search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்த்து"

    பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
    சென்னை:

    முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்தார். மேலும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பிரணாப் முகர்ஜி கூறுகையில், நாட்டு மக்களுக்கு நன்றி என்றார்.



    இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி நம் நாட்டுக்காக தன்னலமின்றி சேவையாற்றினார் என குறிப்பிட்டுள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
    நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Republicday
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசத் தலைவர்களின் தியாகங்களை என்றென்றும் போற்றி நினைவுகூருவோம். இந்நாளில் மதவாத சக்திகளை ஒடுக்கி, ஜனநாயகத்தைக் காக்க பாசிச, ஊழல், மத்திய-மாநில ஆட்சிகளை வீழ்த்திட புதிய இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் சபதமேற்போம். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொருவரும் முழுமையாக பெறுவதற்கு தடையாக இருப்பது தவறான பொருளாதார கொள்கை, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லாத மனப்பாங்கு ஆகியவைகளே இந்திய தேசமும் இந்திய திருநாட்டு மக்களும் தொட வேண்டிய சிகரத்தை இன்னும் தொடவிடாமல் தடுக்கும் பெரும் தடைகளாக இருந்து வருகின்றன. இத்தடைகள் எல்லாம் இனி உடையட்டும். வளமும், வளர்ச்சியும் பொருளாதார ஏற்றமும் சமூக நல்லிணக்கமும் தழைத்து சிறந்திட குடியரசு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய தேசத்தின் பெருமைமிகு மாண்பும், வரலாறும் தாங்கி நிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடித்தள ஆணிவேரையும் எந்த சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை இந்தியராகிய நாம் அனைவரும் உறுதியோடு எடுத்துரைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியை சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் ஒரே அணியில் திரள வேண்டும். குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

    ‘‘பாரத நாடு பழம்பெரும் நாடு’’ என்றாலும் பழமையும், புதுமையும் சம விகிதத்தில் கலந்து காணப்படுவதால், வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து இந்திய கலாசாரத்தை கண்டு அதிசயித்து தங்களை அக்கலாசாரத்தில் இணைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    என்.ஆர்.தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் குடியரசு தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். #Republicday


    வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #VladimirPutin #PMModi
    புதுடெல்லி:

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் ந்கரில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    மேலும், இந்தியாவில் 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். #PMModi #ParliamentaryElection #VladimirPutin
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நடிகர் பிரகாஷ்ராஜுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    சென்னை:

    நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.

    இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.

    இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று அறிவித்தார்.



    இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை அரசியலுக்கு வரவேற்றுள்ளார். 
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பேச்சை செயலாக்கி காட்டியதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். #ParliamentElection #Bengaluru #PrakashRaj #KamalHaasan
    வங்காளதேசம் பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று நான்காவது முறை பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். #PMModi #BangladeshPM #Hasina
    டாக்கா:

    வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று  நடைபெற்ற தேர்தலில் 287 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
     
    கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.

    இந்நிலையில்,  நான்காவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கும் ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.



    இந்த தேர்தல் வெற்றியின் மூலம் ஆளும்கட்சியின் முன்னேற்றகரமான திட்டங்கள் தொடர வேண்டும் என உங்கள் நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளனர் என குறிப்பிட்ட மோடி, வங்காளதேசத்துக்கு இந்தியா எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.

    முதல் வெளிநாட்டு தலைவராக வாழ்த்து தெரிவித்த மோடிக்கும், தங்கள் நாட்டுக்கு இந்தியா செய்துவரும் உதவிகளுக்காகவும் ஷேக் ஹசினா நன்றி தெரிவித்ததாக வங்காளதேசம் பிரதமரின் செய்தித்துறை செயலாளர் இஹ்சானுல் கரீம் குறிப்பிட்டுள்ளார். #PMModi #BangladeshPM #Hasina
     
    திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #TripuraCivicBypolls #BJP #PMModi
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சிகளுக்கு நேற்று முன்தினம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் நேற்று வெளியானது.

    உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 11 நகராட்சி மற்றும் 4 மாநகராட்சியின் அனைத்து மேயர் மற்றும் தலைமைப் பொறுப்புகளை பாஜக கைப்பற்றி அசத்தியுள்ளது. 
     
    இந்த வெற்றியை தொடர்ந்து, திரிபுரா மாநில முதல் மந்திரி பிப்லாப் குமார் தேபுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

    இந்நிலையில், திரிபுரா மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு, பிரதமர் மோடி அம்மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த திரிபுரா மக்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்காக அரும்பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி திரிபுரா மாநிலத்தின் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என பதிவிட்டுள்ளார். #TripuraCivicBypolls #BJP #PMModi
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Nallakannu #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று பிறந்தநாள் காணும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். நல்லக்கண்ணு அரசியலில் நேர்மையானவர், தூய்மையானவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகும் சிறந்த பண்பாளர்.

    அவர் நல்ல உடல்நலத்துடன் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, தொடர்ந்து அவர் அவரது கட்சிக்கும், பொது மக்களுக்கும் தொண்டாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Nallakannu #Thirunavukkarasar
    இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்து கூறி உள்ளார். #Christmas #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “கிறிஸ்துமஸ்” திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இரக்கத்தின் மறுஉருவான இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்த இயேசு பிரான் அவதரித்த இத்திருநாளில், அத்திருமகனார் போதித்த, ‘‘உங்கள் பகைவர்களை நேசியுங்கள்’’, ‘‘உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்”, ‘‘உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, ‘‘உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்”, போன்ற அருளுரைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், உலகில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும்.

    அம்மா, இந்தியாவிலேயே முதல் முறையாக கிறிஸ்துவ மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் சிறப்பு திட்டம், கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகளுக்காக அரசின் மானிய உதவி வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினார். கிறிஸ்துவ மக்களின் நலனில் அக்கறை கொண்ட அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசும், தொடர்ந்து அத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், இதுவரை 3,236 கிறிஸ்துவப் பெருமக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.



    இயேசு பிரான் பிறந்த இனிய நாளில், உலகெங்கும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Christmas #EdappadiPalaniswami

    தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு இன்று 97-வது பிறந்த நாள். இதையொட்டி மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். #DMK #KAnbazhagan #MKStalin
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனுக்கு இன்று 97-வது பிறந்த நாள்.

    இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

    க.அன்பழகன் தனது முதுமையை கவனத்தில் கொண்டும் கஜா புயல் பேரிடரை கருதியும் பிறந்த நாள் கோலாகலங்கள் வேண்டாம்-நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    கோப்புப்படம்

    இந்த வேண்டுகோளை வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனால் அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் செல்லவில்லை.

    அன்பழகன் பேச முடியாத அளவுக்கு தொண்டையில் கரகரப்பு உள்ளதால் தொலைபேசியில் யாரும் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுக்க கூடாது என்பதற்காக அவரது மகன் தனது வீட்டுக்கு அன்பழகனை அழைத்து சென்று விட்டார்.

    இதனால் கட்சி நிர்வாகிகள் யாரும் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை. #DMK #KAnbazhagan #MKStalin
    5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #AssemblyElection2018 #NarendraModi #Congratulate #Congress
    புதுடெல்லி:

    5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், “தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, மிசோ தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் தீர்ப்பை பா.ஜனதா தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார். #AssemblyElection2018 #NarendraModi #Congratulate #Congress
    தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மாற்று திறனாளிகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது. இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல், பேருந்துப் பயணச் சலுகை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள், மன வளர்ச்சி குன்றியவர்கள் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான பாதிப்பு சதவிகிதம் 45 சதவிகிதமாக குறைப்பு; மனவளர்ச்சி குன்றிய/ தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தியது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரப் பணிக்கு முழு நாள் ஊதியம் வழங்குதல், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித வீடுகள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச வயது 18ஆக குறைப்பு.

    பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக சென்னையில் 150 இடங்களில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில், மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் அறிந்து, அவர்கள் மனநிறைவோடு வாழ்ந்திட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஏற்றமிகு திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNCM #Edappadipalaniswami
    இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புவி கண்காணிப்புக்கான ‘ஹைபர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங்’ செயற்கைகோள் உள்ளிட்ட 30 செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து இந்தியாவை பெருமைபடுத்துங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    இதேபோல், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பி.எஸ்.எல்.வி. சி-43 ஏவுகலன் மூலம் இந்தியாவின் ஹைசிஸ் உள்ளிட்ட 31 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் புவி சுற்றுவட்டப் பாதையில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். ஏவுகலன்களின் வேகத்திற்கு இணையான விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகளும் விண்ணைத் தொடுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  #MKStalin #ISRO #PSLVC43 #PMKRamadoss
    ×