search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா"

    இந்தோனேசியாவில் ஆட்ஜே மாகாணத்தில் இரவு 9 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு ஓட்டலில் சாப்பாடு கிடையாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. #Acehprovince
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் அச்சே என்ற மாகாணம் உள்ளது. இங்கு ‌ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இதனால் அந்த மாகாணத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உறவினர் அல்லாத ஆண்-பெண் ஒன்றாக அமரக்கூடாது. திருமணமாகாத பெண்கள் மற்ற ஆண்களுடன் சுற்றக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன.

    இப்போது பிர்யூன் மாவட்டத்தில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இரவு 9 மணிக்கு மேல் பெண்கள் ஓட்டலுக்கு தனியாக வந்து உணவு கேட்டால் அவர்களுக்கு உணவு வழங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டங்களை மீறினாலும், தற்போது வரை கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பது இல்லை. ஆனால் இனி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று மாகாண அரசு அறிவித்துள்ளது. #Acehprovince
    இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். #AsianGames2018 #MedalWinners #Modi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவின் ஜெகார்த்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் நடைபெற்றன. இந்த ஆசிய விளையாட்டில் 572 வீரர், வீராங்கனைகள் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது.

    இதில் தடகளம் (7 தங்கம் உள்பட 19 பதக்கம்), துப்பாக்கி சுடுதல் (9 பதக்கம்), ஸ்குவாஷ் (5 பதக்கம்) ஆகிய போட்டிகளில் ஓரளவு ஆதிக்கம் செலுத்தியது. இது இந்தியாவுக்கு புதிய வரலாற்று சாதனையாக அமைந்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

    ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மன் மற்றும் தடகளத்தில் பதக்கம் வென்ற டூடி சந்த், ஹீமா தாஸ் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #AsianGames2018 #MedalWinners #Modi
    ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீராங்கனை சரிதா, இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இன்றி தவித்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. #AsianGames2018 #SaritaGaekwad
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் டாங் நகரின் கர்டாயம்பா என்ற கிராமத்தில், லட்சுமணன், ரேனு தம்பதிக்கு பிறந்தவர் சரிதா. ஏழை விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த சரிதா இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4x400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    தனது திறமை மூலம் இந்திய நாட்டுக்கே பெருமை தேடி தந்த சரிதா, தற்போது இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்துவருகிறார்.

    ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியதில் இருந்து இதுவரை 45 ஆயிரம் ரூபாயை அவருக்கு தர்ஷன் என்பவர் அனுப்பி உள்ளார்.

    கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்கள் வென்றுள்ள இவருக்கு குஜராத் அரசு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவித்தது. ஆனால் இந்த தொகை அவருக்கு இன்னும் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு தங்கம் வென்றதற்காக நேற்று குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி தலைமையிலான அரசு ரூ.1 கோடி பரிசு தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018 #SaritaGaekwad
    இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிமோர் தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #magnitudequake #Indonesiaquake
    ஜகர்தா:

    நிலநடுக்கம் மற்றும் பூகம்பங்களை அடிக்கடி சந்தித்துவரும் பூமியின் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள தீவுநாடான இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் பலநூறு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

    கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியுடன் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இந்தோனேசியாவில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் இங்குள்ள லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 555 பேர் பலியாகினர்.



    இந்நிலையில், இந்தோனேசியாவின் டிமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.2 அலகுகளாக பதிவானது.

    இன்றைய நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவலும் வெளியாகவில்லை.  #magnitudequake  #Indonesiaquake 
    ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டெறிதலில் தங்க பதக்கம் வென்ற தஜிந்தர் பால் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames #TejinderpalSinghToor #PMModi
    புதுடெல்லி:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற குண்டு எறிதலில் 20.75 மீட்டர் தூரம் குண்டு வீசி புதிய சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார் இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் குண்டெறிதலில் தங்க பதக்கம் வென்ற தஜிந்தர் பால் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் புதிய சாதனை நிகழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க தங்கம் வென்றுள்ளீர்கள். ஆசிய விளையாட்டு போட்டியில் நீங்கள் நிகழ்த்திய சாதனையால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames #TejinderpalSinghToor #PMModi
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    சென்னை:

    இந்தோனேசிய தலைநகர் ஜெகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரஜ்னேசுக்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஊக்கமுடன் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளை தேடித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய ஷ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SauravGhoshal
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதிசெய்திருந்தார்.  

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் ஹாங்காங் வீரரான சங் மிங்கிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    இன்று ஒரே நாளில் ஷ்குவாஷ் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று வெண்கல பதக்கங்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
     #AsianGames2018 #SauravGhoshal
    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018
    ஜகார்தா:

    18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 11,300 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.

    இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 570 பேர் பங்கேற்று உள்ளனர். 36 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆசிய விளையாட்டில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியது.

    தொடக்க நாளில் துப்பாக்கி கூடுதலில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. அபுர்வி சண்டிலா-ரவிக்குமார் ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
    இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #Modi
    புதுடெல்லி:

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று தொடங்கி செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி,  கால்பந்து, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 572 வீரர், வீராங்கனைகள் 36 பந்தயங்களில் களமிறங்குகின்றனர். 

    இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் கூறுகையில், இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  நமது வீரர்கள் அவர்களது சிறந்த பங்களிப்பை நல்குவார்கள் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். #AsianGames2018 #Modi
    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. #AsianGames2018
    ஜகார்த்தா:

    ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கொண்டாடப்படுவது ஆசிய விளையாட்டு போட்டி. இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

    18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று தொடங்கி செப்டம்பர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஆக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 

    இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 572 வீரர், வீராங்கனைகள் 36 பந்தயங்களில் களமிறங்குகின்றனர். சுஷில் குமார் (மல்யுத்தம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ஹிமா தாஸ் (400 மீட்டர் ஓட்டம்), மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), விகாஷ் கிருஷ்ணன், சர்ஜூபாலாதேவி (குத்துச்சண்டை), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), மானிகா பாத்ரா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது.

    கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் வியப்பூட்டும் சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற்றன. 4 ஆயிரம் கலைஞர்கள் தொடக்க விழாவில் ரசிகர்களை பரவசப்படுத்தினர்.

    தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து சென்றனர். இந்திய குழுவுக்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசிய கொடி ஏந்தி தலைமை தாங்கி சென்றார்.

    இந்தோனேசியா ஆசிய விளையாட்டு போட்டியை நடத்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1962-ம் ஆண்டு அங்கு இந்த போட்டி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #AsianGames2018
    45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. #AsianGames2018
    ஜகார்த்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டி 1951-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு தென்கொரியாவில் உள்ள இன்சியான்நகரில் நடந்தது.

    18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 2-ந்தேதி வரை தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய இடங்களில் இந்தப்போட்டி நடைபெறுகிறது.

    ஆசிய விளையாட்டு முதல் முறையாக 2 நகரங்களில் நடத்தப்படுகிறது.

    56 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேசியாவில் இந்தப்போட்டி நடக்கிறது. கடைசியாக 1962-ம் ஆண்டு இந்தப்போட்டி அங்கு நடைபெற்றது.

    இதில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, கஜகஸ்தான், ஈரான், தாய்லாந்து, சீன தைபே, கத்தார், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் பங்கேற்கின்றன. 42 விளையாட்டுகளில் 482 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஆசிய விளையாட்டில் 572 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. 36 வகையான விளையாட்டுகளில் கலந்து கொள்கிறது. ஈட்டி எறியும் வீரர் நிரஜ் சோப்ரா தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

    கபடி, பேட்மின்டன், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளுதூக்குதல், தடகளம், ஆக்கி, ஸ்குவாஷ், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    கடந்த முறை ஆசிய விளையாட்டில் இந்திய அணி 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் ஆக மொத்தம் 57 பதக்கம் பெற்று 8-வது இடத்தை பிடித்து இருந்தது. இந்த முறை அதிகமான பதக்கங்களை குவிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவே எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த போட்டித் தொடரிலும் சீனா பதக்கங்களை குவிக்கும் ஆர்வத்துடன் உள்ளது. அந்த நாடு 879 வீரர், வீராங்கனைகளுடன் இதில் பங்கேற்கிறது.

    கொரியா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் பதக்கங்களை வேட்டையாடும் வேட்கையில் உள்ளன.

    நாளை தொடக்க விழா இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சோனி டென் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #AsianGames2018
    இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரம் முழுவதும் 2050-ம் ஆண்டில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என நிபுணர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    பருவ நிலை மாற்றம் காரணமாக வட துருவத்தில் உள்ள அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் உருகுகின்றன. கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது. இத்தகைய காரணங்களால் கடலோரத்தில் உள்ள நகரங்கள் கடலில் மெல்ல மெல்ல மூழ்கி வருகின்றன.

    அவற்றில் அதிவிரைவாக மூழ்கி வரும் நகரமாக இந்தோனேசியாவின் ஐகார்த்தா திகழ்கிறது. இங்கு 1 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஜாவா தீவில் இது அமைந்துள்ளது. இதன் மீது 13 ஆறுகள் ஓடுகின்றன. கடல் நீரின் மட்டமும் அதிகரித்த படி உள்ளது.

    இதன் காரணமாக இங்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஜகார்த்தா நகரம் ஆண்டுக்கு 1 செ.மீ. முதல் 1.5 செ.மீட்டர் வரை கடலில் மூழ்கி வருகிறது. தற்போது ஜகார்த்தாவின் பாதி அளவு கடல் மட்டத்துக்கு கீழே சென்று விட்டது.

    கடல் நீர் மட்டம் தொடர்ந்து உயர்வதால் வடக்கு ஜகார்த்தா அதிகம் பாதிக்கப்படுகிறது. இதன் சில பகுதிகள் ஆண்டுக்கு 25 செ.மீ. உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் 2.5 மீட்டர் கடல் நீர் உயர வாய்ப்பு உள்ளது.


    முயாரா பாரு மாவட்டத்தில் மீன் பிடி அலுவலக கட்டிடத்தின் தரைதளம் தண்ணீரில் மூழ்கி விட்டது. முதல் தளத்தின் வராந்தாவில் மட்டும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதை சீரமைக்க நடவடிக்கை எடுத்தும் முயற்சி பலனளிக்கவில்லை.

    ஜகார்த்தாவின் கடற்கரையில் அழகிய சொகுசு விடுதிகள் மற்றும் வீடுகள் உள்ளன. இவை உடனடியாக கடலில் மூழ்காவிட்டாலும் மெல்ல மெல்ல பாதிப்பு அடைந்து வருகிறது. அங்குள்ள கட்டிடங்களின் சுவர்கள் மற்றும் தூண்களில் 6 மாதத்துக்கு ஒரு முறை கீறல்கள் ஏற்படுகின்றன.

    அதன் மூலம் வீடுகளில் உள்ள நீச்சல் குளங்களில் கடல் நீர் புகுந்து விடுகின்றது. வடக்கு ஜகார்த்தா மட்டுமின்றி அனைத்து பகுதிகளும் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருகிறது. மேற்கு ஜகார்த்தா ஆண்டுக்கு 15 செ.மீட்டரும், கிழக்கு ஜகார்த்தா ஆண்டுக்கு 10 செ. மீட்டரும், மத்திய ஜகார்த்தா ஆண்டுக்கு 2 செ.மீட்டர் அளவும், தெற்கு ஜகார்த்தா ஆண்டுக்கு 1 செ.மீட்டர் அளவும் மூழ்கி வருகிறது.

    இதேநிலை நீடித்தால் 2050-ம் ஆண்டில் ஜகார்த்தா நகரம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என நிபுணர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார். #indonesia
    ×