search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமாஜ்வாதி"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கும், அவரது மகனும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவும் வெற்றி பெற்றுள்ளனர்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்ட முலாயம் சிங் 5,24,926 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரேம் சிங் ஷாக்யா 4,30, 537 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் முலாயம் சிங் 94,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    உபியின் அசம்கார் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 6,21,578 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான தினேஷ் லால் யாதவ் நிராஹுவா 361704 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் அகிலேஷ் யாதவ் 2 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
    உ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    அப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    உத்தரப்பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ள சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும் போட்டியிட முடிவாகி இன்று தொகுதி பங்கீடு செய்துள்ளன. #ParliamentElection #AkileshYadav #Mayawati
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் கூட்டாக வெளியிட்டனர்.
     
    இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் தலா 38 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை இரு கட்சிகளும் இன்று வெளியிட்டுள்ளன.

    அதன்படி, கைரானா, மொராதாபாத், லக்னோ, பெரெய்லி, வாரணாசி உள்ளிட்ட 37 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், சஹாரன்புர், அலிகார், ஆக்ரா, பதேபுர் சிக்ரி, பிஜ்னோர் உள்ளிட்ட 38 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடுகின்றன. #ParliamentElection #AkileshYadav #Mayawati
    பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலை ஏற்படும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பெரும்பானமையான தொகுதிகளில் வெற்றி பெறும் முயற்சியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாக சமாஜ்வாதி கட்சியினர் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள எடாவா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சைக்கில் பேரணி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.   அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    பாஜவினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுருத்தல்களை விடுத்து வருகின்றனர். அதில் இருந்து  ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சைக்கில் பேரணி நடத்தப்படுகிறது.

    வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அதோடு நாட்டில் ஜனநாயகத்தின் கதை முடிந்துவிடும். உத்திரப்பிரதேச மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு பல்வேறு சதிகளை செய்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #AkhileshYadav
    பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்தால் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலை ஏற்படும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். #AkhileshYadav
    லக்னோ :

    அடுத்து வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் பெரும்பானமையான தொகுதிகளில் வெற்றி பெறும் முயற்சியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கட்டவிழ்த்து வருகிறது. அதற்கு பதிலடி தரும் விதமாக சமாஜ்வாதி கட்சியினர் பாஜகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள எடாவா மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த சைக்கில் பேரணி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசினார்.   அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    பாஜவினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். அதில் இருந்து  ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சைக்கில் பேரணி நடத்தப்படுகிறது.

    வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் அதோடு நாட்டில் ஜனநாயகத்தின் கதை முடிந்துவிடும். உத்தரப்பிரதேச மக்கள் மிகவும் விழிப்புடன் உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு பல்வேறு சதிகளை செய்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜகவிற்கு 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #AkhileshYadav
    மக்களிடம் இழந்த நம்பிக்கையை பெறுவதற்காக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். #Modi #UP #YogiAdityanath #AkileshYadav
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அறுபதாயிரம் கோடி ரூபாய் அளவில் புதிய முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு புகழாரம் சூட்டினார்.

    இந்நிலையில், மக்களிடம் இழந்த நம்பிக்கையை பெறுவதற்காக நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாஜக அறிமுகப்படுத்தும் பல்வேறு திட்டங்கள் காகிதங்களில் மட்டுமே இருக்கின்றன. விவசாயிகள் தற்கொலை, இளைஞர்களுக்கு ஏற்பட்டு வரும் மன அழுத்தம், பணவீக்கம் அதிகரிப்பு என பல்வேறு பிரச்னைகளில் பாஜக தலைவர்கள் அடிப்படையற்ற அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடி உ.பி. முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார். ஆனால், மாநில அரசு சிறப்பான எந்த திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை.

    யோகி அரசு ஏழை விவசாயிகளை கண்டுகொள்வதில்லை. ஏற்கனவே 15 ஆயிரம் கோடி மதிப்பிலான கட்டணத்தை மாநில அரசு இன்னும் வழங்காமல்  இழுத்தடித்து வருகிறது. 15 நாட்களில் விவ்சாயிகள் பிரச்னை தீர்க்கப்படும் என உறுதியளித்த பாஜகவினர் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார். #Modi #UP #YogiAdityanath #AkileshYadav
    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இரு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சமாஜ்வாதி கட்சி தீர்மானித்துள்ளது.
    லக்னோ:

    2019-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மத்தியில் இருந்து பா.ஜ.க. ஆட்சியை தூக்கி எறிய திட்டமிட்டுள்ளன. இதற்காக, மாநில கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ராஷ்டரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே கூட்டணி தொடர்பாக பேசி வருகின்றன.

    இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இரு தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என சமாஜ்வாதி கட்சி தீர்மானித்துள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தபோது செய்து கொண்ட தொகுதி உடன்பாட்டு விகிதாச்சாரத்தில் தற்போது தொகுதிகளை ஒதுக்க இயலாது. காரணம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிரதான கட்சியான பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டரிய லோக்தளம் ஆகிய கட்சிகளுக்கும் இந்த முறை தொகுதிகளை ஒதுக்கித்தர வேண்டியுள்ளது.

    மேலும், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்களின் 85 சதவீத வாக்கு வங்கியை மையமாக வைத்து தொகுதி பங்கீடு அமைய வேண்டும்.

    வழக்கமாக சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்கும் அடித்தட்டு வாக்காளர்கள் கூட மேல்தரப்பு மக்கள் கட்சி என அறியப்படும் காங்கிரசுடன் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்ததால் தங்களை ஆதரிக்கவில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தற்போது கருதுகிறார்.

    எனவே, காங்கிரஸ் கட்சிக்கு ராசியான ரேபரேலி, அமேதி ஆகிய இரு தொகுதிகளை தவிர வேறெந்த தொகுதியையும் இந்த பாராளுமன்ற தேர்தலில் விட்டுத்தர முடியாது என கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் மேலிட தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

    இந்த தொகுதி உடன்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிகளில் மட்டும் போட்டி வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார். #2019polls #SPCongresss #upseatsharing
    ×