில்லா குட்டி விமானத்தை இயக்கிய கோவையை சேர்ந்த அகமது மற்றும் அவரது நண்பருக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் 1 ரூபாய் அபராதம் விதித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சிறந்த சுற்றுலா தலமாகவும், வனவிலங்குகளின் புகலிடமாகவும் விளங்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. பொதுவாக புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் வீடியோ எடுத்தவர்களுக்கு வனத்துறையினர் பெருந்தொகை அபராதமாக விதிக்காமல் 1 ரூபாயை மட்டும் அபராதம் விதித்து உள்ளனர். இதனை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளோம். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்தது கண்டனத்துக்குரியது. சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய அரசு அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தவறான முன் உதாரணமாகி விடும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசரை விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை நிலானி எப்படி கைதானார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
    கோவை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100-வது நாள் நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அப்போது சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த டி.வி. நடிகை நிலானி(வயது 34) என்பவர் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார்.

    அதில் போலீஸ் சீருடை அணிந்திருந்த நிலானி, நம்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் வேதனை அளிக்கிறது. 10 பேரை கொன்று உள்ளனர். அமைதியான வழியில் போராடுகிறோம். நான் படப்படிப்பில் இருக்கிறேன். இல்லையென்றால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்று இருப்பேன். நான் காவல்துறை உடை அணிந்து இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். உடம்பு கூசுகிறது.

    அடுத்து ஒரு போராட்டம் வெடித்தால் அது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கவேண்டும் என்றும் 7.14 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருந்தார். போலீஸ் ஒருவரே இப்படி பேசி இருப்பதாக கருதி இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதுகுறித்து ரிஷி என்பவர் கடந்த மே 22-ந் தேதி வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நிலானி மீது வன்முறையை தூண்டுதல், ஆள் மாறாட்டம் செய்தல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நிலானி தன்னிலை விளக்கமாக மறுநாள் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டிருந்தார்.

    பின்னர், போலீசார் தேடுவதை அறிந்து அவர் தலைமறைவானார். அவரை கைது செய்ய வடபழனி இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    சைபர் கிரைம் உதவியுடன் தனிப்படை போலீசார் நிலானி மற்றும் அவரது உறவினர்களின் செல்போன் எண்ணை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் நிலானி, குன்னூர் அருகே கம்பிசோலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று குன்னூர் வந்து நிலானியை கைது செய்தனர்.

    பின்னர் அவரை வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். கடந்த 29 நாட்களாக பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு குன்னூருக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவரை குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து சென்றனர். #Thoothukudifiring
    ×