search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலரஞ்சலி"

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.

    நேற்று பின்னிரவு இறுதியான தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரி கனிமொழியிடம் அளித்தார்.



    இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த கனிமொழி தனது கணவர் மற்றும் தாயாருடன் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். #DrSivanthiAditanarMemorial

    சென்னை:

    பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    அவரது 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

     


    தினத்தந்தி, தந்தி டிவி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், டிராவல் மால், கெய் டிராவல்ஸ், ஏ.எம்.என். டி.வி. ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். #DrSivanthiAditanarMemorial

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சிற்பி டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாளான இன்று ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அவருக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். #Ambedkarjayanti #DrBRAmbedkar
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டம் என்னும் மகத்தான சாசனத்தை வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்ட சமத்துவ நாயகருமான சட்டமேதை ‘பாரதரத்னா’ பாபா சாகேப் டாக்டர் அம்பேதகரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற புல்வெளியில் அண்ணல் அம்பேத்கரின் சிலையின் முன்னே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கு ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



    இதேபோல், பல மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

    அவரது பிறந்தநாளையொட்டி ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நமது நாட்டின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சாதிகளற்ற, பாகுபாடுகளற்ற நவீன இந்தியாவை உருவாக்கவும், பெண்கள் மற்றும் நலிந்த மக்களுக்கான சம உரிமைகள் நிலைநாட்டப்படவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர். அவரது பிறந்தநாளன்று எனது மரியாதையை செலுத்துகிறேன்’ என தெரிவித்துள்ளார். #Ambedkarjayanti  #DrBRAmbedkar
    குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். #RepublicDay #AmarJawanJyoti
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ராஜபாதையில் அரசு சார்பில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட பிரதமர் மோடி, முதலில் போர் வீரர்கள் நினைவிடமான அமர் ஜவான் ஜோதியில் மலர் வளையம் வைத்து, உயிர்நீத்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் முப்படை தளபதிகளும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதைக்கு மோடி புறப்பட்டார்.



    அதேசமயம், குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினரான தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டு வந்தனர். அவர்களை விழா அரங்கில் பிரதமர் மோடி வரவேற்று அழைத்துச் செல்கிறார்.

    அதன்பின்னர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

    இந்திய ராணுவத்தின் பெருமைமிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.  மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. #RepublicDay #AmarJawanJyoti
    டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute
    புதுடெல்லி:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையின் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதையடுத்து அம்பேத்கர் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



    அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செய்தார். அதன்பின்னர், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மத்திய மந்திரிகள் தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே, கிரிஷன் பால் குர்ஜார், விஜய் சாம்ப்லா மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

    சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பவுண்டேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

    அம்பேத்கர் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். நீதிபதி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரான அவர் சுதந்திரத்திற்கு பிறகு முதல் சட்டத்துறை மந்திரியாக பதவி வகித்தார். 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி மறைந்தார். மறைவுக்கு பிறகு அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. #AmbedkarDeathAnniversary #NarendraModi #VenkaiahNaidu #Tribute 
    ×