search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை"

    மகரசங்கராந்தி விழாவையொட்டி தஞ்சை பெரியகோவிலில் நந்திபெருமானுக்கு 1 டன் காய்-கனி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    தஞ்சை பெரிய கோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. நந்திபெருமானுக்கு மகரசங்கராந்தி விழா பொங்கல் பண்டிகை தினமான நேற்றுமுன்தினம் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது.

    மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று பக்தர்கள், வியாபாரிகளால் வழங்கப்பட்ட உருளைகிழங்கு, கத்தரிக்காய், சவ்சவ், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், வெண்டைக்காய், பீட்ரூட் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சுப்பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் போன்ற பலவகையான கனிகளாலும், முறுக்கு மற்றும் பால்கோவா போன்ற பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மொத்தம் 1 டன் காய்-கனிகள், மலர்கள், இனிப்புகளால் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    மாட்டுப்பொங்கலையொட்டி தஞ்சை பெரியகோவிலில் 108 பசுகளுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் 108 பசுகளுக்கு பூஜை நடைபெற்றது. நந்தி பெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தஞ்சை பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர். #Plasticban
    தஞ்சாவூர்:

    பிளாஸ்டிக்குகளால் ஆன தட்டு, தண்ணீர் பாக்கெட், கப், பை உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்றுமுதல் அமலுக்கு வந்தது.

    தஞ்சையில் பெரும்பாலான கடைகளில் தண்ணீர் பாக்கெட், கப் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டது. ஒரு சில கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சில டீக்கடைகளில் இட்லி, தோசைகளை பார்சலாக கட்டி எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை வழங்கினர். பேப்பர் தட்டுகளில் இட்லி, பூரி, தோசைகள் பரிமாறப்பட்டன. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் சில மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பேப்பரால் ஆன பைகளில் தான் மளிகை சாமான்களை கட்டி கொடுத்தனர்.

    தஞ்சை பூக்கார தெருவில் பூ சந்தை கடைகளில் துணிப்பையில் பூக்களை போட்டு வழங்கினர். மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளம்பர பேனர், பூச்சந்தையில் வைக்கப்பட்டுள்ளது.

    பூக்கள் வாங்க வருபவர்கள் வீட்டில் இருந்து துணிப்பைகளை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். பூச்சந்தையில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தமாட்டோம். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்துவோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தஞ்சையில் இறைச்சி கடைகளில் கறிவாங்க, பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டு வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் குடிக்க வரும் மதுப்பிரியர்களுக்கு பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இந்த 2 பொருட்களும் அரசு தடை செய்த பொருட்கள் பட்டியலில் வருவதால் நேற்று முதல் விற்பனை செய்யப்படவில்லை. இதற்கு மாற்றாக மதுப்பிரியர்களுக்கு சில பார்களில் கண்ணாடி டம்ளர், தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.20 வரை வசூலிக்கப்பட்டது.  #Plasticban

    திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஏகாம்பரம் ஆணையின்படி பொது வினியோக திட்டத்தை செம்மைப்படுத்தும் பொருட்டு கூட்டுறவுத் துறை அலுவலர்களை கொண்டு திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் 43 ரேசன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு நடத்தப்பட்டது.

    முறைகேடுகள் செய்த விற்பனையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    ரேசன் கடைகளில் நடைபெறும் ஆய்வின் போது கடும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் தொடர்புடைய விற்பனையாளர் மீது குற்றவழக்கு மற்றும் நிரந்தர பணிநீக்கம் போன்ற கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தஞ்சையில் கிராம தபால் ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 18-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். இதை விளக்கி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர். அதன்படி கிராம தபால் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை கோட்டத்தில் தலைமை தபால் நிலையம், கிளை தபால் நிலையங்கள் என 294 தபால் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களில் 494 கிராமிய தபால் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் 107 பேர் மட்டும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். 387 பேர் பணிக்கு வரவில்லை.

    கமலேஷ்சந்திரா தலைமையிலான குழு அறிக்கையின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து பணி நிறைவு பலன்களும், 1-1-2016 முதல் பணி நிறைவு பெற்ற அனைத்து கிராம தபால் ஊழியர்களுக்கும் கிடைக்கும் விதமாக அமல்படுத்த வேண்டும்.

    நிலுவை தொகை கணக்கீட்டில் ஏற்கனவே இருந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று 2-ம் நாளாக தஞ்சை தபால் நிலையம் முன்பு கோட்ட தலைவர் ஜானகி ராமன் தலைமையில் கோட்ட பொருளாளர் கருப்புசாமி, கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிராம தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக பணப்பட்டுவாடா, தபால் சேவைகள் உள்ளிட்ட பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

    தஞ்சையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். #Sterlite
    தஞ்சாவூர்:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 40 பேரை தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கைது செய்தனர். #Sterlite

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 8-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    கஜா புயல் தாக்கி ஒருவாரமாகியும் இதுவரை மின்சாரம், குடிநீர் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நிவாரண பணிகளும் பாதிப்பு அடைந்துள்ளது.

    முத்துப்பேட்டை பகுதியில் விரைவில் மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் நிவாரண பொருட்கள் செல்லாத பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டிடங்கள் பள்ளி சேதமாகி இருப்பதால் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

    கஜா புயலால் பாதிப்பு அடைந்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    சென்னை:

    கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.



    இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுபான கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனியில் இரவு நேரங்களில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    மேலும் நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    அரியலூர்:

    கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.#GajaStorm
    சிவகங்கை:

    கஜா புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaStorm
    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
     
    இந்நிலையில் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட12 பேர் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். #Swineflu #Dengue

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வேகமாக டெங்கு - பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் நாளுக்கு நாள் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

    மேலும் டெங்கு - பன்றிக் காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது பருவமழை தொடங்கிய நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

    எனவே காய்ச்சல் பரவுவதை முற்றிலும் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 1,200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அது போன்று மாவட்டங்கள் முழுவதும் இதற்காக தனி அதிகாரிகள் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்களை தனி வார்டில் அனுமதித்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு என்று வார்டுகள் ஒதுக்கப்பட்டு 24 மணி நேரமும் டாக்டர்கள் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு தினமும் ஏராளமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று இரவு வரை 87 பேர் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தவிர 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு தனி வார்டுகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #Swineflu #Dengue

    ×