search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜ்ஜி"

    பேபிகார்னில் சாலட், பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேபிகார்னை வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 12,
    கடலை மாவு - 1 கப்,
    அரிசிமாவு - 1 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கு,
    ஆப்ப சோடா - சிட்டிகை

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்.



    செய்முறை:

    பேபிகார்னை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைத்து பின்னர் எடுக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பேபி கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கத்தரிக்காயில் வறுவல், கிரேவி, சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காய் வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய கத்தரிக்காய் - 1,
    கடலை மாவு - 1 கப்,
    மைதா மாவு - 1 டீஸ்பூன்,
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு,
    ஆப்ப சோடா - அரை சிட்டிகை.

    அரைக்க:

    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்,
    சோம்பு - 1 டீஸ்பூன்,
    மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.



    செய்முறை:

    கத்தரிக்காயைக் கழுவித் துடைத்து மெல்லிய வட்டங்களாக நறுக்குங்கள்.

    அரைக்கும் பொருட்களை ஒன்றாக அரைத்து, பாதியை வைத்து விட்டு மீதமுள்ளதில் சிறிது உப்பு சேர்த்து கலக்குங்கள்.

    இந்த விழுதை ஒவ்வொரு கத்தரிக்காய் துண்டின் மீதும் சிறிது தடவுங்கள்.

    கடலை மாவுடன் உப்பு, மீதமுள்ள அரைத்த விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்துகொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கத்தரிக்காய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சூப்பரான கத்தரிக்காய் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் சீஸ் மிளகாய் பஜ்ஜி. இன்று இந்த பஜ்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பஜ்ஜி மிளகாய் - 10,
    கடலைமாவு - 150 கிராம்,
    அரிசி மாவு - 50 கிராம்,
    ஓமம் - கால் சிட்டிகை,
    உப்பு - தேவையான அளவு,
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி ,
    சீஸ் ஸ்லைஸ் - 4 ,
    பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்ஸ் - 50 கிராம்,
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை

    ஒரு பாத்திரத்தல் கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

    பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி, விதையை நீக்கிவிட்டு, சீஸை உள்ளே வைத்து மூடவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் பஜ்ஜி போல தோய்த்து பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்சில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

    சூப்பரான சீஸ் மிளகாய் பஜ்ஜி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    “ஓமேகா 3” என்ற ஒரு வகை ஆசிட் மீனில் உள்ளது. மீன் பஜ்ஜி மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட்ட அருமையாக இருக்கும். இன்று மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    முள் இல்லாத துண்டு மீன் - முக்கால் கிலோ
    மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்
    சோள மாவு - ஒரு கைப்பிடி அளவு
    கடலை மாவு - இரு கைப்பிடி அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சை பழச்சாறு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ போல் அனைத்து மீனையும் செய்யவும்.

    இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×